என் மலர்
ஒடிசா
- அரசு பேருந்து- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்
- தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சியில கலந்து கொண்டு திரும்பியவர்கள் பயணம்
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் திகாபஹண்டி அருகே அம்மாநில அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரசு பஸ் ராயகடா என்ற இடத்தில் இருந்து புவனேஸ்வர் சென்று கொண்டிருந்தது. அப்போது பெர்ஹாம்புரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பஸ் மீது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பலர் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள். தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் கட்டாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
- பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டார்.
- கடந்த 2 மாதமாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தார்.
புவனேஷ்வர்:
பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எமர்ஜென்சியின்போது பாட்டி இந்திரா காந்தியால் சிறைக்குச் சென்றவர்கள் தற்போது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர்.
ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவ தலைவர்களாக செயல்பட்ட நிதிச்ஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்திரா காந்தி அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது லாலு பிரசாத் 22 மாதங்களும், நிதிஷ் குமார் 20 மாதங்களும் சிறையில் இருந்தனர்.
எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றதைப் பார்த்தேன். அவரது தந்தை, இந்து ஹிருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே காங்கிரசை எதிர்த்தார். பாலாசாகேப் ஒருமுறை காங்கிரசில் சேர்வதற்குப் பதிலாக துகானை (தனது அரசியல் கட்சியான சிவசேனாவைக் குறிப்பிட்டு) மூடுவதாகக் கூறியிருந்தார். இப்போது, அவரது மகன் துகானை மூடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை உலக தலைவர்கள் பாராட்டியதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கும் மோடி, நாட்டில் வளர்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.
- தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார்.
- நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையை கண்டுகளிக்கின்றனர்.
ஒடிசாவின் கடற்கரை நகரான பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகன்னாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர். ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.
கோவிலில் இருந்து புறப்படும் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர் குண்டிச்சா கோவில் நோக்கி செல்வார்கள். வழியில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். குண்டிச்சா கோவிலில் இருந்து 9-வது நாள் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. தேர்களில் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு ஜெகன்னாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையை கண்டுகளித்து பகவானை வழிபடுகின்றனர்.
ரத யாத்திரையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் என்பதமால் தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பூரி நகரில் ரத யாத்திரை தொடங்கியதையடுத்து, நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- வானிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகன்னாதர் கோயிலின் ரத யாத்திரையில் பங்கேற்க இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திரளாக வருவார்கள். இந்த புனிதமான ரத யாத்திரை, ஒடிசாவில் மட்டுமல்லாது குஜராத், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூரி நகரில் நடைபெறும் ரதயாத்திரையில் பங்கேற்பதற்காக, பக்தர்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்திருக்கின்றனர். மேலும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூரியில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 180 படைகள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையர் அமிதாப் தாக்கூர் தெரிவித்தார். பூரி நகருக்கு 125 ரெயில்கள் இயக்கப்படும் என்றும், டிரோன்கள் உள்ளடக்கிய ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருப்பதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

"பூரி நகரில் நிகழும் இந்த புனிதமான தேர் திருவிழாவிற்காக, ஜெகன்னாதர், தேவி சுபத்ரா, மற்றும் ஸ்ரீ பாலபத்ரர் ஆகிய கடவுள்களின் தேர்களை ஸ்ரீ குண்ச்சா கோயில் வரை வடம் பிடித்து இழுக்கும் சேவையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருக்கிறார்.
"பூரியின் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பார்கள். மேலும் எந்தவொரு சுகாதார அவசரநிலைக்கும் பசுமை வழித்தடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது" என்று மாநில தலைமைச் செயலாளர் பி.கே. ஜெனா கூறியிருக்கிறார்.
ஒடிசாவின் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்னா, மாநிலத்தின் பல அமைச்சர்கள், ஆகியோர் இந்த புனித ரத யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
சமீபத்திய "மன் கி பாத்" வானொலி உரையில் பிரதமர் மோடி பூரி ரத யாத்திரை ஒரு அதிசயம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பூரி ரத யாத்திரையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் அனைவருக்கும் பூரி ஜெகன்னாதர் அருளால் வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும், வளர்ச்சியும் உண்டாக வேண்டுமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஒடிசா ரெயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்
- சிபிஐ அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை
கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின. இதில் இதுவரை 291 பேர் பலியாகியுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த கோரவிபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சோரா செக்சன் ரெயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரெயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
கடந்த 16-ந்தேதி சிபிஐ அதிகாரிகள் பாலசோர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு நேற்று சென்றபோது, அவர் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து ஜூனியர் என்ஜினீயரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
- ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.
இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
"இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.
போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.
"இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.
- ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
- அங்கு விரைந்த அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி பஹானாகா பஜார் நிலையத்தில் அடுத்தடுத்து 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.
இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும், சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தகவலறிந்து அங்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
- பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர்.
- பிரகாஷ் ராம் என்ற சிறுவன் ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
பாலசோர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம் என்ற 17 வயது சிறுவன் இந்த ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, பாலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி 290 ஆக உயர்ந்தது.
- கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும்.
பூரி ஜெகநாதர் கோவிலில் 1 வயதுக்குள் உள்ள 3 குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அங்குள்ள பாரம்பரியத்தின்படி 10 மாத குழந்தையான பலதேப் தாஸ்மொகபத்ரா, 1 வயது குழந்தையான எகான்சு தாஸ்மொகபத்ரா மற்றும் அதே வயதுடைய மற்றொரு குழந்தை ஆகிய 3 குழந்தைகளும் பூரி ஜெகநாதர் கோவிலின் அதிகாரப்பூர்வ அர்ச்சகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ரத யாத்திரையின்போது முக்கிய சடங்குகளை செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும். கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக பூரி ஜெகநாதர் கோவிலின் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
தைதாபதி சேவகரின் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு எந்த நாளிலும் அவர்கள் இறைவனின் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது பாரம்பரியமாக நடைமுறையில் உள்ளது. 21 நாட்கள் நிரம்பிய குழந்தைகள் பணியாளர்களாக சேர தகுதி உடையவர்கள் ஆவர்.
ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தைகள் பணியில் நியமிக்கப்பட்டாலும், 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும். அதுவரை அவர்கள் ரத யாத்திரை சேவையில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் 288 பேர் பலியாகினர்.
- ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த பிஜய் பஸ்வான் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது.
- வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது.
- ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில் இருக்கும்.
புவனேஸ்வர் :
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஜெகநாதர் கோவில் அருகே டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில் இருக்கும்.
கோவில், தேர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இதுபோல், தடையை மீறி டிரோன் பறக்க விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். டிரோன்கள் மூலம் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் காயத்துக்கு அதை இயக்கியவர்களே பொறுப்பு என்றும் கூறினார்.
தேரோட்டத்தின்போது, போக்குவரத்தையும், மக்கள் கூட்டத்தையும் கண்காணிக்க பூரி மாவட்ட போலீசார் மட்டும் டிரோன்களை பயன்படுத்துவார்கள் என்று போலீசார் தொிவித்தனர்.
- ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள்.
- இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பஹானகா பகுதியில் கடந்த 2-ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் உள்பட 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோரவிபத்து நடந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
ரெயில் தண்டவாளத்தில் இறந்தவர்கள் உடல்கள் சிதறி கிடந்த காட்சியும், படுகாயம் அடைந்தவர்களின் அலறல் ஓசையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என ஊர் மக்கள் கூறிவந்தனர்.
ரெயில் விபத்து நடந்து 10 நாள் ஆகிவிட்ட நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு கிராம மக்கள் 10-ம் நாள் ஈமச்சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ, அந்த சடங்குகள் அனைத்தையும் விபத்து நடந்த பகுதி கிராம மக்களே செய்தனர். இதுபற்றி அந்த பகுதியின் பஞ்சாயத்து சமிதி தலைவர் சரத்ராஜ் கூறியதாவது:-
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாங்கள் தான் அகற்றினோம். இதனால் அவர்களின் ஆன்மா அமைதியடைய ஈமச்சடங்குகளை நாங்களே செய்ய முடிவு செய்தோம்.
அதன்படி விபத்து நடந்த பகுதியில் உள்ள கிராம குளத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தோம். அதன்படி எங்கள் கிராமத்தை சேர்ந்த 116 பேர் மொட்டை அடித்து கொண்டோம், அன்று மாலையில் இறந்தவர்கள் நினைவாக அன்னதானமும் வழங்கினோம்.
இதுபோல விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய சர்வசமய பிரார்த்தனையும் நடத்த உள்ளோம். இன்றும், நாளையும் இந்த கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது, என்றார்.
ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






