என் மலர்
நீங்கள் தேடியது "போலீசில் புகார் அளித்தார்."
- வெளியூர் சென்றபோது மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி கெஜலட்சுமி (வயது 40). இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கணவன், மனைவி வேலை சம்பந்தமாக வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று இருந்தனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் வீட்டிலிருந்த 4½ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய கெஜலட்சுமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்ற பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பணம், நகை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






