என் மலர்
மகாராஷ்டிரா
- சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , சான்ட் னர் , துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
- பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அபாரமாக விளையாடினார்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் களத்தில் இறங்கின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , சான்ட் னர் , துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 158 ரன்கள் இலக்குடன் விளையாடியது.
இறுதியில் 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றிபெற்றது.
களத்தில் இறங்கிய ரஹானே அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அபாரமாக விளையாடினார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து ஆடிய அவர் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
- சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று மும்பையில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 38ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார். கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர்.தொடக்கத்தில் சென்னை அணியின் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர், 4 பவுண்டரி பறக்கவிட்டார். தொடர்ந்து அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார்.
தொடர்ந்து ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷிவம் துபே , ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய துபே 28 ரன்களில் வெளியேறினார். அடுத்து ராயுடு களமிறங்கி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.
இறுதியில் சென்னை அணி 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 40ரன்களும், ராயுடு 20 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது.
- முதலில் ஆடிய மும்பை 157 ரன்கள் எடுத்தது.
- ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
மும்பை:
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இன்று மும்பையில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 38 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.
கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.
சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மும்பையில் பிரபலமான கேட்வே ஆப் இந்தியா கட்டிடம் உள்ளது.
- புதுப்பிக்கும் பணிகள் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு தொடங்கி ஒரு ஆண்டில் முடிவடையும்.
மும்பை :
மும்பையில் பிரபலமான கேட்வே ஆப் இந்தியா கட்டிடம் உள்ளது. இதை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்து வருகின்றனர். கேட்வே ஆப் இந்தியா கட்டிடத்தில் லேசான விரிசல் விழுந்து இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சில விரிசல்கள் இருந்தாலும் கேட்வே ஆப் இந்தியா கட்டிடம் உறுதியான நிலையில் இருப்பதாக மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கேட்வே ஆப் இந்தியாவை புதுப்பித்து பாதுகாக்க ரூ.8.98 கோடியை மாநில அரசு ஒதுக்கி உள்ளது. இதுதொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் தேஜாஸ் கார்கே கூறுகையில், " மாநில கலாசார துறை பட்ஜெட்டில் மறுசீரமைப்புகான பணத்தை ஒதுக்கி உள்ளது. கேட்வே ஆப் இந்தியா மறுசீரமைப்பு பணிக்கான டெண்டரை தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குனரகம் விரைவில் வெளியிடும் " என்றார்.
கேட்வே ஆப் இந்தியாவை புதுப்பிக்கும் பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு தொடங்கி ஒரு ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது.
- மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 926 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கு ஒரே நாளில் 926 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 3 பேர் தொற்றால் உயிரிழந்தனர். 4487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 2024-க்குப் பிறகு நாட்டில் அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும் என சஞ்சய் ராவத் கூறினார்.
- சீனாவின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும் மத்திய அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்றார்.
மும்பை:
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் உதவியாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாற்றம் ஏற்படும். மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
சீனாவின் ஊடுருவல்கள் இருந்தபோதிலும், மத்திய அரசு ஏன் மவுனமாக இருக்கிறது?
2024 க்குப் பிறகு நாட்டில் அதிகார மாற்றம் நிச்சயம் இருக்கும். இதை நான் மிகவும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
இந்து, முஸ்லிம் கலவரங்களைத் தூண்டிவிட்டு, தேர்தல் ஆதாயங்களுக்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் உண்மையான சக்தியாக இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பா.ஜ.க.வின் இந்துத்துவா போலியானது என தெரிவித்தார்.
- உறவுக்கார வாலிபர் ஒருவரே இளம்பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் தீவைத்து எரித்து கொன்றது தெரியவந்தது.
- வாலிபர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூனா:
மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை அடுத்த கோண்டேவாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
வீட்டிற்குள் இளம்பெண் ஒருவரும், அவரது 2 குழந்தைகளும் உடல் கருகி தீயில் இறந்து கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோண்டேவாடா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து 3 பேரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை எரித்து கொன்றது யார்? என்பது பற்றி விசாரித்தனர்.
இதில் அவர்களின் உறவுக்கார வாலிபர் ஒருவரே இளம்பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் தீவைத்து எரித்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் எரித்து கொன்ற வாலிபரை தேடினர். அவர் அந்த பகுதியில் உள்ள இன்னொரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்தனர். அவருக்கு 30 வயது இருக்கும். அந்த வாலிபரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.
இதில் தீயில் இறந்து கிடந்த பெண், வாலிபரின் கொளுந்தியாள் என தெரியவந்தது. அவருக்கு அந்த பகுதியில் உள்ள சில வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த வாலிபர், கொளுந்தியாளை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து ஆண்களுடன் பழகி வந்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை தீவைத்து எரித்து கொன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பெண்ணின் குழந்தைகளையும் சேர்த்து தீவைத்து உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக தாக்கி பேசினார்.
- ஆதித்ய தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது.
தானே :
உத்தவ்தாக்கரே கட்சியின் மகளிரணியை சேர்ந்த ரோஷிணி ஷிண்டே, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அவரை பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரோஷிணி ஷிண்டே தானேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று முன்தினம் உத்தவ்தாக்கரே நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தகுதியற்ற உள்துறை மந்திரி என்று கடுமையாக விமர்சித்தார். தானே போலீஸ் கமிஷனரையும் விமர்சித்தார்.
இந்தநிலையில் தானேயில் நேற்று முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் மந்திரிகள் ஜிதேந்திரா அவாத், அனில் பரப் பங்கேற்றனர்.
தானேயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி சென்றது. பேரணி நிறைவில் தொண்டர்கள் மத்தியில் ஆதித்ய தாக்கரே பேசினார். அப்போது முதல்-மந்திரி ஷிண்டேக்கு செல்வாக்கு உள்ள தானேயில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்றும், அந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக தாக்கி பேசினார்.
இதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் தானே போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்கள் சென்றனர். அங்கு போலீஸ் கமிஷனர் ஜெய்தீப் சிங்கை நேரில் சந்தித்தனர்.
அப்போது, ரோஷிணி ஷிண்டேயை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரிடம் மனு அளித்தனர்.
- உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார்.
- நாராயண் ரானே சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.
மும்பை :
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய சதி செய்ததாக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொள்முதல் செய்த மருந்து பொருட்களில் ஊழல் நடந்துள்ளது.
இந்த ஊழலுக்கு உத்தவ் தாக்கரே தான் முழு பொறுப்பு ஆவார்.
அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். இதற்காக அவர் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவினார். இதுபோன்ற நபர்களிடம் இருந்து எனக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போன் அழைப்புகள் வந்தன. உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார். ஆனால் அவர்கள் யாராலும் என்னை தொடக்கூட முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி நாராயண் ரானே, மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- பர்மிங்காம் டெஸ்ட்டில் அறிமுகமாகி ஒரு இன்னிங்சில் 77 ரன்கள் குவித்தார்.
- மும்பை அணியின் தேர்வுக் குழு தலைவராக சுதிர் நாயக் பணியாற்றினார்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரரும், பிரபல பயிற்சியாளருமான சுதிர் நாயக் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கிய வீரராக வலம் வந்தவர் சுதிர் நாயக். 1970-71 சீசனில் அவரது தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது. எனினும் 1972ல் முக்கிய பேட்ஸ்மேன்கள் அணிக்கு திரும்பியதால் ஆடும் லெவனில் சுதிர் இடம்பெறவில்லை. 1974ல் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது, பர்மிங்காம் டெஸ்ட்டில் அறிமுகமாகி ஒரு இன்னிங்சில் 77 ரன்கள் குவித்தார். இதுவே அவரது அதிகபட்ச ரன் ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1974ல் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 141 ரன்களும், 2 ஒருநாள் போட்டிகளில் 38 ரன்களும் அடித்துள்ளார். இதுதவிர 85 முதல்தர போட்டிகளில் விளையாடி 4500 ரன்கள் எடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக செயல்பட்டார். மும்பை அணியின் தேர்வுக் குழுவின் தலைவராகவும், அதன்பின் வான்கடே ஸ்டேடியத்தின் ஆடுகள பராமரிப்பாளராகவும் பணியாற்றினார்.
மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது அவர் கோமா நிலைக்கு சென்றார். அதில் இருந்து மீண்டு வராமலேயே அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- மோடிக்கு அவரது கல்வி தகுதியை பார்த்து மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை.
- மோடி 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.
மும்பை :
பிரதமர் மோடியின் எம்.ஏ. (அரசியல் அறிவியல்) பட்டச்சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மோடியின் பட்டச்சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி, "பிரதமர் மோடி தனது கல்வி தகுதியை மறைக்க வேண்டிய மர்மம் என்ன?. அதை அவர் வெளியிட வேண்டும். மோடி தனது பட்டச் சான்றிதழை அவர் கட்டிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்" என்று விமர்சித்தார்.
ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினை தேவையற்றது என்று கருத்து கூறியுள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டப்படிப்பு விவகாரத்தில் என்ன இருக்கிறது?. நமது ஜனநாயகம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறதோ, அவர் பிரதமர் ஆவார்.
மருத்துவ துறையில், ஒருவர் டாக்டராக பணியாற்ற எம்.பி.பி.எஸ். அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அரசியலில் அப்படி எதுவும் இல்லை.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு அவரது கல்வி தகுதியை பார்த்து மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை. அவர் பா.ஜனதாவில் இல்லாத ஒரு வசீகரத்தை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உருவாக்கினார். அதுவே அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் முழு புகழும் மோடியை தான் சாரும்.
அவர் (மோடி) 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவருடைய அல்லது வேறு சில மந்திரிகளின் கல்வி தகுதி பற்றிய பிரச்சினை தோண்டி எடுக்கப்படுவதை நான் கவனிக்கிறேன். இது ஒரு முக்கியமான பிரச்சினை அல்ல.
நாட்டில் பல முக்கிய பிரச்சினை நிலவுகிறது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் வேலையின்மை முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இவற்றை பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை. பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
இவ்வாறு அஜித்பவார் கூறினார்.
- மே 2ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும்.
- விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைகள் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிக்காக வரும் மே மாதம் 2ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று விமானப்படையினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, மே 2ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் 5 மணிக்கு மேல் வழக்கம் போல் ஓடுபாதைகள் இயங்கும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.






