என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தீ மளமளவென பரவியதில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறியது.
    • போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சோனாகாவ் நிபானி எம்ஐடிசி என்கிற பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

    இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீ மளமளவென பரவியதில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறியது.

    இதில் தொழிற்சாலைக்குள் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த அரசுக்கான சாவு மணி தயாராக உள்ளது.
    • அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பதவி போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உடைந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால் இந்த கட்சியால் 2½ ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடிந்தது. சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பால் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார்.

    துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். அதுமட்டும் இன்றி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி சட்டப்போராட்டத்தின் மூலமாக சிவசேனா கட்சி பெயர் மற்றும் சின்னத்தையும் கைப்பற்றியது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவலால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தற்போது முதல்-மந்திரி அவரின் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆட்சி அடுத்த 15-20 நாட்களில் கவிழும். இந்த அரசுக்கான சாவு மணி தயாராக உள்ளது. யார் மணியை அடிக்க வேண்டும் என்பது தான் முடிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏக்நாத் ஷிண்டே அரசு கடந்த பிப்ரவரி மாதமே கவிழ்ந்துவிடும் என ஏற்கனவே சஞ்சய் ராவத் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தானேயில் உள்ள சதாரா பகுதியில் இருந்து டோம்பிவிலி பகுதிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.
    • விபத்தில் பஸ்சில் இருந்த 3 பயணிகள், லாரி டிரைவர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    போபால்:

    மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள சதாரா பகுதியில் இருந்து டோம்பிவிலி பகுதிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.

    இன்று அதிகாலை 2 மணியளவில் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுவாமி நாராயண் கோவில் அருகே பஸ் சென்றபோது, பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 3 பயணிகள், லாரி டிரைவர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 18 பயணிள் காயம் அடைந்தனர்.

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
    • மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் லிவிங்ஸ்டோன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அதர்வா டெய்ட் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கர்ரன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது.

    5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 பந்தில் 92 ரன்களை குவித்தது. பாட்டியா 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாம் கர்ரன் 29 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 7 பந்தில் 4 சிக்சர் உள்பட 25 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.

    மும்பை அணி சார்பில் பியூஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக கேமரன் கிரீன் அரை சதம் எடுத்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும், டிம் டேவிட் 25 ரன்களும், திலக் வர்மா 3 ரன்களும், இஷான் கிஷன் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் 214 ரன்கள் எடுத்தது.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும்

    லிவிங்ஸ்டோன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். அதர்வா டெய்ட் 29 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கர்ரன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 பந்தில் 92 ரன்களை குவித்தது. பாட்டியா 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாம் கர்ரன் 29 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 7 பந்தில் 4 சிக்சர் உள்பட 25 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.

    மும்பை அணி சார்பில் பியூஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

    • இளம்பெண்களை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று மாடல் அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போஜ்புரி நடிகை சுமன் குமாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாடல் அழகிகளை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

    போஜ்புரி நடிகை சுமன் குமாரி (வயது 24), மாடலிங் தொழில் செய்யும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யபப்பட்டுள்ளார். அவர் வசம் இருந்த மூன்று மாடல் அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    இவ்வாறு காவல்துறை கூறி உள்ளது.

    • பிசிசிஐ பிளேஆப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை அறிவித்துள்ளது.
    • சென்னையில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது.

    மும்பை:

    16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், பிசிசிஐ பிளேஆப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி, பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டி மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னையில் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது.

    அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

    சென்னையில் பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • விருது வழங்கும் விழாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அலட்சியமாக செயல்பட்டது என்றார்
    • எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்காக பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சரத் பவார் குற்றம் சாட்டினார்.

    மும்பை:

    2002ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத் மாநிலம் முழுவதும் கடும் வன்முறை வெடித்தது. இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கலவரத்தின்போது அகமதாபாத்தின் நரோதா காமில் 11 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 67 பேரையும் குஜராத் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

    இந்த தீர்ப்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அதிருப்தி தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றும், இது நேற்றைய தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த 16ம் தேதி நடந்த விழாவில் வெப்ப அலையால் மக்கள் உயிரிழந்தது குறித்து பேசிய சரத் பவார், விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ததில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்காக பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சரத் பவார் குற்றம் சாட்டினார்.

    • வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    வடமாநிலங்களில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்ராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    • நாணயங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துவிட்டதால் இனி சீரடி ஆலய நாணயங்களை ஏற்க முடியாது என்று 11 வங்கிகளும் அறிவித்துள்ளன.
    • உண்டியல்களில் உள்ள நாணயங்களை என்ன செய்வது? என்று தெரியாமல் சீரடி ஆலய நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உலக புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள சீரடி சாய்பாபாவை வழிபாடு செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சீரடியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த பக்தர்கள் குறிப்பிட்ட தொகை காணிக்கையாக செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

    அந்த வகையில் நாணயங்களும் அதிக அளவில் சேருகின்றன. அப்படி சேர்ந்த நாணயங்கள் சீரடியில் உள்ள 10 வங்கிகளிலும், நாசிக்கில் உள்ள ஒரு வங்கியிலும் சீரடி ஆலய டிரஸ்ட் சார்பில் சேமிக்கப்படுகிறது. ஆனால் நாணயங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துவிட்டதால் இனி சீரடி ஆலய நாணயங்களை ஏற்க முடியாது என்று 11 வங்கிகளும் அறிவித்துள்ளன.

    இதனால் உண்டியல்களில் உள்ள நாணயங்களை என்ன செய்வது? என்று தெரியாமல் சீரடி ஆலய நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • சரத்பவார், கவுதம் அதானி சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
    • இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மும்பை :

    அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. அதாவது, அதானி குழும நிறுவனங்கள் தங்களின் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெற்றதாகவும், பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும், அதானி குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு, பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து கவுதம் அதானி பின்தங்க தொடங்கினார்.

    அதானி நிறுவன குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான விவகாரத்தில் பாராளுமன்றத்தின் 2-வது அமர்வும் முடங்கியது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கவுதம் அதானிக்கு ஆதரவாக பேசியது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு கமிட்டி விசாரணையே பயன் அளிக்கும் என்றார். அரசியல் காரணங்களுக்காக கவுதம் அதானி குறிவைக்கப்படுகிறார் என்றும் கூறினார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று சரத்பவார் பல்டி அடித்தார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று தொழில் அதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசினார். தென்மும்பையில் உள்ள சரத்பவாரின் 'சில்வர் ஓக்' இல்லத்தில் இந்த சந்திப்பு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    சரத்பவாரை கவுதம் அதானி சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, இது மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சரத்பவார் கூறியிருந்தார். இதனால் இனி சாவர்க்கர் பற்றி விமர்சிக்க போவதில்லை என்று காங்கிரசும் தெரிவித்து இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கவுதம் அதானியுடன் தற்போது சரத்பவார் சந்திப்பு நடத்தி இருப்பது எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாம்னாவில் சஞ்சய் ராவத் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
    • எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும்.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான "சாம்னா"வில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரையில் அஜித்பவார் பா.ஜனதாவில் சேருவதாக வெளியாகும் தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

    இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்தபோது, "யாராவது (அஜித்பவார்) தனிப்பட்ட முடிவை எடுத்தாலும், தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் ஒருபோதும் சேராது" என்று சரத்பவார் கூறியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் பா.ஜனதாவுடன் கைகோர்க்க இருப்பதாக வெளியாகும் ஊகங்களுக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்த அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் சஞ்சய் ராவத்தை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கி பேசினார். இதுபற்றி அவர், "தற்போது மற்ற கட்சியை சேர்ந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல நடந்துகொள்வதாக" கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மட்டுமே எனது நம்பத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப முடியும். நான் அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறேன். நான் பத்திரிக்கையில் அப்படி ஒன்றும் தவறாக எழுதவில்லை.

    எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி நடக்கவில்லையா என்பதை அஜித்பவார் தான் கூறவேண்டும். சிவசேனா கட்சி உடைக்கப்படவில்லையா? தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயற்சி நடக்கவில்லையா?

    இதை சரத்பவார் கூட கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சரத்பவார் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றிய தகவல்களை நான் முன்வைப்பதில் என்ன தவறு?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×