என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார்.
    • பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மும்பை:

    பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் சீமாஹைதர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருணமத்திற்கு பிறகு கராச்சியில் குடியேறினார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இந்நிலையில் சீமாஹைதர் தனது கணவரை விட்டு விட்டு, காதலனை பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தார். பின்னர் சீமாஹைதர் சச்சினுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சீமாஹைதரை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.

    மேலும் சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார். பின்னர் 7-ந் தேதி இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில் சீமாஹைதர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். உருது மொழியில் பேசிய அவர், சீமாஹைதரை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பாவிட்டால் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    • உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் தான் மகாராஷ்டிரத்தின் களங்கம்.

    மும்பை:

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் நாக்பூரில் கட்சியினர் இடையே பேசினார். அப்போது அவர், தேசியவாத காங்கிரசுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறிய பழைய வீடியோ பற்றி பேசினார். மேலும் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரின் களங்கம் எனவும் கூறினார்.

    உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். உத்தவ் தாக்கரே கொடும்பாவியை எரித்தனர்.

    மேலும் மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் உத்தவ் தாக்கரேயை கண்டித்தனர். நாக்பூரில் பா.ஜனதாவினர் உத்தவ் தாக்கரேக்கு இறுதி சடங்கு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் சட்ட மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேக்கர் கூறுகையில், "பா.ஜனதாவை முதுகில் குத்திய உத்தவ் தாக்கரே தான் இந்துத்வாவுக்கு ஏற்பட்ட களங்கம். அவர் எங்கள் தலைவர் பற்றி அதுபோன்ற கருத்துகளை கூற கூடாது" என்றார்.

    மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறும்போது, "உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் பற்றி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருக்கு தைரியம் இருந்தால் மீண்டும் நாக்பூர் வரவேண்டும். மக்கள் அவரை செருப்பால் அடிப்பார்கள்" என்றார்.

    இதேபோல பா.ஜனதாவின் முகநூல் பக்கத்திலும் அந்த கட்சி உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து உள்ளது. அதில், "உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் தான் மகாராஷ்டிரத்தின் களங்கம். உங்களுக்கு மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உத்தவ் தாக்கரே பேச்சு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    தற்போதைய அரசியல் சூழலால் எனது முன்னாள் நண்பர் (உத்தவ் தாக்கரே) பாதிக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. அவர் மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். அவருடைய தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு அவரது பேச்சுக்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன். அவரது தற்போதைய மனநிலை அந்த அளவுக்கு உள்ளது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர் கூறியதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவசேனா என்ற பெயர் எனது தாத்தா கேசவ் தாக்கரே வழங்கியது.
    • ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம்.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே விதர்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் அமராவதிக்கு சென்றார். அங்கு நடத்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    உலகின் நம்பர் ஒன் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறிக்கொள்ளும் பா.ஜனதாவுக்கு மற்ற கட்சிகளில் பிளவை ஏற்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது.

    நீங்கள் சிவசேனாவை கொள்ளையடித்தீர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை கொள்ளையடித்தீர்கள். நாளை வேறு எதையாவது கொள்ளை அடிப்பீர்கள்.

    நீங்கள் நாட்டுக்கு சொந்தமானதை விற்பனை செய்கிறீர்கள். மற்றவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறீர்கள். உலகின் மிகபெரிய கட்சியான பா.ஜனதாவுக்கு ஏன் இந்த நிலை வந்தது?. ஏனென்றால் உங்களிடம் அதிகாரத்தின் பெருமை இல்லை. தன்னம்பிக்கை இல்லை.

    பா.ஜனதா இவ்வளவு பெரிய மற்றும் பலம்பெற்ற கட்சியாக மாறியபிறகும், தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைக்கிறது. எனவே எதிராளிகளை இல்லாமல் செய்ய அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்துகின்றனர்.

    மகாராஷ்டிராவில் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த பா.ஜனதாவை சிவசேனா தனது தோளில் சுமந்து மாநிலத்தில் அதன் அடித்தளத்தை விரிவுபடுத்த உதவியது.

    ஆனால் நீங்கள் எங்களை தற்போது அரசியலில் இருந்து ஒழித்துவிட பார்க்கிறீர்கள். இதுதான் உங்களின் இந்துத்வா.

    பாலாசாகேப் தாக்கரே உங்களை காப்பாற்றினார். இல்லையெனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உங்களை குப்பை தொட்டியில் வீசியிருப்பார். பாலாசாகேப் தாக்கரே தற்போதைய பிரதமருக்கு ஆதரவு அளிக்காவிட்டால் அவர் பிரதமராகி இருக்க முடியுமா?. இதை மற்றவர்களிடம் கேட்பதை விட உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

    தற்போது தேர்தலில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் நோக்கிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினை கொண்டு வரப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் இந்த பிரச்சினை கிடப்பில் போடப்படும்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை எழுப்பப்படும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்கியது. பா.ஜனதா எதையும் செய்யவில்லை.

    ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருமாறு நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அதை கொண்டுவர அவர்களுக்கு தைரியம் இல்லை.

    ராமர் கோவிலுக்கான போராட்டத்தின் போது இந்துத்வாவாதிகள் என்று கூறிக்கொண்டவர்கள் எலி பொந்தில் பதுங்கி இருந்தனர்.

    ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம். ஆனால் கட்சியின் பெயரை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. சிவசேனா என்ற பெயர் எனது தாத்தா கேசவ் தாக்கரே வழங்கியது. இதை யாரும் திருட விடமாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி வாய்திறக்க மறுக்கிறார்
    • ஆனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவ சேனா கட்சியின் (UBT) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியதாவது:-

    துரோகிகள் மற்றும் பயனற்றவர்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த வகையான அரசியல் வீழ்ச்சி அடையும். ஏனென்றால் மகாராஷ்டிரா துரோகிகளால் ஆட்சி செய்யப்படும் மாநிலமாக பார்க்கப்படுகிறது. அவர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    மத்திய பிரதேசத்தில் முன்னதாக பிரதமர் மோடி பேசும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சொன்னார். தற்போது அந்த கட்சியை தன்னுடன் நினைத்து உள்ளார். இதனால் 70 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்களுடன் பிரதமர் மோடி பிம்பம் பிரதிபலிக்கும். இந்த இந்துத்வா உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா?.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி சோதனை அமைப்புகளை மணிப்பூருக்கு அனுப்புங்கள். மணிப்பூரை எரித்துக் கொண்டிருப்பவர்கள் தானாக உங்கள் கட்சியில் இணைந்து விடுவார்கள்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    • எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை.
    • பா.ஜனதா அடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்த வேண்டும்.

    மும்பை :

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொண்டர்களை ஊக்கப்படுத்த உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விதர்பா மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். நேற்று காலை நாக்பூர் சென்ற அவர், அங்கு இருந்து கார் மூலம் விதர்பா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்றார். பல்வேறு இடங்களில் தொண்டர்கள் உத்தவ் தாக்கரேயை உற்சாகமாக வரவேற்றனர்.

    உத்தவ் தாக்கரே யவத்மால், வாசிம், அமராவதி, அகோலா, நாக்பூர் பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். வாசிமில் உள்ள போக்ராதேவி கோவிலில் சாமி தாிசனம் செய்த அவர், பஞ்சாரா சமூக பிரநிதிகளையும் சந்தித்து பேசினார்

    யவத்மாலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. நானும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் முடிவை எடுத்து இருந்தோம். பா.ஜனதா அந்த முடிவை மதித்து இருந்தால், இன்று வேறு கட்சியினருக்கு அந்த கட்சியின் தொண்டர்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. 2 கட்சிகளும் 2½ ஆண்டு முதல்-மந்திரி பதவியை நிறைவு செய்து இருக்கும்.

    நான் மந்திராலயாவுக்கு கூட சென்றதில்லை என கூற பா.ஜனதாவுக்கு தகுதி கிடையாது. பா.ஜனதா அடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்த வேண்டும். எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை. குப்பைகளை (அஜித்பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது) பா.ஜனதா எப்படி கையாளுகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து யவத்மால் மாவட்டம் திக்ராஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஒரு நாடு, ஒரே சட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் பா.ஜனதாவின் ஒரு நாடு, ஒரு கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பா.ஜனதாவுக்கு தாக்கரே இல்லாத சிவசேனா மட்டும் வேண்டும். பா.ஜனதா தற்போது குப்பை கட்சியாகிவிட்டது. பிரதமர் மோடியின் செல்வாக்கு மங்கிவிட்டது சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. அவர் 'பஜ்ரங்பலி கி ஜெய்' என சத்தமாக முழங்கினார். ஆனால் கடவுள் பதிலடி கொடுத்தார். பா.ஜனதா கர்நாடகாவில் படுதோல்வி அடைந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அஜித் பவார் பேசினார்.
    • நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என சரத் பவார் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் சமீபத்தில் தனித்தனியாக நடைபெற்றன.

    அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் அஜித் பவார் பேசுகையில், சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்சிபியின் ஆட்சியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். பா.ஜ.க. தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உதாரணமாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இது புதிய தலைமுறையை உயர்த்த அனுமதிக்கிறது. உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. நெருப்பு போல் வேலை செய்து வருகிறேன்.

    மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார்?

    நான் பிரதமர் ஆகவோ, மந்திரி ஆகவோ ஆசைப்படவில்லை.

    நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.

    அனைத்து கிளர்ச்சியாளர்களும் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

    சுப்ரியா சுலே அரசியலுக்கு வரவேண்டும் என கட்சியினர் விரும்பினர், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பிரபுல் படேலுக்கு 10 ஆண்டுகள் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம். மக்களவை தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததால் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தோம் என தெரிவித்தார்.

    • அஜிப் பவார் உடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியமைக்க திட்டம்
    • ஏக்நாத் ஷிண்டேவை ராஜினாமா செய்யச் சொன்னதாக தகவல்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அஜித் பவார் தனது கூட்டாளிகளுடன் பிரிந்து சென்று மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தனர். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்ததில் இருந்து மூன்று கட்சிகளில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    1. தேசியவாத காங்கிரஸ் கட்சி

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு சரத் பவார்- அஜித் பவார் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. டெல்லியில சரத் பவார் செயற்குழு கூட்டத்தை கூட்டியதுடன், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

    அஜித் பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார். அதில் தனக்கு அதிக அளவில் கட்சி தலைவர்கள், கட்சி எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது

    2. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா

    முதலமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அஜித் பவார் கட்சியுடன் கைக்கோர்த்தது சிவசேனாவில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்களுக்கு பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் சித்தாந்தம். பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து சிந்தித்தது கிடையாது என்பதுதான்.

    மேலும், ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என கருத்து வெளிப்பட்டதாகவும், அவர் ராஜினாமா செய்ய முன்னவந்ததாகவும் தகவல் வெளியானது. பின்னர் ஷிண்டே ராஜினாமா செய்யமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

    3. பா.ஜனதா

    பா.ஜனதா கட்சியிலும் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பவார் உடன் இணைவது அந்தக்கட்சியில் உள்ளவர்களுக்கும் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அஜித் பவார் உடன் இணைந்து ஷிண்டேவை ஓரங்கட்ட பா.ஜனதா நினைத்துள்ளதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா தாக்கரே ''பா.ஜனதா ஏக்நாத் ஷிண்டு குரூப்பை ஓரங்கட்டுகிறது. தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் குரூப் உடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷிண்டே ராஜினாமா செய்ய கேட்கப்பட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிர மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது'' என்றார்.

    இதற்கிடையே உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்ச் ராவத் ''அஜித் பவார் அரசில் இணைந்தது பிடிக்கவில்லை என்பதால் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் சுமார் 18 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.
    • மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

    இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் இணைந்தார். அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்று அரசியல் அரங்கை அதிர வைத்தனர். தற்போது மகாராஷ்டிராவில் ஷிண்டே- பட்னாவிஸ்- அஜித்பவார் ஆகியோரை கொண்டே 3 கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

    ஆட்சியில் அஜித்பவார் இணைந்தது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்பவார் வருகையால் தங்களுக்கு கிடைக்க இருந்த முக்கிய இலாகா, மந்திரி பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற கலக்கம் அவர்கள் இடையே நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்பவாரின் அதிரடி வருகை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பதவியை ஆட்டம் காண வைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.

    இதையடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கடந்த புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தனது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.

    இதற்கு மத்தியில் மந்திரி பதவி கிடைக்கும் என்று காத்திருந்த சிவசேனாவை சேர்ந்த 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தவறு செய்ததை உணர்ந்து உத்தவ் தாக்கரேவுடன் பேசி வருவதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் விநாயக் ராவத் அணுகுண்டை தூக்கி போட்டுள்ளார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்-மந்திரியின் 'வர்ஷா' பங்களாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு நடந்தது. இதில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக சிவசேனா தரப்பு கவலைகளை தேவேந்திர பட்னாவிசிடம் முதல்-மந்திரி ஷிண்டே விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர்களின் சந்திப்பு பின்னணியில் வேறு தடாலடி விஷயங்கள் எதுவும் இருக்குமா? என்ற பரபரப்பும் எகிறி உள்ளது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை. நான் பதற்றத்தில் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. எனது தலைமையிலான சிவசேனாவும், பா.ஜனதாவும் சித்தாந்தத்தால் ஒன்றுப்பட்டது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை முதல்-மந்திரியாக்கினர். தற்போது எங்களது அரசில் அஜித்பவார் இணைந்துள்ளார். இதனால் நாங்கள் பலமடைந்து உள்ளோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம். மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.

    சரத்பவார் 1978-ம் ஆண்டு வசந்த்ததா பாட்டீல் ஆட்சியை கவிழ்த்து முதல்-மந்திரி ஆனார். 1999-ம் ஆண்டு காங்கிரசில் பிளவை ஏற்படுத்தினார். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முயன்ற சரத்பவார், பின்னர் 'யு-டர்ன்' அடித்ததாக அஜித்பவாரே தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 ஆண்டுகளாக அயராது கட்சிப்பணி செய்தும் என்னைப்பற்றிய வதந்திகள் பரப்பப்படுகின்றன.
    • சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு தொடர உள்ளேன்.

    மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் பங்கஜா முண்டே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிர அரசியல், கட்சியில் தனது நிலை மற்றும் பாஜக எம்எல்ஏக்களின் மனநிலை தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கட்சியில் நான் அதிருப்தியில் இருப்பதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இதுபோன்ற விவாதங்கள் ஏன் நடக்கின்றன? கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காததுதான் காரணமா? என்னை புறக்கணித்தனர். ஏன் என்று கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

    20 ஆண்டுகளாக அயராது கட்சிப்பணி செய்துள்ளேன். இருந்தாலும், என்னைப்பற்றிய வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனது கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார்கள். நான் சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ சந்திக்கவில்லை. வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை. பாஜகவின் சித்தாந்தம் எனது ரத்தத்தில் கலந்திருக்கிறது. வாஜ்பாய் மற்றும் கோபிநாத் முண்டேவின் பாதையில் நான் சென்றுகொண்டிருக்கிறேன். அதேசமயம் நான் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு தொடர உள்ளேன்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய சோதனைகள் நடக்கின்றன. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அதைப்பற்றி பேசுவதற்கு பயப்படுகின்றனர். ஊழலை சகித்துக் கொள்ள மாட்டேன் என்று நரேந்திர மோடி கூறினார். மக்கள் அதை விரும்பி ஆதரவு அளித்தனர்.

    நான் கட்சியின் முடிவை எப்போதும் ஏற்றுக்கொள்வேன். யாருடைய முதுகிலும் குத்தியதில்லை. எனது சித்தாந்தங்களில் சமரசம் செய்யவேண்டியிருந்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயங்க மாட்டேன் என்று முன்பே கூறியிருந்தேன். நான் இப்போது இரண்டு மாத விடுமுறையில் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பங்கஜா முண்டேவின் பேட்டி குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பாஜகவில் உள்ள பலர் நீண்ட காலமாக தேசியவாத காங்கிரசுக்கு எதிராக போராடி வருவதாகவும், அக்கட்சியுடனான பாஜகவின் கூட்டணியை உடனடியாக ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், பங்கஜா முண்டேவிடம் பாஜக தலைமை பேசும், அவர் தொடர்ந்து கட்சி பணியாற்றுவார் என்றும் பட்னாவிஸ் கூறினார்.

    • பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்றால் நம்புவது கடினம் தான்.
    • மும்பையைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் உலகின் பெரிய பணக்கார பிச்சைக்காரராகத் திகழ்கிறார்.

    மும்பை:

    பிச்சைக்காரன் என்றதும் அவர்கள் ஏழைகள் என்பது நினைவுக்கு வருவது சகஜமான ஒன்று. ஆனால் தற்போது பிச்சை எடுப்பது தொழிலாக மாறிவிட்டது.

    பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்று சொன்னால் நம்புவது கடினமாகத் தான் இருக்கும்.

    இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர், உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரராகத் திகழ்கிறார். இவர் பிச்சையெடுத்தே நிறைய பணம் சம்பாதித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு சகோதரர், அவரது தந்தையுடன் வசித்து வருகிறார்.

    இவருடைய மாத வருமானம் சுமார் 60,000 முதல் 75,000 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 2 பெட்ரூம் பிளாட் ஒன்று மும்பையில் சொந்தமாக உள்ளது. தானே பகுதியில் இவருக்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளது. அதன் வாடகையாக மட்டுமே மாதம் 30,000 ரூபாய் வருகின்றது.

    மொத்தம் இவரது சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் மதிப்புடையது என்பது அப்பகுதி மக்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

    • அஜித் பவார் உடன் இணைந்ததால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது.

    அஜித் பவாரை அரசில் இணைத்ததால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான சித்தாந்தம் முற்றிலும் வேறுபாடு. பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை. மேலும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு எனக் கருதினர். இதனால் அஜித் பவார் இணைந்து செயல்பட ஷிண்டே முடிவு செய்ததால் அதிருப்தியில் இருந்தனர்.

    இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. தங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ராஜினாமா கடிதத்தை பெறுவோம் தவிர, கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன் குலே, எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ராஜினாமா செய்யமாட்டார் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மற்றொரு துணைமுதல்வரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்றிரவு ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

    சரத் பவார் நேற்று டெல்லியில் செயற்குழு கூட்டத்தை கூட்டி, நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனக் கூறினார். அதற்கு அஜித் பவார், தேர்தல் கமிஷனில் சின்னம் மற்றும் கட்சி குறித்து மனு அளித்துள்ளோம். இதனால் சட்டப்பூர்வமாக அந்த கூட்டம் செல்லத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
    • கட்சியின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அஜித்பவார் உள்ளிட்ட 9 பேர் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் மற்ற 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி வரம்பை மீறி செயல்பட்டதாக கூறி அஜித்பவார் உள்ளிட்ட 9 பேரையும் கட்சிதாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சரத்பவார் தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதேசமயம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு தான் அதிகமாக இருப்பதால் கட்சியும், சின்னமும் தங்களுக்கு தான் சொந்தம் என அஜித்பவார் தரப்பு கூறி வருகிறது.

    இந்த நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை குறித்து ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி சகன் புஜ்பால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அஜித்பவார் தலைமையிலான அரசில் இணைவது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து அதன்பிறகு தான் முடிவு எடுக்கப்பட்டது. 2 முதல் 4 வல்லுனர்களுடன் பேசி தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுடன் இணைவற்கு முன்பு கட்சியின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன.

    அஜித்பவாருக்கு ஆதரவாக 42 முதல் 43 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டு உள்ளனர்.

    கட்சி தலைவர் சரத்பவாரின் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்தலாமா என்பது குறித்து அஜித்பவாரும் மற்ற தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள்.

    சரத்பவாரின் மகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், அஜித்பவாரை மகாராஷ்டிராவை கையாள அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் முன்பே பரிந்துரைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி யாரும் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதையும் மீறி அஜித்பவார் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×