search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூருக்கு இவைகளை அனுப்பினால், எரிப்பவர்கள் பா.ஜனதாவில் இணைந்து விடுவார்கள்- உத்தவ் தாக்கரே தாக்கு
    X

    மணிப்பூருக்கு இவைகளை அனுப்பினால், எரிப்பவர்கள் பா.ஜனதாவில் இணைந்து விடுவார்கள்- உத்தவ் தாக்கரே தாக்கு

    • பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி வாய்திறக்க மறுக்கிறார்
    • ஆனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவ சேனா கட்சியின் (UBT) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியதாவது:-

    துரோகிகள் மற்றும் பயனற்றவர்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த வகையான அரசியல் வீழ்ச்சி அடையும். ஏனென்றால் மகாராஷ்டிரா துரோகிகளால் ஆட்சி செய்யப்படும் மாநிலமாக பார்க்கப்படுகிறது. அவர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    மத்திய பிரதேசத்தில் முன்னதாக பிரதமர் மோடி பேசும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சொன்னார். தற்போது அந்த கட்சியை தன்னுடன் நினைத்து உள்ளார். இதனால் 70 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்களுடன் பிரதமர் மோடி பிம்பம் பிரதிபலிக்கும். இந்த இந்துத்வா உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா?.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி சோதனை அமைப்புகளை மணிப்பூருக்கு அனுப்புங்கள். மணிப்பூரை எரித்துக் கொண்டிருப்பவர்கள் தானாக உங்கள் கட்சியில் இணைந்து விடுவார்கள்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    Next Story
    ×