என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது.
    • இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    சிம்லா:

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து கேரளா மாநிலம் திரும்பிய 3 பேருக்கு ஏற்கனவே இந்த நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இதன் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது. தற்போது இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    அவரை பரிசோதித்ததில் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் தான் அவர் குரங்கு அம்மை நோய் உள்ளதா? என்பது தெரிய வரும்.

    • சாலையில் இருந்து பாறாங்கற்கள் அகற்றப்படும் வரை போக்குவரத்தக்துக்கு தடை.
    • சாலை விரைவில் சுத்தம் செய்யப்படும் என எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மணாலி தாலுகாவில் உள்ள நேரு குண்ட் அருகே இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சாலையில் இருந்து பாறாங்கற்கள் அகற்றப்படும் வரை போக்குவரத்து பல்சான் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குலு மாவட்ட நிர்வாகம், சாலையை சீரமைக்க எல்லை சாலைகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சாலை விரைவில் சுத்தம் செய்யப்படும் என எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    • சாலையில் ஓடும் கார் மீது பாறை உருண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
    • காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்படுகிறது.

    இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள நிர்மந்த் தாலுகாவில் உள்ள பாகிபுல் என்றி இடத்தில் நேற்று இரவு 10.45 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில், சாலையில் ஓடும் கார் மீது பாறை உருண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலும், இறந்தவர் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த தேவானந்த் என்றும், சஞ்சீவ் குமார், தீபக் குமார் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று மூத்த பேரிடர் மேலாண்டை அதிகாரி தெரிவித்தார்.

    • டேராடூன் அருகே முசோரியில் பிரசித்தி பெற்ற சுர்கந்தா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எம்.எல்.ஏ. மற்றும் பக்தர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே முசோரியில் பிரசித்தி பெற்ற சுர்கந்தா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. கிஷோர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர்.

    அவர்கள் ரோப் காரில் ஏறி கோவிலுக்கு புறப்பட்டனர். ரோப் காரும் கோவில் நோக்கி நகர்ந்தது.

    சிறிது தூரம் சென்றதும் ரோப் கார் திடீரென பழுதானது. இதனால் அதில் இருந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் 40 பக்தர்களும் நடுவானில் தவித்தனர்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரோப் காரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எம்.எல்.ஏ. மற்றும் பக்தர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

    • இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
    • ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ஆறு யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. சிக்கித் தவித்த 15 ஆயிரம் யாத்ரீகர்கள் மீட்கப்பட்டு பஞ்சதர்னியின் கீழ் தள முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. காயமடைந்த 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமர்நாத் குகைக் கோயில் அருகே மலை பகுதியில் மீட்பு குழுக்கள், ரோந்து படைகள், மோப்ப நாய்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    வான்வழி மீட்பு நடவடிக்கைகள் இன்று காலை தொடங்கியது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ஆறு யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் மீட்புப் பணிகளுக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களையும் அனுப்பியுள்ளது" என்றார்.

    டெல்லியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் செய்தித் தொடர்பாளர், "16 உடல்கள் பால்டால் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

    • இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலியாரில் உள்ள இடத்தில் சிமென்ட் தூண் டிப்பர் வாகனம் மீது விழுந்தது.
    • காயமடைந்தவர் மேல்சிகிச்சைக்காக மண்டி மண்டல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை கட்டுமான தளத்தில் சிமென்ட் தூண் ஒன்று டிப்பர் வாகனத்தின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து மண்டி மாவட்ட அவசர நடவடிக்கை பிரிவு வழங்கிய தகவலின்படி, டிப்பர் வாகனத்தில் 5 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலியாரில் உள்ள இடத்தில் சிமென்ட் தூண் டிப்பர் வாகனம் மீது விழுந்தது.

    காயமடைந்தவர் மேல்சிகிச்சைக்காக மண்டி மண்டல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விபத்து தொடர்பாகன விவரங்கள் காத்திருக்கின்றன.

    • பேருந்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. சைன்ஜ் பள்ளத்தாக்கில் உள்ள குல்லுவில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சைஞ்ச் நோக்கி அந்த பேருந்து சென்றுகொண்டிருந்தது. நியோலி-ஷான்ஷெர் சாலையில் உள்ள ஜங்லா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலையில் இருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது.

    பேருந்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம்.
    • சுகாதார அமைச்சர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை மான் கண்டுபிடித்தார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதைமுன்னிட்டு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குலுவில் சாலைப் பேரணி நடத்தினர்.

    அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொது மக்களிடம் உரையாற்றினார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. அண்ணா ஹசாரே இயக்கத்தில் தொடங்கிய எங்கள் பயணம், பின்னர் கட்சியை உருவாக்கினோம். ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம். முதலில், டெல்லியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்தோம். பின்னர் பஞ்சாபில் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயல்முறையைத் தொடங்கினோம்.

    எந்த ஒரு முதலமைச்சரும் தன் அமைச்சரை சிறைக்கு அனுப்பியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தனது சுகாதார அமைச்சர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை மான் கண்டுபிடித்தார். அவருக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர் அதை கம்பளத்தின் கீழ மறைத்திருக்கலாம் அல்லது அமைச்சரிடம் தனது பங்கைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவரை சிறைக்கு அனப்பினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்னிபாத் திட்டத்தை வரேவேற்று இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கருத்து.
    • நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியுள்ளது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை வரேவேற்று இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    அக்னிபாத் திட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் முடிவை வரவேற்கிறேன். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை வேறு திசையில் கொண்டு செல்ல முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்று நான் கருதுகிறேன். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    முழு நாடும் இந்த முடிவை வரவேற்கும் நிலையில், பெரிய அளவிலான இந்த வேலை வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி எப்போதும் இளைஞர்களைப் பற்றியே சிந்தித்து நல்லது செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கங்கோத்ரிக்கு 3,33,9090 யாத்ரீகர்களும், யமுனோத்ரிக்கு 2,50,398 யாத்ரீகர்களும் வந்துள்ளனர்.
    • இமயமலைக் கோயில்களுக்கு இதுவரை சென்ற மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18,01,209-ஆக உள்ளது.

    இமயமலையில் உள்ள சார் தாம் யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வந்துள்ளதனர்.

    இதுகுறித்து பத்ரிநாத்- கேதார்நாத் கோயில் கமிட்டியின் ஊடகப் பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் கூறியதாவது:-

    ஒரு மாதத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் சார்தாம் ஆலயங்களுக்கு வருகை தந்துள்ளனர். இதில், பத்ரிநாத்துக்கு 6,18,312 யாத்ரீகர்களும், கேதார்நாத்துக்கு 5,98,590 யாத்ரீகர்களும் வந்துள்ளனர்.

    இதேபோல், கங்கோத்ரிக்கு 3,33,9090 யாத்ரீகர்களும், யமுனோத்ரிக்கு 2,50,398 யாத்ரீகர்களும் வந்துள்ளனர்.

    மேலும், இமயமலைக் கோயில்களுக்கு இதுவரை சென்ற மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18,01,209-ஆக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×