என் மலர்tooltip icon

    பீகார்

    • கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவர் தற்போது உடல்நல பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
    • லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், ஏ.கே. இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பெயரிலும் நிலங்கள் லஞ்சமாக பெறப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்திய ரெயில்வே துறை மந்திரியாகவும் இருந்தவர்.

    கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவர் தற்போது உடல்நல பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.

    இதற்கிடையே ரெயில்வே பணிகளுக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. 2004-2009-ம் ஆண்டு கால கட்டத்தில் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹாஜிபூர் ஆகிய இடங்களில் பல்வேறு மண்டலங்களில் பீகாரின் பாட்னாவை சேர்ந்தவர்கள் பணிகளில் நியமிக்கப்பட்டனர்.

    அதற்காக லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், ஏ.கே. இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பெயரிலும் நிலங்கள் லஞ்சமாக பெறப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ரெயில்வே ஆணையம் வழங்கிய முறையான நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மற்றும் நிலத்தை கொடுத்து வேலை பெற்றதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

    பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வந்தனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாலு பிரசாத் யாதவின் உதவியாளரும், முன்னாள் சிறப்பு பணி அதிகாரியுமான போலா யாதவை சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சில ஆவணங்களை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து கூடுதல் விசாரணை நடத்தப்போவதாக சி.பி.ஐ. தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இன்று பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

    12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவியிடம் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் ரெயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலங்கள் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்போது வீட்டில் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரசாத் யாதவ் ஆகியோர் இருந்தனர் என்று கூறப்படுகிறது. தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதல்வராகவும் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலத்தை தான் பதிவு செய்ததாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராப்ரிதேவியிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து அவரை சந்திப்பதற்கான தேதி, நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக வருகிற 15-ந்தேதி ஆஜராகும்படி லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்.
    • இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது.

    பாட்னா :

    வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வெளியான தவறான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

    இதையொட்டி பீகார் மாநில துணை முதல்-மந்திரி ஜேதஸ்வி யாதவ், பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுந்த புகார்களை மறுத்து தமிழ்நாடு டி.ஜி.பி. வெளியிட்ட அறிக்கையை நான் சட்டசபையில் வாசித்தேன்.

    நான் இந்த விவகாரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவேதான், நான் அங்கம் வகிக்கிற அரசு, நேரில் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது. அதன் நோக்கம், களத்தகவல்களை பெறுவதுதான்.

    இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது. தமிழ்நாடு அரசும் சகித்துக்கொள்ளாது.

    தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்களின் அடிப்படையில் பொதுவான அனுமானங்கள் கூடாது.

    எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் இதில் பீகாரில் எதிர்க்கட்சியாகவும், மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ள பா.ஜ.க.விடம் கேள்விகள் எழுப்ப வேண்டும்.

    இந்த விவகாரம், இரு மாநிலங்கள் தொடர்பானவை என்ற போதிலும் மத்திய அரசு இதுவரையில் அக்கறை காட்டவில்லை.

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர், பீகார் பா.ஜ.க. தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தங்கள் மாநிலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்தார் என்பது பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தவறான தகவல்களை, ஆத்திரமூட்டும் வார்த்தைகளை டுவிட்டரில் வெளியிட்டது தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கெல்லாம் பா.ஜ.க. பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர்.

    மனிதர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி தீர்க்க கோபத்தின் உச்சத்தில் ஏதேதோ செய்வார்கள். ஆனால், பீகாரில் ஒருவர் காதலனுடன் ஓடிச்சென்ற மனைவியை பழி தீர்க்க வினோத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீரஜூக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய ரூபி தனது கள்ளக்காதலன் முகேஷூடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நீரஜ், தனது மனைவியை முகேஷ் கடத்தியதாக காவல் துறையில் புகார் அளித்தார்.

    மேலும், இந்த விஷயத்திற்கு முடிவுகட்ட நீரஜ் பஞ்சாயத்தை கூட்டினார். ஆனால், பஞ்சாயத்திற்கு இணங்க மறுத்த முகேஷ், ரூபியுடன் அன்றே ஊறைவிட்டு வெளியேறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், மனைவி ரூபியை பழிவாங்குவதற்காக, முகேஷின் மனைவியான அதே பெயரைக் கொண்ட ரூபி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர். முகேஷூக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த வினோதமான திருமணங்கள் பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை பழி வாங்குவதற்காக தொழிலாளி திட்டம் தீட்டினார்.
    • நீரஜ், முகேசின் முதல் மனைவி ரூபி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஹதியா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ். இவரது மனைவி ரூபிதேவி. இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. அதாவது ரூபிக்கு பஸ்ராகா கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்ற தொழிலாளியுடன் கள்ளக்காதல் இருப்பது நீரஜ்க்கு தெரியவந்தது.

    ரூபி திருமணத்திற்கு முன் பஸ்ராகா கிராமத்தில் வசித்து வந்தார். அப்போது முகேசுடன் ஏற்பட்ட பழக்கத்தை திருமணத்திற்கு பின்பும் அவர் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    முகேசுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் ரூபிதேவியுடனான தொடர்பை கைவிடாத நிலையில் கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நீரஜ் பஸ்ராகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் கிராம பஞ்சாயத்து கூட்டத்திலும் அவர் முறையிட்டார். ஆனாலும் முகேஷ் ரூபியுடன் பழக்கத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து முகேஷ் ரூபியுடன் தனியாக வாழ்ந்து வந்ததை அறிந்த நீரஜ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    குறிப்பாக கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை பழி வாங்குவதற்காக அவர் திட்டம் தீட்டினார். அதன்படி முகேசின் மனைவியுடன் அவர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். முகேசின் மனைவி பெயரும் ரூபி ஆகும். இந்நிலையில் நீரஜ், முகேசின் முதல் மனைவி ரூபி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    4 குழந்தைகளுக்கு தந்தையான நீரஜ் மனைவியால் கைவிடப்பட்ட நிலையில், மனைவியை பழிவாங்கும் வகையில் அவரது காதலனின் மனைவியை திருமணம் செய்தது அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இருவரது திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார்.
    • பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

    பீகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்திற்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

    மத்திய மந்திரிகளாக இருந்த நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் பீகாருக்கு செய்தது என்ன?

    காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த முதல் மந்திரி நிதிஷ்குமார், பிரதமர் பதவி மீது கொண்ட பேராசை காரணமாக சோனியாவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, லாலுவின் ஜாதி வெறி மற்றும் ஊழல் அரசியலுக்கு எதிராக போராட வேண்டிய நிதிஷ்குமார் பிரதமர் பதவி மோகத்தில் லாலுவின் மடியில் அமர்ந்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

    • நீண்டகாலமாக அணைந்திருந்த சீக்கிய பயங்கரவாதம், தற்போது மீண்டும் தலைகாட்ட தொடங்கி உள்ளது.
    • அம்ரித்பால் சிங் சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ் பெற்றவர்.
    • சமீபத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    அமிர்தசரஸ் :

    பஞ்சாபில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர், பிந்தரன்வாலே. கடந்த 1982-ம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் பொற்கோவில் வளாகத்துக்குள் புகுந்து, அதை தனது தலைமையகமாக மாற்றிக் கொண்டார்.

    அங்கிருந்தபடி இணை அரசாங்கம் நடத்த தொடங்கினார். அவரை வெளியேற்ற இந்திய ராணுவம் 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையை தொடங்கியது. அதில், பிந்தரன்வாலே உள்பட ஏராளமானோர் பலியானார்கள்.

    அதைத்தொடர்ந்து, நீண்டகாலமாக அணைந்திருந்த சீக்கிய பயங்கரவாதம், தற்போது அம்ரித்பால் சிங் என்பவர் மூலம் மீண்டும் தலைகாட்ட தொடங்கி உள்ளது.

    29 வயதான அம்ரித்பால் சிங், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஜல்லுபுர் கேரா கிராமத்தில் பிறந்தவர். துபாயில் இருந்த அவர் அங்கிருந்து திரும்பினார். முதலில், தனது குடும்பத்துக்கு சொந்தமான போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    பிறகு அவரை 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக முடிசூட்டினர். இந்த அமைப்பு, கடந்த ஆண்டு சாலை விபத்தில் மறைந்த நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்டது ஆகும். பிந்தரன்வாலே பிறந்த ஊரான மொகா மாவட்டம் ரோட் கிராமத்தில் முடிசூட்டு விழா நடந்தது. இம்மாத தொடக்கத்தில் அம்ரித்பால் சிங்குக்கு சொந்த கிராமத்தில் திருமணம் நடந்தது. இங்கிலாந்தில் வசித்து வரும் வெளிநாட்டுவாழ் இந்திய பெண் கிரந்தீப் கவுரை மணந்தார்.

    அம்ரித்பால் சிங், மத போதகர் என்ற அவதாரத்துடன் வலம் வருகிறார். தன்னை பிந்தரன்வாலே ஆதரவாளர் என்றும், காலிஸ்தான் ஆதரவாளர் என்றும் கூறிக் கொள்கிறார். பிந்தரன்வாலே போலவே, ஆயுதம் தாங்கிய ஆதரவாளர்கள் புடைசூழ நடமாடுகிறார். அதனால் அவரை ஆதரவாளர்கள் 'பிந்தரன்வாலே-2' என்று அழைக்கிறார்கள்.

    அம்ரித்பால் சிங் சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ் பெற்றவர். சமீபத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ''இந்திராகாந்திக்கு ஏற்பட்ட கதிதான், அமித்ஷாவுக்கும் ஏற்படும்'' என்று அவர் கூறினார்.

    பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டம் சாம்கவுர் சாகிப்பை சேர்ந்த பரிந்தர்சிங் என்பவரை கடத்திச் சென்று அடித்து உதைத்ததாக அம்ரித்பால் சிங் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் ஒருவரான லவ்பிரீத்சிங் என்ற டூபான் என்பவரை அமிர்தசரஸ் அருகே உள்ள அஜ்னாலா போலீசார் கைது செய்தனர். அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் லவ்பிரீத்சிங் வைக்கப்பட்டு இருந்தார்.

    நேற்று முன்தினம் அவரை மீட்பதற்காக, அம்ரித்பால் சிங் தன் ஆதரவாளர்களுடன் போலீசாரின் தடைகளை தாண்டி போலீஸ் நிலையத்தை அடைந்தார். வாள், துப்பாக்கிகளுடன் ஆதரவாளர்கள், போலீசாருடன் மோதினர். அதில் 3 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் நிலையமே போர்க்களமாக காட்சியளித்தது.

    24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோர்ட்டு மூலமாக லவ்பிரீத்சிங்கை விடுவிப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு, அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    அதுபோலவே, அஜ்னாலாவில் உள்ள கோர்ட்டு, லவ்பிரீத்சிங்கை விடுவிக்குமாறு நேற்று உத்தரவிட்டது. தற்போது, அஜ்னாலா பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
    • இக்கட்டான நேரத்திலும் கல்வியின் முக்கியத்துவம் கருதி தேர்வு எழுதிய ருக்மினி ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக அதிகாரிகள் பாராட்டினர்.

    பாங்கா:

    பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ருக்மினி குமாரி (வயது22). இவர் 10-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த செவ்வாய்கிழமை கணிதத்தேர்வை எழுதியிருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியது இருந்தது.

    இந்நிலையில் இரவில் வீட்டில் இருந்த அவருக்கு பிரசவ வலி ஆரம்பித்தது. எனினும் மறுநாள் தேர்வு எழுத வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதுகுறித்து தனது எண்ணத்தை அவர் குடும்பத்தினரிடமும் கூறியிருந்தார்.

    இந்நிலையில் மறுநாள் காலையில் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே அவர் தேர்வு அறைக்கு சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    வலிதாங்க முடியாத அவரை அதிகாரிகள் எச்சரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஆரோக்கியமான ஆண்குழந்தை பிறந்தது. உடனே ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். சுகப்பிரசவமாக இருந்ததால் அவரது உடல்நிலையும் நன்றாக இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை மீண்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்.

    இக்கட்டான நேரத்திலும் கல்வியின் முக்கியத்துவம் கருதி தேர்வு எழுதிய ருக்மினி ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக அதிகாரிகள் பாராட்டினர்.

    • மர்மநபர் வாலிபரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
    • போலீஸ் அதிகாரிகள் கிராமத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவர் சாலையோரம் அமர்ந்திருந்த போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் வாலிபருடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் மர்மநபர் வாலிபரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான பகவான்பூர் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் கொலையாளியை கைது செய்யாததால் ஆவேசம் அடைந்த அந்த கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் சிலர் போலீஸ் நிலையம் முன்பு இருந்த போலீஸ் அதிகாரியின் வாகனங்களை உடைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்திய கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் கிராமத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    • ரெயிலில் பி-2 ஏ.சி. கோச் பகுதியில் இருந்து திடீரென தீப்பொறிகள் ஏற்பட்டு புகை கிளம்பியது.
    • பயணிகள் ரெயிலில் இருந்து தங்களது பொருட்களை எடுத்து கொண்டு கீழே குதித்து தப்பி ஓட ஆரம்பித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ராம்தயாலு ரெயில் நிலையம் அருகில் நேற்று மாலை அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் பி-2 ஏ.சி. கோச் பகுதியில் இருந்து திடீரென தீப்பொறிகள் ஏற்பட்டு புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பரவ ஆரம்பித்தது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    மேலும் ரெயிலில் இருந்து தங்களது பொருட்களை எடுத்து கொண்டு கீழே குதித்து தப்பி ஓட ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து சுமார் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பீகாரில் 2 கி.மீ. நீள ரெயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
    • ஏற்கனவே கடந்த நவம்பரில் ரெயில் என்ஜின் ஒன்று திருடு போன சம்பவமும் நடந்துள்ளது.

    பாட்னா:

    பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரெயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. நீளத்துக்கு சரக்குகளை ஏற்றிச்செல்வதற்காக ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த தண்டவாள பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

    இந்நிலையில், அந்த 2 கி.மீ. நீள தண்டவாள பகுதியை மர்ம நபர்கள் சிலர் பல்வேறு காலகட்டங்களில் திருடிச் சென்றுவிட்டனர்.

    தகவலறிந்து சமஸ்திபூர் ரெயில்வே வாரியம் தனது 2 ஊழியர்களை சஸ்பெண்டு செய்துள்ளது. இதன்படி, ஜன்ஜார்பூர் அவுட்போஸ்ட் பகுதியின் பொறுப்பாளரான ஸ்ரீனிவாஸ் மற்றும் மதுபானி நகரின் உதவியாளர் பணியில் இருந்த முகேஷ் குமார் சிங் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு துறைசார்ந்த விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே, கடந்த நவம்பரில் ரெயில் என்ஜின் ஒன்று திருடு போன சம்பவமும் நடந்து உள்ளது. பீகாரில் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    • மாணவர் தேர்வு எழுத சென்ற மையத்தில் 500 மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
    • 500 மாணவிகளுக்கு மத்தியில் இவர் ஒருவர் மட்டுமே மாணவர் ஆவார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் ஷெரீப் பகுதியில் இயங்கி வரும் அலமா இக்பால் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவர் ஒருவர் சுந்தர்கர் பகுதியில் உள்ள பிர்லியன்ட் கான் வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்துக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத சென்றார்.

    அன்று கணித தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த மாணவரும் தேர்வு எழுத தொடங்கினார். தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது அந்த மாணவருக்கு திடீரென படபடப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    இதனால் பதறிப்போன தேர்வு மைய அதிகாரி அவரை எழுப்ப முயன்றார். அப்போது அவர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர் சக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் பள்ளிக்கு விரைந்தது. அதில் மாணவரை ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழே விழுந்ததில் மாணவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

    அவரை உறவினர் ஒருவர் அருகில் இருந்து கவனித்து வருகிறார். மாணவ ருக்கு மயக்கம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறியதாவது:-

    மாணவர் தேர்வு எழுத சென்ற மையத்தில் 500 மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். 500 மாணவிகளுக்கு மத்தியில் இவர் ஒருவர் மட்டுமே மாணவர் ஆவார். மாணவிகளுக்கு மத்தியில் தனியாக தவித்த மாணவருக்கு திடீரென்று வெட்கம் அதிகமாகி படபடப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தேர்வு மையத்தினர் கூறுகையில், மாணவரின் ஹால்டிக்கெட்டில் அவரது பாலினம் பெண் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம். அதனால் அவருக்கு பெண்கள் தேர்வு எழுதும் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாணவர் தனது ஹால்டிக்கெட்டில் பாலினம் பெண் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டதும் அவர் உடனடியாக அதை சரி செய்திருக்க வேண்டும். இதில் திருத்தம் செய்ய 20 நாட்கள் அவகாசம் உள்ளது. இது மாணவர் அல்லது அவரது பாதுகாவலரின் கவனக்குறைவாகும். அல்லது படிவம் நிரப்பி கொடுத்த பள்ளியின் கவனக்குறைவாகும்" என்றார்.

    • ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • நிதிஷ்குமார், கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார்.

    பாட்னா :

    பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார். லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்தார்.

    பின்னர், 2017-ம் ஆண்டு அந்த கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். கடந்த ஆண்டு பா.ஜனதா கூட்டணியை விட்டு விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார். இந்தநிலையில், ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    அதனால், அவர் மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு நிதிஷ்குமார் கூறியதாவது:-

    பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட நான் உயிரை மாய்த்துக்கொள்வேன். கடந்த 2017-ம் ஆண்டு, லாலுபிரசாத் யாதவ், அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீதான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நான் பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது மிகவும் தவறு.

    அந்த கூட்டணியில் இருந்தபோது, எனது ஆதரவாளர்கள் அனைவரது ஓட்டுகளையும் பா.ஜனதா பெற்று வந்தது. பா.ஜனதாவின் இந்துத்துவா கொள்கையால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகளும் அதில் அடங்கும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளை கைப்பற்றப்போவதாக பா.ஜனதா கூறுவது கேலிக்கூத்தானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×