search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் ஓடும் ரெயிலில் தீ விபத்து- அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் தப்பினர்
    X

    ரெயிலில் பற்றிய தீயை ஊழியர்கள் அணைப்பதையும், பயணிகள் குதித்து தப்பி ஓடுவதையும் படத்தில் காணலாம்.

    பீகாரில் ஓடும் ரெயிலில் தீ விபத்து- அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் தப்பினர்

    • ரெயிலில் பி-2 ஏ.சி. கோச் பகுதியில் இருந்து திடீரென தீப்பொறிகள் ஏற்பட்டு புகை கிளம்பியது.
    • பயணிகள் ரெயிலில் இருந்து தங்களது பொருட்களை எடுத்து கொண்டு கீழே குதித்து தப்பி ஓட ஆரம்பித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ராம்தயாலு ரெயில் நிலையம் அருகில் நேற்று மாலை அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் பி-2 ஏ.சி. கோச் பகுதியில் இருந்து திடீரென தீப்பொறிகள் ஏற்பட்டு புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பரவ ஆரம்பித்தது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    மேலும் ரெயிலில் இருந்து தங்களது பொருட்களை எடுத்து கொண்டு கீழே குதித்து தப்பி ஓட ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து சுமார் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×