என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார்.

    விஜயவாடா :

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.மாநாட்டில், அவருடைய தாயாரும், கட்சியின் கவுரவ தலைவருமான ஒய்.எஸ்.விஜயலட்சுமி உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:-

    என் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரியாகவும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். அதே சமயத்தில், என் மகள் சர்மிளா, தெலுங்கானாவில் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார். என் மகளை ஆதரிக்குமாறு என் மனசாட்சி சொல்கிறது. அவளுக்கு என் ஆதரவு தேவைப்படுவதால், அவளை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.

    அதனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருப்பது சர்ச்சையை உருவாக்கும் என்பதால், கட்சியில் இருந்தும், கவுரவ தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இந்த நிலைமையை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை மன்னியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவரது அறிவிப்பை கேட்டவுடன், தொண்டர்கள், ''வேண்டாம், வேண்டாம்'' என்று கூச்சலிட்டனர். இருப்பினும், ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார். ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய தாயார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரபாபு நாயுடு இடது கை ஆள்காட்டி விரலில் மோதிரம் போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது.
    • தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சியில் அமருவதற்காக ஜோதிடர்கள் கூறிய அறிவுரைப்படி அவர் மோதிரம் அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதும் மஞ்சள் நிற சட்டை, வெள்ளை நிற பேண்ட், பையில் ஒரு பேனா என மிகவும் எளிமையாக காட்சியளிக்க கூடியவர். சமீபகாலமாக அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் மோதிரம் போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது.

    தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சியில் அமருவதற்காக ஜோதிடர்கள் கூறிய அறிவுரைப்படி அவர் மோதிரம் அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மதனபள்ளியில் நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

    நான் கைவிரலில் அணிந்துள்ளது மோதிரம் அல்ல. என் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர்.

    இந்த கருவியானது நான் சாப்பிடும் நேரம் மற்றும் எத்தனை மணி நேரம் தூங்கினேன், எவ்வளவு தூரம் நடந்தேன், எவ்வளவு நேரம் ஓய்வெடுத்தேன் என்பது குறித்த என்னுடைய நடவடிக்கைகள் மட்டுமின்றி என் உடலில் சர்க்கரை அளவு, எவ்வளவு ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட என் உடல்நிலை தொடர்பான தகவல்கள் எல்லாவற்றையும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி கொண்டே இருக்கும்.

    அவற்றை என் மனைவி புவனேஸ்வரி கண்காணித்து தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது செல்போன் மூலம் எனக்கு தெரிவிப்பார். இதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்ரோ சிப் இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்கள் உடல் நிலையை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    • அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் 8000 பள்ளிகளை மூடுவதற்கு அரசு தயாராக உள்ளது.
    • முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது மகளை பாரீசில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னம்மையா மாவட்டம் மதன பள்ளியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.

    குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி மிகவும் மோசமடைந்து உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர்.

    அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் 8000 பள்ளிகளை மூடுவதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது மகளை பாரீசில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.

    ஆந்திராவில் புதிது புதிதாக மதுபான ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மதுபான ஆலைகளில் தயாரிக்கும் மதுவில் விஷத்தன்மை அதிகம் உள்ளதால் மது அருந்தும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர்.

    தனியார் பரிசோதனை மையத்தில் அரசு விற்கும் மதுபானங்கள் அதிக அளவு விஷத்தன்மை உள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறார். ஆந்திராவில் பிறக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

    தற்போது ஆந்திர மாநில அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையை போல் ஆந்திராவையும் ஜெகன்மோகன் ரெட்டி மாற்றி வருகிறார்.

    இதனை தட்டிக் கேட்கும் தெலுங்கு தேச கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை தலைமை செயலகம் கட்டாமல் தவிர்த்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இன்று வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியி்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் வி.ஐ.பி. தரிசனத்தை சேர்த்து கடந்த 2 மாதங்களாக சராசரியாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் அதிக அளவில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. இதற்கு முந்தைய மாதங்களில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2, 3 மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

    ஆனால் இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் பக்தர்கள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர்.

    • பிரபாகர் ரெட்டி தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.
    • ஆந்திராவில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பிரபாகர் ரெட்டி. இவர் ஆந்திர மாநில விளையாட்டு துறை இயக்குனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி ரெட்டி. இவர்களுக்கு அலெக்ஸ் சுருதி (13), கிருஷ்ணதரன் (11) என ஒரு மகள், மகன் உள்ளனர்.

    பிரபாகர் ரெட்டி தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று தனது பிள்ளைகளை அங்குள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று அலெக்ஸ் சுருதியை 8-ம் வகுப்பிலும் கிருஷ்ணதரனை 6-ம் வகுப்பிலும் ஆங்கில வழி கல்வியில் சேர்த்தார்.

    ஆந்திராவில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது.

    எனவே தனது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாகவும், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றார்.

    • பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மீது கருப்பு பலன்களை பறக்க விட்டதாக காங்கிரஸ் பிரமுகர்கள் பத்மஸ்ரீ, சாவித்திரி, கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகியோரை பிடித்துச் சென்று பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பீமவாரத்தில் சுதந்திர போராட்ட தியாகி அல்லூரி சீதாராம ராஜியின் 30 அடி உயர வெண்கலை சிலையை திறந்து வைப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார்.

    பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பீமாவரம் புறப்பட்டு சென்றார். ஹெலிகாப்டர் கேசரபள்ளி என்ற இடத்தில் சென்ற போது அங்குள்ள மேம்பாலத்தில் நின்றிருந்த காங்கிரசார் ஹெலிகாப்டரை நோக்கி கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். பலூன்கள் ஹெலிகாப்டர் மீது மோதியவாறு சென்றது.

    இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மீது கருப்பு பலன்களை பறக்க விட்டதாக காங்கிரஸ் பிரமுகர்கள் பத்மஸ்ரீ, சாவித்திரி, கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகியோரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கிஷோர், ரவிகாந்த், ராஜசேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறி மோடி மோசடி செய்ததால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலன்களை பறக்க விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

    • கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது.
    • உண்டியலில் நகை, பணங்களை அதிக அளவில் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்தும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது.

    கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அளவு பக்தர்கள் தரிசனம் செய்து வந்ததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

    தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக உண்டியலில் நகை, பணங்களை அதிக அளவில் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

    இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினசரி சராசரியாக ரூ.4 கோடிக்கு குறையாமல் உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் திருப்பதியில் நேற்று 77,907 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,267 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.6.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது. தற்போது ரூ.6.18 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது 2-வது அதிகபட்சமாகும்.

    • சீனு சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் தினமும் குடித்துவிட்டு வந்து லட்சுமி தேவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். வீட்டு செலவிற்கு கூட பணம் தராமல் இருந்துள்ளார்.
    • இதனால் விரத்தி அடைந்த லட்சுமிதேவி தினமும் கணவரின் கொடுமையை அனுபவித்து உயிர் வாழ்வது விட சாவதே மேல் என நினைத்து நேற்று மாலை ஊருக்கு வெளியே உள்ள கல்குவாரி குட்டைக்குச் சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் மாவட்டம், வீர புண்ணாயன பள்ளி, பகுதியை சேர்ந்தவர் லட்சுமி தேவி (வயது 30). இவருக்கும் ராஜபாளையம் மண்டலும் புள்ளாரெட்டி பகுதியை சேர்ந்த சீனு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு அக்‌ஷயா (9), ரேவந்த் (7) என மகன், மகள் இருந்தனர்.

    இவர்கள் எர்ரகுண்டல, மகேஸ்வர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சீனு சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் தினமும் குடித்துவிட்டு வந்து லட்சுமி தேவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். வீட்டு செலவிற்கு கூட பணம் தராமல் இருந்துள்ளார்.

    இதனால் விரத்தி அடைந்த லட்சுமிதேவி தினமும் கணவரின் கொடுமையை அனுபவித்து உயிர் வாழ்வது விட சாவதே மேல் என நினைத்து நேற்று மாலை ஊருக்கு வெளியே உள்ள கல்குவாரி குட்டைக்குச் சென்றார்.

    குழந்தைகள் இருவரையும் கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டார். இதில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. பின்னர் தானும் குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த எர்ரகுண்டல போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமி தேவி மற்றும் அவரது குழந்தைகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர மாநில நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அல்லூரி சீதாராம ராஜூ சிலையை திறந்து வைத்தார்.
    • முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்பு

    பீமாவரம்:

    ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை மந்திரி கிஷன் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஒய். எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை, ஆந்திர அமைச்சருமான ரோஜா, முன்னாள் மத்திய அமைச்சரும் திரைப்பட நடிகருமான சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி அங்கிருந்து புறப்படும் போது அவருடன் ஆந்திர அமைச்சர் ரோஜா, செல்ஃபி எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    • சுதந்திரப் போராட்டம் என்பது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எழுந்த தியாகங்களின் வரலாறு.
    • நாட்டின் கனவுகளை நனவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

    பீமாவரம்:

    சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவையொட்டி பீமாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    அப்போது பேசிய பிரதமர், சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்றார். சுதந்திரப் போராட்டம் என்பது சில வருடங்கள், சில பிரதேசங்கள் அல்லது சில மக்களின் வரலாறு மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எழுந்த தியாகங்களின் வரலாறு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

    அல்லூரி சீதாராம ராஜு ஆதிவாசிகள் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்தததாகவும், இந்தியாவின் கலாச்சாரமாக, ஆதிவாசிகளின் அடையாளமாக மற்றும் மதிப்புகளின் சின்னமாக அவர் இருந்தார் என்றும் அவர் கூறினார்.

    நமது இளைஞர்கள், பழங்குடியினர், பெண்கள், தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நாட்டை வழிநடத்தும் போது, ​​புதிய பாரதம் உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

    சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்தது போல், இப்போது நாட்டின் கனவுகளை நனவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று, பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.


    இதைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை (வயது 90) சந்தித்த பிரதமர் அவரது காலைத்தொட்டு வணங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    • ஸ்வேதாவின் செல்போனை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ரூ.1.30 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ.11 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
    • அதற்கு ஸ்வேதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து எதிர் முனையில் பேசிய மர்மநபர் ஸ்வேதா வங்கி கணக்கிற்கு ரூ.50,000 அனுப்பினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்கலகிரி அடுத்த நவலூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா சவுத்ரி. (வயது22). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை செய்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஸ்வேதாவின் செல்போனை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ரூ.1.30 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ.11 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதற்கு ஸ்வேதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து எதிர் முனையில் பேசிய மர்மநபர் ஸ்வேதா வங்கி கணக்கிற்கு ரூ.50,000 அனுப்பினார்.

    2 நாட்கள் கழித்து மீண்டும் ஸ்வேதாவை தொடர்பு கொண்ட மர்மநபர் தற்போது ரூ.1.30 லட்சத்தை தனது வங்கி கணக்குக்கு செலுத்துமாறு வங்கி கணக்கு எண்ணை செல்போனிற்கு அனுப்பினார்.

    இதையடுத்து ஸ்வேதா மர்மநபர் அனுப்பிய ரூ.50 ஆயிரத்துடன் சேர்த்து ரூ.1.30 லட்சத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து மர்ம நபரின் செல்போன் என்னை ஸ்வேதா தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஸ்வேதா விரக்தி அடைந்து யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

    இந்த நிலையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் இருந்து ஸ்வேதாவிற்கு போன் செய்து வெள்ளிக்கிழமை வேலைக்கு நேரில் வருமாறு தகவல் தெரிவித்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத் செல்வதற்காக ஸ்வேதா குடும்பத்தினர் காரில் செல்ல தயாராக இருந்தனர். அப்போது வெளியில் சென்று வருவதாக ஸ்வேதா தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து சில்லக்கல்லு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக தனது தாய்க்கு போன் செய்தார். அவரது தாயார் ஸ்வேதா செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து ஸ்வேதாவின் தாயார் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஸ்வேதாவின் செல்போன் மட்டும் ஏரிக்கரை மீது இருந்தது. போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சில்லக்கல்லு ஏரியில் ஸ்வேதாவை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை ஸ்வேதாவின் உடல் ஏரியில் மிதந்தது. போலீசார் ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு ஸ்வேதாவிடம் பணத்தை ஏமாற்றியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருந்தது.
    • பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் திணறினர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இதனால் திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருந்தது. இரவு, பகல் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்து 48 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் திணறினர். தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்ற போது அவர்களிடையே தள்ளும் முள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். தற்போது பக்தர்களின் கூட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

    திருப்பதியில் நேற்று 88,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,447 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    கடந்த மாதம் அதிகபட்சமாக 4-ந் தேதி 90,165 பக்தர்களும், 12-ந் தேதி 93 ஆயிரம் பக்தர்களும், 19-ந் தேதி 84,982 பக்தர்களும், 20-ந் தேதி 90,471 பக்தர்களும், 25-ந் தேதி 94,412 பக்தர்களும் தரிசனம் செய்தனர்.

    ரூ. 124.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    கடந்த மாதத்தை காட்டிலும் மே மாதம் 61,417 பக்தர்கள் குறைவாக தரிசனம் செய்திருந்தாலும் ரூ.130.29 கோடி உண்டியல் வசூல் ஆனது. ஜூன் மாதத்தில் ரூ.5.93 கோடி உண்டியல் வருவாய் குறைந்துள்ளது.

    மார்ச் மாதம் 128.61 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.127 கோடியும் உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    ×