search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் குவிந்து வருவதால் ரூ.300 டிக்கெட்டுகள் தேக்கம்
    X

    திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் குவிந்து வருவதால் ரூ.300 டிக்கெட்டுகள் தேக்கம்

    • இன்று வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியி்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் வி.ஐ.பி. தரிசனத்தை சேர்த்து கடந்த 2 மாதங்களாக சராசரியாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் அதிக அளவில் பக்தர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. இதற்கு முந்தைய மாதங்களில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2, 3 மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

    ஆனால் இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் பக்தர்கள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×