என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • காலையில் நீண்ட நேரமாகியும் மூதாட்டி வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
    • மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாததால் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த 3 வாலிபர்கள் மூதாட்டி வீட்டிற்கு சென்று கதவை தட்டினார்.

    தூக்கத்தில் இருந்த மூதாட்டி எழுந்து வந்து கதவை திறந்தார். அப்போது மூதாட்டியை வீட்டிற்குள் தூக்கிச் சென்றவர்கள் கத்தி கூச்சலிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். காலையில் நீண்ட நேரமாகியும் மூதாட்டி வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கடப்பா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று காலை விமானம் மூலம் விஜயவாடா வந்தடைந்தார்.
    • ஜெகன்மோகன் ரெட்டி, திரவுபதி முர்முவுக்கு தேநீர் விருந்து வழங்கினார்.

    திருப்பதி:

    பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அரசியல் கட்சியினர் இடையே ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று காலை விமானம் மூலம் விஜயவாடா வந்தடைந்தார். அங்குள்ள தனியார் ஓட்டலில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    அப்போது அவருக்கு தன்னுடைய எம்.எல்.ஏக்கள் 152 பேரும், 23 எம்.பிக்களும் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி, திரவுபதி முர்முவுக்கு தேநீர் விருந்து வழங்கினார்.

    இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, திரவுபதி முர்மு சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது தன்னுடைய 23 எம்.எல்.ஏக்கள், 3 எம்.பிக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.

    அரசியலில் எதிரும், புதிரமாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு இருவரும் பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • ஆந்திர மாநிலம் கோண சீமா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது
    • ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு எதற்காக பூமிக்கு அடியில் இருந்து புகை வந்தது என தெரியவரும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கோண சீமா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோதாவரி நதி அருகே உள்ள ஐ போல வரம் வி கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது வீட்டின் அருகில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியிலிருந்து திடீரென புகை வந்தது.

    இதனைக் கண்ட கிராம மக்கள் ஆச்சரியமடைந்து அந்த பகுதியில் பள்ளம் தோண்டியபோது பள்ளத்திலிருந்து அதிக அளவில் புகை கிளம்பியது. இதையடுத்து அந்த ஊர் முழுவதும் வெப்பமாக காணப்பட்டது. சிறிது சிறிதாக சுமார் 3 கி. மீ. தூரத்திற்கு பூமியிலிருந்து வந்த புகையின் காரணமாக வெப்ப காற்று வீசியது.

    இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு எதற்காக பூமிக்கு அடியில் இருந்து புகை வந்தது என தெரியவரும்.

    அசம்பாவிதம் ஏதாவது நிகழா வண்ணம் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். திடீரென பூமிக்கு அடியில் இருந்து புகை வந்து வெப்ப காற்று வீசும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பூமிக்குஅடியில் இருந்து புகை வருகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    • நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேலும் பணத்தை கட்ட வேண்டும் என பிரதிக்‌ஷாவை மிரட்டினர்.
    • பிரதிக்‌ஷாவை செல்போனில் மிரட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம், சாரதா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஆந்திர மாநில இண்டஸ்ட்ரியல் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரதிக்‌ஷா (வயது 24). சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். தற்போது இவர்கள் குண்டூர் அடுத்த சின்ன காக்காணி பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதிக்‌ஷா தனியார் நிதி நிறுவன ஆப் மூலம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி உள்ளார். ஆனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேலும் பணத்தை கட்ட வேண்டும் என பிரதிக்‌ஷாவை மிரட்டினர். ஆனால் பிரதிக்‌ஷா வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறினார். அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளாத நிதி நிறுவனத்தினர் நேற்று இரவு 7 மணி வரை பணத்தை செலுத்த அவகாசம் அளித்தனர்.

    மேலும் பணத்தை செலுத்தவில்லை என்றால் உன்னுடைய போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி அசிங்கப்படுத்தி விடுவதாக மிரட்டினர்.

    இதனால் வேதனை அடைந்த பிரதிக்‌ஷா நேற்று மாலை வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது செல்பி வீடியோ எடுத்து தன்னை தனியார் நிறுவனத்தினர் மிரட்டுவதால் தற்கொலை செய்வதாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பினார்.

    இதனை கண்ட அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டின் மாடிக்கு வந்தனர். அப்போது பிரதிக்‌ஷா மாடியில் உள்ள விளம்பர பலகையில் தூக்கில் தூங்கினார்.

    பிரதிக்‌ஷாவை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதிக்‌ஷாவை செல்போனில் மிரட்டியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

      திருப்பதி:

      ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அடுத்த பொந்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா. விவசாயி. இவர் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

      இந்த நிலையில் நேற்று மாலை வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணா அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார்.

      இதில் எந்திரம் சேதமடைந்தது. அங்கிருந்த ஏ.டி.எம். காவலாளி இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்ய நாராயணாவிடமிருந்த நாற்காலியை பிடுங்கிக் கொண்டு, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

      போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்திய நாராயணனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட வங்கியில் கணக்கு தொடங்கி பணம் டெபாசிட் செய்து வைத்து இருக்கிறேன்.

      ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க பலமுறை முயன்றும் பணம் வரவில்லை. என்னுடைய தேவைக்காக தான் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய அவசர செலவுக்கு பணம் கிடைக்காததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தார்.

      மேலும் ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்பாத வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

      இதையடுத்து போலீசார் சத்திய நாராயணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

      • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
      • எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார்.

      அமராவதி :

      ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் வியூகம் வகுக்கும் குழு கூட்டத்தில் இதை அவர் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

      தெலுங்கு தேசம் எப்போதும் சமூக நீதிக்கு துணை நிற்கும். கடந்த காலத்தில், ஜனாதிபதி பதவிக்கு கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரை ஆதரித்துள்ளோம். அதே உணர்வில், பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஆதரிக்கிறோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • அமைச்சராக உள்ள ரோஜா நகரியை திருப்பதி மாவட்டத்துடன் இணைக்காததால் மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
      • வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்று சந்திரபாபு நாயுடு புத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

      திருப்பதி:

      ஆந்திராவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அன்னமய்யா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பொது கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார்.

      கடந்த 2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. மதனப்பள்ளி சித்தூர் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை காட்டிலும் மிக பிரமாண்டமாக 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

      தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டங்களில் ஏராளமாேனார் கலந்து வருவது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      இதேபோல், சுற்றுலாத்துறை அமைச்சரும், உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவின் கோட்டையான நகரியிலும் சந்திர பாபு நாயுடுவின் பொது கூட்டத்தில் ஏராளமாேனார் கலந்து கொண்டது ஆளுங்கட்சிக்கும் மற்றும் அமைச்சர் ரோஜாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. துணை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சொந்த ஊரான கார்வேட்டி நகரத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் திரளானோர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

      மேலும் அமைச்சராக உள்ள ரோஜா நகரியை திருப்பதி மாவட்டத்துடன் இணைக்காததால் மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். ஆந்திராவில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்று சந்திர பாபு நாயுடு புத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.
      • ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.

      திருப்பதி:

      ஆந்திராவில் பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க தற்போதே களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

      இந்த நிலையில் அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் இருந்து ஆந்திர மக்களை பாதுகாக்கவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் தீக்சை விரதத்தை தொடங்கியுள்ளார். 4 மாதம் விரதம் இருக்கும் அவர் சூரியன் அஸ்தமான நேரத்திற்கு பிறகு மட்டும் ஒரு வேளை உணவை சாப்பிடுகிறார்.

      பவன் கல்யாண் நேற்று விஜயவாடா வந்தார். அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.

      இதை தொடர்ந்து பசுவை பொன்னையா ஆடிட்டோரியத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

      ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

      பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாமல் ஜெகன்மோகன் ரெட்டி திணறி வருகிறார். ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.

      நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாததால் மக்கள் கூட்டம் ஜனசேனா கட்சியை நாடி வருகின்றனர். ஜனசேனா கட்சியினரை மிரட்டும் வேலையில் ஒய். எஸ்.ஆர். காங்கிரசார் ஈடுபடக்கூடாது.

      ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான விலையை உயர்த்தி விட்டனர். போலி மதுபான ஆலைகளில் உற்பத்தியாகும் மலிவான மதுபானங்களை குடித்து ஏராளமானோர் இறந்துள்ளனர்.

      ஜெகன்மோகன் ரெட்டியின் நிர்வாக திறமையின்மை காரணமாக ஆந்திர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை ஜனசேனா கட்சி கைப்பற்றும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக அக்டோபர் 1-ந்தேதி கருட வாகனமும், 2-ந்தேதி தங்க ரதமும், 4-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
      • கொரோனா காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த அகண்ட ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சி ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.

      திருப்பதி:

      திருப்பதி அன்னமய்ய பவனில் பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக நடைபெற்றது. இதில் பக்தர்களின் கேள்விகளுக்கு தர்மா ரெட்டி பதிலளித்தார்.

      திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா தொற்று முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பின் மாட வீதிகளில் நடைபெறவிருக்கும் வாகன சேவைகளில் ஏழுமலையான் தரிசனம் தர உள்ளார்.

      பிரம்மோற்சவத்தையொட்டி, செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை மீன லக்னத்தில் கருடக் கொடியேற்றம் நடைபெறும்.

      இதில் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் வழங்க உள்ளார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக அக்டோபர் 1-ந்தேதி கருட வாகனமும், 2-ந்தேதி தங்க ரதமும், 4-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

      கொரோனா காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த அகண்ட ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சி ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.

      ஜெகன்மோகன் ரெட்டியால் திருப்பதியில் தொடங்கி வைக்கப்பட்ட ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் ஹிருதயாலயா மருத்துவமனையில் இதுவரை 490 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

      இதில் குறிப்பாக பிறந்து 7 நாள்களே ஆன பெண் குழந்தைக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். இங்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

      இதேபோல் குழந்தைகள் தொடர்பான அனைத்து வகை நோய்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தெலுங்கானாவில் களம் இறங்குகிறார்.
      • இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.

      திருப்பதி:

      ஆந்திர மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளையொட்டி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.

      இந்த நிலையில் நேற்று காலை கடப்பாவில் இருந்து புலிவேந்தலாவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ஒரே ஹெலிகாப்டரில் சென்று ராஜசேகர் ரெட்டி விபத்தில் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஒருவருடன் ஒருவர் பேசாமல் இறுக்கமாக இருந்தனர்.

      ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகு தனது தந்தை இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

      இதையடுத்து விமானம் மூலம் வந்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவர் தாயார் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

      ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலில் இருந்த போது அவருக்காக நானும் எனது மகள் சர்மிளாவும் பாத யாத்திரை சென்று ஆதரவு திரட்டினோம். ஆட்சிக்கு வந்த பிறகு ஜெகன்மோகன் அவரது தங்கைக்கு எந்த பதவியும் தராமல் ஒதுக்கி வைத்துள்ளார்.

      இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதியதாக கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக அவருடன் சேர்ந்து தெலுங்கானாவில் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளோம். எனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.

      தங்கையின் திருமணத்தின் போது அவருக்கு செய்யவேண்டிய அனைத்தும் செய்து விட்டோம். தங்கை என்பதற்காக அவருக்கு கட்சிப் பதவி தர இயலாது என்றார்.

      இதையடுத்து கட்சி கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

      ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தெலுங்கானாவில் களம் இறங்குகிறார்.

      இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.

      • கோவிலுக்குள் இருந்து புதிய கட்டிடத்திற்கு நாணயங்களை கொண்டு செல்ல 2 கிரேன்கள் வாங்கப்பட்டுள்ளன.
      • தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் நகை, பணம், நாணயங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

      திருப்பதி:

      திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

      தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் நகை, பணம், நாணயங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

      உண்டியல்களில் காணிக்கையாக வசூலாகும் சில்லரை நாணயங்களை தேவஸ்தான ஊழியர்களை கொண்டு கோவிலுக்கு உள்ளேயே உள்ள கட்டிடத்தில் எண்ணபட்டு வருகிறது.

      பக்தர்கள் செலுத்தும் நாணயங்களில் தூசி, துகள் அதிக அளவில் இருப்பதால் நாணயங்களை எண்ணும் ஊழியர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் கர்நாடக தொழிலதிபர் ஒருவரின் மூலம் ரூ 10 கோடி பெறப்பட்டு தறி கொண்ட வெங்கமாம்பா அருகே புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

      கோவிலுக்குள் இருந்து புதிய கட்டிடத்திற்கு நாணயங்களை கொண்டு செல்ல 2 கிரேன்கள் வாங்கப்பட்டுள்ளன. நாணயங்களை எண்ணுவதற்காக ரூ.2.80 கோடியில் ஜெர்மனியில் இருந்து புதிய தொழில்நுட்பத்தின் கூடிய 2 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

      அந்த எந்திரத்தில் 13 வகையான நாணயங்களை தனியாக பிரித்து எண்ணி, பேக்கிங் செய்யும் வசதி உள்ளது. மேலும் புதிய கட்டிடத்தில் சி.சி.டி.வி கேமரா, குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது.

      தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நாணயங்களை எண்ணும் எந்திரத்தை கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

      திருப்பதியில் நேற்று 73,016 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,068 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

      • ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
      • ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார்.

      விஜயவாடா :

      ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.மாநாட்டில், அவருடைய தாயாரும், கட்சியின் கவுரவ தலைவருமான ஒய்.எஸ்.விஜயலட்சுமி உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:-

      என் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரியாகவும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். அதே சமயத்தில், என் மகள் சர்மிளா, தெலுங்கானாவில் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார். என் மகளை ஆதரிக்குமாறு என் மனசாட்சி சொல்கிறது. அவளுக்கு என் ஆதரவு தேவைப்படுவதால், அவளை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.

      அதனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருப்பது சர்ச்சையை உருவாக்கும் என்பதால், கட்சியில் இருந்தும், கவுரவ தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இந்த நிலைமையை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை மன்னியுங்கள்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      அவரது அறிவிப்பை கேட்டவுடன், தொண்டர்கள், ''வேண்டாம், வேண்டாம்'' என்று கூச்சலிட்டனர். இருப்பினும், ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார். ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய தாயார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

      ×