search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க 4 மாதம் விரதம் தொடங்கிய பவன் கல்யாண்
    X

    பவன் கல்யாண்


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க 4 மாதம் விரதம் தொடங்கிய பவன் கல்யாண்

    • அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.
    • ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க தற்போதே களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் இருந்து ஆந்திர மக்களை பாதுகாக்கவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் தீக்சை விரதத்தை தொடங்கியுள்ளார். 4 மாதம் விரதம் இருக்கும் அவர் சூரியன் அஸ்தமான நேரத்திற்கு பிறகு மட்டும் ஒரு வேளை உணவை சாப்பிடுகிறார்.

    பவன் கல்யாண் நேற்று விஜயவாடா வந்தார். அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.

    இதை தொடர்ந்து பசுவை பொன்னையா ஆடிட்டோரியத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாமல் ஜெகன்மோகன் ரெட்டி திணறி வருகிறார். ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.

    நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாததால் மக்கள் கூட்டம் ஜனசேனா கட்சியை நாடி வருகின்றனர். ஜனசேனா கட்சியினரை மிரட்டும் வேலையில் ஒய். எஸ்.ஆர். காங்கிரசார் ஈடுபடக்கூடாது.

    ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான விலையை உயர்த்தி விட்டனர். போலி மதுபான ஆலைகளில் உற்பத்தியாகும் மலிவான மதுபானங்களை குடித்து ஏராளமானோர் இறந்துள்ளனர்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நிர்வாக திறமையின்மை காரணமாக ஆந்திர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை ஜனசேனா கட்சி கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×