என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மே 5-ந்தேதி தங்கத்தேரோட்டம் நடக்கிறது.
    • ஆர்ஜித சேவைகள் மே 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ரத்து.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வசந்தோற்சவம் நடக்கிறது. இதற்காக மே மாதம் 2-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 3-ந்தேதி மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    விழாவின் ஒரு பகுதியாக மே மாதம் 5-ந்தேதி காலை 9.10 மணிக்கு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. வசந்தோற்சவத்தின் 3 நாட்களும் கோவில் அருகில் உள்ள சுக்கரவாரித் தோட்டத்தில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் பத்மாவதி தாயார் ஊர்வலமும் நடக்கிறது.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் மே மாதம் 3-ந்தேதி கல்யாணோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டோத்தர சதகலசாபிஷேகம், மே மாதம் 5-ந்தேதி லட்சுமி பூஜை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
    • திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர் என்ற மாணவரும் படித்து வருகிறார்.

    மாணவர்கள் 2 பேரும் தங்களுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தனர்.

    இதனால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்துக்கும் உதயசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றுடன் தேர்வு நிறைவடைவதால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயசங்கர் வீட்டில் இருந்த கத்தியை மறைத்து எடுத்து வந்தார்.

    தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட ஆசிரியரும் சக மாணவர்களும் உதயசங்கரை தடுத்து நிறுத்தினர்.

    காயமடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் சிகிச்சைக்காக ராஜாநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜமகேந்திராவரத்துக்கு மாற்றப்பட்டார்.

    மாணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி செல்வதாக வாரங்கல் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சிறுவர்களை பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு அழைத்து சென்றார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி செல்வதாக வாரங்கல் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    வாராங்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் அந்த வழியாக வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது 7 பெட்டிகளில் தனித்தனியாக சிறுவர்களை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரெயில் பெட்டிகளில் இருந்த 42 சிறுவர்களை மீட்டனர்.

    இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவர்களை வேலைக்காக மும்பை, செகந்திராபாத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சிறுவர்களில் 13 பேரின் முகவரி கண்டு பிடிக்கப்பட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    மீதமுள்ளவர்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

    விரைவில் காப்பகத்தில் உள்ள சிறுவர்கள் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என குழந்தைகள் நல அலுவலர்கள் தெரிவித்தனர்.

    சிறுவர்களை பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு அழைத்து சென்றார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
    • சாய்குமார் கடந்த 6 மாதங்களில் 2 சிறுமிகளை கடத்திச் சென்று பலாத்காலம் செய்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரிலோவா பி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் சாய்குமார் (23). இவர் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். சாய்குமாரை அரிலோவா போலீசார் கைது செய்தனர். 2½ மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

    தற்போது அரிலோவா போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிலோவா போலீஸ் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சாய்குமார் பைக்கில் சென்றார்.

    அங்குள்ள தெருவில் 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிந்தார். அந்த சிறுமியை அழைத்து தனியார் மருத்துவமனைக்கு வழி காட்டுமாறு கூறி பைக்கில் அழைத்துச் சென்றார்.

    செல்லும் வழியில் உள்ள முடசர்லோவா பூங்காவிற்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    அதன்பின், சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றார். சிறுமியை அவரது தாயார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அரிலோவா போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறுமியை மீட்டனர். மேலும் சாய்குமாரை பிடித்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    சாய்குமார் கடந்த 6 மாதங்களில் 2 சிறுமிகளை கடத்திச் சென்று பலாத்காலம் செய்துள்ளார். சாய்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • எலக்ட்ரானிக் பைக்கில் இருந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது.
    • ஷோரூமில் இருந்த 90 எலக்ட்ரானிக் பைக்குகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் டவுன் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எலக்ட்ரானிக் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.

    இங்கு புதிய வகை மாடல் பைக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று இரவு ஊழியர் ஒருவர் எலக்ட்ரானிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எலக்ட்ரானிக் பைக்கில் இருந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதனால் தீப்பிடித்து எரிந்தது. அருகருகே நிறுத்தி இருந்த பைக்குகளுக்கு தீ பரவி மளமளவென எரிய தொடங்கியது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பைக் ஷோரூமில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

    இதுகுறித்து ஸ்ரீகாகுளம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ அருகில் இருந்த ஹார்ட்வேர் கடை மற்றும் மதுபான கடைக்கு பரவி பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதற்குள் ஷோரூமில் இருந்த 90 எலக்ட்ரானிக் பைக்குகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.
    • ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரமனப்பள்ளியைச் சேர்ந்தவர் சாய்குமார் ரெட்டி (வயது 29), குடிநீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ஹேமமாலினி (28). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    ஹேமமாலினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருவரும் கடப்பா நகர் விஜய துர்கா காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    ஹேமமாலினி மரியாபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    கணவன்-மனைவி இருவரும் சில மாதமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதைவிட சாவது மேல் என நினைத்து தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

    இருவரும் நேற்று இரவு கடப்பா புறநகர் பகுதியான கனுமலோபள்ளி ரெயில் நிலையம் அருகே சென்றனர். அப்போது வந்த ரெயில் முன்பு கணவன் மனைவி இருவரும் கட்டிப்பிடித்தபடி பாய்ந்தனர்.

    இதில் உடல் சிதறி இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி ரெயிலில் சிக்கி இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
    • மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.

    அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் இன்று மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.

    இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.

    மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

    திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.

    அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் நாளை மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.

    இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.

    மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

    திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 66, 476 பேர் தரிசனம் செய்தனர். 25,338 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த சில நாட்களாக நவ்யா ஸ்ரீக்கு நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்து வந்தது.
    • வயிற்று வலிக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். ஆனால் வயிற்று வலி குறையவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள் ஆபரேசன் மூலம் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.

    இதற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    அப்போது ஆபரேசன் செய்த டாக்டர்கள் நவ்யாஸ்ரீயின் வயிற்றில் துணியை மறந்து வைத்து தைத்துவிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நவ்யா ஸ்ரீக்கு நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்து வந்தது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். ஆனால் வயிற்று வலி குறையவில்லை.

    இதையடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துணி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த துணி அகற்றப்பட்டது.

    இதுகுறித்து செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. கலெக்டர் யாஸ்மின் பாஷா நவ்யா ஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

    இதனை தொடர்ந்து டாக்டர் மற்றும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
    • ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்தனர்.

    அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது.

    ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக மாயங்க் அகர்வால் 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ரன்களும், எய்டன் மார்க்ரம் 22 ரன்களும், மார்கோ ஜான்சென் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும், ராகுல் திரிபாதி 7 ரன்களுடம், அபிஷேக் சர்மா ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இறுதியாக அப்துல் சமாத் 9 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இவருக்கு அடுத்ததாக மயங்க் மார்கண்டே 2 ரன்களும், புவனேஸ்வர் குமுார் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஆட்டத்தின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியடைந்துள்ளது.

    • மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
    • சொகுசு வாழ்க்கைக்காக மாணவர்கள் கஞ்சா வியாபாரிகளாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    கேரளா மாநிலத்தின் அருகே புதுவையின் மாகி பிராந்தியம் உள்ளது.

    இங்கு கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பந்தக்கல் சாலை வழியாக வந்த காரை சோதனையிட்டனர். காரில் 580 கிராம் கஞ்சா சிறிய பொட்டலங்களாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    மாகி போலீஸ் சூப்பிரண்டு ராஜசங்கர்வல்லட், இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் இருந்தது கல்லூரி மாணவர்களான பந்தக்கல் பிரியதர்ஷினி, முகமது சையத்பரூக், முகமது பியாஸ், தளச்சேரி பகுதியை சேர்ந்த அலோக், பிளம்பர் வேலை செய்யும் தளச்சேரி ஷரன் என்பது தெரியவந்தது.

    4 பேரும் அடிக்கடி ஆந்திரா உட்பட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று அங்கு மலை பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் கஞ்சாவை வாங்கி வந்து, மாகியில் சிறிய பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்துள்ளனர்.

    இதில் கிடைத்த பணத்தில் கார், செல்போன், புதுப்புது உடைகள் என சொகுசாக வாழ்ந்தது தெரியவந்தது. மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து கார், 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் மாகி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சொகுசு வாழ்க்கைக்காக மாணவர்கள் கஞ்சா வியாபாரிகளாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் சிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சந்தூர் மண்டலத்திற்குட்பட்ட தஸ்கானிகுடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது 25). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மைனர் பெண்ணின் தாயார் தஸ்கானிகுடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் அவரை அடித்து மிரட்டி உள்ளனர். மேலும் சித்ரவதை செய்தனர்.

    இதனால் மனமடைந்த சிவன் வீட்டுக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் சிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை சிவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

    சிவன் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×