என் மலர்
நீங்கள் தேடியது "ஷோரூம் தீவிபத்து"
- எலக்ட்ரானிக் பைக்கில் இருந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது.
- ஷோரூமில் இருந்த 90 எலக்ட்ரானிக் பைக்குகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் டவுன் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எலக்ட்ரானிக் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.
இங்கு புதிய வகை மாடல் பைக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று இரவு ஊழியர் ஒருவர் எலக்ட்ரானிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எலக்ட்ரானிக் பைக்கில் இருந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதனால் தீப்பிடித்து எரிந்தது. அருகருகே நிறுத்தி இருந்த பைக்குகளுக்கு தீ பரவி மளமளவென எரிய தொடங்கியது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பைக் ஷோரூமில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
இதுகுறித்து ஸ்ரீகாகுளம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ அருகில் இருந்த ஹார்ட்வேர் கடை மற்றும் மதுபான கடைக்கு பரவி பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் ஷோரூமில் இருந்த 90 எலக்ட்ரானிக் பைக்குகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






