என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜாமீன் கையெழுத்து போட சென்ற வாலிபர் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரம்
    X

    ஜாமீன் கையெழுத்து போட சென்ற வாலிபர் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரம்

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
    • சாய்குமார் கடந்த 6 மாதங்களில் 2 சிறுமிகளை கடத்திச் சென்று பலாத்காலம் செய்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரிலோவா பி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் சாய்குமார் (23). இவர் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். சாய்குமாரை அரிலோவா போலீசார் கைது செய்தனர். 2½ மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

    தற்போது அரிலோவா போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிலோவா போலீஸ் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சாய்குமார் பைக்கில் சென்றார்.

    அங்குள்ள தெருவில் 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிந்தார். அந்த சிறுமியை அழைத்து தனியார் மருத்துவமனைக்கு வழி காட்டுமாறு கூறி பைக்கில் அழைத்துச் சென்றார்.

    செல்லும் வழியில் உள்ள முடசர்லோவா பூங்காவிற்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    அதன்பின், சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றார். சிறுமியை அவரது தாயார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அரிலோவா போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறுமியை மீட்டனர். மேலும் சாய்குமாரை பிடித்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    சாய்குமார் கடந்த 6 மாதங்களில் 2 சிறுமிகளை கடத்திச் சென்று பலாத்காலம் செய்துள்ளார். சாய்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×