என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமானுஜர் குறித்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.
- இன்று மாலை 5.30 மணிக்கு ராமானுஜரின் அவதார மகோற்சவம் தொடங்குகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வைணவ ஆச்சாரியார் ராமானுஜரின் 1008-வது அவதார மகோற்சவம் திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கின்றன. அதையொட்டி 3 நாட்களும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமானுஜர் குறித்த இலக்கிய சொற்பொழிவு மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இன்று மாலை 5.30 மணிக்கு திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் ராமானுஜரின் அவதார மகோற்சவம் தொடங்குகிறது. ராமானுஜரின் மகிமைகள் என்ற தலைப்பில் திருப்பதி ஆச்சார்ய சக்கரவர்த்தி ரங்கநாதன் சொற்பொழிவாற்றுகிறார். திருப்பதியைச் சேர்ந்த ரேவதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வி.ஐ.பி. பிரேக் தரிசன சிபாரிசு கடிதம் தருபவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடிதம் கொடுப்பதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.
- திருப்பதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் மூலம் 20 பேர் கொண்டு வந்த சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்பட்டது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். எம்.எல்.சி.களிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வருகின்றனர்.
அதனை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் கொடுத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்து வருகின்றனர்.
வி.ஐ.பி. பிரேக் தரிசன சிபாரிசு கடிதம் தருபவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடிதம் கொடுப்பதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை எம்.எல்.சி. ஷேக் சப்ஜி என்பவர் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவரது கார் டிரைவர் கைதானார்.
ஷேக்சப்ஜியின் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சிபாரிசு கடிதம் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மீதும் தேவஸ்தான அதிகாரிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
நேற்று தீவிர கண்காணிப்பில் மூலம் 20 பேர் கொண்டு வந்த சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்பட்டது.
வரும் நாட்களில் சிபாரிசு கடிதங்கள் முழுமையாக சரிபார்க்க திட்டமிட்டுள்ளனர்.
சில பிரதிநிதிகள் அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்குவதாக எழுந்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபாரிசு கடிதங்கள் மற்றும் அவர்களுடன் தரிசனத்திற்கு வருபவர்கள் மீது சிறப்பு கண்காணிப்பு நடத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.
- பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயாநகர மாவட்டம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 47). கூலி தொழிலாளி. அவரது மனைவி லட்சுமணம்மா. கணவன், மனைவி இருவரும் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.
நேற்று காலை வேலைக்கு சென்றனர். மதியம் கணவன், மனைவி இருவரும் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசியது.
பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.
அப்போது அப்பா ராவ் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்ட அவரது மனைவி கதறி துடித்தார்.
மற்றொரு சம்பவம்...
அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் போடுராஜூ குன்னாலு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்புநாயுடு (51). இவர் கிராமத்துக்கு அருகில் உள்ள மலை உச்சிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.
காற்றில் வாழை, மா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன.
- அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் ஷட்டில்' போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
- சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத், நிருபர்களிடம் கூறியதாவது:-
விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிப்பது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இஸ்ரோவிற்கும் வருமானம் கிடைக்கும். இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக அதற்கான சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ராக்கெட் 12-14 கி.மீ. வரை சென்று அதன் பாதுகாப்பு அமைப்புகளை சோதிக்கும்.
தொடர்ந்து 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடுத்த சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
அமெரிக்காவின் 'ஸ்பேஸ் ஷட்டில்' போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த ராக்கெட் சில நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்பி வரும்.
இஸ்ரோவின் வரவிருக்கும் விண்வெளி பயணங்களில், விண்வெளி நிறுவனம் 'ஆதித்யா எல்-1', வழிகாட்டும் செயற்கைகோள்கள், அதிக எடை கொண்ட ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி.யுடன் வணிக ரீதியான ஏவுதல் மற்றும் சிறிய செயற்கைகோள் ஏவுகணை வாகனத்துடன் (எஸ்.எஸ்.எல்.வி.) ஒரு பணியை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
சிறிய செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதேபோல், '72 ஒன் வெப்' செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு - ரூ.1,000 கோடிக்கு மேல் எல்.வி.எம் 3 ராக்கெட்டுடன் நல்ல வணிக வாய்ப்பு உள்ளது.
விண்வெளி நிறுவனம் அதன் செயல்திறனில் சமரசம் செய்யாமல் செலவை குறைக்க சில மறுசீரமைப்புகளை செய்து வருகிறது.
குறிப்பாக ராக்கெட்டின் மேல் பகுதி நீண்ட காலம் இருக்கும் என்பதால் அதனை சுற்றுப்பாதை தளமாக பயன்படுத்துவது குறித்த எண்ணம் 4 ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. அதன்படி தற்போது அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி.55 ராக்கெட்டின் மேல் தளத்தில் அறிவியல் சோதனைகள் நடத்துவதற்கான 7 கருவிகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில் சாத்விகாவை தூங்க வைத்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்தார்.
- சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டம் தூங்கி கொண்டிருந்த குழந்தை அருகே வந்தன. சாத்விகாவை திடீரென கட்டிலில் இருந்து கடித்து இழுத்து சென்றன.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மேட்டவலசா பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. அப்பகுதியில் சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு குசுமா மற்றும் சாத்விகா (வயது1) என இரண்டும் பெண் குழந்தைகள் இருந்தன.
நேற்று மாலை மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில் சாத்விகாவை தூங்க வைத்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்தார். மூத்த மகள் குசுமா தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டம் தூங்கி கொண்டிருந்த குழந்தை அருகே வந்தன. சாத்விகாவை திடீரென கட்டிலில் இருந்து கடித்து இழுத்து சென்றன அருகில் உள்ள தேக்கு மர தோப்பிற்குள் வேகமாக இழுத்துச் சென்ற நாய்கள் குழந்தையை கடித்து குதறின.
இதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி துடித்தது. தங்கை அழும் சத்தத்தை கேட்ட குசுமா நாய்கள் சாத்விகாவை கடிப்பதை கண்டு அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடியது. இதுகுறித்து அவரது தாயாரிடம் கூறியதும் அவர் அலறி அடித்தப்படி வெளியே ஓடிவந்தார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று நாய்களை விரட்டி அடித்து விட்டு சாத்விகாவை மீட்டனர். விஜயநகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
குழந்தை இறந்ததை கண்டு சாத்விகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி அறைக்கு சென்றனர்.
- ஆலங்கட்டி மழையால் திருப்பதி மலையில் ஜில்லென காற்று வீசுகிறது. அங்கு கோடைக்கு இதமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
திருமலை:
திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திருமலையில் திடீரென் ஆலங்கட்டி மழை பெய்தது.
கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி அறைக்கு சென்றனர்.
மழைக்காக மண்டபங்களில் ஒதுங்கியிருந்த பக்தர்கள் ஆலங்கட்டி மழையை சேகரித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளும் ஐஸ் கட்டிபோல் குண்டு தரையில் கிடந்த ஆலங்கட்டி மழையை சேகரித்து விளையாடினர்.
திருமலையில் தேவஸ்தான அதிகாரிகள், வியாபாரிகள், உள்ளூர் மக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆலங்கட்டி மழையால் திருப்பதி மலையில் ஜில்லென காற்று வீசுகிறது. அங்கு கோடைக்கு இதமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 57,354 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,398 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- ஜூலியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
- போலீசார் பத்மாவையும் அவரது கள்ளக்காதலனையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மச்சிலிப்பட்டினம், ஈடேபள்ளியை சேர்ந்தவர் பத்மா. இவரது மகள் ஜூலி (வயது13). பத்மாவின் கணவர் இறந்து விட்டதால் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
தாயின் கள்ளக்காதலை சிறுமி கண்டித்து வந்தார். இருப்பினும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்தது.
இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஜூலி மர்மமான முறையில் தூக்கில் பணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த மச்சிலிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜூலியின் பிணத்தை மீட்டனர். ஜூலி தூக்கில் தொங்கிய இடத்தின் அருகே சிகரெட் துண்டுகள் கீழே கிடந்தன.
ஜூலியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து போலீசார் பத்மாவையும் அவரது கள்ளக்காதலனையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.
- இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு டெலியோஸ்-2 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-2 செயற்கைக் கோளுடன் சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைக்கோளான 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற சிறிய செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்து, சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. டெலியோஸ்-2 செயற்கை கோள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.
இதற்கு முன்பு, பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- திருப்பதி தேவஸ்தானம் வியாபார நிறுவனம் இல்லை எனவும், இது ஒரு சமூக சேவை செய்யக்கூடிய ஆன்மீக ஸ்தலம்.
- மத்திய அரசு விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம் செலுத்துகின்றனர்.
நேரடியாக தரிசனம் செய்ய முடியாத வெளிநாட்டு பக்தர்கள் ஆன்லைன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அந்தந்த நாட்டு கரன்சி நோட்டுகளை டெபாசிட் செய்கின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் காணிக்கை மத்திய அரசின் அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி பெற வேண்டும்.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உட்பட அறக்கட்டளைகள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு முன் அந்த பணத்தை யார், எப்படி, எப்போது வழங்கினர் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானமும் லைசென்ஸ் பெற்று வெளிநாட்டு பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் குறித்து மத்திய அரசுக்கு தகவல் அளித்து வந்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக லைசென்சை தேவஸ்தான அதிகாரிகள் புதுப்பிக்காமல் இருந்தனர்.
இதனால் வெளிநாட்டு பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வங்கி கணக்கில் டெபாசிட் செய்த ரூ.30 கோடி வெளிநாட்டு கரன்சியை தேவஸ்தான கணக்கில் வரவு வைக்காமல் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து இருந்தது.
அந்நிய பங்களிப்பு ஒரு முறை சட்டத்தை புதுப்பிக்காததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ.10 கோடி அபராதம் விதித்தது.
தேவஸ்தான அதிகாரிகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அபராத தொகை ரூ.3 கோடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வியாபார நிறுவனம் இல்லை எனவும், இது ஒரு சமூக சேவை செய்யக்கூடிய ஆன்மீக ஸ்தலம்.
எனவே மத்திய அரசு விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
பக்தர்களின் விமர்சனம் காரணமாக அபராத தொகையை திரும்ப வழங்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டன.
அதே நேரத்தில், திருப்பதி தேவஸ்தானம் வசம் உள்ள வெளிநாட்டு நாணய நன்கொடைகளை வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
வெளிநாட்டு கரன்சி நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவிக்காவிட்டாலும், வங்கியில் டெபாசிட் செய்ய தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் தர்ஷி முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
- 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
- இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டா:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது.
- பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
- இந்த ராக்கெட்டில் சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.
அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் நாளை மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கியது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது.
- ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.
திருப்பதி:
மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்து வருகிறது.
ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்து சென்ற பிறகு அங்கு ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் பாஜக உள்ளது. ஆனால் ஆந்திராவில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் இணைந்து கடந்த தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.
இந்நிலையில் பாஜகவுடன் பிரபல திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் மிகுந்த நெருக்கமாக உள்ளார். இதனால் பாஜக, ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.
கட்சி தொடங்கிய கடந்த 10 ஆண்டுகளில் ஜனசேனா கட்சிக்கு நகர்ப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.
பவன் கல்யாண் செல்லும் இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதே நேரம் கிராமப்புறங்களில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் அந்தப் பகுதிகளில் கட்சியை பலப்படுத்த பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.
ராயலசீமா பகுதியில் அவரது கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பவன் கல்யாண் கடும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்.
பவன் கல்யாண் கட்சியால் தெலுங்கானா, ஆந்திராவில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பா.ஜ.க. பவன் கல்யாண் கட்சி தொண்டர்களிடம் உற்சாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.






