search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு
    X

    திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு

    • இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.

    அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் நாளை மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.

    இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.

    மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

    திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 66, 476 பேர் தரிசனம் செய்தனர். 25,338 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×