என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும்.
    • டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும்.

    எல்லா பெண்களும் தங்கள் முதல் ரோல் மாடலாக கருதும் நபர் தாயாகத்தான் இருப்பார். ஏனெனில் சிறு வயது முதலே ஒவ்வொரு விஷயத்தையும் தாயை பார்த்தே செய்ய தொடங்குவார்கள்.

    எந்தவொரு புது முயற்சியை மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் தாயின் சாயல் வெளிப்படும். அந்த அளவுக்கு அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தாயின் நடவடிக்கைகளை சார்ந்தே அமையும்.


    குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும். ஆனால் டீன் ஏஜ் வயதை எட்டும்போது அந்த உறவு பந்தத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படக்கூடும்.

    தாய் சொல்லும் சில விஷயங்களை கேட்கும் மன நிலையில் மகள் இருக்க மாட்டார். அதனால் மகள் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற உணர்வு தாயிடம் தோன்றும்.

    மற்ற பருவத்தை விட டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும். அதுவே மகளுக்கு எதிர்மறை எண்ணங்களை தோற்றுவித்துவிடும்.

    தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மகள் நடந்து கொள்ள வேண்டும் என்று தாயார் விரும்புவார். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலோ, எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளாவிட்டாலோ மகள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

    மகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வார்கள். அவர்களது நோக்கம் மகளை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் அதை மகள் புரிந்துகொள்ளாத பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள் இருவருக்கும் இடையே எட்டிப்பார்க்கும். அது தாய்-மகள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். அதனை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை...


    * டீன் ஏஜ் பருவத்தில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம் எல்லா பெண்களிடமுமே மேலோங்கும். ஆடை, அணிகலன் தேர்வுக்கு ரொம்பவே நேரம் செலவளிப்பார்கள். தங்களை மெருகேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். பிடித்தமான அழகு சாதனப்பொருட்களையும் அதிகம் பயன்படுத்த ஆர்வம் காட்டுவார்கள்.

    அதனை கண்டிக்கும் மனோபாவமே பெரும்பாலான தாய்மார்களிடம் இருக்கிறது. அதைவிடுத்து இந்த அழகு சாதனப் பொருட்களையெல்லாம் தன்னிச்சையாக உபயோகிக்கக்கூடாது. சரும நல நிபுணர்களிடம் ஆலோசித்து பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டும்.

    அழகுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை கண்டிக்காமல் மகள் மனம் நோகாதவாறு எடுத்துக்கூற வேண்டும். பணத்தை வீண் விரயம் செய்வதாக கடிந்து கொள்ளவும் கூடாது. எவையெல்லாம் அழகை மெருகேற்ற பொருத்தமாக இருக்கும் என்பதை பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும்.

    * மகளின் செயல்பாடுகளில் சில தவறுகள் இருக்கலாம். அதனை பக்குவமாக புரியவைக்க வேண்டுமே தவிர, குடும்பத்தினர், மற்றவர்கள் முன்னிலையிலோ, பொது வெளியிலோ திட்டக்கூடாது.

    அப்படி பிறர் முன்பு திட்டுவது மகளுக்கு அவமானத்தையும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிவிடும். தாய்-மகள் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    * மகளின் படிப்பு விஷயத்திலும் கடுமை கொள்ளக்கூடாது. மற்றவர்களுடன் ஒப்பிடுவதோ, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதோ கூடாது. 'உன் மகளுடன் ஒப்பிடும்போது என் மகள் படிப்பில் சுமார்தான்' என்ற ரீதியில் பேசக்கூடாது.

    மகளின் குறைகளை அவரிடமே நேரில் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.

    * அன்பு, தியாகம், பணிவு, இரக்கம், உதவும் மனப்பான்மை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவராக மகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு உண்டு.

    அதேவேளையில் சூழ்நிலைக்கு ஏற்ப குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பக்குவம் கொண்டவராகவும் மகளை வளர்த்தெடுக்க வேண்டும்.


    * மகளின் திருமணம் விமரிசையாக நடைபெற வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொரு தாய்மார்களிடமும் இருக்கும். அதே எதிர்பார்ப்பும், ஆர்வமும் மகளிடமும் வெளிப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர முட்டுக்கட்டை போடக்கூடாது.

    நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை பக்குவமாக விளக்கி புரிய வைக்க வேண்டும். ஒருவேளை மகளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றால், அதற்கான சூழல் உருவாகும் வரை அமைதி காக்க வேண்டும்.

    • பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
    • குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கருவிலுள்ள குழந்தையை சுற்றியுள்ள நீரையே நாம் பனிக்குட நீர் என்கிறோம். இந்த நீர் வற்றிப்போகும் நிலையை `ஆலிகோஹைட்ராமினியாஸ்' (Oligohydramnios) என்கிறோம்.


    குழந்தையின் சிறுநீரகங்கள், 16 வாரங்களுக்குப் பிறகு, சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கும். இந்த பனிக்குட நீரானது தாயின் ரத்தம் மற்றும் கருவிலுள்ள சிசுவின் சிறுநீர் இரண்டும் சேர்ந்து உருவாவது.

    பனிக்குட நீரானது, குழந்தையை தொற்றுகளிலிருந்து காப்பாற்றுகிறது. வெளிப்புற அதிர்ச்சி உள்ளிட்டவற்றிலிருந்தும் கருவிலுள்ள குழந்தையைப் பாதுகாக்கிறது. குழந்தையின் சுதந்திரமான அசைவுக்கும் உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பனிக்குட நீரை சரியான அளவில் வைத்திருந்து பிரசவக்காலம் நெருங்கும் போது நீரின் அளவு குறைந்தால் அதுவும் சிக்கலே.

    அப்போது கர்ப்பபைக்கு செயற்கையாக நீரை ஏற்றி சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள். அரிதாக சில குழந்தைகள் மலம் கழித்துவிடக்கூடும்.

    எனினும் குழந்தை மலத்தை விழுங்காமல் இருக்க இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்வதன் மூலம் தடுக்கலாம். இந்நிலையிலும் சிக்கல் தொடர்ந்தால் பாதுகாப்பான தாய் சேய் ஆரோக்கியத்துக்கு சிசேரியன் செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    ஏனெனில் இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சில பெண்கள் பனிக்குட நீர் வெளியேறுதலை சிறுநீர் கழிவதாக நினைத்து முழு நீரும் வெளியேறிய பிறகு வருவார்கள்.


    இவர்களுக்கு உடனடி சிசேரியன் அவசியமாகிறது. இந்த பனிக்குட நீர் குறைவாக பெற்றுள்ள குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது நுரையீரல் வளர்ச்சி, சிறுநீரகம், மலம் போன்ற இயற்கை உபாதைகள் சீராக இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்

    பனிக்குட நீர் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

    பனிக்குட நீர் குறைந்தால் மருத்துவர் சில வழிமுறைகளை பரிந்துரைப்பார்.

    பெண்கள் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க செய்ய வேண்டும். கர்ப்பகாலத்தில் பனிக்குட நீர் குறைவாக கொண்டிருந்த பெண்கள் சிகிச்சையில் தண்ணீர் அதிகமாக குடித்த பெண்களை ஆய்வு செய்ததில் அவர்களது அம்னோடிக் திரவம் அதிகரித்தது கண்டறியப்பட்டது. இவர்கள் அதிக உடல் உழைப்பில்லாமல் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும்.


    பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை உடல் செயல்பாடுகலை குறைக்க மருத்துவர் அறிவுறுத்துவர். அம்னியோஇன்ஃப்யூஷன் எனப்படும் செயல்முறையுடன் குறைந்த அளவு அம்னோடிக் திரவத்துக்கு சிகிச்சையளிக்கலாம்.

    இந்த சிகிச்சைக்கு திரவ அளவை அதிகரிக்க மருத்துவர் கருப்பை வாய் வழியாக அம்னோடிக் சாக்கில் உப்பு கரைசலை அறிமுகப்படுத்துவார்.

    கர்ப்பத்தின் இறுதி கட்டங்களில் அம்னோடிக் திரவம் மிக குறைவாக இருந்தால் மருத்துவர்கள் பிரசவத்தை பரிந்துரைக்கலாம். இதனால் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுக்க உதவும்.

    ஒரு பெண் முதல்முறை கருத்தரிக்கும் போது கர்ப்பகால உடல் மாற்றம், உடலில் உண்டாகும் அறிகுறிகள், கவனமாக இருக்க வேண்டிய அறிகுறிகள் என அனைத்தையும் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    குறிப்பிட்ட மாதங்களுக்கு மேல் குழந்தையின் அசைவு உணர்வீர்கள். குழந்தையின் அசைவு குறித்தும் விழிப்புணர்வு வேண்டும்.

    ஏனெனில் ஸ்கேன் பரிசோதனை தவிர்த்து குழந்தையின் அசைவை கொண்டு தான் பனிக்குட நீர் குறைவதை கண்டறியமுடியும் என்பதால் ஒவ்வொரு விஷயங்களிலும் கர்ப்பிணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

    • ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம்.
    • பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.

    கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம். ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு கண்டறியப்பட்டால் குரோமோசோமல் பரிசோதனை செய்ய வேண்டும்.


    அப்போது இந்த பிரச்சனையின் தீவிரத்தையும், அதை சரிசெய்ய முடியுமா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.

    கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம் என்றால் அதை பொறுத்து கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள்.

    அப்போது பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக்கொடி, குழந்தைக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கிறதா, ஆக்சிஜன் தேவையான அளவு கிடைக்கிறதா என்பதையும் பரிசோதிப்பார்கள். குறிப்பாக கர்ப்பிணியின் கடைசி மூன்றாம் மாதத்தில் பரிசோதனை செய்யப்படும்.


    பனிக்குட நீர் குறைவதற்கு காரணம்:

    ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பனிக்குட நீர் பற்றாக்குறையால் உண்டாகும் பல பிரச்சனைகள் சரி செய்யகூடியவை தான். குரோமோசோம் குறைபாடு காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை உண்டாகலாம்.

    நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும், குழந்தைக்கு சிறுநீரக வளர்ச்சி குறைபாடு இருந்தாலும் பனிக்குட நீர் குறையலாம்.

    நஞ்சுக்கொடி சரியான நிலையில் இல்லாமல் கர்ப்பப்பை ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீர் அளவு மாறுபடலாம். பெண்ணுக்கு கர்ப்பப்பை காலம் தாண்டி பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவ தேதி கடந்தால் அப்போது பனிக்குட நீர் குறையத் தொடங்கும்.

    குழந்தையை தாண்டி தாய்க்கு ஏதேனும் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    கர்ப்பிணிக்கு கர்ப்பத்துக்கு முன்னரே அல்லது கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

    தாயால் குழந்தைக்கு பனிக்குட நீர் பிரச்சனை ஏற்பட்டால் அடுத்து கருத்தரிக்கும் போதும் இந்த பிரச்சனை உண்டாகலாம்.


    பனிக்குட நீர் குறைவதை கர்ப்பிணிகளால் கண்டறிய முடியுமா?

    கர்ப்பிணிக்கு குறிப்பிட்ட மாதத்தில் குழந்தையின் அசைவு நன்றாக உணர முடியும். பனிக்குட நீர் குறைவதற்கான அறிகுறிகள் என்றால் அதில் முக்கியமானது குழந்தையின் அசைவு தெரியாமல் உணர்வதுதான்.

    குழந்தையின் அசைவை உணர்ந்த பெண்கள் திடீரென்று குழந்தையின் அசைவை உணர முடியவில்லை என்று டாக்டரிடம் செல்வார்கள். நீரின் அளவு குறையும் போது பனிக்குட நீரில் மிதக்கும் குழந்தை கர்ப்பப்பையை சுற்றி வராமல் ஒரே இடத்தில் நின்று விடும்.

    இந்நிலை கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் இருந்தால் குழந்தை தலைக்கீழாக அல்லது சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்றுவிடும். அப்போது தான் சிசேரியன் அவசியமாகிவிடுகிறது.

    • அந்த கால பெண்களுக்கு வயிற்று பருமன் உபாதைகள் குறைவாக இருந்தது.
    • கட்டுப்பாடான உணவு பழக்கம், உடற்பயிற்சி இதற்கு தீர்வாக அமையும்.

    பெண்கள் அந்த காலத்தில் வீட்டு வேலைகளை அவர்களே செய்து வந்தனர். குறிப்பாக அம்மியில் மசாலா அரைப்பது, மாவு அரைப்பது, துணி துவைப்பது என பல்வேறு வேலைகளை செய்து வந்ததால் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. இதனால் அந்த கால பெண்களுக்கு வயிற்று பருமன் போன்ற உபாதைகள் குறைவாக இருந்தது.


    தற்போது வீட்டு சமையல் அறையை எந்திரங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அனைத்து வேலைகளையும் எந்திரங்கள் மூலமாக பெண்கள் செய்கின்றனர். இதனால் உடல் உழைப்பு குறைந்து பலர் வயிற்று பருமன் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது பற்றி சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் இந்தியாவில் அனைத்து தென் மாநிலங்களில் உள்ள பெண்களில் 35 சதவீதத்துக்கு மேல் வயிற்றுப் பருமன் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    தென்னிந்தியா முழுவதும் பெண்களிடையே வயிற்றுப் பருமனின் பரவல் 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


    அதிக வருமானம் கொண்ட பெண்கள் 32 சதவீத ஆற்றல் கொழுப்பில் இருந்து பெறப்பட்ட உணவை உட்கொள்கின்றனர், அதே சமயம் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் 17 சதவீத ஆற்றல் மட்டுமே கொழுப்பு உணவுகள் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    தென்னிந்திய மக்களிடையே (72 சதவீதம்) உடல் உழைப்பின்மை மிக அதிகமாக உள்ளது, இதனால் தென்னிந்திய பெண்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    அதைத் தொடர்ந்து நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது. கிராமப் புறங்களிலும் பெண்களின் உடல் செயல்பாடு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.


    ஆண்களுக்கு குறைவு

    மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, பெண்களுடன் ஒப்பிடும் போது, ஆண்களிடையே வயிற்றுப் பருமன் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. மொத்தத்தில், நாட்டில் வயிற்றுப் பருமன் பாதிப்பு பெண்களில் 40 சதவீதமாகவும், ஆண்களில் வெறும் 12 சதவீதமாகவும் உள்ளனர்.

    வயிற்றுப் பருமன் அதிகமாக இருப்பதால், வட இந்தியாவில் உள்ள பெண்களை விட, தென் மாநிலத்தில் உள்ள பெண்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம், சிறுநீரகம் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களிடையே வயிற்றுப் பருமன் பாதிப்பு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உள்ளது. கட்டுப்பாடான உணவு பழக்கம் உடற்பயிற்சி இதற்கு தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.
    • குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

    ஒரு பெண் கர்ப்பத்தின் போது, கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையை சுற்றி ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது.


    பனிக்குட நீர் நிறமற்றது. இது வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ இருக்கலாம். பனிக்குட நீர் அளவு சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக இருக்கும். குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.

    ஒரு சில கர்ப்பிணிக்கு பனிக்குட நீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இது குறையும் போது குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும்.


    பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்?

    * தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிசுவின் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையோடு ஒட்டி கொண்டு விடும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்.

    * இதனால் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

    * நுரையீரல் வளர்ச்சியிலும் குறை உண்டாகலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். சமயங்களில் குழந்தைக்கு வளைந்த நிலையில் பாதங்கள் ஏற்படலாம்.


    * குழந்தை பனிக்குட நீர் குறையும் போது நஞ்சுக்கொடியின் அழுத்தத்தால் குழந்தையின் முகத்தில் மாறுதல்கள் உண்டாகலாம்.

    * பனிக்குட நீர் அதிகமாக குறைந்தால் அது அப்பெண்ணுக்கு அவசரமான மருத்துவ சிகிச்சை தேவை என்று சொல்லலாம்.

    இது அப்பெண்ணின் கர்ப்பகாலத்தில் எந்த மாதத்தில் உண்டாகிறது என்பதை பொறுத்து பாதிப்புகள் தீவிரமாகவோ சிகிச்சைக்குரியதாகவோ இருக்கலாம்.

    • குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாயிடமிருந்து தான் பெறுகிறது.
    • வழக்கத்தை காட்டிலும் கர்ப்பகாலத்தில் அதிகமான ஊட்டச்சத்து தேவை.

    கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு பிரத்யேகமாக மல்டி வைட்டமின்கள் பரிந்துரைக்கப்படும். எனினும் இதை சுயமாக எடுத்துகொள்ளாமல் மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ள வேண்டும்.

    வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாயிடமிருந்து தான் பெறுகிறது. அதனால் வழக்கத்தை காட்டிலும் கர்ப்பகாலத்தில் அதிகமான ஊட்டச்சத்து தேவை.


    ஃபோலிக் அமிலம்

    ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின் பி ஆகும். இது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

    கர்ப்பத்துக்கு முன்பு ஃபோலிக் அமிலத்தை எடுத்துகொள்வதால் கருவின் மூளை மற்றும் முதுகெலும்புகள் குறைபாடுகள் நரம்புகுழாய் குறைபாடுகள் போன்றவற்றை தடுக்க உதவும்.

    இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு அன்னபிளவு, இதய குறைபாடுகள் பிறப்பு குறைபாடுகள் உண்டாகலாம்.


    இரும்புச்சத்து

    இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் என்னும் புரதத்தை உருவாக்க உதவுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்ஸிகனை எடுத்து செல்ல இது உதவுகிறது.

    கர்ப்ப காலத்தில் வழக்கத்தை காட்டிலும் இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். கர்ப்பிணிக்கு அதிக ரத்த ஓட்டம் உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் தேவை. அப்போதுதான் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் குறையில்லாமல் செல்லும்.


    கால்சியம்

    கர்ப்பகாலத்தில் கால்சியம் சத்தும் அவசியம். கால்சியம் குழந்தையின் எலும்புகள், பற்கள், இதயம், தசைகள் மற்றும் நரம்புகளை உருவாக்க உதவும். கால்சியத்தை உணவு வழியாகவே பெற்றுவிட முடியும். நாள் ஒன்றுக்கு 1000 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவை

    பால், சீஸ், தயிர், புரக்கோலி, காலே என கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் குறைபாடில்லாமல் காக்கலாம்.

    கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு கால்சியம் சத்து தேவைப்படும் போது தாயின் உடலில் உள்ள எலும்புகளிலிருந்து உறிஞ்சப்பட்டு குழந்தைக்கு கொடுக்கும்.


    வைட்டமின் டி

    உடலில் கால்சியம் உறிஞ்ச வேண்டுமென்றால் வைட்டமின்- D சத்து உடலுக்கு தேவை. வைட்டமின்-D உடலின் நரம்புகள், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பணியை மேம்படுத்துகிறது.

    நோயெதிர்ப்பு அமைப்பு சீராக இருந்தால் உடல் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எலும்புகள், பற்கள் வளர வைட்டமின் டி தேவை. 

    • இயற்கை வைத்தியங்கள் முயற்சி செய்வது பாதுகாப்பானது.
    • இயன்றவரை மாதவிடாயை தள்ளிபோட நினைக்காதீர்கள்.



    ஆப்பிள் சீடர் வினிகர்

    ஆப்பிள் சீடர் வினிகர் முகப்பரு. நெஞ்செரிச்சல், தொப்பை கொழுப்புகளுக்கு அதிசய தீர்வாக இருக்கும். மாதவிடாயை தாமதப்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தலாம். இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் மீது தாக்கம் ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    இந்த ஆய்வு ஆப்பிள் சீடர் வினிகரானது ரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இயல்பான இனப்பெருக்க சுழற்சிகள் இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் உண்டாக்கலாம் என்று கண்டறிந்துள்ளது.

    ஆப்பிள் சீடர் வினிகர் மாதவிடாயை தாமதப்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இல்லை. இதை நேரடியாக எடுக்க கூடாது. இது பற்கள் மற்றும் வாய் தொண்டையில் இருக்கும் மென்மையான திசுக்களில் எதிர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணும். அதனால் இதை எப்போது எடுத்துகொண்டாலும் தண்ணீரில் நீர்த்து எடுக்க வேண்டும்.

    உளுந்து

    மாதவிடாய் அறிக்கைகள் மூலம் மாதவிடாய் வருவதற்கு முன்பு உளுத்தம் பருப்பை வறுத்து பொடியாக்கி சாப்பிடுவது அதை தள்ளிபோட செய்யும் என்கிறது. ஆனால் இது குறித்து நிரூபனமான ஆராய்ச்சிகள் இல்லை. அதிகமாக இவை எடுத்துகொள்வதால் வயிறு உபாதை, மற்றும் வாய்வு உண்டாகும்.


    எலுமிச்சை சாறு

    எலுமிச்சை சாறு ஆப்பிள் சீடர் சாறு போன்று அதிக அமிலத்தன்மை கொண்டது. சிட்ரஸ் பழங்கள் ரத்தப்போக்கை பின்னுக்கு தள்ளக் கூடும் என்று சொல்கிறது.

    அதிக அமிலம் உள்ள உணவுகள் உங்கள் பற்கள், ஈறுகள், வாய், தொண்டை, வயிறு மற்றும் குடல்களை எரிச்சலூட்டும். இந்த முறையில் நீங்கள் விரும்பினால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை சேர்த்து குடிக்கலாம்.


    ஜெலட்டின்

    ஊன்பசை என்று அழைக்கப்படும் இதை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடிப்பது மாதவிடாயின் தொடக்கத்தை சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதப்படுத்தலாம். உங்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டால் மீண்டும் இந்த சிகிச்சையை தொடங்க வேண்டும்.

    ஜெலட்டின் மாதவிடாய் தொடக்கத்தை தாமதப்படுத்துவதற்கு இயற்கை ஊக்குவியாக ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாக இல்லை. இதை ஆதரிக்க ஆராய்ச்சிகள் இல்லை. அதிக அளவு ஜெலட்டின் குடிப்பது செரிமான கோளாறு போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.


    தீவிரமான உடற்பயிற்சி

    தீவிரமான அல்லது அதிகமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மாதவிடாய் தொடங்குவது தாமதமாகலாம். மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அதிக உடல் உழைப்பு அல்லது இயல்பாகவே அதிக உழைப்பு கொண்டவர்களுக்கு அது சரியான நேரத்தில் தொடங்குவதில்லை.

    உடற்பயிற்சி மற்றும் மீட்பு ஆகிய இரண்டுக்கும் உடல் ஆற்றல் பயன்படுத்தும் போது மாதவிடாய் சுழற்சியை நிறைவேற்றுவதற்கு ஆற்றல் இருப்பு இல்லாமல் இருக்கலாம் என்பதால் இந்த நிலை உண்டாகிறது., அதனால் தான் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மாதவிடாயை அடிக்கடி தவறவிடுகிறார்கள். ஒரு காலத்தை தாமதப்படுத்த உடற்பயிற்சி செய்தால் போதும் என்பதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாதவிடாய் தாமதப்படுத்த இயற்கை வைத்தியங்கள் முயற்சி செய்வது பாதுகாப்பானது. ஆனால் என்னவாக இருந்தாலும் அது குறித்து முழுமையான ஆராய்ச்சி தேவை. ஏனெனில் இயற்கை வைத்தியங்கள் பாதுகாப்பானதாக இருந்தாலும் ஆராய்ச்சிகள் அவை பயனுள்ளவை என்பதை நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இயன்றவரை மாதவிடாயை தள்ளிபோட நினைக்காதீர்கள். தவிர்க்க முடியாத காலங்களில் மட்டுமே உங்கள் காலங்களை தள்ளிப்போடலாம். அதுவும் மருத்துவர் அறிவுறுத்திய அறிவுறுத்தலின் படி.


    முதலில் பெண்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலையில் செயல்படும் போது அதை தடுக்கும் வகையில் நாமே செயல்படுகிறோம். இது நல்லதல்ல. ஏனெனில் ஒவ்வொருவரது உடல் அமைப்பும், செயல்பாடும் மாறுபடும். இதை உங்கள் மருத்துவரால் மட்டுமே உணர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    மாதவிடாய் முன்னாடி வருவதற்கு அல்லது தாமதமாவதற்கு மாத்திரைகள் எடுத்து கொள்வது அதிலும் சுயமாக எடுத்துகொள்வது மோசமானது. இதை மருத்துவரிடம் ஆலோசித்தால் மருத்துவர் 3 நாட்களுக்கு முன்பு தொடங்கி அதற்கேற்ப அது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பரிந்துரைப்பார்கள். அது உங்கள் உடல் நிலை, காரணம், தாமதப்படுத்த வேண்டிய நாட்கள் போன்றவற்றை பொறுத்தது.

    அதோடு உங்கள் தேவைக்கேற்ப அது புரோஜெஸ்ட்ரோன் அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கலந்து கொடுக்கப்படும். இதன் அளவு கூட்டி, குறைத்து உங்கள் தேவைக்கேற்ப மருத்துவரால் மட்டுமே வழங்கமுடியும். இனி மாதவிடாய் தாமதத்துக்கு மாத்திரைகள் போடும் போது உங்கள் உடல் மாற்றம் குறித்தும் யோசியுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும்.
    • பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.

    மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் பருவமடைதலுக்கு பிறகு ஒவ்வொரு 28 நாட்களிலும் வரக்கூடிய நிகழ்வு. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 முதல் 35 நாட்களுக்கு இடையில் வரலாம்.

    சிலருக்கு இந்த நாட்களை தாண்டியும் மாதவிடாய் சுழற்சி வரலாம். எல்லா மாதமும் இதேபோல் ஒரே சீராக வரும் என்று சொல்ல முடியாது.


    உடலில் ஹார்மோன்களின் சுழற்சிக்கு இடையில் வரக்கூடிய இந்த மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். ஆனால் பலரும் இந்த மாதவிடாய் சுழற்சி அவர்கள் விரும்பும் நேரத்தில் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளி வைக்க நினைக்க கூடாது. ஏனெனில் உடல் இயற்கையாக நடக்கும் இந்த மாற்றத்தை நாம் விரும்பியபடி மாற்றி அமைத்தால் அவை பிரச்சனையை உண்டு செய்யலாம்.


    தவிர்க்க முடியாத சூழலில் அதாவது ஒரு பெண் அதிக கனமான மாதவிடாய் காலங்களை வலியோடு எதிர்கொள்ளும் போது அவர்கள் பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும் போது அல்லது அவர்களே விழா நாயகியாக திருமணப்பெண்ணாக இருக்கும் போது இதை தவிர்க்க நினைக்கலாம். அதோடு இவை அடிக்கடி செய்ய வேண்டியிராது என்பதால் இதை செய்வதில் பிரச்சனையில்லை.

    மாதவிடாய் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் மருந்துகளை சுயமாக எடுக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே எடுக்க வேண்டும். சரியான முறைகளை பயன்படுத்தி மாதவிடாய் தாமதப்படுத்துவது உண்மையில் பாதுகாப்பான விஷயம் தான்.


    ஆனால் இவை எல்லாமே தற்காலிகமானவையாக இருக்க வேண்டும். அடிக்கடி விரும்பும் வகையில் மாதவிடாய் காலங்களை மாற்றிக்கொள்வதற்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    மாதவிடாய் தள்ளிப்போட எடுக்கும் மருந்துகளில் செயற்கை புரோஜெஸ்ட்ரான் அல்லது ஈஸ்ட்ரோஜன் உள்ளது. அதிகமாக இதை பயன்படுத்தும் போது வருங்காலத்தில் அந்த பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.

    உங்கள் உடலில் நீங்கள் செய்யும் மாற்றங்களில் விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். அதோடு சுயமாக மருந்துகள் எடுப்பதும் உங்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யலாம்.

    • தம்பதியருக்குள் ஒருமித்த புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
    • ஆக்கப்பூர்வமான விமர்சனமும், ஆழ்ந்த அன்பும் கலந்திருக்க வேண்டும்.

    திருமண உறவு இனிமையாக அமைந்து இல்லறத்தை சிறப்பாக வழி நடத்துவதற்கு தம்பதியருக்குள் ஒருமித்த புரிதல் இருக்க வேண்டியது அவசியமானது. இருவரும் பேசும் வார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான விமர்சனமும், ஆழ்ந்த அன்பும் கலந்திருக்க வேண்டும்.

    மனைவியிடம் ஒரு சில விஷயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான காரணங்கள் குறித்தும், அதனை தவிர்த்து இனிய இல்லறத்தை கட்டமைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.


    விருப்பங்களை நிறைவேற்றுங்கள்

    மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முயல வேண்டும். அது சாத்தியப்படாததாக இருந்தாலோ, பிரச்சினைக்குரியதாக இருந்தாலோ அதுபற்றி புரிய வைக்க வேண்டுமே தவிர அவமதிப்பது போன்ற வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது.

    'நீ என்ன செய்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு நீ தான் பொறுப்பு. நான் அதில் தலையிடமாட்டேன்' என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அவரின் கருத்துக்கு உடன்படவில்லை என்றாலும் அதை நிராகரிக்கும் தொனியில் பேசக்கூடாது.


    தவறுகளை திருத்துங்கள்

    மனைவி செய்யும் காரியங்களில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதனை திருத்துவதற்கு கணவர் முயற்சிக்க வேண்டும். அவர்தானே தவறு செய்தார். அவரே சரி செய்துகொள்ளட்டும் என்ற மன நிலையில் இருக்கக் கூடாது.

    அந்த தவறை சுட்டிக்காட்டி, குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், மனைவி மீது பழி சுமத்துவதும் அபத்தமானது. `நீ எப்போதும் இப்படித்தான் செயல்படுகிறாய்' என்று எது செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பது உறவில் தேவையற்ற விரிசலை ஏற்படுத்திவிடும்.

    எந்தவொரு விஷயமாக இருந்தாலும் 'ஒன்றாகச் சேர்ந்து நிலைமையை சமாளிப்போம். அடுத்த முறை முடிவெடுக்கும் முன்பு அதை பற்றி விரிவாக விவாதிப்போம்' என்பதுதான் நீங்கள் சொல்லக்கூடிய மாற்றுக் கருத்தாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுதான் சரி என்று நிரூபிப்பது இல்லற வாழ்க்கைக்கான வெற்றியாக அமையாது.

    கவனமாக கையாளுங்கள்

    மனைவி மேற்கொண்ட ஏதேனும் ஒரு முயற்சி தோல்வியில் முடிந்தாலோ, அவர் ஏதேனும் தவறு செய்தாலோ 'நீ ஒரு முட்டாள். எந்த வேலையையும் சரியாக செய்ய மாட்டாய்' என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது. அது உறவை சீர்குலைத்துவிடும். 'நீ எப்போதும் சிறப்பாகத்தானே செயல்படுவாய்.

    இந்த முறை ஏன் இப்படி செயல்பட்டுவிட்டாய். அடுத்த முறை கவனமாக கையாளு' என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை பேசுங்கள். அது எந்தவொரு விஷயத்தையும் கவனமாக கையாளுவதற்கு உதவிடும்.

    முன்னாள் காதலை பேசாதீர்கள்

    திருமணத்துக்கு முன்பு மனைவி வேறு நபரை காதலித்து இருந்தால் அது பற்றிய பேச்சை திருமணமான பிறகும் பேசுவது தவறானதாகும். ஏதேனும் சண்டையின் போது முன்னாள் காதலை பற்றி பேசுவது ஏற்புடையதல்ல. அது உறவுக்குள் பாதகத்தை ஏற்படுத்திவிடும்.


    காதலை வெளிப்படுத்துங்கள்

    'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை திருமணத்துக்கு முன்புதான் உச்சரிக்க வேண்டும் என்றில்லை. மணமான பிறகும் அந்த அன்பு சொல்லை தாராளமாக பயன்படுத்தலாம். அது தம்பதியருக்குள் இணக்கத்தை அதிகப்படுத்தும். அதற்கு மாறாக 'நான் உன்னை ஒருபோதும் காதலித்ததில்லை' என்ற வார்த்தையை பயன்படுத்துவது அன்பில் விரிசலை அதிகப்படுத்திவிடும்.

    எப்போதும் காதலை வெளிப்படுத்தும் விதமாக செயல்படுங்கள். வாழ்வின் முக்கியமான நாட்களில் மட்டுமின்றி துணை செய்த சின்ன சின்ன விஷயங்களுக்கும் பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அது துணையின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். இல்லறமும் இனிமையாக அமையும்.

    விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்

    விவாகரத்து என்ற ஒற்றை வார்த்தை ஒரு நொடிப்பொழுதில் குடும்ப கட்டமைப்பை சீர்குலைத்துவிடும்.

    கணவர் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். ஏதேனும் சண்டை, சச்சரவுகளின்போது 'விவாகரத்து' என்ற வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அந்த வார்த்தை துணை மத்தியில் பாதுகாப்பின்மையையும், பிரிவினையையும் உண்டாக்கிவிடும்.

    • 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.
    • உடல் பருமனை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

    உடல் பருமன்

    உடல் எடை அதிகரிப்பு காரணமாக நாம் பலதரப்பட்ட நோய் அபாயங்களைச் சந்திக்கிறோம். ஆனால் இதில் மார்பக புற்றுநோயும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். மார்பக புற்றுநோய்க்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இதை தவிர்க்க உடல் பருமனை கட்டுப்படுத்துவது அவசியமாகும். எனவே தினந்தோறும் உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


    மோசமான வாழ்க்கை முறை

    ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணங்களால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது. பெண்கள் பலரும் வீட்டு உணவை தவிர்த்து வெளியில் நொறுக்குத் தீனிகளுக்கும், துரித உணவுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடல் செயல்பாடுகளுடன், ஆரோக்கியமான உணவுமுறையை கையாள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.


    ஹார்மோன் சிகிச்சை

    பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் ஹார்மோன் சிகிச்சையும் அடங்கும். இதில் ஒரு பெண் நீண்ட காலமாக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.

    ஹார்மோன் சிகிச்சை மிகவும் பொதுவானதாகி விட்டாலும், இது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

    கருத்தரிக்கும் வயதை அதிகரிப்பது

    சரியான நேரத்தில் கருத்தரிப்பதன் மூலம், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். ஆனால், இன்று பெண்கள் பலரும் 30-32 வயதிற்குப் பிறகு கர்ப்பத்தைத் திட்டமிடுகின்றனர். இது மார்பக புற்றுநோய் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.


    குறுகிய காலத்தில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுதல்

    பெண்கள் சிலருக்கு சிறு வயதிலேயே மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு குறுகிய காலத்திற்கு உணவளிப்பதாகும். பிரசவத்திற்கு பிறகு குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைத் தவிர்க்கலாம்.

    மரபணு காரணங்கள்

    பல சமயங்களில், பெற்றோருக்கு குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அது குழந்தைகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மோசமான வாழ்க்கை முறையை சரி செய்வதன் மூலமே மூலம் மார்பக புற்றுநோயை பெரிய அளவில் தடுக்கலாம். எனினும், மரபணு காரணமாக ஏற்படுவது இந்த பாதிப்பை சற்று கடினமாக்குகிறது.

    இவை அனைத்தும் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான காரணிகளாகும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும், சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட முடியும்.

    • பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.
    • தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டை மிகப்பெரிய பிரச்சனை என்று நினைத்து கவலைப்படுகிறார்கள்.


    தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    குழந்தையின்மையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும் நிலையில், அதை முழுமையாக கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அதனால் பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது.

    அதே நேரத்தில் தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கான அடிப்படையான பல விஷயங்களை கவனிக்கிறது.

    குறிப்பாக, குழந்தை பேறு என்று எடுத்துக் கொண்டால் கருமுட்டைகள், விந்தணுக்கள், கர்ப்பப்பை ஆகிய அனைத்தும் சீராக செயல்பட வேண்டும்.


    ஒரு பெண் கர்ப்பம் தரிக்கின்ற போது உருவாகிற நஞ்சு, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்துமே சீராக இருக்க வேண்டும்.

    ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் மட்டுமல்ல, ஆரோக்கியமாக குழந்தை பேறு பெறுவது வரைக்கும் அந்த பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம்.

    எனவே கர்ப்ப காலகட்டத்தில் கண்டிப்பாக தைராய்டு என்பது ஒவ்வொரு செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

    இந்த தைராய்டு குறைவதால் பல நேரங்களில் குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்படலாம். மேலும் தைராய்டு பாதிப்பால் குழந்தை பேறு ஏற்படும் போது கருச்சிதைவு, குறை பிரசவம், குறைபாடுள்ள குழந்தை பிறக்கலாம்.


    கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான ரத்த சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் குழந்தை இறப்பு, குழந்தையின் வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு உடல் எடை கூடுவதால் பிரச்சனை, ரத்த அழுத்தம், உப்பு சத்து ஆகிய அனைத்துமே தைராய்டு பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    • பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
    • மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம்.

    தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள்.

    நிபுணர்களின் கருத்துபடி சிசேரியன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லை. ஆனால் பெண்களுக்கு 3 சிசேரியனுக்கு மேல் இருக்கக்கூடாது. இது பெண்ணின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

    இருந்த போதிலும் சிசேரியனில் சில சிக்கல்கள் உள்ளன. பெண்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம் மற்றும் நோயில் இருந்து மீள்வதற்கும் நேரம் எடுக்கும்.


    ஆனாலும் இது ஒவ்வொரு பெண்ணின் உடலுடன் ஒப்பிடும் போது வேறுபட்டது. ஒவ்வொரு வகை சிகிச்சைக்கும் உடல் வித்தியாசமாக செயல்படும். சில பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன்கள் ஆபத்தானதாக இருக்கலாம். சில பெண்களுக்கு 3 சிசேரியன் செய்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

    பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து இயற்கையான கர்ப்பத்திற்கு திட்டமிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இது குழந்தை மற்றும் தாயின் மனநிலையை மனதில் வைத்து கூறப்படுகிறது.

    இருப்பினும் இயற்கையான கர்ப்பத்திற்கு பிறகு சில பெண்கள் 6 மாதங்களில் இரண்டாவது முறையாக கருத்தரித்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுப்பவர்களும் இருக்கிறார்கள்.


    ஆனால் சிசேரியன் செய்த ஒரு பெண் முக்கியமாக உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கூற்றுபடி சிசேரியனுக்கு பிறகு 18 முதல் 24 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு இரண்டாவது முறை கருத்தரிப்பது பற்றி சிந்திக்கலாம். 

    ×