முக சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றமளிக்க உதவும் `சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்'

ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
முக சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றமளிக்க உதவும் `சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்'
Published on

பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நம்முடைய சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் நல்ல பலன் அளிக்கும் என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நாம் முகத்துக்கு பயன்படுத்தப்படும் சார்க்கோல் என்பது ஆக்டிவேட்டடு சார்க்கோல் ஆகும். ஆக்டிவேட்டடு சார்க்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.

இது அழகு சாதனப்பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

சருமத்தின் துளைகளில் இருக்கும் துகள்களை ஆழமாக சுத்தம் செய்ய இந்த சார்கோல் ஃபேஸ் மாஸ்க், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சருமத்தில் இருக்கும் துகள்களால் சருமம் எளிதில் வெடிப்பு, எண்ணெய் பசை போன்றவற்றை உண்டாக்கும். இதை எளிதில் சரிசெய்வதற்கு சார்கோல் ஃபேஸ் மாஸ்க் உதவுகிறது.

சார்கோல், அடைப்பை சரி செய்து சருமத்தை சுத்தமாக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் தொற்று முகப்பரு போன்றவை குறைகிறது.

அதிகப்படியான வியர்வை, திறந்த காயம், அழுக்குப்படிவது மற்றும் முகச்சீர்ப்படுத்தும் கருவிகளை பலரும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சருமத்தில் அழுக்குகள் தேங்கும். அப்போது சார்கோல் பயன்படுத்தினால், நல்ல பலனைத் தரும்.

ஆக்டிவேட்டட் கரித்தூளில் உள்ள துகள்கள் சருமத்தில் இறந்த சரும செல்களை துடைக்க உதவுகிறது. மேலும் பளிச்சென்ற சருமத்தை அளிக்க உதவுகிறது.

ஆக்டிவேட்டட் சார்கோல் எண்ணெய் சருமத்துக்கு சிறந்த துணையாக இருக்கும். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்குவதால் சருமம் வறண்டிருந்தாலும் கூட, சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்கவும் இது உதவுகிறது.

மேலும் இதை ஆலோவேரா உடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு சீரான பிரகாசத்தையும் கொடுக்க உதவுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com