என் மலர்
பெண்கள் உலகம்
மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா? சிம்பிள் டிப்ஸ் இதோ...
- மழைக்காலங்களில் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
- துணிகளில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகின்றன.
மழைக்காலங்களில் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அப்படியான ஒன்று தான், துவைத்த துணிகளை உலர்த்துவதும், ஈரப்பதத்தால் துணிகளில் இருந்து வரும் துர்நாற்றமும்.
சுற்றுச்சூழலில் அதிக ஈரப்பதம் இருப்பதால் துவைத்த துணிகள் உலராமல் ஈரப்பதத்துடனே இருக்கும். இதனால், துணிகளில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகின்றன. இதைத் தவிர்க்க உதவும் சில எளிய வழிகள் இதோ...
துணிகளை காய வைப்பது எப்படி?
முதலில், மழைக்காலத்தில் அதிக எடையுள்ள துணிகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போது, எந்த நேரத்தில் எந்த துணியை துவைக்க வேண்டும் என பிரித்துக்கொள்ள வேண்டும்.
துணிகளை உலர்த்தும் முன் அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். வெளியிடங்கள் செல்வதற்கு தேவைப்படும் துணிகளை மட்டுமே துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
வீட்டிற்குள் கயிறு கட்டி காயவைப்பதை விட துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகளில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்தலாம்.
மழைக்காலங்களில் வீட்டிற்குள் துணிகளை காய வைப்பதால் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், வீட்டில் உள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ஏர் பியூரிபையர் பேக் பயன்படுத்தலாம்.
மாறாக, ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை ஒரு துணியில் கட்டி வைப்பதால் அறையில் இருக்கும் ஈரப்பதத்தை கல் உப்பு உறிஞ்சு விடுகிறது.
தொடர் மழையின் போது, இந்த தந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஹேர் ட்ரையர் அல்லது டிஹைமிடிஃபையர் மூலம் துணிகளை உலர வைக்கலாம்.