search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Copper T"

    தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
    ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு.

    * மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.

    * காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

    * காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

    * காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது.

    * காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம்.

    * குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.

    குறிப்பு: கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.
    ×