என் மலர்
அழகுக் குறிப்புகள்
- காலை, மாலை இருவேளை உதடுகளில் வெண்ணெயைப் பூச வேண்டும்.
- தேங்காய் எண்ணெய் தேய்த்து குளித்தால் தோல் வறண்டு போகாது.
பருவநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, நமது சருமத்திலும் அதற்கான மாற்றங்கள் தென்படும். குளிர்காலம் வந்துவிட்டால், சருமம் வறண்டு, உதடு வெடித்து, பாதங்களில் பித்தவெடிப்பு போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படும். அவை நீங்க என்ன செய்யலாம்...
* குளிர்காலத்தில் சரும வறட்சியைப் போக்க உணவில் பச்சைக் காய்கறிகள், பழம், மோர் நிறைய சாப்பிட வேண்டும்.

* சரும வறட்சியைத் தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணெய் தடவிக்கொண்டு சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
* காலையும், மாலையும் ஸ்கின் மொய்ஸ்ரைசர் உபயோகப்படுத்துவதன் மூலம் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.

* உதடுகளில் ஏற்படும் வறட்சியைப் போக்க காலை, மாலை இருவேளை உதடுகளில் வெண்ணெயைப் பூச வேண்டும். ரோஜாப்பூ இதழ்களை பால் விட்டு அரைத்து தடவி வந்தாலும் வெடிப்பு ஏற்படாது.
* தோல் சீவிய வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் நான்கு டீஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ரோஸ் வோட்டர் கலந்து அரைக்க வேண்டும். இதை ஃபேஸ் பேக்காக முகத்தில் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும்.

* பாத வெடிப்பு வராமல் தடுக்க வாரம் ஒருமுறை நீரில் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு, தரமான ஷெம்பு சிறிது கலந்து கால்களை அதனுள் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி ஊற வைக்க வேண்டும். பிறகு ப்யூமிக் ஸ்டோன் கொண்டு பாதத்தை தேய்த்துவிட்டு ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பிறகு மொய்ஸ்ரைஸர் தடவவும்.
* வாழைப்பழம், தேன், பன்னீர் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் வறண்டு போகாமல் இருக்கும்.
* பாசிப்பயறு, ஆரஞ்சுப் பழத்தோல் மற்றும் பால் ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் வறண்டு போகாமல் தடுக்கலாம்.
* குளிர்காலங்களிலும் தண்ணீர் குடிப்பது அவசியம்.
* பழங்கள், ஆவியில் வேக வைத்த காய்கறிகள் சாப்பிடலாம். ஆரஞ்ச்சு, ஆப்பிள், செர்ரி, உலர்ந்த திராட்சை, இலந்தைப்பழம் சாப்பிடலாம்.
* குளிக்கும் முன் உடலில் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்து பிறகு குளித்தால் தோல் எளிதில் வறண்டு போகாது.
* தலையின் தோலில் வறட்சி ஏற்பட்டு பொடுகு வராதிருக்க வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
- சருமத்தை இளமையாக மாற்றக்கூடிய சிகிச்சை முறையே பேஷியல்.
- தோற்றத்தை மேம்படுத்த இந்த பேஷியல் உதவும்.
முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, திசுக்களுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, சருமத்தை இளமையாக மாற்றக்கூடிய அழகு சிகிச்சை முறையே பேஷியல். இதில் பல வகைகள் இருந்தாலும், தற்போது டிரெண்டிங்கில் இருப்பது 'ஹைட்ரா பேஷியல்'. சருமத்தின் நிறம், தோற்றத்தை மேம்படுத்த இந்த பேஷியல் உதவும்.
'ஹைட்ரா பேஷியல்' என்பது அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கருவியின் மூலம் செய்யப்படும் அழகு சிகிச்சையாகும். இதில் எல்.இ.டி. ஒளி பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகளை ஆழமாக சுத்தம் செய்து மெருகூட்ட உதவுகிறது.

இந்த சிகிச்சையை ஒருமுறை செய்யும்போதே முகப்பொலிவு அதிகரிக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். ஹைட்ரா பேஷியல் முறையில் சருமத்தை சுத்தப்படுத்துதல், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றுதல், வறண்ட சருமத்துக்கு நீரேற்றம் அளித்தல், அழகை மேம்படுத்தும் சீரத்தை (திரவ மருந்து) சருமத்துக்குள் செலுத்துதல் என ஒரு அமர்வில் முகத்திற்கு 4 வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை முறையில் 3 படிகள் உள்ளன. முதல் படியில், 2 வகையான நிற ஒளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், நீல நிற ஒளி முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க உதவுகிறது. சிவப்பு நிற ஒளி சருமத்தில் உள்ள சுருக்கங்களை சீரமைக்கிறது.
இரண்டாவது படியில், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வலி இல்லாமல் உறிஞ்சப்பட்டு நீக்கப்படுகின்றன. இதில் சருமத்தை மென்மையாக்கும் வகையில், மொய்ஸ்சுரைசர்கள் மூலம் ஊட்டம் அளிக்கப்படுகிறது.
இது பிரத்யேகமான கருவியைக் கொண்டு சுழற்சி முறையில் செய்யப்படும். இதற்கு ஆன்டி-ஆக்சிடன்டுகள், சீரம் (திரவ மருந்து) ஒட்சிசனேற்றிகள், பெப்டைடுகள், ஹைலூரோனிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
மூன்றாவது படியில் சருமத்தை பளபளக்கச் செய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் சருமத்தின் நிறம், தன்மை, பொலிவு ஆகியவை மேம்படும்.
ஒருமுறை இந்த பேஷியல் செய்தபின்பு, சில வாரங்கள் வரை சருமப் பொலிவு நீடித்திருக்கும். இதற்கு ஏற்ற வகையில், வீட்டில் தரமான முக கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.
ஹைட்ரா பேஷியலின் நன்மைகள்:
* முகப்பருக்கள், பருக்களால் முகத்தில் உண்டாகும் கருமை நிற வடுக்கள் ஆகியவற்றை நீக்கும். இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.
* சருமத்தின் நிறத்தையும், தோலின் கட்டமைப்பையும் மேம்படுத்தும். ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும்.
* முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும். பெரிய துளைகள் இறுக்கப்படுவதால், அவற்றின் வழியாக மீண்டும் அழுக்கு மற்றும் எண்ணெய் சேராமல் தடுத்து, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும்.
* இந்த சிகிச்சை முறையில் சருமத்தில் செலுத்தப்படும் கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் மற்றும் முக்கிய தாவர சாறுகளின் கலவைகள் ஆழமாக ஊடுருவி முக அழகை அதிகரிக்கும்.
- பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
- ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள்.
சிலருக்கு முகத்தில் உள்ள சருமம் சீரான நிறத்தில் இல்லாமல், ஆங்காங்கே கருப்பு நிற திட்டுக்கள் காணப்படும். பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை `ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள், தூக்க மின்மை, அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும். ஒவ்வாமை, மனஅழுத்தம் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் இந்த பிரச்சினையை எளிதாக தீர்க்க உதவுகிறது
`கோஜிக் அமிலம்'. பெரும்பாலான அழகு பராமரிப்பு பொருட்களில் கோஜிக் அமிலம் முக்கியமான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு வகையான பூஞ்சைகளில் இருந்து கோஜிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர சோயா, அரிசி போன்ற சில உணவுப்பொருட்களை நொதிக்க வைத்து அதில் இருந்தும் கோஜிக் அமிலத்தை தயாரிக்கிறார்கள்.
`மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தி அதிகமாகும் பொது சருமத்தில் கருமை நிறம் உண்டாகிறது. 'டைரோசின்' என்ற அமினோ அமிலத்தின் மூலம்தான் மெலளின் ற்பத்தியாகிறது. கோஜிக் அமிலம், உடலில் டைரோசின் உருவாவதை தடுக்கிறது. இதன்மூலம் மெலனின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டு, சருமத்தில் இயற்கையான நிறம் பாதுகாக்கப்படுகிறது. கோஜிக் அமிலத்தின் பயன்கள் பற்றிய மேலும் சில விஷயங்கள் இங்கே.
கரும்புள்ளிகளை நீக்கும்
முகப்பரு அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகம் பொலிவு இழந்து காணப்படும். கோஜிக் அமிலத்தில் உள்ள மூலக்கூறுகள் கரும்புள்ளிகளை எளிதாக நீக்கக்கடியவை இந்த அமிலத்தை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களி பூச வேண்டும். அது எளிதாக சருமத்தில் ஊடுருவி மெல்வின் உற்பத்திக்கு காரணமான டைரோசினை கட்டுப்படுத்தும் சமத்தில் ஏற்படும் அதிகப்படியான நிறமியின் உற்பத்தியை தடுக்கும். இதன்மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், புள்ளிகள் ஆகியவை எளிதாக நீக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சினையும் குறையும்.
சருமத்தை பிரகாசமாக்கும்
அடிக்கடி வெயிலில் செல்பவர்களுக்கு சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்டு சருமம் கறுத்துப்போகும். அந்த இடங்களில் கோஜிக் அமிலத்தை பூசும்போது அது ஆழமாக ஊடுருவி சருமத்தின் பலவேறு அடுக்குகளில் இருந்து கருமையை நீக்கும். இதன்மூலம் மீண்டும் சருமம் பிரகாசமாக மாறும்.
மெலஸ்மாவுக்கு தீர்வாகும்
கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் முகம் மற்றும் உடலில் கருத்திட்டுகள் உருவாகும். இந்த நிலையை மருத்துவத்தில் 'மெலஸ்மா' என்று அழைக்கிறார்கள். சிலருக்கு பிரசவத்திற்கு பின்னும் இந்த கருந்திட்டுகள் போகாமல் சருமத்தில் நிரந்தரமாக படித்துவிடும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கோஜிக் அமிலத்திற்கு உண்டு.
கிருமித்தொற்றை எதிர்க்கும்
பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் ஏற்படுத்தும் தொற்றால் முகத்தில் கொப்புளங்கள், முகப்பரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோஜிக் அமிலம் இவற்றை குணப்படுத்துவதோடு இவற்றால் சருமத்தில் ஏற்படும் தழும்புகளையும் அதுமட்டுமில்லாமல் அவற்றையும் குணப்படுத்தும். கிரீம்கள் மற்றும் சோப் மற்றும் திரவ வடிவிலும் கோஜிக் அமிலத்தை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும்போது மாய்ஸ்சரைசர்களையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
- அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் விருப்பம்.
- சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.
பண்டிகை நாட்களில் பளிச்சென்ற முகத்தோற்றத்துடன் அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமாக இருக்கும். பண்டிகை நாள் நெருங்கத் தொடங்கியதும்... பலரும் பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பர். அவை பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்படுத்தாதவைகளாக அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதாகவும், இறந்த செல்களை நீக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல் பண்டிகை நாள் நெருங்கும் வேளையில் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.
பண்டிகை காலங்களில் பெண்களை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினையாக முகப்பரு அமையும். அதனை தவிர்க்க வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ சத்துக்கள் உள்ளடங்கியிருக்கும் மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்ய வேண்டும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுவதும் சரும அழகை கெடுத்துவிடும். மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை கருவளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் உள்ளடங்கி இருக்கும் கிரீம்கள் கருவளையங்களை கட்டுப்படுத்தும்.
கருவளையம் போல், கண்கள் வீங்கும் பிரச்சினையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் பண்டிகை கால ஷாப்பிங், உறவினர்களை கவனிக்கும் முன்னேற்பாடுகள்... என போதிய தூக்கம் இல்லாமல் போகலாம். வைட்டமின் சி அல்லது ஆன்டிஆக்சிடென்ட் கொண்ட கிரீம்கள் வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க துணைபுரியும்.
சருமத்திற்கு நிரந்தர அழகை கொடுக்கும் தன்மை இயற்கை மூலிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுக்கு உண்டு. அவற்றை பயன்படுத்தி ஃபேஸ்பேக் தயாரித்து சரும அழகை பிரகாசிக்க செய்யலாம்.
- முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும்.
- வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும்.
முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, 'ஏஜிங்' விரைவுபடுத்தப்படுகிறது. வயதாகும் தோற்றத்தை தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பார்க்கலாம்.

1. விளக்கெண்ணெய், சருமப் பிரச்சினைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்சைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.

3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது பேஸ்ட் முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்.
4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் மாதிரி போட்டு வர, முதுமைத்தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனை தடவி வரலாம்.
5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

6. கடலை மாவு, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.
7. நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும், வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஆலிவ் ஆயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம்.
8. உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

9. கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.
10. தக்காளியில் அதிகளவு ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத்தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்.
- அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம்.
- கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.
என்ன தோழிகளே, பண்டிகை தினங்களும், விடுமுறை நாட்களும் வரிசையாக வருகிறது... கோவில், உறவினர்களின் இல்லங்கள் சென்று சந்தோஷமாய் பொழுதை கழிக்க குதூகலமாய் கிளம்பிவிட்டீர்களா? எளிய மேக்கப்பின் முதல் நிலைகளை இன்றே ஆரம்பித்துவிட்டீர்களா? முதல் வேலையாய் புருவ அமைப்பை சீராக்க நினைக்கிறீர்களா? அதற்கு முன் உங்களுக்கு சில டிப்ஸ்....
முகத்தின் ஒட்டுமொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.
* குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.
* நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.
* நீள்வட்ட (ஓவல்) முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.
* அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.
* புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.
* சதுர முகம் உள்ளவர்கள் புருவங்களை பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக்கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.
* புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.
* கறுப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
* வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக்கொள்ளவும்.
* நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.
* நீள மூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.
* வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.
* உடைக்கு பொருத்தமான நிறத்தில் ஐ ஷெடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது பிரஷ்சால் தடவுங்கள்.
- கிரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன் படுத்துவார்கள்.
- ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.
இயற்கையாகப் பயன்படுத்தும் அனைத்து க்ரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்துவார்கள். அந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்தி தனியாக பவுடர் செய்தால் எப்படி இருக்கும். ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை பழம் – 1
வெள்ளை வினிகர் -2 ஸ்பூன்
ரோஜா பூ இதழ்கள் – 1கப்
புதினா இலைகள் – 1கப்
செய்முறை:
* முதலில் ஓரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு நன்றாகப் பிழியவும்.
* அதில் வரும் சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டையும் வெயிலில் காய வைத்து அரைக்க வேண்டும்.
* அரைத்த பிறகு, அதை ரோஜா இதழ்கள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதில் புதினா இலைகளை அரைத்து ஒரு கப் அளவிற்கு அதில் சேர்க்கவும்.
* அதில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கினால் முகம் மற்றும் உடலுக்குப் பயன்படுத்த பேஸ்ட் தயார்.
* எலுமிச்சை சாறு சிலருக்குச் சேராமல் உடலில் அரிப்புகள் மற்றும் அலர்ஜிகள் வரும். அப்படி வந்தால் எலுமிச்சை சாற்றுக்குப் பதிலாக வெள்ளை வினிகர் கூட சேர்த்துப் பயன்படுத்தலாம்.
* இதை உடல் மற்றும் முகம் முழுவதுமாக அப்ளை செய்து ஒரு அரை மணி நேரம் உலர விடவும். அதற்குப் பின், தண்ணீரில் குளிக்கலாம். இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். பெண்கள் பயன்படுத்தும் போது இதனுடன் மஞ்சள் சேர்த்துக் குளிக்கலாம்.
ரோஜா இதழ்கள் பயன்கள்
ரோஜா இதழ்கள் பல இயற்கையாகத் தயாரிக்கும் க்ரிம்களில் இது கண்டிப்பாக இருக்கும் அதற்குக் காரணம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்கி அழகாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றித் தரும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் மற்றும் வறட்சியான சருமம் ஆக இருந்தால் இது ஈரப்பதம் ஆக மாற்றித் தரும்.
இந்த ரோஜா இதழைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீதபேதி போன்ற பிரச்சினைகளைச் சரி செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும். இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு.
- மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும்.
சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு. பாதங்களில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பாதங்களில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்குவதன் மூலம் அவற்றை சுகாதாரமாகவும், அழகாகவும் பராமரிக்கலாம். இதற்கு உதவும் ஸ்கிரப்களை இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதைப்பற்றிய சில குறிப்புகள்:

எலுமிச்சை ஸ்கிரப்:
2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலக்கவும், இந்த ஸ்கிரப்பை பாதங்களில் பூசி 5 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும். இந்த ஸ்கிரப் வறண்ட சருமத்தை மென்மையாக்கி பாதங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கும்.

எப்சம் சால்ட் ஸ்கிரப்:
2 டீஸ்பூன் எப்சம் உப்பு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 துளிகள் பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதை பாதத்தில் பூசி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு பாதங்களில் மாய்ஸ்சரைசர் பூசவும். பெப்பர்மிண்ட் எண்ணெய் பாத வலியை நீக்கும். தேங்காய் எண்ணெய் பாதங்களை மென்மையாக்கி ஈரப்பதம் அளிக்கும். அனைத்து வகையான சருமத்துக்கும் இது ஏற்றது.

ஆலிவ் எண்ணெய் ஸ்கிரப்:
1 டீஸ்பூன் பழுப்பு சர்க்கரை, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 2 துளிகள் கெமோமில் அல்லது பெப்பர்மிண்ட் எண்ணெய், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை பாதங்களில் பூசி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்பு பாதங்களை கழுவி மாய்ஸ்சரைசர் பூசவும்.

காபி ஸ்கிரப்:
2 டீஸ்பூன் காபி தூள், 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கெட்டியான பசையாக தயார் செய்யவும். அதை பாதம் முழுவதும் பூசி 15 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு பாதங்களை கழுவவும். இந்த ஸ்கிரப், பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.

ஓட்ஸ் ஸ்கிரப்:
2 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, பசை போல தயாரிக்கவும். இதை பாதங்களில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அதை சுத்தம் செய்து விட்டு மாய்ஸ்சரைசர் பூசவும். இந்த ஸ்கிரப், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை முழுமையாக நீக்கும்.
பால் ஸ்கிரப்:
அகலமான டப்பில் 2 கப் பாலுடன் 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரை கலக்கவும். அதில் பாதங்கள் மூழ்குமாறு வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை பாதங்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றும்.
- அனைவரும் பார்லருக்கு சென்று ஹேர் ஸ்மூத்தனிங் செய்வார்கள்.
- வீட்டிலே முடியை மென்மையாக்கலாம்.
சிலருக்கு தலைமுடி வறண்டு ஒவ்வொரு முடியும் உடைந்து காணப்படும். இதனால் முடி கொட்டுதல் பிரச்சினை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைலை கூட பண்ண முடியாத அளவிற்கு வறண்டு காணப்படும். எனவே இதனை தடுக்க அனைவரும் பார்லருக்கு சென்று ஹேர் ஸ்மூத்தனிங் செய்வார்கள்.

அப்படி செய்வதால் நம் முடி மென்மையாக ஆனாலும் இதனை தொடர்ந்து செய்தால் நாளடைவில் முடிக்கு தீங்கு விளைவிக்கும். எனவே முடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வீட்டிலே முடியை மென்மையாக்கலாம். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 1
கான்பிளவர் மாவு- 2 ஸ்பூன்
வாழைப்பழம்- 2 (பச்சை வாழைப்பழத்தை தவிர)
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு அதனை நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
* இப்போது இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ்டினை ஒரு காட்டன் துணியில் சேர்த்து அதன் சாற்றினை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.
* அடுத்து, இந்த உருளைக்கிழங்கு சாற்றுடன் கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதனை அடுப்பில் வைத்து கிரீம் பதத்திற்கு வரும்வரை கலந்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை 15 நிமிடங்கள் வரை ஆறவைக்க வேண்டும். அதன்பிறகு, வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது, இதனுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கிரீமினை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவு தாங்க ஹேர் ஸ்மூத்தனிங் கிரீம் தயார்.
- முகம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் போன்று காட்சியளிக்கும்.
- கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்.
பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று கண்ணிற்கு கீழ் கருவளையம் வருவது தான். கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக அதிகநேரம் தூங்காமல் இருப்பதனால் தான் கருவளையம் வருகிறது.
கருவளையம் வந்துவிட்டால் முகம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் போன்று காட்சியளிக்கும். எனவே, கருவளையத்தை போக்க பல்வேறு இயற்கை குறிப்புகள் உள்ளது.
பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ, மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் நம்முடைய சருமத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. எனவே கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்.

கருவளையம் உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன்பு பாதம் எண்ணெயை சில துளிகள் கையில் எடுத்துக்கொண்டு கருவளையம் உள்ள இடத்தில மசாஜ் செய்ய வேண்டும். கருவளையம் உள்ள இடத்தில் மட்டுமில்லாமல் முகத்தின் எல்லா பகுதிகளிலும் மசாஜ் செய்யலாம். மறுநாள் காலையில் தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவில் ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக கலந்து முகத்தில் கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு, 10 நிமிடம் கழித்து தண்ணீரை கொண்டு கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் பொலிவாக இருப்பதுடன் கருவளையமும் எளிதில் நீங்கிவிடும்.
தினமும் இரவில் தூங்கும் முன்பு, பால் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து கருவளையம் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் விரைவில் நீங்கிவிடும்.
அதுமட்டுமல்லாமல், பால் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து முகத்தில் பேஸ் பேக்காகவும் போடலாம். இம்முறையை நீங்கள் செய்வதன் மூலம் முகம் பொலிவாக இருப்பதுடன் இளமையான தோற்றத்தையும் அளிக்கும்.
- எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப்.
- சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம்.
உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி - வேக்சிங். இதை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வேக்சிங்கில் ஹாட் வேக்ஸ் மற்றும் கோல்டு வேக்ஸ் என இருவகைகள் உள்ளன.
எக்ஸ்ஃபோலியேட்
வேக்சிங் செய்வதற்கு முன் எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப். வேக்சிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு சர்க்கரை, காபி ஸ்கிரப்கள், ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள், சாலிசிலிக் அமிலங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க், ஓட்மீல் ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். இதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் காணப்படும்.
மாய்ஸ்ச்சரைஸர்
நமது உடலில் ஈரப்பதம் குறையும் போது, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, இயற்கை உட்பொருள்கள் நிறைந்திருக்கும் மாய்ஸ்ச்சரைஸரை உபயோகப்படுத்தும்போது நம் உடலில் ஈரப்பதம் மேலோங்கி இருக்கும். மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு நாளும் அலுவலகம் கிளம்பும்போது உங்களது வாட்ச், போன் போன்ற அடிப்படையான விஷயங்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது போல உங்கள் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வெளிப்புற சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், வேக்சிங் செய்து பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.
- குளிர்காலத்தில் எளிதாகவும், விரைவாகவும் வறட்சி அடையும்.
- உதடு வறண்டு தோல் உரிதல் ஏற்படும்.
உதடுகளில் உள்ள தோல், உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலை விட மிகவும் மென்மையானது. மேலும், உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. இதன் காரணமாக உதடுகள் எளிதாகவும், விரைவாகவும் வறட்சி அடையும். எனவே உதடுகளை கவனமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
உதடுகள் வறண்டு போகும்போது நாக்கினால் அவற்றை அடிக்கடி ஈரப்படுத்துவது, உதடுகளில் தோல் உரிவதற்கு முக்கியமான காரணமாகும். இதுமட்டுமில்லாமல் வைட்டமின் 'டி' குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது, உதடுகளில் அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த காற்று படுவது, ரசாயனம் கலந்த உதடு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது, வாய் வழியாக மூச்சு விடுவது, காலநிலை மாற்றம், உடலின் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற காரணங்களாலும் உதடு வறண்டு தோல் உரிதல் ஏற்படும்.
உதடுகளில் தோல் உரிவதைத் தடுக்க, அடிக்கடி அவற்றை நாக்கால் ஈரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரசாயனம் கலக்காத, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உதடு பராமரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உதடுகளில் படியும் இறந்த செல்களை அவ்வப் போது நீக்கினால் உதடுகள் மென்மையாகவும், இயற்கையான நிறத்தோடும் இருக்கும்.
சிறிதளவு சர்க்கரையுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உதடுகளில் பூசவும். பின்பு விரல்களைக் கொண்டு வட்ட இயக்கத்தில் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு அதை சுத்தம் செய்துஉதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசவும். வாரத்தில் ஒருமுறை இவ்வாறு செய்வதால் உதடுகள் மென்மையாக இருக்கும்.
உதடுகளுக்கு வாசனையில்லாத, ஒவ்வாமை ஏற்படுத்தாத லிப் பாம் உபயோகிப்பது சிறந்தது.
கிளிசரின் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்த லிப் பாம்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட லிப் பாம்களை தவிர்ப்பது நல்லது. மென்தால், யூகலிப்டஸ், மெழுகு சேர்த்த லிப் பாம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

ரசாயனங்கள் கலந்த லிப் பாம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், பெட்ரோலியம் ஜெல் ஆகியவற்றை உதடுகளில் பூசி வரலாம்.
உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர், மோர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். லிப் பாம்,
உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்தும். நீண்ட நேரம் உதடுகளை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரங்களில், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை லிப் பாம் பூசுவது நல்லது.






