search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hair Treatment"

    • அனைவரும் பார்லருக்கு சென்று ஹேர் ஸ்மூத்தனிங் செய்வார்கள்.
    • வீட்டிலே முடியை மென்மையாக்கலாம்.

    சிலருக்கு தலைமுடி வறண்டு ஒவ்வொரு முடியும் உடைந்து காணப்படும். இதனால் முடி கொட்டுதல் பிரச்சினை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைலை கூட பண்ண முடியாத அளவிற்கு வறண்டு காணப்படும். எனவே இதனை தடுக்க அனைவரும் பார்லருக்கு சென்று ஹேர் ஸ்மூத்தனிங் செய்வார்கள்.

     அப்படி செய்வதால் நம் முடி மென்மையாக ஆனாலும் இதனை தொடர்ந்து செய்தால் நாளடைவில் முடிக்கு தீங்கு விளைவிக்கும். எனவே முடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வீட்டிலே முடியை மென்மையாக்கலாம். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 1

    கான்பிளவர் மாவு- 2 ஸ்பூன்

    வாழைப்பழம்- 2 (பச்சை வாழைப்பழத்தை தவிர)

    * முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு அதனை நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

    * இப்போது இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ்டினை ஒரு காட்டன் துணியில் சேர்த்து அதன் சாற்றினை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.

    * அடுத்து, இந்த உருளைக்கிழங்கு சாற்றுடன் கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதனை அடுப்பில் வைத்து கிரீம் பதத்திற்கு வரும்வரை கலந்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை 15 நிமிடங்கள் வரை ஆறவைக்க வேண்டும். அதன்பிறகு, வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

    இப்போது, இதனுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கிரீமினை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவு தாங்க ஹேர் ஸ்மூத்தனிங் கிரீம் தயார்.

    ×