search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melanin Pigmentation"

    • பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
    • ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள்.

    சிலருக்கு முகத்தில் உள்ள சருமம் சீரான நிறத்தில் இல்லாமல், ஆங்காங்கே கருப்பு நிற திட்டுக்கள் காணப்படும். பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை `ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள், தூக்க மின்மை, அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும். ஒவ்வாமை, மனஅழுத்தம் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் இந்த பிரச்சினையை எளிதாக தீர்க்க உதவுகிறது

    `கோஜிக் அமிலம்'. பெரும்பாலான அழகு பராமரிப்பு பொருட்களில் கோஜிக் அமிலம் முக்கியமான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு வகையான பூஞ்சைகளில் இருந்து கோஜிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர சோயா, அரிசி போன்ற சில உணவுப்பொருட்களை நொதிக்க வைத்து அதில் இருந்தும் கோஜிக் அமிலத்தை தயாரிக்கிறார்கள்.

    `மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தி அதிகமாகும் பொது சருமத்தில் கருமை நிறம் உண்டாகிறது. 'டைரோசின்' என்ற அமினோ அமிலத்தின் மூலம்தான் மெலளின் ற்பத்தியாகிறது. கோஜிக் அமிலம், உடலில் டைரோசின் உருவாவதை தடுக்கிறது. இதன்மூலம் மெலனின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டு, சருமத்தில் இயற்கையான நிறம் பாதுகாக்கப்படுகிறது. கோஜிக் அமிலத்தின் பயன்கள் பற்றிய மேலும் சில விஷயங்கள் இங்கே.

    கரும்புள்ளிகளை நீக்கும்

    முகப்பரு அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகம் பொலிவு இழந்து காணப்படும். கோஜிக் அமிலத்தில் உள்ள மூலக்கூறுகள் கரும்புள்ளிகளை எளிதாக நீக்கக்கடியவை இந்த அமிலத்தை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களி பூச வேண்டும். அது எளிதாக சருமத்தில் ஊடுருவி மெல்வின் உற்பத்திக்கு காரணமான டைரோசினை கட்டுப்படுத்தும் சமத்தில் ஏற்படும் அதிகப்படியான நிறமியின்  உற்பத்தியை தடுக்கும். இதன்மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், புள்ளிகள் ஆகியவை எளிதாக நீக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சினையும் குறையும்.

    சருமத்தை பிரகாசமாக்கும்

    அடிக்கடி வெயிலில் செல்பவர்களுக்கு சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்டு சருமம் கறுத்துப்போகும். அந்த இடங்களில் கோஜிக் அமிலத்தை பூசும்போது அது ஆழமாக ஊடுருவி சருமத்தின் பலவேறு அடுக்குகளில் இருந்து கருமையை நீக்கும். இதன்மூலம் மீண்டும் சருமம் பிரகாசமாக மாறும்.

    மெலஸ்மாவுக்கு தீர்வாகும்

    கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் முகம் மற்றும் உடலில் கருத்திட்டுகள் உருவாகும். இந்த நிலையை மருத்துவத்தில் 'மெலஸ்மா' என்று அழைக்கிறார்கள். சிலருக்கு பிரசவத்திற்கு பின்னும் இந்த கருந்திட்டுகள் போகாமல் சருமத்தில் நிரந்தரமாக படித்துவிடும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கோஜிக் அமிலத்திற்கு உண்டு.

    கிருமித்தொற்றை எதிர்க்கும்

    பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் ஏற்படுத்தும் தொற்றால் முகத்தில் கொப்புளங்கள், முகப்பரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோஜிக் அமிலம் இவற்றை குணப்படுத்துவதோடு இவற்றால் சருமத்தில் ஏற்படும் தழும்புகளையும் அதுமட்டுமில்லாமல் அவற்றையும் குணப்படுத்தும். கிரீம்கள் மற்றும் சோப் மற்றும் திரவ வடிவிலும் கோஜிக் அமிலத்தை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும்போது மாய்ஸ்சரைசர்களையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    ×