என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - 500 கிராம்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சம் பழ அளவு,
    மிளகாய்தூள் - 50 கிராம்,
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    * கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து கலக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    * மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

    * பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.

    * கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்… கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு பக்கோடா செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 100 கிராம்,
    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் ஏதாவது டிபன் சாப்பிட விருப்புபவர்கள் எளிதாக செய்யக்கூடிய இந்த சேமியா புலாவ் செய்து கொடுக்கலாம். இந்த சேமியா புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 100 கிராம்,
    வெங்காயம், கேரட் - தலா 1,
    பச்சைமிளகாய் - 2,
    பட்டாணி - 50 கிராம்,
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
    வறுத்த முந்திரி, திராட்சை - 30 கிராம்,
    வெண்ணெய்/நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.

    தாளிக்க :

    கடுகு,
    உளுந்து,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    * சேமியாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழையவிடாமல் வேகவைக்கவும். மீதமுள்ள தண்ணீரை வடிகட்டவும்.

    * வெங்காயம், கேரட், கொத்தமல்லி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் நெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சிறிது வதங்கியதும் கேரட், பட்டாணி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

    * காய்கறிகள் வெந்தவுடன் கடைசியாக வெந்த சேமியா, கொத்தமல்லி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறவும்.

    * சூப்பரான சேமியா புலாவ் ரெடி.

    * விருப்பப்பட்டால், எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு காரசாரமான கருணைக்கிழங்கு லெமன் வறுவல் சூப்பரான சைடிஷ். இன்று இந்த வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
    குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
    பூண்டு நசுக்கியது - 1 தேக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    லெமன் சாறு அல்லது புளிச்சாறு - 2 ஸ்பூன்
    எண்ணெய் - 2 தேக்கரண்டி



    செய்முறை :

    * கருணைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக‌ நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக‌ வைக்கவும். பின்னர் நீரை வடித்து விடவும். இப்படி வேக வைத்து எடுத்தால் சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு இருக்காது.

    * ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு, உப்பு, சிறிது, லெமன் அல்லது புளிச்சாறு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.

    * பிரைந்த மசாலாவில் வேக வைத்த‌ கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற‌ விடவும்.

    * தோசைக்கல்லை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இந்த‌ கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கவும்.

    * ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான‌ கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் இனிப்பு, பூரி இவை இரண்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை இரண்டையும் வைத்து இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1/2 கிலோ
    சீனி - 3 கப்
    முந்திரி - 25
    ஏலக்காய் பொடி - 3 சிட்டிகை
    கேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி
    சோடா உப்பு - 1 சிட்டிகை
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 2  கப்



    செய்முறை :

    * மைதாமாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    * முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் கேசரி பவுடரை கலந்துக் கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் சலித்த மைதா மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் கலர் கலந்து வைத்திருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். பிசையும் போது நன்கு மிருதுவாகும் வரை பிசைந்துக் கொள்ளவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.

    * பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாதியாக தேய்க்கவும். அதை அப்படியே சுருட்டி கத்தியால் மூன்று பாகங்களாக நறுக்கவும்.

    * நறுக்கிய துண்டுகளை எடுத்து செங்குத்தாக வைத்து அழுத்தி சப்பாத்தி கட்டையில் வைத்து அதிகம் அழுத்தி தேய்க்காமல் வட்டமாக தேய்த்து சிறிய பூரிகளாக செய்து வைத்துக் கொள்ளவும்..

    * ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றினால் பாகு வாசனையாக இருக்கும். பாகுடன் பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு இருப்புறமும் வேகவிட்டு சிவக்க விடாமல் பொரித்து எடுக்கவும்.

    * பொரித்த எடுத்த பூரிகளை செய்து வைத்திருக்கும் ஜீராவில் 3 நிமிடம் போட்டு வைக்கவும்.

    * பூரியில் ஜீரா நன்கு ஊறியதும் 10 நிமிடம் கழித்து, தட்டில் எடுத்து வைத்து ஒவ்வொரு பூரியின் மேலேயும் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும்.

    * சுவையான ஜீரா பூரி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 250 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    கத்திரிக்காய் - 100 கிராம்
    தக்காளி - 3,
    மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன்,
    தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
    இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன், (அனைத்தும் சேர்த்து அரைத்து)
    நெய் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, புதினா, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

    * கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி... மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும் (அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்).

    * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வறுத்த வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து மேலும் வதக்கவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் பாதி கத்தரிக்காய் மசாலாவை எடுத்து விட்டு அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தில் பாதியை சேர்த்து நன்றாக கிளறி, அதன் மேல் எடுத்து வைத்துள்ள கத்தரிக்காய் மசாலாவை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, அடுப்பை சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.

    * சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, இட்லி, சாதத்திற்கு தொட்டு கொள்ள வேர்க்கடலை குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி சாறு - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு


     
    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வேர்க்கடலையை, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சாற்றை விட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.

    * அடுத்து அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி!!!

    * சாதம், சப்பாத்தி, பாவ் பாஜி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று ராஜ்மாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று கேட்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 200 கிராம்,
    பாசுமதி அரிசி - 100 கிராம்,
    வெங்காயம் - ஒன்று),
    தக்காளி - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி,
    நெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    பட்டை, சோம்பு, ஏலக்காய்,



    செய்முறை :


    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை வேக விட்டு இறக்கவும்.

    * பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் உதிரியாக வேகவைத்து எடுக்கவும்.

    * வாணலியில் நெய் விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அனைத்து ஒன்றாக சேர்ந்து வதங்கி வரும் போது உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    *  சூப்பரான ராஜ்மா பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைத்தண்டு நீர்ச்சத்து நிறைந்தது. இன்று வாழைத்தண்டை வைத்து எளிமையான முறையில் சூப்பரான, சுவையான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பாஸ்மதி அரிசி - ஒரு கப்
    வாழைத்தண்டு - பெரிய துண்டு
    மோர் - ஒரு கப் + சிறிதளவு (வாழைத்தண்டை ஊற வைக்க)
    தண்ணீர் - ஒரு கப்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பிரிஞ்சி இலை - ஒன்று
    பட்டை - ஒரு சிறிய துண்டு
    கிராம்பு, ஏலக்காய் - தலா 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
    நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    புதினா - சிறிதளவு



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    * வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து, மோரை வடித்துவிட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    * அடுப்பில் குக்கரை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    * ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (மோரும் வாழைத்தண்டும் சேர்ந்து அரிசியில் இரண்டு மடங்காக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்).

    * கொதி வந்தவுடன் ஊறிய பாஸ்மதி அரிசியை கொதிக்கும் கலவையில் சேர்த்து, அரிசி உடையாமல் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப்போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

    * பிறகு அடுப்பை அணைத்து, உடனே இறக்கி, பிரஷர் நீங்கியதும் சூடாக தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    * வாழைத்தண்டு புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ், சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸை ஸ்டஃப்டு வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்,
    மைதா மாவு - 100 கிராம்,
    கேரட் துருவல் - 100 கிராம்,
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    நறுக்கிய வெங்காயம் - 2,
    கோஸ் துருவல் - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - 250 மில்லி,
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும்.

    * நூடுல்ஸை குழையாமல் லேசாக வேகவிட்டு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்து வதக்கவும்.



    * காய்கள் சற்று வெந்ததும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆற விடவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    * பிசைந்த மாவை சிறு அப்பள வடிவில் இட்டுக் கொள்ளவும்.

    * வதக்கி வைத்துள்ள மசாலாவை சிறிது எடுத்து அப்பள வடிவில் இட்ட மாவின் நடுவில் வைத்து, சமோசா வடிவில் நன்கு மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா ரெடி.

    குறிப்பு: நூடுல்ஸை அதிகமாக வேகவிடக் கூடாது. நான்கு அல்லது ஐந்து சமோசா தயாரித்து ஒரே தடவையில் பொரித்து எடுக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இதுவரை பெப்பர் சிக்கன், பெப்பர் மட்டன் தான் சுவைத்திருப்பீர்கள். உருளைக்கிழங்கைக் கொண்டு, பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3 (பெரியது)
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    மிளகு தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கை தனியாக ஒரு தட்டில் வைத்து, தோலுரித்துக் கொள்ளவும். பின் கையால் அதனை உதிர்த்து விடவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

    * அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து 20 நிமிடம் பொன்னிறமாகும் வரை கிளறவும்.

    * கடைசியாக மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி என்றாலே சலித்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு காலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலை சூப்பரான ஸ்நாக்ஸ் பக்கோடா செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 6
    பெரிய வெங்காயம் - 100 கிராம்
    சோம்பு - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
    பூண்டு விழுது - 50 கிராம்
    அரிசி மாவு - 100 கிராம்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * சோம்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், பொடித்த சோம்பு, உப்பு, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் தயார் செய்துகொள்ளவும்.

    * வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதில் சேர்க்கவும்.

    * இட்லியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லித் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போடவும். பிறகு, மாவைக் கிள்ளியெடுத்து எண்ணெயில் போட்டு மொறுமொறுவென வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    * சூப்பரான இட்லி பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×