என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    புதினா, கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. புதினா, கொத்தமல்லியை வைத்து எளிய முறையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - தேவைக்கு
    பட்டை - இரண்டு துண்டு
    லவங்கம் - இரண்டு
    ஏலக்காய் - இரண்டு
    வெங்காயம் - இரண்டு
    பச்சைமிளகாய் - முன்று
    தக்காளி - ஒன்று
    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
    புதினா மற்றும் கொத்தமல்லி சாறு - ஒன்றை கப் (தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்)
    தேங்காய் பால் - ஒன்றை கப்
    உப்பு தேவையான அளவு
    அரிசி - ஒன்றை கப்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

    * இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சாறு ஒன்றை கப், தேங்காய் பால் ஒன்றை கப், உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும்.

    * நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். (புதினா கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் பால் உள்ளதால் தண்ணீர் தேவையில்லை)

    * எல்லாவற்றையும் நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி துவி பத்திரத்தை மூடி வைக்கவும். பதினைத்து நிமிடம் கழித்து வெந்ததும் கிளறி இறக்கி பரிமாறவும்.

    * சுவையான புதினா சாதம் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நண்டு சாப்பிட தெரியாது. நண்டை லாலிபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நண்டை வைத்து லாலிபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு கால் - 10 (வேக வைத்தது)
    வேகவைத்த நண்டின் சதைப்பகுதி - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 150 கிராம்
    பிரட் துண்டு - 2
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பச்சைமிளகாய் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
    முட்டை - ஒன்று
    பிரட் தூள் - ஒரு கப்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * பிரட்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்து பிசைந்து கொள்ளவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காய் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    *  அடுத்து அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த நண்டின் சதைப்பகுதி சேர்த்து வதக்கவும்.



    * அடுத்து அதில் மிளகாய்த்தூள், உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும்.

    * உருளைக்கிழங்கு கலவையுடன் ஊறவைத்த பிரட்டை சேர்த்து, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி உப்பு, காரம் சரிபார்த்து அடுப்பை விட்டு இறக்கவும்.

    * ஆறிய நண்டுக் கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.

    * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.

    * உருட்டிய உருண்டைகளை முட்டையில் முக்கி எடுத்து, பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.

    * இதை நண்டுக் காலில் செருகி லாலிபாப் வடிவில் வருமாறு பிடித்து வைக்கவும். இதைபோல் எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயைச் சூடானதும் அதில் பிடித்துவைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

    * நண்டு லாலிபாப்பை ஸ்வீட் சில்லி சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார், ரசம், சாதத்துடன் சாப்பிட சூப்பரான சைடிஷ் இந்த வாழைக்காய் பொடிமாஸ். இன்று இந்த வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முற்றிய வாழைக்காய் - 3.

    வறுத்து அரைக்க :

    துவரம் பருப்பு - 1/2 கப்,
    பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 10.

    தாளிக்க :

    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 பிடி,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.



    செய்முறை :

    * வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * வாழைக்காயை இரண்டாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் வேகவிடவும் அல்லது தண்ணீரில் கொதிக்க விட்டு வேக விடவும்.

    * வாழைக்காய் குழைய வேக விட கூடாது. குழைந்தால் துருவ முடியாது. வெந்ததும் தோலை உரித்து துருவி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் துருவிய வாழைக்காய், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    * கடைசியாக அரைத்த மசாலா தூளை சேர்த்து நன்றாக கலந்து இறக்கி சாம்பார், ரசம், சாதத்துடன் பரிமாறவும்.

    * சூப்பரான சைடிஷ் வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் பக்கோடா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று பிரட் வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரட் துண்டுகள் - 10,
    வெங்காயம் - 2,
    இஞ்சித் - சிறிய துண்டு
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    அரிசி மாவு -  4 டேபிள்ஸ்பூன்,
    பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,  
    முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்),
    வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * பிரட்டை பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொடித்த பிரட், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

    * மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா ரெடி.

    * தக்காளி சாஸிடன் பரிமாறவும்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் :

    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    மல்லி (தனியா) - 3 டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    சின்னவெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். கடைசியாக இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி.



    தேவையான பொருட்கள் :

    நண்டு - ஒரு கிலோ
    தக்காளி - 3
    கறிவேப்பிலை - சிறிது
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    சோம்பு - கால் டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    புளிக்கரைசல் - கால் கப்
    தண்ணீர் - 4 கப்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    * அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  சேர்த்துத் தாளிக்கவும்.

    * அடுத்து அதில் தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    * அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

    * பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

    * உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.  

    * சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்வீட் கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ஸ்வீட் கார்னை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப்,
    உளுந்து - ஒரு டீஸ்பூன்,
    பச்சரிசி - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 10,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லை - அனைத்தும் சேர்ந்து ஒரு கப் (நறுக்கியது),  
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :  

    * சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை மூழ்குமளவு நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    * ஊற வைத்த உளுந்து, பச்சரியுடன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைக்கவும்.

    * அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான ஸ்வீட் கார்ன் வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மிஸ்ஸி ரொட்டி ராஜஸ்தானில் மிகவும் பிரபலம். இந்த ரொட்டியை செய்வது மிகவும் சுலபமானது. இந்த ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்
    பாசிப்பருப்பு - ஒரு கப்
    உலர்ந்த கஸ்தூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * பாசிப்பருப்பை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

    * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், உலர்ந்த கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்துக்கு பிசைந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    * பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய ரொட்டிகளாக தேய்த்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும், உருட்டிய ரொட்டிகளைச் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

    * சூப்பரான ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சிக்கன், மட்டனை ஃபிரை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மட்டனை வைத்து மட்டன் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத மட்டன் - 250 கிராம்
    கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால்  டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்  (அல்லது) வினிகர் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு



    செய்முறை :

    * மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்).

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்).

    * ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும் வரை பொரித்தால் போதும்.

    * சூப்பரான மட்டன் 65 ரெடி.  

    குறிப்பு :

    நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும்.

    அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ராஜஸ்தானில் இந்த தால் டோக்ளி மிகவும் பிரபலம். நம்ம ஊர் மினி சாம்பார் இட்லி போல் தான் இந்த தால் டோக்ளி. இதை மாலையில் டிபன் போல் செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    மேல் மாவிற்கு...

    கோதுமை மாவு - 1/2 கப்,
    கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    நெய் - 1 டீஸ்பூன்,
    ஓமம் - 1/2 டீஸ்பூன் சிறிது கசக்கியது,
    சீரகம் - 3/4 டீஸ்பூன்

    தால் ...

    துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு ஏதாவது ஒன்று.
    துவரம் பருப்பு - 1/2 கப்,
    தண்ணீர் - 2 கப்.



    தாளிக்க...

    நெய் - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - சிறிது,
    பச்சை மிளகாய் - 1,
    காய்ந்த மிளகாய் - 1,
    கறிவேப்பிலை - 8,
    தக்காளி - 1,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    தனியாத் தூள் - 1 1/2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு.



    செய்முறை :

    * கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மாவிற்கு கொடுத்த அனைத்தையும் தேவையான தண்ணீர் விட்டு மெதுவாக ரொட்டி மாவாக பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.

    * பருப்பை நன்றாக கழுவி, தண்ணீர் 2 கப் சேர்த்து ஊற வைத்து, குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து இறக்கவும். விசில் போனவுடன் கடைந்து கொள்ளவும்.

    * ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சீரகம், பெருங்காயம், ப.மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.



    * அடுத்து அதில் உப்பு, வெந்தப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * பிசைந்து மூடி வைத்துள்ள டோக்ளி மாவை எடுத்து கையில் 1 டீஸ்பூன் நெய் தடவிக் கொண்டு, ஒரு பெரிய (Roti) ரொட்டியாக தேய்த்து விருப்பமான வடிவத்தில் சதுரமாகவோ, வட்டமாகவோ 1/2 இஞ்ச் நீளத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 2 கப் ஊற்றி நன்கு கொதிக்கும் போது அதில் நெய் 1 டீஸ்பூன் விட்டு, இப்போது டோக்ளியை ஒவ்வொன்றாக அதில் போட்டு கொதிக்க விடவும். வெந்தவுடன் அனைத்தும் மேலே எழும்பி வரும்.

    * வெந்தவற்றை தயாராக வைத்துள்ள பருப்பு தாலில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை, நெய் 1 டீஸ்பூன் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    குறிப்பு: நம் மினி இட்லி சாம்பார் போல் தால் டோக்ளி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்தால் சூப் செய்து சாப்பிடுங்கள். அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்தா - 1/2 கப்
    வெஜிடேபிள் - 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்)
    கொண்டைக்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
    உலர்ந்த கற்பூரவள்ளி இலை/ஓரிகானோ - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 1/4 கப்
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - தேவைக்கு

    தாளிப்பதற்கு...

    வெங்காயம் - 1/2
    பூண்டு - 3 பற்கள்
    ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    * கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.

    * கேரட் மற்றும் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், பாஸ்தா மற்றும் உப்பு சேர்த்து, பாஸ்தா வெந்ததும், இறக்கி நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.



    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் கொண்டைக்கடலை, கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

    * பிறகு அதில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் ஓரிகானோ சேர்த்து, கலவை நன்கு ஒன்று சேர வதக்க வேண்டும்.

    * பின் அதில் சூப்பிற்கு வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கும் போது பாஸ்தாவை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

    * அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையானது சூப் பதத்திற்கு வந்ததும் இறக்கி, மேலே மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.

    * சூப்பரான பாஸ்தா வெஜிடேபிள் சூப் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். காய்கறிகளுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருள்கள் :

    அவரைக்காய் - 150 கிராம்
    முட்டை - 1
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    மிளகு தூள் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    * அவரைக்காய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
     
    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

    * அவரைக்காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

    * முட்டை வெந்து பூப்போல உதிரியாக வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

    * சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த ஆலு மட்டர் சப்ஜி. இன்று இந்த ஆலு மட்டர் சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2
    தண்ணீர் - தேவையான அளவு
    பச்சை பட்டாணி - 1 கப்
    உருளைக்கிழங்கு - 300 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி
    கரம் மசாலா - ½ தேக்கரண்டி
    மஞ்சள் - ஒரு சிட்டிகை
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி



    செயல்முறை :

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

    *  இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும்.



    * தக்காளி நன்றாக குழைய வேகும் வரை வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.

    * இப்போது இதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    * அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கறியை நன்கு கொதிக்க விடவும்.

    * உருளைக்கிழங்குகளை லேசாக மசித்து விடவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * இப்போது, உங்களுடைய ஆலுமட்டர் சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×