என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஃபிங்கர் சிக்கனை செய்து கொடுக்கலாம். புலாவ், சாம்பார் சாதத்திற்கு ஃபிங்கர் சிக்கன் சூப்பரான சைடிஷ் ஆகும்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
    முட்டை - 1
    தயிர்  - 1 கப்
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மைதா - 1 கப்
    பிரட் தூள் - 1 கப்
    உப்பு - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
    கேசரி கலர் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து 1 இஞ்ச் நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

    * பின்னர் அதில் தயிர், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

    * அடுத்து அதில் சிக்கனை அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

    * ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.



    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

    * பிறகு வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும்.

    * வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

    * இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன்  ரெடி!!!

    * இந்த  ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேச்சிலர்கள் செய்ய மிகவும் எளிமையானது இந்த தேங்காய் பால் சாதம். எளிய முறையில் இந்த தேங்காய் பால் சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    பெரிய வெங்காயம் - 3
    வெள்ளை பூண்டு - 20 பல்
    பச்சை மிளகாய் - 7
    புதினா - 1 கட்டு
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - தேவைகேற்ப
    தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப
    உப்பு - தேவைகேற்ப
    தேங்காய் பால்  - 1 3/4 பங்கு

    தாளிக்க  :

     
    பட்டை,
    லவங்கம்,
    கிராம்பு,
    ஏலக்காய்,
    அன்னாசி பூ,
    கல் பாசி


     
    செய்முறை  :

    * புதினா, கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
     
    * ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
     
    * கழுவி 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்..

    * பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்.
     
    * குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சிறிதளவு நெய் ஊற்றி கிளறி பரிமாறவும்.

    * சூடான சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.
     
    * இதற்கு சிக்கன் கிரேவி நல்லதொரு சைட்டிஷ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பென்னே பாஸ்தா - 200 கிராம்,
    குடைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ் - 1/4 கப்,
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    காலிஃப்ளவர் - 1/4 கப்
    கொத்தமல்லி - 1/2 கட்டு
    புதினா - 1/2 கட்டு
    தயிர் - 2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

    தாளிக்க…

    எண்ணெய் - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    சோம்பு - 2 டீஸ்பூன்,
    பட்டை - 2,
    கிராம்பு - 2,
    பிரிஞ்சி இலை - 2.



    செய்முறை :

    * குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பென்னே பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் பரத்தவும்.

    * கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    * இப்போது மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    * காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

    * மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும்.

    * நன்றாக கலந்து மசாலா பாஸ்தாவில் நன்றாக கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

    * சூப்பரான பாஸ்தா பிரியாணி ரெடி.

    * சிப்ஸ், பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அந்த தோசையில் காய்கறிகள் சீஸ் போட்டு பீட்ஸா போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - ஒரு கப்
    பெரிய வெங்காயம் - 1
    குடமிளகாய் - 1
    தக்காளி1 - 1
    காளான் - 3
    தக்காளி சாஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்
    சீஸ்(துருவியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை :

    * வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சீஸை துருவிக்கொள்ளவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

    * அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை சற்று கனமாக ஊற்றவும்.

    * தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸை ஊற்றி பரப்பி விடவும்.

    * அடுத்து அதில் மேல் வதக்கிய காய்கறிகளை பரப்பி விடவும்.

    * கடைசியாக துருவிய சீஸையும் மேலே தூவி பரப்பிவிட்டு வேகவிடவும்.

    * சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக டிபன் செய்து கொடுக்க நினைத்தால் பாஜ்ரா பூரி செய்து கொடுக்கலாம். இந்த பூரி காரசாரமாக சாப்பிட சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 2 கப்,
    வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
    சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
    மாங்காய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    வெந்தயக்கீரை - 2 கட்டு
    பொடித்த சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - சிறிது,
    இஞ்சி, பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
    உப்பு, தண்ணீர், பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கு,
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியாத் தூள் - 1/2 டீஸ்பூன்.



    செய்முறை :

    * வெந்தயக்கீரையை காம்பு இல்லாமல் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெள்ளை எள், சீரகத் தூள், மாங்காய்த் தூள், வெந்தயக்கீரை, பொடித்த சர்க்கரை, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து, அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்.

    * பின் மாவை எடுத்து உள்ளங்கையில் எண்ணெய் பூசிக் கொண்டு நன்கு உருட்டவும்.



    * பிசைந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை கொண்டு பூரி மாதிரி கையில் மெல்லியதாக பூரிகள் தட்டவும். இந்த பூரிகள் கட்டையால் உருட்டக்கூடாது.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொறு பூரிகளாக போட்டு பொரிக்கவும். கரண்டி கொண்டு அழுத்தியும் அதன் மேல் எண்ணெயை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றியும் பொரித்து எடுக்கவும். திருப்பிப் போட்டு பொரித்து எடுத்து வடித்து பரிமாறவும்.

    * சூப்பரான பாஜ்ரா பூரி ரெடி.

    * இந்த பூரிக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இந்த லஸ்ஸி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மலாய் லஸ்ஸியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 2 பெரிய கப்,
    சர்க்கரை - 8 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    பால் ஆடை - தேவைக்கு,
    பால் கிரீமுடன் சேர்ந்தது (சுண்டக் காய்ச்சியது) - 1/2 கப்,
    ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
    குங்குமப்பூ - சிறிது,
    ஏலக்காய் - 2,

    அலங்கரிக்க...

    தனியாக சிறிது பால் ஆடை, கிரீம்.



    செய்முறை :

    * கெட்டித் தயிரை, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து மத்தால் பானையில் நன்றாக கடைய வேண்டும். அதை கடையும்போது நுரைத்து வரும். நடு நடுவில் கெட்டி கிரீமுடன் பால் சேர்த்து கடைய வேண்டும்.

    * நன்றாக நுரைத்து வரும் போது இதில் ஐஸ்கட்டிகள், குங்குமப்பூவையும், ஏலக்காய் தட்டிப் போட்டு கடைந்து பானையில் பொங்க, பொங்க நுரையுடன் ஊற்றி அதன் மேல் சிறிது பால் ஆடையை வைத்து பரிமாறுங்கள்.

    * இதன் ருசியும், மணமும் ஒரு தனி ஸ்பெஷல். இதில் பாதாம், பிஸ்தா சீவல் சேர்த்து அலங்கரித்தும் கொடுக்கலாம்.

    குறிப்பு: பானை இல்லாவிட்டால் மிக்சியில் விட்டு விட்டு அடித்தால் நுரைத்து வரும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு ஆலு பூரி செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்,
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    உருளைக்கிழங்கு - 2
    ரவை - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    கொத்தமல்லி தழை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையுடன் கேழ்வரகு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, எண்ணெய் 1 ஸ்பூன், அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    * பிசைந்த மாவை பூரியாக உருட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள பூரி மாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சத்தான மாலைநேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கை வைத்து செய்யும் இந்த பட்டூரா சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ஆலு பட்டூராவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்,
    உருளைக்கிழங்கு - 250 கிராம்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா அல்லது கோதுமை மாவு மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).

    * பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும்.

    * ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.

    * ஆலு பட்டூரா ரெடி.

    குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறை நாட்களில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க ஆசைப்பட்டால், இத்தாலியன் ரெசிபியான சிக்கன் - சீஸ் பாஸ்தாவை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 1 கப்
    பாஸ்தா - 250 கிராம்
    பூண்டு - 8 பற்கள்
    சீஸ் - 1/4 கப்
    கிரீம் - 1/2 கப்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    பால் - 3-4 டேபிள் ஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

    * பூண்டை நன்றாக தட்டிக்கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், பூண்டு, சிக்கன் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து வாணலியை மூடி 15 நிமிடம் சிக்கன் துண்டுகளை வேக வைக்க வேண்டும்.

    * ஒரு பௌலில் சோள மாவு, மற்றும் சிறிது பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

    * சிக்கன் வெந்ததும், அதில் கிரீம், சோள மாவு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, கலவை நன்கு கெட்டியாக வரும் வரை கைவிடாமல் கிளறி விட வேண்டும்

    * கலவையானது கெட்டியானதும், அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.

    *  பின் அதில் சீஸ் போட்டு, தீயை குறைவில் வைத்து, சீஸை உருக வைக்க வேண்டும்.

    * அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் பாஸ்தாவில் ஒட்டுமாறு பிரட்டவும்.

    * கடைசியாக மிளகு தூள், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    * சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு கத்தரிக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய கத்திரிக்காய் - அரைக் கிலோ
    எண்ணெய் - தேவைக்கு.

    மசாலாவிற்கு :

    முழு பூண்டு - 1
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    * கத்திரிக்காயை நன்கு கழுவு துடைத்து வட்ட துண்டு வடிவில் நறுக்கி வைக்கவும்.

    * பூண்டை நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சோள மாவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    * நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஒரு அகலமான நான்ஸ்டிக் பேனில் அல்லது தோசை கல்லில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கவனமாக மசால் தடவிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    * ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேகவிடவும். இரு புறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும். உடனே பரிமாறினால் கிரிஸ்பாக இருக்கும். பொரித்து வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.

    * சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு சூப்பரான எளிய முறையில் செய்யக்கூடிய சேமியா கிச்சடி செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 2 கப்
    பெரிய வெங்காயம் - 2
    கேரட் - 1
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - சிறிய துண்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    உளுந்து - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

    * சேமியாவை கடாயில் போட்டு 1 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.

    *  அனைத்தும் நன்றாக வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும்.

    * அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், கொத்தமல்லித்தழை, நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

    * சேமியா கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4,
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    ப.மிளகாய் - 1
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு.


    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின், ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்..

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் 5 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×