என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்பட்டால் தக்காளி இடியாப்பம் செய்யலாம். இதை செய்வது மிகவும் எளிமையானது. இந்த இடியாப்பத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சேமியா/ ரெடிமேட் இடியாப்பம் - 1 பாக்கெட்
    வெங்காயம் - 2  
    தக்காளி - 3
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாம்பார் பொடி/மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடானதும், அதில் ரெடிமேட் இடியாப்பத்தைப் போட்டு, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

    * தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் இடியாப்பத்தை போட்டு நன்கு பிரட்டவும்.

    * கடைசியாக அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளி இடியாப்பம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிம்பிளாக எளிய முறையில் ஏதேனும் வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், குடைமிளகாய் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இப்போது குடைமிளகாய் புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - 1/2 கப்
    வெங்காயம் - 1
    குடைமிளகாய் - 1/4 கப்
    ஏலக்காய் - 1
    கிராம்பு - 2
    பட்டை - 1/4 இன்ச்
    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைப்பதற்கு...

    பூண்டு - 3 பற்கள்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    முந்திரி - 5



    செய்முறை:

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    * மிக்ஸியில் பூண்டு, மிளகு, முந்தியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். சாதத்தை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.



    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

    * பின் அதில் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும்.

    * அடுத்து உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான ஈஸியான குடைமிளகாய் புலாவ் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 300 கிராம்
    உருளைக்கிழங்கு - 250 கிராம்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பிரட் துண்டு - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிது
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    முட்டை - 2
    பிரட் தூள் - 1 கப்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * மட்டன் கீமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

    * பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் மட்டன் கீமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கீமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக அனைத்து ஒன்று சேர நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, பின் தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கீமாவை வைத்து மூடி, முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    * சூப்பரான உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை காலத்தில் மாங்காய் அதிகளவு கிடைக்கும். இன்று மாங்காய் வைத்து அனைவருக்கும் விருப்பமான சூப்பரான பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பு மாங்காய் - 1,
    வெல்லம் - 150 கிராம்,
    உப்பு - சிறிதளவு,
    மஞ்சள்தூள்  - சிறிதளவு,

    தாளிக்க :

    எண்ணெய், கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்-2 போன்றவை.



    செய்முறை :

    * மாங்காளை பொடியாக நறுக்கி கொள்ளவும், அல்லது துருவிக் கொள்ளவும்

    * வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகளை போட்டு நன்கு வதக்கி சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்.

    * பின் நறுக்கிய வெல்லம், சிறிது உப்பு போட்டு கிளறி கட்டியாகும் வரை அடுப்பில் வைத்து பின் இறக்கி விடவும்.

    * மாங்காய் பச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தமிழ் புத்தாண்டு தினமான நாளை (14.4.17) இனிப்பான, இனிய நாளாக தொடங்க பாசிப்பருப்பு பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள்:

    பாசி பருப்பு - 1 கப்
    பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்
    வெல்லம் - 1 கப் (துருவியது)
    நெய் - 1/4 கப்
    முந்திரி - 10
    உலந்த திராட்சை - 10
    ஏலக்காய் - 3 (நசுக்கியது)
    தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்



    செய்முறை:

    * பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்). வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும்.

    * நன்றாக வெந்தபின் பச்சரிசி மாவு தண்ணீர் விட்டு கலக்கி பருப்பு கலவையில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.

    * வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.

    * வெல்லம் கரைந்ததும் எடுத்து வேக வைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும்.

    * பருப்புடன் ஏலக்காய், வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.

    * மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து பருப்பு கலவையில் கொட்டவும்.

    * தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறலாம்.

    * சுவையான சித்திரை ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரிக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு சப்ஜி. இன்று இந்த ஆலூ சப்ஜியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி மற்றும் சீரகம் ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    * உருளைக்கிழங்கை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம்.

    * குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு தாளித்த பின் அதில் அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    * பிறகு, அதில் ப.மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், கஸ்தூரி மேத்தி பொடி போட்டு சிறிது வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கும் போட்டு வதக்கவும்.
    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஐந்து விசில் போட்டு வேக விடவும்.

    * குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி மற்றும் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் வடகறி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. இன்று இந்த வடகறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப் பருப்பு - 1 கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய - 2
    உப்பு - தேவையான அளவு

    கிரேவிக்கு...

    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    கொத்தமல்லி - சிறிது
    தேங்காய் பால் - 1 கப்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1
    கிராம்பு - 2
    பிரியாணி இலை - 1
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆறியதும் துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி வதக்கவும்.

    * அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

    * நன்றாக கொதிக்கும் போது தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    * திக்கான பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள வடைகளை போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

    * சூப்பரான சைடு டிஷ் வடைகறி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகளை வைத்து செய்யும் இந்த ஹைதராபாத் வெஜ் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்
    தயிர் - முக்கால் கப்
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை பழம் சாறு - அரை டேபிள்ஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    கேரட், உருளைகிழங்கு, பட்டாணி கலவை - அரை கப்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க :

    பச்சை மிளகாய் - மூன்று
    சின்ன வெங்காயம் - ஐந்து
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    புதினா - ஒரு கைப்பிடி
    முந்திரி - நான்கு
    பட்டை - ஒன்று
    லவங்கம் - ஒன்று
    ஏலக்காய் - ஒன்று



    செய்முறை :

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக் கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து கேரட், உருளைகிழங்கு, பட்டாணி போட்டு வதக்கவும்.

    * காய்கறிகள் சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.

    * அடுத்து அதில் பாசுமதி அரிசி, தயிர், உப்பு, தண்ணீர் ஒன்றரை கப் ஊற்றி கொதி வந்ததும மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    * சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த இடியாப்ப பிரியாணியை செய்து சாப்பிடலாம். இப்போது இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    உதிர்த்த இடியாப்பம் - 2 கப் (400 கிராம்)
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி

    தாளிக்க :

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    நெய் - 2 மேஜைக்கரண்டி
    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    பெரிய வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    * வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.

    * அடுத்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்.

    * தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  

    * இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

    * மசாலா வாடை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    * சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி.

    * ரெடிமேடாக கிடைக்கும் இடியாப்பத்தை பயன்படுத்தி இதை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிவி ஐஸ்க்ரீம் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த கிவி ஐஸ்க்ரீமை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிவி பழம் (நறுக்கியது)  ஒரு கப்,
    பைனாப்பிள் ஜூஸ் -  2 கப்,
    சர்க்கரை  அரை கப்.



    செய்முறை:

    * அரை கப் கிவி பழத்தை நன்றாக கூழாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

    * கலக்கிய ஜூஸை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழ்பதம் வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

    * கூழ்பதம் வந்தவுடன் இறக்கி ஆற விடவும்.

    * ஆறியதும் மீதமுள்ள கிவி பழத்துண்டுகளை சேர்த்து, நன்றாக கலந்து சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் (ஃப்ரீசரில்) வைக்கவும்.

    * குளுகுளு கிவி ஐஸ்க்ரீம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் காபி, டீயுடன் சூடாக ஏதாவது சாப்பிட விரும்பினால் முட்டை போண்டா செய்து சாப்பிடலாம். இன்று இந்த முட்டை போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 6 (வேக வைத்தது)
    கடலை மாவு - 1 கப்
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை:

    * முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.

    * ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    * அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும்.

    * இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ரா கிச்சடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரவா கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 250 கிராம்,
    பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப்,
    கேரட் - ஒன்று,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - ஒன்று,  
    வெங்காயம் - 1
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    வறுத்த முந்திரிப்பருப்பு - 10,
    நெய் - 50 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    * வெங்காயம், கேரட், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் பட்டாணி, மஞ்சள் தூள், கேரட்டை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.

    *  காய்கள் வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர்(ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில்) ஊற்றி கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கலக்கவும்.

    * தேவையான உப்பு சேர்த்து, அனைத்து நன்றாக வெந்ததும் கிளறி இறக்கவும்.

    * மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.

    * சூப்பரான மாலை நேர டிபன் ரவா கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×