என் மலர்

  நீங்கள் தேடியது "Eggplant Biryani"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு வகையான வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  பாசுமதி அரிசி - ஒரு கப்
  பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
  சின்ன வெங்காயம் - ஒரு கப்
  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  புளித்தண்ணீர் - 2 கப்
  கடுகு - ஒரு டீஸ்பூன்,
  தக்காளிச் சாறு - கால் கப்
  கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
  நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

  அரைக்க :

  காய்ந்த மிளகாய் - 5
  தனியா - ஒரு டீஸ்பூன்
  வெந்தயம் - அரை டீஸ்பூன்
  கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
  சீரகம் - அரை டீஸ்பூன்  செய்முறை :

  சின்னவெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

  பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

  வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

  வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

  குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

  அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

  அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

  புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

  சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  ×