என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    அரிசி மாவில் செய்யும் முறுக்கை விட பயத்தம் மாவில் செய்யும் சூப்பராகவும், மிருதுவாகவும் இருக்கும். இன்று பயத்தம் பருப்பு முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    பயத்தம் பருப்பு - 1/2 கப்
    வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை :

    பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, நிழலில் அரை மணி நேரம் காய வைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். அல்லது கடைகளில் கிடைக்கும் அரிசி மாவையும் உபயோகிக்கலாம்.

    பயத்தம் பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.  

    ஒரு பாத்திரத்தில் ஆறிய வெந்த பருப்பு, அரிசி மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீரையும் தெளித்து, மிருதுவாக  முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

    முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணெயில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும்.

    முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

    சூப்பரான பயத்தம் பருப்பு முறுக்கு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடப்பா என்பது தஞ்சாவூர் பகுதிகளில் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் குருமா போன்ற உணவாகும். இட்லியை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடுவதற்கு பதில் கடப்பாவை செய்து ருசிக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளை கிழங்கு - 2 வேக வைத்தது
    பச்சை பருப்பு - 3 ஸ்பூன்
    காலிபிளவர் துண்டுகள் - சிறிதளவு
    கேரட் - 1
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    உப்பு - தேவைக்கு

    மசாலா அரைக்க :

    தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
    கசகாசா - 1 ஸ்பூன்
    முந்திரி பருப்பு - 10
    சீரகம் - 1 ஸ்பூன்
    ஏலக்காய் - 2
    சின்ன வெங்காயம் - 10
    பச்சை மிளகாய் - 3

    தாளிக்க :


    சீரகம் - அரை ஸ்பூன்
    கிராம்பு - 4
    பட்டை - 1 சிறு துண்டு
    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை :

    பச்சை பருப்பு, உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மசாலாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து அடுத்து கிராம்பு மற்றும் பட்டை, கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு சிறிய தீயில் கொதிக்க விடவும்.

    காய்கறிகள் வெந்த பிறகு உருளைகிழங்கை கையினால் துண்டுகளாக்கி லேசாக மசித்து சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலாவையும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு சரி பார்க்கவும்.

    எல்லாம் ஒன்றுபோல் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    இட்லியை ஒரு தட்டில் எடுத்து அதன் மேல் கடப்பாவை ஊற்றி மிதக்க விட்டு சுவைக்கவும். ஆஹா!... என்ன சுவை!!.. ஆஹாஹா..

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்த அருமையாக இருக்கும் இந்த கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 100 கிராம்,
    அப்பளப்பூ - 15,
    தக்காளி - 1
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

    அரைத்துக்கொள்ள:

    தேங்காய் துருவல் - கால் கப்,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    கசகசா - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று.

    தாளிக்க:

    கடுகு, கறிவேப்பிலை,
    உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்.



    செய்முறை :  

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    தக்காளி, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடலைப்பருப்பை சுண்டலுக்கு வேகவைப்பது போல் வேகவைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரை கப் நீர் விட்டு... மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கொதிக்கவிடவும்.

    இரண்டு கொதி வந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை போட்டு, மேலும் ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.

    மசாலா பச்சை வாசனை போய் அனைத்தும் சேர்ந்து வெந்ததும் இறக்கவும்.

    தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

    கடைசியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அப்பளத்தை போட்டு பொரித்து எடுத்து பருப்பு கூட்டில் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மும்பையில் இந்த தால் வடா தஹி சாட் மிகவும் பிரபலம். இந்த சாட் ஸ்நாக்ஸை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பயத்தம்பருப்பு - 2/3 கப்,
    உளுந்து - 1/4 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    ஓமம் - 1/4 டீஸ்பூன்,
    இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்,
    உப்பு, மிளகு - தேவைக்கு,
    எண்ணெய் - பொரிக்க,
    தயிர் - 2 கப்,
    சர்க்கரை - 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்),
    சீரகம், மிளகாய்தூள் -  சிறிது.

    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பையும் 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பிறகு இந்த மாவில் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, ஓமம், சீரகம், சமையல் சோடா, பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    எண்ணெயை சூடேற்றி இதில் கரண்டியால் மாவை எடுத்து விடவும். வடை பொரிந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். ஆற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கலந்து வெண்ணெய் போல் மென்மையாக வரும்படி கலக்கவும்.

    கலந்த இந்த கலவையை வடை மேல் ஊற்றி மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு, பச்சை சட்னி சேர்த்து குளிரப்படுத்தி பரிமாறவும்.

    மாலை நேர ஸ்நாக்ஸ் தால் வடா தஹி சாட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்து விட்டால் அவர்களுக்கு இந்த கான்ட்வியை செய்து கொடுத்து அசத்தலாம். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 100 கிராம்,
    புளித்த தயிர் - 3/4 கப் மற்றும் 2 1/4 கப் தண்ணீர் அல்லது புளித்த மோர் - ¾ கப்,
    இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    பெருங்காயம் - சிறிது.
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்.

    அலங்கரிக்க...

    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    கறிவேப்பிலை - 8-10,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 1 அல்லது மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்.

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் தயிர் அல்லது மோர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அடுத்து இதில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து இத்துடன் கடலைமாவு சேர்த்து நன்கு மிருதுவான மாவாக கலக்கவும்.

    ஒரு ட்ரேயில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக்  கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். விடாமல் கட்டியில்லாமலும் அடிப்பிடிக்காமலும் கிளறவும். சிறிதளவு மாவை ட்ரேயில் வைத்து ஆறியவுடன் ரோல் செய்யவும். செய்ய முடியாவிட்டால் மாவு சரியான பதத்துக்கு வரவில்லை என்று அர்த்தம்.

    மாவு பதம் வந்தவுடன் அதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி நன்கு கரண்டியால் பரப்பி விடவும். 1:3 என்ற விகிதத்தில் கடலைமாவு மற்றும் மோரை எடுத்து கலந்து மிதமான கலவையாக ஆக்கவும். வேண்டுமானால் இஞ்சி, பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்க்கலாம்.

    இதன்மேல் தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தழை போட்டு ரோல் செய்யவும். சரியான அளவு துண்டுகளாக வெட்டவும்.

    அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், எள் போட்டு வறுத்து கான்ட்வி ரோல் மேல் தூவி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.

    சூப்பரான கான்ட்வி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு சாதம், ரசம், தயிர், வெரைட்டி ரைஸ்க்கு சேப்பங்கிழங்கு வறுவல் சூப்பரான சைடிஷ். இன்று இந்த வறுவலை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேப்பங்கிழங்கு - 300 கிராம்
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    பூண்டு தட்டியது - 6
    கறிவேப்பிலை - 2 இணுக்கு
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கு சாம்பார் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் கூட சேர்க்கலாம்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிது.
    பூண்டு பிடிக்காதவங்க பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.

    செய்முறை :

    முதலில் சேப்பங்கிழங்கை தோல் சீவிக் கொள்ளவும். பின்பு அலசி எடுக்கவும்.

    கழுவிய சேப்பங்கிழங்கை வட்டமாகவோ அல்லது நீள் வாக்கில் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெட்டிய சேப்பங்கிழங்கை கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுக்கவும். குழையக் கூடாது. அரைவேக்காடாக இருக்க வேண்டும்.

    தண்ணீர் வடித்து ஆறியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தட்டிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சேப்பங்கிழங்கு போட்டு நன்றாக கிளறி மூடி வேக விடவும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து பிரட்டி விட்டு திரும்பவும் சிறிது நேரம் வேக விடவும். மொத்தமாக 15 நிமிடத்திற்குள் சூப்பரான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.

    சூப்பரான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள நண்டு பொடிமாஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த நண்டு பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நண்டு - அரை கிலோ
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    தட்டிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
    வெங்காயம் - 1
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    எலுமிச்சை ஜூஸ் - சிறிது.
    தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்.

    செய்முறை :

    நண்டை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதம் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும்.

    அடுத்து அதில் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை, தேவைக்கு உப்பு போட்டு நன்றாக பிரட்டி 5 நிமிடம் வேக விடவும். பிரட்டும் போதே உதிர்ந்து விடும்.

    கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான நண்டு பொடிமாஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் சாட் ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இன்று சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பாவ் பாஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்கறி கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி பட்டாணி)
    தக்காளி - 1
    பாவ் பன் - 4
    வெண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    சீரகம் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப்பொடி - அரை டீஸ்பூன்
    பாவ்பாஜி மசாலா - 1 1/2 டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை :

    காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து மஞ்சப்பொடி, மிளகாப்பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் அடங்கியதும் காய்கறிகளை கரண்டியால் நன்றாக மசித்து விட்டு பாவ்பாஜி மசாலாவும் போட்டு கலக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து காய்கறி கலவையை 10 நிமிடம் நன்றாக கிளறவும். மசாலா வாசம் போய், பாஜி கொஞ்சம் திக்கா வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கிருங்க.

    பாவ் பாஜிக்குத் தேவையான பாஜி ரெடி!

    பாவ் பன்களை (ரெசிப்பி இங்கே) ரெண்டா நறுக்கி, வெண்ணெய் தடவி டோஸ்ட் பண்ணி ஒரு தட்டுல வச்சு, கொஞ்சம் பாஜியையும் வச்சு, பாஜி மேல லைட்டா வெங்காயம்-கொத்துமல்லித்தழை தூவி, ஒரு துண்டு லெமனையும் வச்சு.. பரிமாறவும்.

    சூப்பரான பாவ் பாஜி ரெடி.
    மாலையில் காபி, டீயுடன் சூடாக ஏதாவது சாப்பிட விரும்பினால் வாழைப்பூ பக்கோடா செய்து சாப்பிடலாம். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    வாழைப்பூ - 1
    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை போட்டு சிறிது வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி
    சிக்கன், மட்டன் பிரியாணியை போல் முட்டை பிரியாணியும் சூப்பராக இருக்கும். இன்று முட்டை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - அரை கிலோ,
    முட்டை - 10,
    தக்காளி - 4,
    பெரிய வெங்காயம் - 3,
    கடைந்த தயிர் - 1 கப்,
    எண்ணெய் - அரை கப்,
    நெய் - கால் கப்,
    உப்பு - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    இஞ்சி + பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.

    அரைக்க:

    பட்டை - 2,
    லவங்கம் - 2,
    ஏலக்காய் - 6,
    பச்சை மிளகாய் - 5,
    புதினா - ஒரு கைப்பிடி,
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி.

    செய்முறை:

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும்.

    * அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள்.

    * அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

    * அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.

    * எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.

    * இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான முட்டை பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் உபாதைகள், வயிற்று பிரச்சனைளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 30 பல்
    சின்ன வெங்காயம் - 20
    தக்காளி - 1
    மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
    குழம்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
    புளி - நெல்லிக்காய் அளவு
    நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    * புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.

    * தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    * தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    * அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

    * சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.

    * பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    வெங்காயம் - 1
    பட்டன் காளான் - 300 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காளாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கியவுடன் காளான், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    * காளான் நன்றாக வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    * பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    * இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் சமோசா ரெடி!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×