என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கேரளா ஸ்டைல் அவியல் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நெல்லையில் செய்யும் முறையில் அவியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேரட், பீன்ஸ் அல்லது கொத்தவரை, முருங்கை, கத்திரி, மாங்காய்,சேனை, வெள்ளரி, வாழைக்காய், வெள்ளைப் பூசணி எல்லாம் சேர்த்து - 500 கிராம்

    அரைக்க:

    தேங்காய் - அரைகப்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2- 3
    சீரகம் - 1 டீஸ்பூன்

    தாளிக்க:

    தேங்காய் எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    அலங்கரிக்க :

    கறிவேப்பிலை,
    கொத்தமல்லி இலை.

    செய்முறை:

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    காய்கறிகளை ஒரே போல் மெல்லியதாக நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் காய்கறிகளை போட்டு தேவைக்கு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். தண்ணீர் வற்றி காய் வெந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். அடுப்பை மீடியமாக வைத்து சிறிது கொதிக்க விட்டு பிரட்டி விடவும்.

    கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். உப்பு சரிபார்த்து இறக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அவியலில் சேர்க்கவும்.

    சுவையான நெல்லை அவியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுக்கலாம். இன்று சீப்பு சீடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்
    உளுத்தம் மாவு - அரை கப்
    கடலை மாவு - அரை கப்
    கெட்டியான தேங்காய் பால் - அரை கப்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
    சுடுநீர் - தேவையான அளவு.



    செய்முறை:

    ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

    அதில் வெதுவெதுப்பாக சூடேற்றிய தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளலாம்.

    முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இதுவரை காலிஃப்ளவர் கொண்டு மஞ்சூரியன் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு, சைனீஸ் ஸ்டைலில் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பேபி உருளைக்கிழங்கு - 250 கிராம்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சூரியன் செய்வதற்கு...

    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
    குடைமிளகாய் - 1
    சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    சீசுவான் சாஸ் - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெங்காயத்தாள் - சிறிது (பொடியாக நறுக்கியது)

    செய்முறை:

    பச்சை மிளகாய், பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மஞ்சூரியன் செய்வதற்கு கொடுத்துள்ள சோள மாவை 2 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை நன்கு கழுவி, பாதியளவு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கிய, பின் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் சிறிது தண்ணீர் மற்றும் சோள மாவு கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கிளறி விட வேண்டும்.

    கடைசியாக அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி, மேலே வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எப்பொழுதும் பஜ்ஜி, போண்டா என்று ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மும்பை ஸ்டைல் பேல் பூரியை செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 2 கப்
    ஓமப்பொடி - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
    தட்டுவடை - 6
    கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    உருளைக்கிழங்கு - 2
    புதினா/கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு
    தக்காளி சாஸ் - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    தட்டு வடையை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, உடைத்த தட்டுவடை சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, புதினா/கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி!!!

    மாலை நேரத்தில் சாப்பிட அருமையான சாட் ஸ்நாக்ஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி என்றால் மிகவும் பிடிக்கும். நொறுக்கு தீனியை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுக்கலாம். கோதுமை ஓமப்பொடி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமைமாவு - கால் கப்,
    கடலைமாவு - கால் கப்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    வெண்ணெய் - 2 ஸ்பூன்
    ஓமம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கோதுமை மாவை ஒரு காய்ந்த துணியில் சுற்றி அரை மணி நேரம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வெந்த மாவை போட்டு இத்துடன் ஓமம், சீரகம் இவை இரண்டையும் தூள் செய்து போடவும்.

    அடுத்து அதில் கடலைமாவு சேர்க்கவும்.

    பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    பிசைந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து மொறு மொறு என்று பொரிந்ததும் எடுக்கவும்.

    சுவைமிகு ஓமப்பொடி ரெடி.

    மாவுடன் சிறிது வெண்ணெயைக் கலந்தால் ஓமப்பொடி மிகவும் மிருதுவாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த சப்பாத்தி மீந்து விட்டால் மாலையில் அதை வைத்து சூப்பரான சில்லி சப்பாத்தி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 2,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 1,
    சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    சிவப்பு ஃபுட் கலர் - 1 துளி,
    கொத்தமல்லித்தழை- கால் கட்டு,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கேற்ப.

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்னத் துண்டுகளாகப் பிய்த்து போட்டு வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும்.

    பிறகு அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான மாலை டிபன் சில்லி சப்பாத்தி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு சூப்பரான மதிய உணவு கொண்டு போக நினைத்தால் வெஜிடபிள் புலாவ் செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி  - 2 கப்
    தண்ணீர்  - 4 கப்
    வெங்காயம்  -2
    பச்சை மிளகாய் - 2
    பச்சை பட்டாணி  - 3 டேபிள் ஸ்பூன்
    சிறிய கேரட் - 1
    பீன்ஸ் - 4
    காலிப்ளவர் - 5 துண்டுகள்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    முந்திரி பருப்பு - சிறிதளவு.
    பிரிஞ்சி இலை - 1
    நெய் - 4 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு  - தேவையான அளவு .
    கொத்தமல்லி தழை  - சிறிதளவு

    செய்முறை :

    முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

    காலிப்ளவர், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி பருப்பு போட்டு தாளித்த பின்னர் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    இவை எல்லாம் நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப்  தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் சேர்க்கவும்.
       
    தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், காலிப்ளவர், பட்டாணி, கொத்தமல்லி தழை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வேகவிடவும்.

    5 நிமிடத்திற்கு ஒருமுறை அரிசி உடையாமல் நிதானமாக கலந்து விட்டு நீர் சிறிது வற்றியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வேக விடவும்.

    10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கம கம வாசனையுடன் பொல பொலவென  சுவையான  புலாவ்  பரிமாறத்தயார்.

    சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்பு தூள் - அரை ஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    தனியா தூள் - கால் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பஜ்ஜி மாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 ஸ்பூன்.

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.

    வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீர், சிக்கனில் மஞ்சூரியன் சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட்டில் செய்யும் இந்த மஞ்சூரியன் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 4
    தக்காளி - 2
    வெங்காயம் - 2
    சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 2
    குடை மிளகாய் - 1
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சோயா சாஸ் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

    பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள்.

    தக்காளியை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

    இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கி பரிமாறுங்கள்.

    சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பூரி, புலாவ், பிரியாணி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையான இருக்கும் இந்த தயிர் வெண்டைக்காய். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ,
    தக்காளி - ஒன்று,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    வெங்காயம் - 2,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - ஒரு கப்,
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

    வெண்டைக்காயை கழுவி துடைக்கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும்.

    தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், கொத்தமல்லி, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    இந்த கலவையை கீறிய வெண்டைக்காயில் தடவவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

    பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

    அனைத்தும் நன்றாக சேர்ந்து வந்ததும அதில் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை அதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

    ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பூ கோலா உருண்டை காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இன்று இந்த கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - ஒன்று,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    பொட்டுகடலை மாவு - 250 கிராம்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம்,
    முந்திரி - 10,
    புளித்த மோர் - ஒரு கப்,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், முந்திரி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து அதை மிக்ஸியில் போட்டு ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்து நன்றாக பிசையவும்.

    இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும்.

    பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வாழைப்பூ கோலா உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இன்று நேந்திரம் பழத்தை வைத்து இனிப்பான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரன் பழம் - 2,
    மைதா - ஒரு கப்,
    சர்க்கரை - 5 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய், ஓட்ஸ் - தேவைக் கேற்ப,
    உப்பு - கால் டீஸ்பூன்.

    செய்முறை:

    மைதாவை நன்றாக சலித்து கொள்ளவும்.

    நேந்திரன் பழத்தை தோல் உரித்து, நடுவில் இரண்டாக வெட்டி, பிறகு பஜ்ஜிக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    ஓட்ஸை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சலித்த மைதாவை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    வெட்டிய நேந்திரம் பழ துண்டுகளை மாவில் முக்கி எடுத்து தட்டில் வைத்துள்ள ஓட்ஸ் மீது புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கிரிஸ்பி பனானா ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×