என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்
    X

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய்

    பூரி, புலாவ், பிரியாணி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையான இருக்கும் இந்த தயிர் வெண்டைக்காய். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ,
    தக்காளி - ஒன்று,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    வெங்காயம் - 2,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - ஒரு கப்,
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

    வெண்டைக்காயை கழுவி துடைக்கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும்.

    தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், கொத்தமல்லி, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    இந்த கலவையை கீறிய வெண்டைக்காயில் தடவவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

    பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

    அனைத்தும் நன்றாக சேர்ந்து வந்ததும அதில் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை அதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

    ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×