என் மலர்tooltip icon

    சினிமா

    சப்பாத்திக்கு சூப்பரான பிரெட் மஞ்சூரியன்
    X

    சப்பாத்திக்கு சூப்பரான பிரெட் மஞ்சூரியன்

    பன்னீர், சிக்கனில் மஞ்சூரியன் சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட்டில் செய்யும் இந்த மஞ்சூரியன் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 4
    தக்காளி - 2
    வெங்காயம் - 2
    சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 2
    குடை மிளகாய் - 1
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சோயா சாஸ் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

    பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள்.

    தக்காளியை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

    இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கி பரிமாறுங்கள்.

    சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×