என் மலர்tooltip icon

    சமையல்

    தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
    தேவையான பொருள்கள்:

    சின்ன வெங்காயம் - 1 கப்
    பூண்டு - 6
    புளி - தேவையான அளவு
    வரமிளகாய் - 4
    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயத்தூள் - சிறிதளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய்,  தேவையான உப்பு ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சட்னி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த சட்னி கலவையை கொட்டி பச்சை வாசனை போகும் வரை கிளறி இறக்க வேண்டும்.

    இப்போது சின்ன வெங்காயச் சட்னி ரெடி.
    தினமும் உணவில் சாலட்டை சேர்த்து கொள்வது நல்லது. டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த சாலட் மிகவும் உகந்தது. இன்று சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பேபி கார்ன் - 4
    ப்ரோக்கோலி - சிறியது 1
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 1
    வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்ன், ப்ரோக்கோலியை  துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் போட்டு வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து இரண்டையும் தனியாக எடுத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி கார்ன், ப்ரோக்கோலியை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, ப.மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    இப்போது சுப்பரான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் ரெடி.
    ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாடுக்கு கோதுமை புல் சாறு பயன்படுகிறது. நாள்தோறும் பருகிவந்தால், உடலில் தேங்கும் கழிவுகள் குறிப்பிட்ட காலத்தில் வெளியேறி, புதிய உற்சாகத்துடன் நீங்கள் இருப்பதை உணர்வீர்கள்.
    இப்போதெல்லாம் ஜூஸ் கடைகளில் வீட் கிராஸ் ஜூஸ் என்று கிடைக்கிறது. ஃபிரஷ்ஷாக நமக்குப் போட்டுத் தருகிறார்கள். வெறுமனே இதை குடிக்கப் பிடிக்காதவர்கள் வேறு சில பழச்சாறுகளுடன் சேர்த்து இந்த கோதுமைப்புல் ஜூஸை குடிக்கிறார்கள். அதைவிடவும் இந்த கோதுமைப்புல்லை நம்முடைய வீட்டில் வளர்ப்பது மிகமிக எளிது. ஒரு சின்ன தொட்டியில் வசில கோதுமை விதைகளைப் போட்டு, நம்முடைய அடுப்பங்கறையிலேயே வைத்து வளர்க்க முடியும்.மிக எளிதாக ஓரிரு நாட்களில் வளர்ந்துவிடும். நான்கு இன்ச் வரையிலும் வளர்ந்தாலே போதும். அதைப் பறித்துப் பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை புல் - ஒரு கைப்பிடி
    லெமன் சாறு - 1 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு

    செய்முறை

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    மிக்சியில் கோதுமை புல்லை போட்டு அதனுடன் இஞ்சியை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

    இப்போது சூப்பரான கோதுமை புல் சாறு ரெடி.

    கோதுமை புல்லை நன்றாக கழுவி கொள்ளவும்.

    கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருள்கள்:

    கேரட் – 2
    சின்ன வெங்காயம் – 5
    பச்சை மிளகாய் – 1
    மஞ்சள் தூள் – சிறிது
    முட்டை – 2
    உப்பு – தேவைக்கு

    தாளிக்க:

    எண்ணெய்
    கடுகு
    உளுந்து
    சீரகம்
    கடலை பருப்பு
    கறிவேப்பிலை

    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கேரட்டை துருவி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி விடவும்.

    இரண்டும் சேர்ந்தார் வெந்து பூப்போல் வந்ததும் இறக்கவும்.

    சுவையான கேரட் – முட்டை பொரியல் ரெடி.

    இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
    அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடுவது நல்லது. ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
    தேவையான பொருள்கள்

    அவரைக்காய் - 100 கிராம்
    முட்டை - 1
    தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை

    அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும்  பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.   

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

    காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

    முட்டை வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.

    முருங்கைக்கீரையை வாரத்தில் குறைந்தது 2 முறையாவது உணவுடன் எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து வேறில்லை.
    தேவையான பொருட்கள்

    முருங்கைக் கீரை - ஒரு கப்
    முட்டை - 3
    வெங்காயம் - ஒன்று
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    அரைக்க:

    தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
    கொத்தமல்லித் தழை - சிறிது (கறிவேப்பிலை அளவு)
    சீரகம் - கால் தேக்கரண்டி

    செய்முறை :

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப் பாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    அத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

    தவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

    வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கியமான முருங்கைக் கீரை ஆம்லெட் தயார்.
    முட்டையில் புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் உள்ளது. தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 4
    வெங்காயம் - 1  
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - 1/2 கப்  
    தோசை மாவு - 1
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:


    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு பௌலில் உடைந்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் மாவை ஊற்றி, தோசை போல் தேய்க்க வேண்டும்.

    பின்பு அதன் மேல் எண்ணெய் விட்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையை விட்டு, 2 நிமிடம் கழித்து, திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, தட்டில் வைக்க வேண்டும்.

    பிறகு அதன் மேல் மிளகுத்தூளை தூவி பரிமாற வேண்டும்.

    சுவையான முட்டை தோசை ரெடி.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று எளிய முறையில் முட்டை சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் ஸ்டாக் தயாரிக்க...


    சிக்கன் எலும்புடன் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்
    கேரட் - 2
    பிரியாணி இலை - 1
    மிளகு - 1 டீ ஸ்பூன்
    கல் உப்பு - 1 டீ ஸ்பூன்
    தண்ணீர் - 1 ½ லிட்டர்

    முட்டை சூப் தயாரிக்க...

    சிக்கன் ஸ்டாக் இஞ்சி - 1 துண்டு
    நறுக்கிய வெங்காய தழை - ¼ கப்
    முட்டை - 4
    சோயா சாஸ் - 2 டீ ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    மிளகு - தேவைக்கு

    செய்முறை

    சிக்கனுடன், இடித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், கேரட், பிரியாணி இலை, பொடித்த மிளகு, கல் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு மணி நேரம் வேக விடவும். அதன் பின், அடுப்பை அணைத்து விட்டு, சிக்கன் வேக வைத்த நீரை வடிகட்டவும்.

    பாத்திரத்தில், முட்டைகளை ஊற்றி, நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.

    இந்த சிக்கன் ஸ்டாக்கை வாணலியில் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், சோயா சாஸ், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    இதில், முட்டையை ஊற்றி கலக்கவும்.

    முட்டை வெந்ததும், நறுக்கிய வெங்காயத் தழை துாவி, இரண்டு நிமிடங்களில் அடுப்பை அணைக்கவும்.

    விரும்பினால், உப்பு, மிளகு துாவி குடிக்கலாம்.
    காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்யலாம். இன்று முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டைகள் – 2
    கோதுமை பிரெட் துண்டுகள் – 4
    மிளகு தூள் – ½ தேக்கரண்டி
    உப்பு – தேவையான அளவு
    பால் – சிறிதளவு
    வெண்ணெய் – 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி – சிறிதளவு

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை ஊற்றி அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒரு வாணியில் வெண்ணெயை போட்டு சூடானதும் முட்டை கலவையை ஊற்றி மென்மையாக கிளறவும்.

    கெட்டியாகி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு சூடானதும் இரண்டு கோதுமை பிரெட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    தட்டில் பிரெட்டை வைத்து அதன் மீது முட்டை கலவையை சேர்த்து இன்னொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.

    சுவையான முட்டை சாண்ட்விச் தயார்.
    காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இதன் ஊட்டச்சத்து நீங்கி விடும்.
    தேவையான பொருட்கள்

    காலிபிளவர் - 1 பூ சிறியது
    முட்டை - 2
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - தேவையான அளவு
    பெருஞ்சீரகம் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது

     செய்முறை

    காலிபிளவரை சிறிதாக நறுக்கி 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த வற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் அவித்து வைத்த காலிபிளவரை போட்டு வதக்கவும்.

    வதங்கியதும் அதில் மிளாகாய் பொடி, உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும்.

    பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சுவையான காலிபிளவர் முட்டை பொடிமாஸ் தயார்.
    Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3
    பீன்ஸ் - 250 கிராம்
    பச்சைமிளகாய் - 4
    தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்  - 1 டீஸ்பூன்

    செய்முறை :


    பீன்ஸ், ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பீன்ஸ் நன்றாக வெந்தும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கைவிடாமல் கிளறி விடவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பீன்ஸ் முட்டை பொரியல் ரெடி.
    நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து இருப்பது அவசியம். வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
    தேவையான பொருள்கள்

    துருவிய கேரட் - அரை கப்
    கோஸ் - அரை கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    ஓட்ஸ் - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் துருவிய கேரட், கோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
    ×