search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    முட்டை சூப்
    X
    முட்டை சூப்

    சத்தான சுவையான முட்டை சூப்

    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று எளிய முறையில் முட்டை சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் ஸ்டாக் தயாரிக்க...


    சிக்கன் எலும்புடன் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்
    கேரட் - 2
    பிரியாணி இலை - 1
    மிளகு - 1 டீ ஸ்பூன்
    கல் உப்பு - 1 டீ ஸ்பூன்
    தண்ணீர் - 1 ½ லிட்டர்

    முட்டை சூப் தயாரிக்க...

    சிக்கன் ஸ்டாக் இஞ்சி - 1 துண்டு
    நறுக்கிய வெங்காய தழை - ¼ கப்
    முட்டை - 4
    சோயா சாஸ் - 2 டீ ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    மிளகு - தேவைக்கு

    செய்முறை

    சிக்கனுடன், இடித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், கேரட், பிரியாணி இலை, பொடித்த மிளகு, கல் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு மணி நேரம் வேக விடவும். அதன் பின், அடுப்பை அணைத்து விட்டு, சிக்கன் வேக வைத்த நீரை வடிகட்டவும்.

    பாத்திரத்தில், முட்டைகளை ஊற்றி, நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.

    இந்த சிக்கன் ஸ்டாக்கை வாணலியில் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், சோயா சாஸ், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    இதில், முட்டையை ஊற்றி கலக்கவும்.

    முட்டை வெந்ததும், நறுக்கிய வெங்காயத் தழை துாவி, இரண்டு நிமிடங்களில் அடுப்பை அணைக்கவும்.

    விரும்பினால், உப்பு, மிளகு துாவி குடிக்கலாம்.
    Next Story
    ×