என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது.

    டீ, காபி, ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதாவதொரு பானம் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த பானங்களில் ஏதாவதொரு வகையில் சர்க்கரையின் பங்களிப்பு இருக்கிறது. வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன், பிரவுன் சுகர் எனப்படும் பழுப்பு நிற சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது. இதில் எந்த சர்க்கரை நல்லது என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. இது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

    வெள்ளை சர்க்கரை, புரவுன் சுகர், வெல்லம் இவை எல்லாமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. சுத்திகரிப்பு முறைதான் இதன் தன்மையை நிர்ணயிக்கின்றன. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது பிரவுன் சுகர் அதிகம் சுத்திகரிக்கப்படுவதில்லை. இவை இரண்டுடன் ஒப்பிடும்போது வெல்லம் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை.

    ஆனால் வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகர், வெல்லம் இவற்றில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எதை எடுத்துக்கொண்டாலும் அனைத்துமே ஒரே விதமான கலோரிகளைத்தான் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் சுமார் 20 கலோரிகள் வரை இருக்கும். ஒரு டீஸ்பூன் தேனிலும் சுமார் 20 கலோரிகள் இருக்கின்றன.

    இருப்பினும் வெள்ளை மற்றும் பழுப்பு நிற சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கும். வெல்லத்தின் கிளைசெமிக் குறியீடும் குறைவுதான். அதனால் வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்க செய்யாது.

    அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்று தேடுபவர்களுக்கு வெல்லம் சிறந்த தேர்வாக அமையும்.

    வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகரை பொறுத்தவரை சுவையின் தன்மையில் மாற்றத்தை உணரலாம். சர்க்கரையை உருக வைத்து இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேரமல் சுவையை விரும்புபவர்களுக்கு பிரவுன் சுகர் சிறந்த தேர்வாக அமையும். வெள்ளை சர்க்கரையை அனைத்து வகையான இனிப்புகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். எந்த சர்க்கரையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல.

    • சிறுநீரக பிரச்சினை ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறுவதுண்டு.
    • தண்ணீர் குறைவாக அருந்துபவர்களுக்கு சிறுநீரகக்கல் வர வாய்ப்பு அதிகம்.

    அறிகுறிகள்

    சிறுநீரகங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை தெரிந்துகொள்வதற்கு முன்பாக சிறுநீரகம் என்னென்ன வேலைகள் செய்கிறது என்று தெரிந்துகொள்வது அவசியம். கழிவுகளை வெளியேற்றுவது, ரத்த அழுத்தத்தை சீராக பரமாரிப்பது, ரத்தத்தை சுத்தம் செய்வது, ரத்தத செல்கள் உற்பத்தி, எழும்புகளின் நலனை பேணுதல் போன்ற மிக முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.

    பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், சரியான அளவு சிறுநீரை வெளியேற்றாத பட்சத்தில் சிறுநீர் அவர்கள் உடலிலேயே தங்கிவிடகூடும் அதனால் கால் வீக்கம், முக வீக்கம், மூச்சு வாங்குதல், கழிவுகள் உடலில் இருந்து வெளியேறாமல் தங்கிவிடுவதால், வாந்தி அல்லது வாந்தி வருவதை போன்ற ஒரு மனநிலை, பசி ஏற்படாமல் இருப்பது, ரத்த செல் உற்பத்தியில் சிறுநீரகம் ஈடுபடுவதால் சிறுநீரகம் பாதி்க்கப்படும் பட்சத்தில் ரத்ததில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்தசோகை ஏற்படுவது, எழும்புகள் பாதிக்கப்பட்டு வழுவிழந்து போவது, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் போவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

    சிறுநீரக பிரச்சினை ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறுவதுண்டு, ஆகவே இதுபோன்ற அறிகுறிகள் சிறுநீரகம் அதிக அளவு பாதிப்பிற்கு உள்ளான பிறகே வெளிப்படும். அதனால் வாழ்வியல் நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் இவர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது.

    சிறுநீரகத்தில் எதனால் கட்டி அல்லது கல் ஏற்படுகிறது? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    சிறுநீரகத்தில் கட்டி ஏற்படுவதும், கல் ஏற்படுவதும் வெவ்வேறு பிரச்சனைகள். சிறுநீரக கட்டி என்பதை ஆங்கிலத்தில் சிஸ்ட் என்போம். இந்த சிறுநீரக கட்டிகளை ஸ்கேன் செய்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இவை பொதுவாக நீர்கட்டிகளாக இருக்கும்பட்சத்தில் இவற்றால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    ஆனால் சிலருக்கு குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு கேன்சர் கட்டி வருவதற்கு வாய்ப்புள்ளது. அவை கேன்சர் கட்டி என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அந்த கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி தேவையான மேற்சிகிச்சை வழங்கப்படும்.

    சிறுநீரக கல் என்பது முற்றிலும் வேறு பிரச்சினை. பெரும்பாலும் சிறுநீரக கல் ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரில் உள்ள உப்புச் சத்தான கால்சியம், பாஸ்பரஸ், ஆக்சலேட் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும் போது கல் உருவாகும். இயல்பிலேயே சிறுநீரில் இந்த உப்புச் சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கோ அல்லது தண்ணீர் குறைவாக அருந்துபவர்களுக்கோ சிறுநீரக கல் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

    சிறுநீரக கல் உள்ள அனைவருக்கும் கல் நீக்க அறுவை சிகிச்சை தேவைபடுவதில்லை. கல்லின் அளவு, கல் எங்கே உள்ளது என்பதை பொருத்தே அறுவை சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. 2-ல் இருந்து 5 மில்லி மீட்டருக்கு குறைவான கற்களால் பாதிப்பு இல்லை அவை தானாக சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். சிலவற்றை மருந்து மாத்திரைகள் மூலம் கறைய வைத்து வெளியேற்றிவிட முடியும். இதுவே 1 செ.மீ அதிகம் உள்ள கல் மருந்து மாத்திரையினால் கரையவோ வெளியேறவோ உள்ள சாத்தியகூறுகள் மிகவும் குறைவு. இவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் தான் அகற்ற முடியும்.

    இவ்வகை கற்கள் அதன் பெரிய அளவால் சிறுநீரக பாதையே அடைத்துக்கொண்டு சிறுநீர் வெளியேறுவதை தடுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது அவற்றை கால தாமதம் செய்யாமல் உடனடியாக அகற்றுவது மிக முக்கியம். அதனால் சிறுநீரக கல்லின் அளவை பொறுத்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அவற்றை அகற்றுவது முக்கியம்.

    சிறுநீரக பாதிப்பு இப்போதெல்லாம் யாருக்கு அதிகமாக வருகிறது?

    உலக அளவில் சிறுநீரக பிரச்சினை அல்லது சிறுநீரகம் செயலிழப்பதற்காகன முக்கியமான இரண்டு காரணங்கள் வாழ்வியல் நோய்களான நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல சிறுநீரக கற்கள், மரபணு சார்ந்த காரணங்கள், சில மருந்து மாத்திரைகள் உட்கொள்வது போன்றவை சிறுநீரக கோளாறை உண்டாக்கும் மற்ற காரணங்கள் என்று சொன்னாலும் இவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    மது அருந்துவது, புகைப் பிடிப்பது எந்த அளவுக்கு சிறுநீரகத்தை பாதிக்கும்?

    புகைப் பிடிக்கும் பழக்கம் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்க கூடியது. அதனால் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் புகை பிடிப்பதை நிறுத்துவது மிக அவசியம். மது அருந்துவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்காது என்றாலும் கூட மறைமுகமாக மது அருந்துவது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரகத்தை பாதிக்கவோ, சிறுநீரக கல் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது.

    தினமும் மது அருந்துபவர்களை விட, வாரம் அல்லது மாதம் ஒரு முறை மது அருந்துபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு குறைவாக இருக்குமா?

    புகைப் பிடிப்பது அதிகமாக நுரையீரலை பாதித்தாலும் கூட அதற்கு அடுத்தபடியாக நேரடியாக பாதிப்பது சிறுநீரகத்தை என்றபடியால், சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் முற்றிலுமாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது சாலச்சிறந்தது. மது அருந்துவதும் பல நோய்களுக்கு அடிப்படை காரணிதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் சோசியல் டிரிங்கிங் அதாவது மாதம் ஒரு முறை மது அருந்துவது போன்றவை உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாது.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அல்லது சிறுநீர் குறைவாக வருவது எதனால்?

    அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? அடிக்கடி சிறுநீர் கழிப்பது வயதான ஆண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை. ஆண்களுக்கு Prostate gland என்ற ஒரு சுரப்பி சிறுநீரக குழாயின் பாதையில் இருக்கும். இவை, ஆண்கள் வயதாகும் போது வீக்கமடையவோ பெரிதாகவோ வாய்ப்பு உள்ளது. அவ்வாறாகும் போது அது சிறுநீரக பாதையை அழுத்தி சிறுநீர் அடிக்கடி போக காரணமாக அமையும்.

    அதே போல சிறுநீரக குழாய் தொற்று ஏற்படுபவர்களுக்கும் அடிக்கடி சிறுநீர் வருவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதனால் யாருக்கு இந்த அறிகுறிகள் உள்ளது, அவர்கள் ஆணா பெண்ணா, எந்த வயதை சார்ந்தவர்கள் போன்ற மற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பிரச்சனையை அணுகி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இதுவே போதுமான அளவு தண்ணீர் அருந்தினாலும் குறைவாக சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் அது கவனிக்கப்பட வேண்டியது.

    அவ்வாறான பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலில் தண்ணீர் அதிகம் சேர்வதால் கை, கால் வீக்கம் அல்லது முகத்தில் வீக்கம் மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவை தீவிர சிறுநீரக பிரச்சினையின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எப்படி குடிக்க வேண்டும்?

    தண்ணீர் தேவை என்பது நம் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலின் சமநிலை மாறுபடும் போது நம் உடலே தாக உணர்வை தூண்டி நீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும். உடலில் இருந்து வியர்வையாக வெளியேறும் போது தாகம் ஏற்படும் அப்போது அதற்கு ஏற்றவாறு நீர் அருந்துவது இயல்பு. பொதுவாக சொல்வதானால் இரண்டில் இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.

    ஆனால் அதிக தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்திற்கு நல்லது என்று எட்டு அல்லது பத்து லிட்டர் தண்ணீர் அருந்துவது தவறு, அதுவே வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக சோடியத்தின் அளவு மிகவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. அதே போல சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி அவர்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்வது முக்கியம். சிலருக்கு குறைவான அளவு தண்ணீர் தேவைப்படும் அதற்கு ஏற்றவாறு மருத்துவர் அறிவுறுத்துவார்.

    கேன் வாட்டர் குடிக்கலாமா?

    ஒரு குறிப்பிட்ட தண்ணீர் சிறுநீரகத்திற்கு நல்லது அல்லது கெட்டது என்று நிரூபிக்கபடவில்லை. தண்ணீரை சுடவைத்து குடித்தாலே போதுமானது, அல்லது கேன் வாட்டர் குடிப்பதில் எந்த தப்பும் கிடையாது. அவை சுத்தமாக தயாரிக்கபட்டதா என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு வரும் என்கிறார்களே உண்மையா?

    சிறுநீரகம் சீராக வேலை செய்யும் ஒவ்வொரு குளிர்பானங்கள் அருந்துவதால் சிறுநீரக பிரச்சினை வரும் என்று நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் இல்லை, ஆனால் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் குளிர் பானம் அருந்துவதால் சில பிரச்சினைகள் வரலாம்.

    குறிப்பாக சில குளிர்பானங்களில் பாஸ்பரசின் அளவு அதிகமாக உள்ளதால், அதனால் அவர்களின் உடலில் பாஸ்பரசின் அளவு அதிகமாக வாய்ப்புள்ளது. தேநீர் போன்ற பானங்களில் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருக்கும் இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படலாம். குறிப்பாக ஸ்டார் ஃபுரூட்டில் மிக அதிகபடியான ஆக்சலேட் அளவு இருக்கிறது.

    இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மற்றபடி பொதுவாக குளிர்பானங்கள் அருந்துவதே சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற தட்டையான வாதம் சரியானதல்ல.

    பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்?

    சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் குறிப்பிட்ட பழம் அல்லது உணவு என்று பொதுவாக இல்லை. உணவில் உப்பின் அளவை குறைவாக எடுத்துக்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது போன்றவை நல்லது.

    • தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும்.
    • தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும்

    தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.

    தேன் கூட்டை கட்டுவதற்குத் தேனீக்கள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துகின்றன. இதை தேன் பிசின் அல்லது தேன் மெழுகு என்பார்கள். வேலைக்காரத் தேனீக்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் இருந்து வரும் ஒருவித திரவம் `லார்வா' தேனீக்களுக்கு உணவாகும்.

    தேனீயின் கொடுக்கில் உள்ள விஷம் ஆபத்து இல்லாதது. ஆனால், தேனீ கொட்டினால் வீக்கம் ஏற்பட்டு கடுகடுக்கும். அப்படிப்பட்ட தேனீயின் விஷம், தேன் மெழுகு, தேனீயின் உமிழ் நீர் திரவம், தேன் ஆகியவற்றை எலிக்கு செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதற்கு முன்பு எலிக்கு செயற்கையாக புற்றுநோயை ஏற்படுத்தினர். அதன்பிறகே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தினமும் எலிக்கு தேனும் வழங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் பிறகு தனித்தனியாக தேன் மெழுகு, உமிழ்நீர், விஷம் மட்டும் சோதனை எலிக்கு கொடுக்கப்பட்டது. இதில் தேன் மெழுகு மூலம் எலியின் புற்றுநோய்க்கட்டியின் வளர்ச்சி கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் எலியின் ஆயுட்காலமும் அதிகமாகியது.

     தேனீயின் விஷம் காரணமாக எலியின் புற்றுநோய் கிருமிகளும் பெருமளவு அழிக்கப்பட்டது. தேனீயின் உமிழ்நீர் காரணமாக எலியின் உடலுக்குள் புற்றுநோய் கிருமிகள் பரவுவது கணிசமாக குறைந்திருந்தது.

    `தேன் பொருட்கள் புற்றுநோய் கிருமிகள் மடியக் காரணமாகின்றன. அல்லது புற்றுநோய் கிருமிகளுக்கு தேன் பொருட்கள் விஷமாகின்றன. இதன்மூலம் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுப்பதற்கு தேன் பொருட்கள் முக்கிய கருவிகளாக பயன்படும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

    இன்னும் இதை உறுதி செய்ய பல கட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இன்னும் இதுபோன்ற சோதனை நடத்தப்படவில்லை. மனிதர்களிடமும் ஆய்வு நடத்தி, தேன் பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை அழிப்பது உறுதியானால், உலகில் தேனுக்கு கிராக்கி ஏற்படும் என்பதில் ஐயமில்லை..!

    • சப்போட்டாவுக்கு, பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் திறன் உண்டு.
    • சப்போட்டாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

    அளவில்லா ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்போட்டாவுக்கு, பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் திறன் உண்டு. அத்தகைய சிறப்பு கொண்ட சப்போட்டா பழத்தின் ஆரோக்கிய நலன்களைத் தெரிந்து கொள்வோம்.

    நன்மைகள்

    சப்போட்டாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். எனவே, சப்போட்டாவைத் தினமும் சாப்பிடுவது, ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தி, சமநிலையில் வைக்க உதவும்.

    சப்போட்டா பழத்தில், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் பண்புகள் மிகுந்து காணப்படுகின்றன. ஜலதோஷம், பருவகால காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்கும், ஒருவேளை பாதிப்புக்கு உள்ளானால் நம்மை மீட்பதற்கும் சப்போட்டா பயனுள்ளதாக இருக்கும்.

    சப்போட்டாவைச் சாப்பிடுவது, சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சப்போட்டா சிறப்பான மருந்து.

    நம் உடல்நலனுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. சப்போட்டாவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அதைச் சாப்பிடுவது நம் உடல் நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும். நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் சப்போட்டாவைச் சாப்பிடுவது, நம் உடலுக்குப் போதிய ஆற்றலை உடனடியாக அளிக்கும்.

    அதிகம் சாப்பிடலாமா?

    சப்போட்டாவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்போ வாயில் புண்ணோ ஏற்படலாம். குறிப்பாக, நன்கு பழுக்காத பச்சையான சப்போட்டாவைத் தவிர்க்க வேண்டும். சப்போட்டாவை காயாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்பு, வாயில் புண் போன்றவற்றோடு, செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் சேர்ந்து ஏற்படலாம்.

    சப்போட்டா அல்வா, சப்போட்டா சாஸ், சப்போட்டா மில்க் ஷேக் என சப்போட்டா பழத்தைப் பல வடிவில் நாம் சாப்பிட முடியும்.

    • முன்னோர்கள் வழிகாட்டிய இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகிறார்கள்.
    • எண்ணற்ற நோய்களை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம்.

    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் எண்ணற்ற நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கும் நிலை தான் இருக்கிறது. இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு பக்கவிளைவுகள் உண்டாகலாம். எனவே தான் பலரும் நம் முன்னோர்கள் வழிகாட்டிய இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகின்றனர்.

    பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பல இயற்கை மருந்துகளை பார்த்திருப்போம். இதை சாப்பிடலாமா? அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? உண்மையிலேயே நோய்களை குணப்படுத்துமா? என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும். அதில் ஒன்று தான் வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொண்டால் பல நோய்களை எளிதில் சரிசெய்யும் என்பது.

    வெந்தயம்- 200 கிராம், ஓமம்- 100 கிராம், கருஞ்சீரகம்- 100 கிராம் என அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டுவைக்க வேண்டும், தினமும் படுக்கச்செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்துவிடவேண்டும். இதற்கு பிறகு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. 3 மாதங்கள் தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் உடல்நிலையில் நல்ல பலன் கிடைக்கும்.

    நன்மைகள்

    * உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றும்.

    * கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    * எலும்புகள் வலுவாவதுடன் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

    * பல் பிரச்சனைகளை சரிசெய்கிறது, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதால் தேகம் மினுமினுப்பாகும்.

    * முடி வளர்ச்சி சீராக இருக்கும், மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

    * சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது, மாதவிடாய் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

    தீமைகள்

    * மூன்று மாதங்களுக்கு மேல் நீண்ட காலம் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இல்லை.

    * வெகு அரிதாக சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கும். வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும்.

    * கருஞ்சீரக விதைகள் இரத்த உறைதலை குறைத்து ரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை.

    * ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யலாம்.

    * சிலருக்கு தூக்கத்தை அதிகரிக்க செய்யும்.

    * கருஞ்சீரக விதைகள் உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்க செய்யும்.

    • மசாலா பொருட்களில் மஞ்சளும் முக்கியமானது.
    • மங்கல நிகழ்ச்சிகளில் மஞ்சளுக்குத்தான் முன்னுரிமை.

    அஞ்சறைப் பெட்டியில் உள்ள மசாலா பொருட்களில் மஞ்சளும் முக்கியமானது. இந்தியாவின் மங்கல நிகழ்ச்சிகளில் மஞ்சளுக்குத்தான் முன்னுரிமை.

    புத்த பிட்சுகளின் மேலாடைக்கு நிறமேற்றவும் மஞ்சளே பயன்படுகிறது. சரும பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே.

    மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள். சக்தி வாய்ந்த குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி. இதே பண்புகளைக்கொண்ட ஹைட்ரோகார்டிசோன், பினைல்பியூட்டாஸோன் ஆகிய மருந்துகளில் உள்ள நச்சுத்தன்மை மஞ்சளில் கிடையாது. ஆச்சரியமாக உள்ளதல்லவா?

    தலைமுறை தலைமுறையாக பல்வேறு நோய்களுக்கு குணமளிக்க சர்வ ரோக நிவாரணியாக மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் என்ற அறிவை, முன்னோர் நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள்.

    மார்புச்சளி அல்லது கன்றிப்போன ஊமைக் காயத்துக்குப் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன்தரும்.

    மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் ஆகியவை குணமாகும்.

    மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும்.

    மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.

    மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும்.

    மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊறவைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

    • வாழ்வியல் முறைகள் மூலத்திற்கு முக்கிய காரணம்.
    • மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும்.

    மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 50சதவீத மக்கள் தங்கள் வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் மூல நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் 5 சதவீதம் பேர் நிரந்தரமாக மூலநோய் பாதிப்பை பெற்றிருக்கிறார்கள் என தேசிய மருத்துவ நூலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

    ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய்கள் இருக்கும். மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும். அப்போதுதான் மூலம் உருவாகும். நார்ச்சத்து குறைவு, குறைவாக தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் தான் இந்த நோய் உருவாகிறது.

    சிகிச்சை முறை

    பொதுவாக மூலத்தில் 4 வகை உண்டு. அதுபோன்று அறுவை சிகிச்சை முறையிலும் 4 வகை இருக்கிறது. முதல் வகை - கத்தி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் (ஒப்பன் சர்ஜரி) முறை. இதில் வலி அதிகமாக இருக்கும். 2-வது முறையில் கத்திக்கு பதிலாக கருவிகள் உதவியுடன் மூலம் வெட்டி எடுக்கப்படும். இதிலும் வலி இருக்கும்.

    3-வது லேசர் சிகிச்சை முறை. மூலத்தில் 2 மற்றும் 3-வது வகை இருப்பவர்களுக்கும், வலி இருப்பவர்கள் மற்றும் ரத்தக் கசிவு உள்ளவர்கள், மருந்து கொடுத்தும் சரியாகாதவர்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சையின் போது ரத்தக்கசிவு வலி இருக்காது. காலையில் வந்து சிகிச்சை பெற்று விட்டு மாலையில் வீடு திரும்பிவிடலாம்.

    மூலத்தில் 4-வது வகை இருக்கிறது. இந்த வகைக்கு சிகிச்சை அளிக்க 'ஸ்டேபிலர்' என்று சொல்லக்கூடிய அதிநவீன கருவி உள்ளது. அந்தக்கருவியை பயன்படுத்தி மூலத்தை அகற்றிவிடலாம். காலையில் வந்தால் அறுவை சிகிச்சை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடவாம். ரத்தக்கசிவு, வலி இருக்காது. தையலும் தேவையில்லை.

    மூலத்துக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் வழி இல்லை. எந்த வகையான மூலம் இருக்கிறது என்று பரிசோதனை செய்து கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    • நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
    • வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    பொதுவாக உணவில் பெருங்காயம், மிளகு, சுக்கு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்துதல் நல்லது. தண்ணீரை மேல்நோக்கிய நிலையில் குடிக்காமல், வாய் வைத்து அருந்த வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். வேகமாகவோ அல்லது பேசிக்கொண்டோ உண்ணக்கூடாது. வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    உணவுமுறை:

    * சுண்டைவற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் வகைக்கு தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி வகைக்கு 2 கிராம், பெருங்காயம் அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு ஒரு கிராம் இவைகளை வறுத்து பொடித்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மதிய உணவின் போது இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் நெய்விட்டுப்பிசைந்து சாப்பிட வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், வாயுத்தொல்லைகள் சரியாகும்.

    * சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சமஅளவில் எடுத்து பொடித்து தேவையான போது, அரை டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்து வர, ஏப்பம், வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல் தீரும்.

    * சீரகம், ஓமம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துப் பொடித்து, அதனுடன் பூண்டினை நெய்விட்டு தனியாக வறுத்து அனைத்தையும் பொடித்து, சாதத்துடன் இந்துப்பு சேர்த்து மோர் விட்டு பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

    * மோருடன் வறுத்த பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள் சிறிதளவு வீதம் கலந்து உப்பிட்டுப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பிரண்டை வடகம், கண்டை வற்றல் சூரணம், ஏலாதி சூரணம், அட்டாதி சூரணம், சீரக வில்வாதி லேகியம், வில்வாதி லேகியம். குன்ம குடோரி மெழுகு போன்ற மருந்துகள் உள்ளன.

    • உலர் கண் நோய் ஏற்பட்டால் கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
    • தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும்போது விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.

    நம் கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கும். இந்த மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் உண்டாகும் மாற்றமே உலர் கண் நோயாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய கண்ணீரின் அளவு அடிப்படையானதாகும். உலர் கண் நோய் ஏற்படும்போது கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.

    அறிகுறிகள்:

    கண்களில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வு, கனம், கண்களில் நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை, புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை உலர் கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.

    காரணங்கள்:

    * எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப்பார்ப்பது.

    * பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்கள் காரணமாகவும் உலர் கண் நோய் ஏற்படும்.

    * தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும் போதும், மாசுக்கள் கண்களில் தொடர்ந்து படும்போதும் விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.

    * காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

    தீர்வு:

    * உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * கண்களுக்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் பயிற்சிகள் செய்யும்போது ஆரம்ப காலத்தில் தலைவலி உண்டாகலாம். இந்த பயிற்சிகளை பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது.

    * நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது அறையில் உள்ள காற்றை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

    * 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். இது சருமம் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கும்.

    * சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுவது அவசியமானது.

    * வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது நல்லது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * குளிர்ந்த அல்லது அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    * நேரடியாக கண்ணில் வேகமான காற்று படும்படி இருப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    • 'மெட்ராட்ஸ் ஐ' நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
    • கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடும்.

    கண்வெண்படல அழற்சி என்ற 'மெட்ராட்ஸ் ஐ'  நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், நீர்வடிதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கின்றனர். நாளுக்கு நாள் கண்நோய் சிகிச்சை பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண் சிகிச்சை பிரிவு டாக்டர் ஒருவர் கூறுகையில், `மெட்ராட்ஸ் ஐ' வைரஸ் கிருமியால் பரவி வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். அதாவது, பாதிக்கப்பட்டவரின் கண்ணை பார்த்தால் மட்டும் பரவாது. அவர்கள் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீரில் உள்ள வைரஸ் மூலம் மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவும் தன்மை கொண்டது.

    இந்த நோயில் இருந்து தப்பிக்க கண் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துத் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகளை, பொருட்களை பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்டால் அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

    `மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெறலாம். 2 நாட்கள் சிகிச்சை பெற்றால் போதும் பூரண குணம் அடைய முடியும்' என்றார்.

    • புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கவும், மட்டுப்படுத்தவும் உதவுகிறது.
    • ஆரோக்கியத்தை பாதுகாக்க அனைத்து வயதினரும் புரோபயாடிக்கை பயன்படுத்த முடியும்.

    நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ரஷ்ய விலங்கியல் நிபுணர் எலீ மெட்ஷ்னிகாப், நோபல் பரிசும் பெற்றவர். 1915-களில் உலகின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்த நிலையில், பல்கேரிய விவசாயிகளின் சராசரி ஆயுட்காலம் மட்டும் 87 ஆண்டுகளாக இருப்பதைக் கவனித்தார். அது மட்டுமல்லாமல், அங்கு ஆயிரம் பேரில் குறைந்தபட்சம் 20 பேர் 100 வயதுக்கு மேல் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் வேறுபட்டிருப்பதையும் அவர் அறிந்தார்.

    புரோபயாடிக்குகளால் செறிவூட்டப்பட்ட பால் உள்ளிட்ட புளிக்க வைத்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டதுதான், அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கு காரணம். புரோபயாடிக் ஓர் உயிருள்ள நுண்ணுயிரி. ஓர் அற்புத உணவும் கூட. இதை போதுமான அளவு உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும்.

    பால் பொருட்கள், புளிக்க வைத்த உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவு வகைகள், மாத்திரை மருந்து, உலர்ந்த வடிவம், வித்துப் படிவங்கள், திரவமாக புரோபயாட்டிக்குகள் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் மாற்று மருத்துவ முறையில்தான் புரோபயாடிக் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. இப்போது அலோபதி மருத்துவத்திலும் புரோபயாட்டிக் பரிந்துரைக்கப்பட ஆரம்பித்துவிட்டது.

    ஆரோக்கியத்தை பாதுகாக்க அனைத்து வயதினரும் புரோபயாடிக்கை பயன்படுத்த முடியும். அது வாழ்நாளை நீடிக்கும், வயதான தோற்றத்தை மட்டுப்படுத்தும். பொதுவான வயிற்றுப்போக்கு, குடல் எரிச்சல் நோய் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்க புரோபயாட்டிக் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கவும், மட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    பெப்டிக் அல்சர், இரைப்பை புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியை புரோபயாட்டிக் தடுக்கிறது. குடல் அழற்சி நோயைத் தடுப்பதிலும், அதன் தீவிரத்தன்மையை குறைத்து நிவாரணம் அளிப்பதிலும் புரோபயாட்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது.

    வயிற்றில் அழற்சி ஏற்பட காரணமாக இருக்கும் சைட்டோகைன்கள் உருவாவதை புரோபயாட்டிக் தடுத்து, இரைப்பையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் குடலில் நோய் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    தோல் ஒவ்வாமை, ஜலதோஷம், காய்ச்சல், சளி, ஆஸ்துமா போன்றவற்றை புரோபயாடிக் மூலம் கட்டுப்படுத்த முடியும். திட்டவட்டமான உணவுப்பழக்கத்துடன், புரோபயாட்டிக் அதிகமுள்ள புளித்த பால் பொருட்கள், தயிர், சீஸ், வெண்ணெய், குறைந்த லாக்டோஸ் உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், முதுமையை தள்ளிப்போடலாம், ஆயுளையும் நீட்டித்துக் கொள்ளலாம்.

    • மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • நமது உடல் நேராக நிமிர்ந்து நிற்பதற்கு காரணமாக அமைவது முதுகெலும்பு ஆகும்.

    உலக சிரோபிராக்டிக் கூட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வமான அமைப்புகளுடன் இணைந்து, `உலக முதுகெலும்பு தினம்' ஆண்டுதோறும் அக்டோபர் 16-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதுகெலும்பில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

    நமது உடல் நேராக நிமிர்ந்து நிற்பதற்கு காரணமாக அமைவது முதுகெலும்பு ஆகும். கழுத்து முதல் இடுப்பு வரை வரிசையாக, சற்று வளைந்து அமைந்துள்ள 33 எலும்புகளை நாம் `முதுகெலும்பு' என்கிறோம். கழுத்துப்பகுதியில் 7 எலும்புகளும், நெஞ்சுக்கூட்டிற்கு பின்புறமாக 12 எலும்புகளும், இடுப்புப்பகுதியில் 5 எலும்புகளும் மற்றும் கீழ் இடுப்புப் பகுதியில் 9 எலும்புகளுமாக இவை அமைந்துள்ளன. இந்த எலும்புகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது உடல் நேராக நிற்கவும், வளையவும், அமரவும் காரணமாக அமைகின்றன. இந்த முதுகெலும்பு நமது உடலின் முக்கிய பகுதியான தண்டுவடத்தை பாதுகாப்பாக வைக்கிறது.

    ×