என் மலர்
நீங்கள் தேடியது "மஞ்சளின் மகத்துவம்"
- மசாலா பொருட்களில் மஞ்சளும் முக்கியமானது.
- மங்கல நிகழ்ச்சிகளில் மஞ்சளுக்குத்தான் முன்னுரிமை.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள மசாலா பொருட்களில் மஞ்சளும் முக்கியமானது. இந்தியாவின் மங்கல நிகழ்ச்சிகளில் மஞ்சளுக்குத்தான் முன்னுரிமை.
புத்த பிட்சுகளின் மேலாடைக்கு நிறமேற்றவும் மஞ்சளே பயன்படுகிறது. சரும பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே.
மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள். சக்தி வாய்ந்த குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி. இதே பண்புகளைக்கொண்ட ஹைட்ரோகார்டிசோன், பினைல்பியூட்டாஸோன் ஆகிய மருந்துகளில் உள்ள நச்சுத்தன்மை மஞ்சளில் கிடையாது. ஆச்சரியமாக உள்ளதல்லவா?
தலைமுறை தலைமுறையாக பல்வேறு நோய்களுக்கு குணமளிக்க சர்வ ரோக நிவாரணியாக மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் என்ற அறிவை, முன்னோர் நம்மிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள்.
மார்புச்சளி அல்லது கன்றிப்போன ஊமைக் காயத்துக்குப் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன்தரும்.
மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும்.
மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.
மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும்.
மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊறவைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.






