என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    Fenugreek, Black Cumin & Omam Benefits in tamil: வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மருத்துவ பயன்கள்
    X

    Fenugreek, Black Cumin & Omam Benefits in tamil: வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மருத்துவ பயன்கள்

    • முன்னோர்கள் வழிகாட்டிய இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகிறார்கள்.
    • எண்ணற்ற நோய்களை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம்.

    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் எண்ணற்ற நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கும் நிலை தான் இருக்கிறது. இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு பக்கவிளைவுகள் உண்டாகலாம். எனவே தான் பலரும் நம் முன்னோர்கள் வழிகாட்டிய இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகின்றனர்.

    பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பல இயற்கை மருந்துகளை பார்த்திருப்போம். இதை சாப்பிடலாமா? அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? உண்மையிலேயே நோய்களை குணப்படுத்துமா? என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும். அதில் ஒன்று தான் வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொண்டால் பல நோய்களை எளிதில் சரிசெய்யும் என்பது.

    வெந்தயம்- 200 கிராம், ஓமம்- 100 கிராம், கருஞ்சீரகம்- 100 கிராம் என அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டுவைக்க வேண்டும், தினமும் படுக்கச்செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்துவிடவேண்டும். இதற்கு பிறகு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. 3 மாதங்கள் தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் உடல்நிலையில் நல்ல பலன் கிடைக்கும்.

    நன்மைகள்

    * உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றும்.

    * கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    * எலும்புகள் வலுவாவதுடன் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

    * பல் பிரச்சனைகளை சரிசெய்கிறது, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதால் தேகம் மினுமினுப்பாகும்.

    * முடி வளர்ச்சி சீராக இருக்கும், மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

    * சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது, மாதவிடாய் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

    தீமைகள்

    * மூன்று மாதங்களுக்கு மேல் நீண்ட காலம் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இல்லை.

    * வெகு அரிதாக சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கும். வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும்.

    * கருஞ்சீரக விதைகள் இரத்த உறைதலை குறைத்து ரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை.

    * ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யலாம்.

    * சிலருக்கு தூக்கத்தை அதிகரிக்க செய்யும்.

    * கருஞ்சீரக விதைகள் உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்க செய்யும்.

    Next Story
    ×