என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
    • காயங்கள், வீக்கங்களை விரைவில் குணப்படுத்துகின்றன.

    அனைத்து வகையான காய்கறிகளிலும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட காய்கறி இனமாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 184 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் ஈ, ஏ, பி6, சி, நார்ச்சத்து, தியாமின், நியாசின், பொட்டாசியம், தாமிரம், புரதம், கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்ற காய்கறிகளை விட அதிகமான அளவிலேயே உள்ளன.

    சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.

    கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். அப்படிப்பட்டவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆகியவை உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்களை விரைவில் குணப்படுத்துகின்றன.

    பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் சேர்த்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஃபோலேட் எனப்படும் சத்து விரைவில் பெண்களுக்கு கரு உருவாதலை உறுதி செய்கிறது.

    சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது. இளமை தோற்றம் இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன.

    சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.

    புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

    • குருத்துகளை பறித்து பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ.
    • ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும்.

    தேயிலை செடியில் உள்ள இலைகளின் இளம் குருத்துகளை பறித்து, அதிகமாக பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ. தேயிலை செடியின் இலைகள் குருத்துகளாக இருக்கும்போது, முடிகள் போன்ற வெள்ளை நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். அந்த பருவத்திலேயே, இந்த இலைகள் பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு 'ஒயிட் டீ' என்ற பெயர் உண்டானது.

    ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். சருமம். இதயம் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை சீராக்கும். புற்றுநோயை தடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். ஒயிட் டீ தரக்கூடிய பல்வேறு நன்மைகள் இங்கே...

    சரும பாதுகாப்பு:

    ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள ஃபிரீரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள பாலிபீனால்கள் சருமத்தின் இளமை மற்றும் மிருதுவான தன்மையை பாதுகாக்கிறது.

    ஒயிட் டீயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க வயதான தோற்றம் உண்டாவதை தாமதப்படுத்தும். தோல் நோய்களால் சருமம் சிவப்பதையும், வீங்குவதையும் குறைக்கும். தினமும் 2 கப் ஒயிட் டீ குடுப்பதால் சருமம் சுத்தமாகும்.

    எடை குறைப்பு:

    ஒயிட் டீ, உடலில் தேங்கி இருக்கும் கெட்டக் கொழுப்பை எரிக்க உதவும். புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதைத் தடுக்கும். இதில் காணப்படும் கேட்சின்கள் செரிமான செயல்முறைகளை துரிதப்படுத்தும்.

    தலைமுடியின் ஆரோக்கியம்:

    ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும். பாக்டீரியாவால் ஏற்படும் உச்சந்தலை தோல் நோய்களை குணப்படுத்தும். முடி வறட்சியை தடுத்து கூந்தலுக்கு இயற்கையான பொலிவை அளிக்கும். ஒயிட் டீயில் காணப்படும் எல்-தியானைன் எனும் ரசாயனம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

    பற்கள் பாதுகாப்பு:

    ஒயிட் டீயில் பிளேவனாய்டுகள், டானின்கள் மற்றும் புளோரைடுகள் உள்ளன. இவை பற்கள் ஆரோக்கியமாகவும். வலுவாகவும் இருக்க உதவுகின்றன. பல் சிதைவு மற்றும் பிளேக் உருவாகுவதை தடுக்கின்றன. ஒயிட் டீயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.

    சர்க்கரை நோய் கட்டுப்பாடு:

    ஒயிட் டீயில் உள்ள கேடசின்கள் மற்றும் பிற ஆக்சிஜனேற்றிகள், டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒயிட் டீ ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    இதய பாதுகாப்பு:

    ஒயிட் டீ இதயத்தில் ஏற்படும் ரத்த உறைவு, பக்க வாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக்குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    ஒயிட் டீ தயாரிப்பு:

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து அந்த தண்ணீரில் 2 டீஸ்பூன் ஒயிட் தேயிலை இலைகளை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அந்த இலைகளை வடிகட்டி ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றி குடிக்கவும். இனிப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

    • சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம்.
    • நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.

    நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை அதற்கு உண்டு. நிறங்களை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் 'கலர் தெரபி' சிகிச்சையை பலரும் விரும்புகிறார்கள்.

    சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? சிவப்பு நிறத்தில் உடை, சிவப்பு நிற ஷு அணிந்து செல்லலாம். சிவப்பு நிற துண்டு, சிவப்பு வண்ண தண்ணீர் பாட்டில், சிவப்பு நிற பேக் எடுத்து செல்லலாம். அங்கு உடற்பயிற்சி செய்யும்போது உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை சிவப்பு நிறத்திற்கு இருக்கிறது.

    தன்னம்பிக்கையை இழந்து சோர்ந்து போய் இருப்பவர்களை சிவப்பு மற்றும் கருப்பு நிறம் ஆசுவாசப்படுத்தும். அதில் இருந்து மீளவைத்து உற்சாகமான மனநிலைக்கு இட்டு செல்லும்.

    நீண்ட நாள் கனவான விரும்பிய வேலைக்கு நேர்காணல் செல்கிறீர்களா? சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த ஆடையை உடுத்தி செல்லலாம். இந்த நிறங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. தன்னம்பிக்கைதரும். மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்வு அளிக்கச் செய்யும்.

    ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் மகிழ்ச்சியான மனநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியவை. பெண்கள் தங்கள் துணி அலமாரியை ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கலாம். அந்த நிறங்கள் கொண்ட துணிகளை அதில் இடம் பெற செய்யலாம். அந்த நிறங்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்புடையவை.

    ஏதாவதொரு காரியத்தில் கவனம் செலுத்தும்போது நீல நிறத்தை தேர்வு செய்யலாம். அது அமைதியான மனநிலைக்கு வித்திடும். வேறு பக்கம் கவனம் திரும்பாமல் பார்த்துக்கொள்ளும். சிந்தனை திறனையும் மேம்படுத்தும்.

    சுப நிகழ்ச்சிகளுக்காக வீட்டை அலங்கரிக்கும்போது ஆரஞ்சு நிறத்தை தேர்வு செய்யலாம். அதிலும் பார்ட்டி போன்ற விருந்து உபசரிப்பு நிகழ்வுகளுக்கு ஆரஞ்சு நிறம் சிறந்த தேர்வாக இருக்கும். அது விழாவுக்கான உற்சாகத்தை அதிகப்படுத்தும். அனைவருடைய கவனத்தையும் சட்டென்று ஈர்க்கும் விதத்திலும் அமைந்திருக்கும்.

    • உடலில் செலினியம் அளவு குறைவதும் தூக்கத்தை பாதிக்கும்.
    • ஊட்டச்சத்துக்கள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டவை.

    கவலை, வேலை நெருக்கடி, நிதி நெருக்கடி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் தூக்கத்தை தொலைத்து நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். தூங்கச் செல்லும்போது அவை பற்றிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. உணவு பழக்கத்தில் எளிய மாற்றங்களை செய்வதன் மூலமும் தூக்கமின்றி தவிப்பதை தவிர்க்கலாம். தூக்கத்தை தூண்டும் அத்தகைய உணவு வகைகளில் சில உங்கள் பார்வைக்கு....

    நண்டு

    உடலில் செலினியம் அளவு குறைவதும் தூக்கத்தை பாதிக்கும். நண்டு அதிகம் சாப்பிடுவது செலினியம் தேவையை பூர்த்தி செய்ய உதவும். இதிலுள்ள கால்சியம், வைட்டமின் பி6 போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டவை.

    வாழைப்பழங்கள்

    ஒரு வாழைப்பழத்தில் சுமார் 375 மில்லி கிராம் பொட்டாசியம் நிரம்பியுள்ளது. இது தினமும் உடலுக்கு தேவைப்படும் பொட்டாசியத்தில் ஐந்தில் ஒரு பங்கு அளவை பூர்த்தி செய்யக்கூடியது. தூங்கச் செல்லும்போது ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது வைட்டமின் பி6 அளவை அதிகரிக்க வைக்கும். உடலில் வைட்டமின் பி6 அளவு குறைந்திருந்தால் செரோடோனின் செயல்பாட்டை பாதிக்கும். வாழைப்பழம் சாப்பிடுவது அதனை நிவர்த்தி செய்து சீரான தூக்கத்திற்கு வித்திடும்.

    பாதாம்

    பாதாம் தூக்கத்தை ஊக்குவிக்கும் குணங்களை கொண்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுக்கு தூக்கமின்மையால் சிரமப்பட்ட மாணவர்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து 14 நாட்களுக்கு 10 பாதாம் கொடுக்கப்பட்டது. பாதாம் சாப்பிட்ட பிறகு தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருந்தது.

    பிஸ்தா

    பிஸ்தாவில் தூக்கத்தை தூண்ட உதவும் வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. அவை மெலடோனின் ஹார்மோன் செயல்பாடுகளை மேம்படுத்தும் சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகும்.

    மீன்

    2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று முறை சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளை (ஆயில்பிஷ்) சாப்பிட்ட ஆண்கள் தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தனர். அவர்களது அன்றாட செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. இந்த மீன்களில் காணப்படும் வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துக்கள் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்கின்றன. இது தூக்கத்தை தூண்டும் சிறந்த உணவாக இருந்தாலும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்காத பெண்கள் இந்த வகை மீன்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சோயா உணவுகள்

    டோபு போன்ற சோயா பொருட்களில் காணப்படும் ஐசோ பிளேவோன்களை அதிகமாக உட்கொள்வது, ஆழ்ந்த தூக்கத்தை வரவழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்பது ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐசோ பிளேவோன்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஒரு டம்ளர் சோயா பால் பருகி வரலாம். உணவில் தினமும் சோயா பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பட்டர் பீன்ஸ்

    இதனை தினமும் உட்கொள்பவர்களிடத்தில் தூக்கத்தின் தரம் மற்றவர்களை விட 6.6 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி 6 உள்ளன. இவை ஆழ்ந்த தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

    அரிசி

    அரிசி, உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீட்டை கொண்டது. அதாவது விரைவாக சர்க்கரையை வெளியிடக்கூடியது. அதே வேளையில் தூக்கத்தை தூண்டுவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், டிரிப்டோபன் என்னும் அமினோ அமில உருவாக்கத்தை எளிதாக்குகிறது. இந்த அமினோ அமிலம்தான் உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது.

    அதனால் உணவின் ஒரு பகுதியாக அரிசி சாதம் சேர்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் முழு கோதுமை, பாஸ்தா, கம்பு, ரொட்டி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருவது இரவு நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.

    முழு தானியங்கள்

    அதிக நார்ச்சத்து கொண்ட பொருட்களை உட்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டி இரவு இனிமையான தூக்கத்தை தூண்டும் என்பதும் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 26 முதியவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் கணக்கிடப்பட்டது. அதிக நார்ச்சத்து கொண்ட முழுதானியங்களை உட்கொண்டவர்கள் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்தனர். காலையில் எழுந்ததும் உற்சான மன நிலை அவர்களிடத்தில் வெளிப்பட்டது.

    கிவி பழம்

    தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இரண்டு கிவி பழங்களை சாப்பிட்ட தம்பதியர் விரைவாக தூங்கியதும், 13 சதவீதம் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்ததும் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இந்த பழத்தில் போலேட் எனப்படும் ஒருவகை பி வைட்டமின், செரோடோனின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன.

    சூடான பால்

    பால் பொருட்களை உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். ஆனால் தூங்க செல்லும் நேரத்தில் பால் குடிப்பதால் குறிப்பிட்ட எந்த நன்மையும் இல்லை என்று சமீபத்திய ஆய்வு முடிவு சொல்கிறது. அதற்கு பதிலாக தினமும் கால்சியம் நிறைந்த பால் பொருட்களை மற்ற சமயங்களில் உட்கொள்வது தூக்கத்தை அதிகரிக்க செய்யும்.

    • சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.
    • தொண்டைப் பகுதியோடு ‘யூஸ்டேசியன்’ குழல் இணைக்கப்பட்டுள்ளது.

    மனிதனின் காது புறச்செவி, நடுச்செவி, உட்செவி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நடுச்செவியானது தொண்டைப் பகுதியோடு 'யூஸ்டேசியன்' என்ற குழல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மிக அவசியமானதாகும்.

    நம் செவிப்பறையின் வெளிப்புறமும் உட்புறமும் ஒரே மாதிரியான அழுத்தம் இருக்க வேண்டும். இல்லையெனில் செவிப்பறை கிழிந்துவிடும். இந்த சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.

    கொட்டாவி விடும்போது, அதிக அளவு காற்று தொண்டைப்பகுதிக்கு வந்து வெளியேறுகிறது. அப்போது யூஸ்டேசியன் குழலுக்குள்ளும் அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் தான் சில நொடிப்பொழுது காது அடைத்துக்கொள்கிறது.

    தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது அல்லது யாராவது கன்னத்தில் அறையும்போது, காது முறுக்கப்படும்போது டென்சர் டைம்பானி காதை பாதுகாக்கிறது.

    குறிப்பாக அதிக ஒலிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க தானியங்கியாக இயங்கும் தசை இது. கொட்டாவி விடும்போது இத்தசை தூண்டப்பட மூக்கு, காது, வாய் என மூன்று உறுப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு உருவாகிறது. அப்போது காது கேட்கும்திறன் மழுங்குகிறது. இதைத்தான் காது அடைக்கிறது என்கிறோம்.

    • உடல் அதிகமாக வியர்க்கும்.
    • ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.

    சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. பின்னர் வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு.

    இந்த வலியை முதன்முறையாக தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

    பரம்பரை, அதிக உடல் உழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்ப நிலையால் திடீரென தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது (மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை) போன்ற காரணங்கள் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.

    புகைப்பது, மது குடிப்பது, உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத்தசை அழற்சி போன்ற நோய்களைக்கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையை கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

    'நிமோனியா' எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி நோய், கடுமையான காசநோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும். பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சு வலி வரலாம்.

    • அதிக இனிப்பு நமது கணையத்தை சேதப்படுத்தும்.
    • எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையை பாதிக்கும்.

    * காலை சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிக்கப்படும்

    * தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

    * இரவு 11 மணிக்கு மேல் விழித்து இருந்தாலும், காலை சூரியன் உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நம் உடலில் உள்ள பித்தப்பை பாதிப்படையும்.

    * மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்கு தீங்கு.

    * அதிக அளவில் பொரித்த உணவுகளை உண்பது மற்றும் அதிக காரம் நிறைந்த உணவுகளை உண்பதால் நமது பெருங்குடல் பாதிக்கப்படும்.

    * புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களை கெடுக்கும்.

    * துரித உணவு, அதிகநேரம் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவு உண்பது நமது கல்லீரலுக்கு கேடு விளைவிக்கும்.

    * அதிக உப்பும், அதிக கொழுப்பும் இதயத்தை மிகவும் பாதிக்கும்.

    * அதிக இனிப்பு நமது கணையத்தை சேதப்படுத்தும்.

    * இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலைசெய்வது கண்களுக்கு கெடுதல் விளைவிக்கும்.

    * எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையை பாதிக்கும்.

    • இயற்கை வைத்தியம் மூலம் எப்படி சுளுக்கை குணப்படுத்தலாம்.
    • கிராம்பு எண்ணெய்யை சுளுக்கில் இருந்து விடுபட பயன்படுத்தலாம்.

    பொதுவாக நம் உடலில் அடிக்கடி சுளுக்கு ஏற்பட்டால் உடனே மெடிக்கலுக்கு சென்று ஏதாவது மாத்திரை அல்லது பேண்டேஜ் வாங்கி ஒட்டிக்கொள்வோம். ஆனால் இயற்கை வைத்தியம் மூலம் எப்படி சுளுக்கை குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

    * கிராம்பு எண்ணெய்யை சுளுக்கில் இருந்து விடுபட பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை தடவி மசாஜ் செய்வது வலியை குறைக்க உதவுகிறது.

    * பொதுவாக கல் உப்பு தசை வலி மற்றும் தசைபிடிப்பை குறைக்க உதவுகிறது. வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் சுளுக்கு வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    * மலிவாய் கிடைக்கும் ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆமணக்கு எண்ணெய்யை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் சுளுக்கினால் ஏற்படும் வலி குறையும்.

    * பொதுவாக ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. மேலும், ஆப்பிள் வினிகரில் பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்கும் பண்புகள் உள்ளன. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரை பயன்படுத்தி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் சுளுக்கினால் ஏற்படும் வீக்கம் குறையும்.

    * ஆலிவ் எண்ணெய் கூட வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. சுளுக்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேசாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    * கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது சுளுக்கால் உண்டான வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

    • அரிப்பு அலர்ஜி உண்டாகாமல் தடுக்கும் உணவுகள்.
    • பொதுவாக எண்ணெய்யில் பொறித்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவதால் அரிப்பு ஏற்படும்.

    பொதுவாக எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. இதேபோல அரிப்பு, அலர்ஜி உள்ளவர்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் இந்த உணவுகளை எடுத்து கொண்டால் அரிப்பு, அலர்ஜி உண்டாகாமல் தடுக்கலாம்.

    * சிலருக்குஅலர்ஜி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். அரிப்பு ஏற்பட்டால் அதற்கு சிக்கன் சூப் சாப்பிடுவது நல்லது.

    * அரிப்பு ஏற்படாமல் தடுக்க அமினோ அமிலம் உதவுகிறது.

    * மீன் எண்ணெயில் அரிப்பினை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

    * ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைத்து நம் ஆரோக்கியம் காக்கிறது .

    * வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஹிஸ்டமைன், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவெ இது உடலில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

    * உடலில் அரிப்பு அலர்ஜியை தடுக்க பூசணிக்காய் விதைகள், எள்ளு சேர்க்கலாம். இதுபோன்ற விதைகளில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

    * உடலில் ஏற்படும் அழர்ஜியை எதிர்த்து போராட கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது.

    * சுத்தமான காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

    * காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோல் அழர்ஜியை தடுக்கிறது.

    • நியூரான்களில் பிரீரேடிக்கல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும்.
    • மூளையின் செயல்திறனையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.

    மூளை செயல்திறன் குறைபாடு, அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படுவதற்கு ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் நரம்புகளில் உண்டாகும் அழற்சி ஆகியவை முக்கிய காரணமாகும்.

    'அமிலாய்டு பீட்டா' புரதம் என்ற மூலக் கூறு. நியூரான்களில் பிரீரேடிக்கல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும். இது மூளையில் ஆக்சிஜனேற்ற சேதம் மற்றும் செல்களின் இறப்புக்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வால்நட் பருப்பில் ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக்கொண்ட பல மூலக்கூறுகள் உள்ளன. எனவே வால்நட் பருப்புகளை கூடு தலாக உணவில் சேர்த்துக்கொண்டால் மூளையின் செயல்திறனையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.

    வால்நட்டில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் ஆக்சிஜனேற்ற பாதுகாப்பை மேம்படுத்தும். பிரி ரேடிக்கல்களின் அளவு, புரத ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். தினமும் வால்நட் சாப்பிடுவதன் மூலம் பார்கின்சன் நோய். பக்கவாதம். மனச்சோர்வு. இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்க முடியும்.

    • சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.
    • அதிக காய்ச்சலுடன் பாதிப்பும் ஏற்படலாம்.

    பருவகால அலர்ஜியை எளிதில் தடுக்கலாம் மாற்றத்தின்போதும், உணவு பொருட்களின் தன்மை ஆகியவற்றின் காரணமாக சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். இதை தவிர்க்க பருவகால மாற்றத்தின்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும். இதைப் பற்றிய தகவல்களை காண்போம்.

    பருவகால ஒவ்வாமையால் உண்டாகும் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையான வகையில் இருக்கும். இருமல், தும்மல், மூக்கு மற்றும் கண்களில் நீர் வடிவது, மூக்கு மற்றும் காதுகளில் அடைப்பு, கண்கள் மற்றும் சைனஸ் பாதைகளில் அரிப்பு, காதுகளில் சீழ் வடிவது, தலைவலி, மூச்சுத்தினாறல் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். இதுதவிர, அதிக காய்ச்சலுடன் பாதிப்பும் ஏற்படலாம்.

    ஆஸ்துமா ஒவ்வாமையில் இருந்து தப்பிக்கும் வழிகள்:

    வீட்டைச் சுற்றி ஒவ்வாமையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுக்களை அகற்ற வேண்டும். வீட்டிற்குள் தரை விரிப்புகள் மற்றும் மரச்சாமான்களை அகற்றி சுத்தம் செய்வது. குழந்தைகளின் அறையில் அடைந்து வைத்திருக்கும் பொம்மைகளை அகற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் மூச்சுத்தினாறல் போன்ற சுவாச பிரச்சினைகள் சார்ந்த ஒவ்வாமையைத்தடுக்க முடியும்,

    வாரத்திற்கு ஒருமுறை படுக்கை விரிப்புகள். திரைச்சிலைகள் ஆகியவற்றை வெந்நீரில் நனைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

    தலையணைகளை அழுக்கு, தூசு இல்லாத உறைகளால் மூடி வைக்க வேண்டும். நீர்க்கரிவுகள் மற்றும் பாக்டீரியாக்கள், பூச்சிகள் எளிதில் உருவாகும் இடங்களை ஆரம்ப நிலையிலேயே சுத்தப்படுத்த வேண்டும். குளிர் மற்றும் மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பே ஈரப்பதமூட்டிகளையும், கோடை காலத்தில் ஏ.சி இயந்திரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

    உணவில் மாற்றம்:

    உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது. புதிதாக தயாரிக்கப்பட்ட உடளவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    பருவகாலத்திலும் தினமும் காலையில் கிரீன் டீ பருகலாம். இதில், இயற்கையான ஆன்டி ஹிஸ்டமின்கள் உள்ளன. இவை ஒவ்வாமையால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைக்கும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள். கீரைகள், முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

    மசாலா பொருட்கள், காரமான உணவுகள், காபி, பால் பொருட்கள், சாக்லெட் வேர்க்கடலை, சிவப்பு இறைச்சி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    • நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா
    • அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது.

    இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றில் இருந்தும் புற்று நோயில் இருந்தும் எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

    அறிகுறிகள்

    நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா தான். நெஞ்சில் சளி கட்டி இருமலாக மாறும், இரவிலும் அதிகாலையிலும் இருமல் அதிகமாக இருக்கும். கட்டி கட்டியாக சளி வெளியேறுதல், மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போதுபூனை கத்துவது போன்ற சப்தம் கேட்பது போன்றன பொதுவாக இந்த நோயிற்கான அறிகுறிகள்.

    ஆஸ்துமா, அலர்ஜி எதனால் ஏற்படுகிறது?

    இவ்வகை அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது. இந்த அலர்ஜி தூசியால், செல்லப்பிராணிகளின் ரோமங்களை சுவாசித்தாலோ அல்லது பூஞ்சை காளான்கள் அல்லது மகரந்த துகள்களை சுவாசித்தாலோ கூட இது போன்ற சளி, தும்மல், இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற மாசுபடுத்திகளால் நுரையீரலில் உள்ள ம்யூக்கஸ் சுரப்பிகள் வீங்கி அதிகப்படியான சளியை உண்டு பண்ணுகின்றன. மூச்சுக்குழாயின் சுருங்கும் தன்மை அதிகமாவதால் வீசிங் வருகிறது.

    இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நடக்கும் போது மாடிப்படி ஏறும் போது வீசிங் அதிகமாகும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மூச்சு விடும்போது சப்தம் அதிகமாகிறது. இவற்றை ஆஸ்துமா அல்லது அலர்ஜி என்று சொல்வார்கள்.

    அலர்ஜி, ஆஸ்துமா வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சை

    அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் இன்ஹெல்லர்-ஐ தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மக்கள் பலருக்கு இன்ஹெல்லர் எடுப்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், இன்ஹெல்லர் ஸ்டீராய்டு இருக்கும் என அச்சப்பட தேவையில்லை. மைக்ரோ மில்லிகிராம் அளவே அது இருக்கும் என்பதோடு இது மாத்திரை போல உணவுக் குழாயில் இருந்து ரத்தத்தில் கலக்கும் தன்மை கிடையாது என்பதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்ஹேல்லரை பயன்படுத்திய பிறகு வாய்க்கொப்பளிப்பது அவசியம்.

    அதேபோல ஆஸ்துமா வந்தால் மருந்து இன்ஹேல்லர் எடுப்பது மட்டுமல்ல, வீட்டில் தூசி சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்வது, செல்லப்பிராணிகள், பறவைகளை தவிர்ப்பது, மழை அல்லது குளிர்காலங்களில் விடியற்காலை நடைப்பயிற்சி செய்வதை தவிர்ப்பது போன்றவற்றால் அலர்ஜி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் நுரையீரல் செயல்பாடு சோதனை செய்வது போன்றவை இன்றியமையாதது.

    செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுமா?

    புறாக்களின் கழிவுகளை நீண்ட நாட்களாக சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புண்டு. அலர்ஜி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இந்த கழிவை சுவாசிப்பவர்களுக்கு Hypersensitivity Pneumonitis என்ற ஒரு வகை மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வரலாம். ஒன்று இரண்டு புறாக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவ்வகையான அலர்ஜி தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிக அதிகம்.

    ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

    தற்போது வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தொண்டை வலியாக தொடங்கி, காய்ச்சல், தலை பாரம் வந்து பிறகு இருமலாக மாறும். இந்த வகை காய்ச்சலால் வரும் இருமலை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இவ்வகை அறிகுறிகளை Post Viral Bronchitis என்று அழைப்போம். அதாவது வைரஸ் காய்ச்சலின் பின் விளைவுகள். அதோடு சைனஸிட்டிஸ், வீசிங்க் பிரச்சினை போன்ற அலர்ஜி இருக்கும் நபர்களுக்கு இந்த அறிகுறிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சாதாரணமாக ஒருவருக்கு சளி அல்லது காய்ச்சல் வந்தால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும் ஆனால் இந்த வகை ஃப்ளூ காய்ச்சல் குணமாக இரண்டு மூன்று வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

    இது போன்ற வைரல் இன்ஃபெக்ஷன் வைரஸால் ஏற்படும் தொற்று. இவை பொதுவாக காற்றுவழியாக மற்றவர்களுக்கு பரவும். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகள் மூலம் பெற்றோருக்கும் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இவ்வகை தொற்று சுலபமாக வர வாய்ப்பு உள்ளது அதனை தொடர்ந்து நிமோனியா வர அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வயதினர்களுக்கு ஆண்டு தோறும் ஃப்ளூ வைரசிற்கான Influenza shot என்ற தடுப்பூசி போடுவதால் ஃப்ளூ காய்ச்சலை தவிர்க்கலாம்.

    நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடிப்பது மட்டுமே காரணமா?

    நிச்சயமாக இல்லை, புகைபிடிப்பது நுரையீரல் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கி்ல்லை என்றாலும், மரபணு சார்ந்த காரணங்கள், காற்று மாசுபாடு போன்ற மற்ற காரணங்களால் கூட நுரையீரல் புற்றுநோய் வரலாம். பொதுவாக சரியான நேரத்திற்கு உணவு உண்பது, துரித உணவுகளை தவிர்த்து சத்தாண உணவுகளை உண்பது, நல்ல தூக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி, புகைப் பிடிப்பது அல்லது மது அருந்துவதை தவிர்த்தல் போன்றவற்றை சரியாக பின்பற்றினால் பெரும்பாலும் புற்றுநோய் வருவதில் இருந்து தப்பலாம்.

    நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

    நுரையீரல் புற்றுநோயை பொறுத்தவரை சிறிய அளவிலான கேன்சர் கட்டி ஒருவரின் உடலில் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்போ அறிகுறிகளோ ஏற்படுத்தாது. இவை பெரிய அளவில் வந்த பிறகே அவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படும். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், ரத்த வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும் போது கேன்சரின் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலே தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

    இதனை தவிர்க்க வருடம் தோறும் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு செய்யும்போது ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஆரம்ப நிலையிலையே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். அதிக பாதிப்பிற்கு உள்ளான பிறகு தெரிய வந்தால் அதனை குணமாக்குவது கடினம்.

    நுரையீரல் வீக்கம் என்றால் என்ன?

    நுரையீரல் வீக்கம் என்பது COPD (Chronic Pulmonary Obstructive Disease) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று சொல்வார்கள். புகைபிடிப்பது, காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மூச்சுக் குழாய் சுருங்கி நுரையீரல் வீங்குவது. இவை பொதுவாக சுற்றுச்சூழல் காரணமாக வரக்கூடியவை. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

    முற்காலத்தில் விறகு மற்றும் வரட்டிகளை உபயோகித்து அடுப்பு எரித்ததால் பெண்களுக்கும் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது, இடை பட்ட காலத்தில் சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி. வந்த பிறகு பெண்களிடையே இந்த COPD குறைவானது. தற்போது passivesmoking (அதாவது அருகில் உள்ளவர்கள் புகைபிடிப்பதை சுவாசிப்பது), அல்லது புகைபிடிப்பது போன்ற காரணங்களால், கொசுவர்த்தி சுருள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளான காற்று மாசுபாடு போன்றவற்றால் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கும் இன்ஹெல்லர் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும்.

    பொதுவாக மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் நுரையீரல் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது, இந்த அறிகுறிகள் ஏற்படலாம் மருத்துவரை அணுகுவது எவ்வளவு முக்கியம்?

    பொதுவாக தூசி, மற்ற சில அலர்ஜிகளால் முதலில் தும்மல், மூக்கடைப்பு ஏற்படுத்தும் அதை சரியாக குணப்படுத்தா விட்டால் அலர்ஜி மற்றும் சைனசிட்டிஸ் ஏற்பட்டு நுரையீரலில் சளி உண்டாகலாம், இதனை தொடர்ந்து இருமல் ஏற்படும், அடிக்கடி இருமல் சளியை வெளியேற்றிக் கொண்டே இருப்பார்கள்.

    பொதுவாக விடியற்காலை நேரங்களில் இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படும் இவையெல்லாமே அலர்ஜிக்கான அறிகுறிகள், இதனை தொடர்ந்து வீசிங் ஏற்படும். இதற்கு மருத்துவரை அணுகி அலர்ஜி மாத்திரைகள் எடுக்கலாம், அடிக்கடி வரும்பட்சத்தில் இன்ஹெல்லர் சிறந்த தீர்வு.

    என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

    ஏசியை அடிக்கடி பராமரித்து உபயோகபடுத்த வேண்டும், சீரற்ற தூக்கம், இவை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க மூச்சுப் பயிற்சி தொடர்ச்சியாக செய்ய வேண்டும் உடற்பயிற்சி, ஏதாவது விளையாட்டு வீசிங், அலர்ஜிக்கான வாய்ப்புகளை குறைக்கும். சத்தான உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்வது, கீரை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

    முகக் கவசம் உபயோகப்படுத்துவது தேவையா?

    தற்போது ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் நிச்சயமாக பொது இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்து ரயில் பயணங்கள் போன்றவற்றில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவதுநல்லது.

    ×