search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Myocardial infarction"

  • உடல் அதிகமாக வியர்க்கும்.
  • ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.

  சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. பின்னர் வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு.

  இந்த வலியை முதன்முறையாக தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

  பரம்பரை, அதிக உடல் உழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்ப நிலையால் திடீரென தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது (மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை) போன்ற காரணங்கள் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.

  புகைப்பது, மது குடிப்பது, உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத்தசை அழற்சி போன்ற நோய்களைக்கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையை கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

  'நிமோனியா' எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி நோய், கடுமையான காசநோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும். பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சு வலி வரலாம்.

  • இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும்.
  • உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.

  உலக இதய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதய நோய்களை தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.

  இதய நோயின் அறிகுறி, நோயை தடுக்க செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்த தினத்தில் பல நாடுகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.

  இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும். அதில் பாதிப்பு ஏற்பட்டால் உயிழப்பு உண்டாகும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தை ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதமாகும்.

  "இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி" என்பதே இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருளாக கூறப்பட்டுள்ளது.

  காற்று மாசுபாட்டை குறைத்தால் பொதுவாக மனிதர்களுக்கு வரும் இதய நோய்களை கனிசமாக குறைக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பது. தேவையற்ற புகையை வெளியிடுவதை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி உதவலாம்.

  மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையே மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி, தரமான தூக்கம் போன்றவற்றால் நமது உடல் சீராகும். இதயம் பலப்படும்.

  உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும். உடனே மருத்துவர்களை அணுகி தேவையான மருந்துகளையும், ஆலோசனைகளையும் பெறவேண்டும். அதேபோல் உடலில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவில் தேவையானவற்றை அதிகரித்து, தேவையில்லாததை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்கள் முறையான உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அடிக்கடி சிறிது தூரம் நடக்கவேண்டும். புகை இதயத்துக்கு முதல் பகையாகும். அதனால் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் கைவிடவேண்டும்.

  எண்ணெய்யில் பொரித்த தின்பண்டங்களை குறைத்து உண்ணலாம். வயதானவர்கள் தவிர்ப்பது சிறந்தது. இதேபோல் சவர்மா, பீட்சா, பர்கர், துரித முறையில் சமைக்கும் கோழி இறைச்சி, மைதா மாவால் செய்யப்படும் உணவுகளும் ஜீரணத்தை பாதித்து, நுரையீரலையும், இதயத்தையும் சேதமாக்கும். பிரியமானவர்களிடம் பேசும்போது இதயத்தில் வைத்து உன்னை பாதுகாப்பேன் என்று உதாரணத்துக்கு கூறுவோம். ஆனால் பலர் அந்த இதயத்தை பாதுகாக்கவே தவறிவிடுகிறார்கள். ஒருவர் இறக்கும்போது அவருக்கு மட்டும் பாதிப்பில்லை. அவருடைய மொத்த குடும்பமே பாதிக்கும். எனவே விலை மதிப்பில்லாத உயிரை காக்க இதயத்தை காப்போம். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

  • இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது.
  • மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

  கருவில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகுவது இதயம்தான். 20 வயது வரை இதயம் தொடர்ந்து வளர்ச்சி அடையும். இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது. மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

  மேலும், இதயத்துடிப்புக்கான சக்தியை இதயமே உற்பத்தி செய்து கொள்ளும். இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறையும், வாழ்நாளில் சராசரியாக 2.5 பில்லின் முறையும் துடிக்கிறது. மேலும், நமது வாழ்நாள் முழுவதும் சுமார் 117.34 லிட்டர் ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்கிறது.

  இடது கையின் நடுவிரலின் கீழ்ப்பகுதி மற்றும் வலது கை மணிக்கட்டு பகுதியில் இதயத்துக்கான புள்ளிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட அழுத்தம் கொடுப்பதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.

  பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரோஜெஸ்டிரோன் ஹார்மோன் இதய நோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பானது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் வரை செயல்படும். ஆண்களை விட பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 8 முறை அதிகமாக இதயம் துடிக்கிறது.

  நாம் தும்மும் போது ஒரு வினாடி கண்கள் தன்னிச்சையாக மூடுவதுடன், இதயத் துடிப்பில் சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. நம் சுவாசம் சீரானவுடன் மீண்டும் இதயம் சீராக துடிக்க ஆரம்பிக்கும். இதயத்துடிப்பானது மாரடைப்பு ஏற்படும் போது மட்டுமே நின்றுபோகும்.

  நாம் அதிக அளவு உணர்ச்சி வசப்படும்போதும், மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இதயம் முழுமையாக சுருங்கும். அதேபோல் அதீத மகிழ்ச்சி மற்றும் சிரிக்கும்போது வழக்கத்தைவிட இதயம் 20 சதவிகிதம் அதிகமாக ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.

  ரத்த அழுத்தம். கொலஸ்ட்ரால் அளவுகள், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தான் இதயத்துக்கான வயது கணக்கிடப்படுகிறது. இதயத்துக்கான வயதைப் பொறுத்தே அதன் ஆரோக்கியம் மதிப்பிடப்படுகிறது. இதயத்தின் வயது நம்முடைய உண்மையான வயதைவிட குறைவாக இருக்கலாம்.

  பொதுவாக காலை வேளையில் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை அதிகமாக ஏற்படும். மற்ற நேரங்களை விட காலை வேளையில் மன அழுத்தத்துக்கான ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கட்கிழமை காலை வேளையில் அதிகமானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  இது தவிர, பூனை, நாய் மற்றும் குதிரை ஆகிய விலங்குகள் மனிதனின் இதயத்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் உணர்வு ரீதியான பதிலை வெளிப்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

  • மதுரை தேவகி மருத்துவமனையில் மாரடைப்புக்கு நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்த தகவலை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரீனஸ்டிமல் தெரிவித்துள்ளார்.

  மதுரை

  உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ரீனஸ்டிமல் கூறியதாவது:-

  உலகளவில் மனிதர்கள் இறப்பதற்கு மாரடைப்பு (Heart Attack) முதன்மையான காரணமாக உள்ளது. ஒரு கா லத்தில் மாரடைப்பு என்பது (60) வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்றிருந்தது, ஆனால் இன்று 20 வயதை கடந்த ஆண் பெண் இருபாலருக்கும் மாரடைப்பு என்பது தொடர்ந்து நடை பெறுகிற நிகழ்வாகி மரணத்திற்கு வழிவகிக்கிறது.

  மதுரை அரசரடி தேவகி சிறப்பு மருத்துவமனையில் இருதயநோய் பிரிவில் உலக தரம் வாய்ந்த அதிநவீன இருதய அறுவை சிகிச்சை பிரிவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட்டு வருகிறது.

  2 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், அதி தீவிர இருதய சிகிச்சை பிரிவு, புகழ்பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ரீனஸ் டிமல் M.S., M.Ch.,(CTVS), இருதய அறுவை சிகிச்சை மயக்கவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருபானந்த் M.D., D.M., (Cardiac Anesthetist) மற்றும் அனுபவம் வாய்ந்த தீவிர சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் சிறப்பு பயிற்சிபெற்ற குழுவை இத்துறை கொண்டுள்ளது.

  தேவகி சிறப்பு மருத்துவமனையில் உங்கள் இதயம் பாதுகாப்பான கைகளில் உள்ளது. மருத்துவமனையில் நீங்கள் சிகிச்சை பெறும் ஒவ்வொருநாளும் நீங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் உணர செய்யப்படுவீர்கள், உங்கள் ஆரோக்கியத்திற்கான தீர்வு, உயர்தரமான சிகிச்சை பெற்று, விரைவாக குணமடைந்து மகிழ்ச்சியுடன், இல்லத்திற்கு செல்லலாம் .

  தேவகி சிறப்பு மருத்துவமனையில் கீழ் காணும் இருதய அறுவை சிகிச்சைகளால் நீங்கள் பயனடையலாம், பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை(CABG), வால்வு மாற்று அறுவை சிகிச்சை(AVR /MVR/DVR/TVR), வால்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை(Valve Repair Surgeries), Aortic Surgeries, இரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகளுக்கான அறுவை சிகிச்சை(Embolectomy), நுரையீரல் அறுவை சிகிச்சை(Lung / Lobectomy / Decortication), சிறுத்துளை / நுண்துளை இருதய அறுவை சிகிச்சை(MICS). பிறவி இருதய கோளாறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் (Congenital Heart Disease (CHD) - ASD Closure / VSD Closure / TOF/ Etc). இவை மட்டுமல்லாம் அவசரகால இருதய அறுவை சிகிச்சை(Emergency CABG, Ventricular Septal Rupture, Free Wall Rupture, Cardiac Tamponade, Acute Mitral Regurgitation, Aortic Dissection, Acute Limb Ischemia) போன்ற நோய்களுக்கு 24 x 7 சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.

  இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளையும், சிகிச்சையும் அளிக்க எங்களிடம் 24 x 7 மருத்துவ அவசர ஊர்தி (Ambulance), ரத்த பரிசோதனை ஆய்வகம், ECG, ECHO, TMT, ஆஞ்சியோகிராம் பரிசோதனை (Angiogram), ரத்தநாள அடைப்பிற்கு 'ஸ்டென்ட்' (Angioplasty) சிகிச்சை, இருதய வால்வு சுருக்கத்திற்கு பலூன் சிகிச்சை, பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை, இருதய துவாரங்களை கருவி கொண்டு மூடும் சிகிச்சை மற்றும் கேத்லேப் வசதிகள் உள்ளன.

  ஏழை எளிய மக்கள் பயன்பெரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை, தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், இ.எஸ்.ஐ. பயனாளிகள், பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் மற்றும் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பயனாளிகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×