என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டாவி"

    • பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பாலக்காடு:

    உடல் சோர்வு, தூக்க கலக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஒருவருக்கு கொட்டாவி வருவது இயல்புதான். ஆனால் அந்த கொட்டாவியே ஒருவருக்கு, தான் அனுபவிக்கும் கஷ்டத்தை வாயால் சொல்ல முடியாத அளவுக்கு திறந்த வாயை மூடமுடியாத திடீர் சோகத்தை தந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட அவரால் வாயால் பேசி சொல்ல முடியவில்லை. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாலக்காடு ரெயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி பேசிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து அதேரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்து தனது ஊருக்கு திரும்பினார்.

     

    இதுகுறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில்,

    'வாலிபருக்கு கொட்டாவி விடும்போது வாய் மீண்டும் மூட முடியாமல் போன நிலைக்கு ''டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் எனப்படுவது ஆகும். அதாவது தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்று பெயர். கீழ்தாடை எலும்பின் பந்துபூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடும் நிலையே இது. இதனால் கொட்டாவி விடும்போது வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும். இதன்காரணமாக வலி, பேசவும், வாய் மூடவும் சிரமம் ஏற்படும். அதிகமாக கொட்டாவி விட்டாலும், விபத்துகள் அல்லது சில நோய்களாலும் இது ஏற்படலாம். டாக்டரிடம் சிகிச்சை பெற்றால் மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற முடியும். ஆனால் சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்' என்றார்.

    • சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.
    • தொண்டைப் பகுதியோடு ‘யூஸ்டேசியன்’ குழல் இணைக்கப்பட்டுள்ளது.

    மனிதனின் காது புறச்செவி, நடுச்செவி, உட்செவி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நடுச்செவியானது தொண்டைப் பகுதியோடு 'யூஸ்டேசியன்' என்ற குழல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மிக அவசியமானதாகும்.

    நம் செவிப்பறையின் வெளிப்புறமும் உட்புறமும் ஒரே மாதிரியான அழுத்தம் இருக்க வேண்டும். இல்லையெனில் செவிப்பறை கிழிந்துவிடும். இந்த சம அழுத்த நிலைக்கு யூஸ்டேசியன் குழல் உதவுகிறது.

    கொட்டாவி விடும்போது, அதிக அளவு காற்று தொண்டைப்பகுதிக்கு வந்து வெளியேறுகிறது. அப்போது யூஸ்டேசியன் குழலுக்குள்ளும் அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் தான் சில நொடிப்பொழுது காது அடைத்துக்கொள்கிறது.

    தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது அல்லது யாராவது கன்னத்தில் அறையும்போது, காது முறுக்கப்படும்போது டென்சர் டைம்பானி காதை பாதுகாக்கிறது.

    குறிப்பாக அதிக ஒலிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க தானியங்கியாக இயங்கும் தசை இது. கொட்டாவி விடும்போது இத்தசை தூண்டப்பட மூக்கு, காது, வாய் என மூன்று உறுப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு உருவாகிறது. அப்போது காது கேட்கும்திறன் மழுங்குகிறது. இதைத்தான் காது அடைக்கிறது என்கிறோம்.

    • ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
    • அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது எப்படி நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை. கொட்டாவியின் தீவிரம் காரணமாக எனது தாடை அப்படியே பிடித்துக்கொண்டது. இதனால் என்னால் வாய் பேச முடியாமல் தவிப்பிற்குள்ளானேன். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை நாடினேன். பின்னர் எக்ஸ்ரே எடுத்து உரிய சிகிச்சைகளை அளித்தனர். அதன் பிறகு தான் சரியானது என அவர் கூறி உள்ளார்.


    ×