என் மலர்
பொது மருத்துவம்
- சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளலாம்.
- கால் விரல் காயம் ஆறவில்லையென்றால் விரல் எடுக்கிற நிலைமை வருமா? என்று அறிந்து கொள்ளலாம்.
கேள்வி: சர்க்கரை நோயாளிகளுக்கு புற்றுநோய் உள்ளதா என்று எந்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்? (பன்னீர்செல்வம், வேலூர்)
பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பையகம் (எண்டோமெட்ரியம்) ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டவர்களில் ஆண்களுக்கு 19 சதவிகிதம் அதிகமாகவும், பெண்களுக்கு 27 சதவிகிதம் அதிகமாகவும் இருப்பதாக கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறிய ரத்தத்தில் கீழ்கண்ட டூயுமர் மார்க்கர் பரிசோதனைகளை செய்யலாம்.
கல்லீரல் புற்றுநோய்: ஏ.எப்.பி. (ஆல்பா பீட்டோ புரோட்டின்), கணையப் புற்றுநோய்: சி.ஏ 19-9, பெருங்குடல் புற்றுநோய்: சி.ஈ.ஏ. (கார்சினோ எம்பிரியானிக் ஆன்டிஜன்), மார்பக புற்றுநோய்: சி.ஏ 15-3, சி.ஏ (27-29), சி.ஏ 125, கருப்பையக புற்றுநோய் (எண்டொமெட்ரியல் கேன்சர்): சி.ஏ 125, ரத்த அணுக்கள் பரிசோதனை (கம்ப்ளீட் ஹீமோகிராம்), எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எலும்பு ஸ்கேன், எம்.ஆர்.ஐ, பெட் ஸ்கேன் (பாசிட்ரான் எமிஸ்ஸன் டோமோகிராபி) போன்ற பரிசோதனைகளையும் மருத்துவர் ஆலோசனை பெற்று புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்து பார்க்கலாம்.
கேள்வி: எனக்கு 5 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என் கால் கட்டை விரலில் அடிபட்டு காயம் ஆறாமல் இருக்கிறது. இதனால் என் கால் கட்டை விரல் எடுக்கிற நிலைமைக்கு வருமா? (க. நளினி, மாமண்டூர்)
பதில்: பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு புண் ஆறாமல் இருப்பதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உங்களுடைய கால் கட்டை விரலில் இழைய அழுகல் (கேங்கரீன்) ஏற்பட்டால் மட்டுமே, வேறு வழியில்லாமல் கால் விரலை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் துண்டிக்க நேரலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து கேங்கரீன் உண்டாகும். ஆனால், நீங்கள் ரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் இதை தடுக்கலாம். புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல் போன்றவையும் கேங்கரீன் வராமல் தடுப்பதற்கு சில வழியாகும். மேலும் புண் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ளலாம்.
ஏனென்றால், இன்சுலின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் இன்சுலின் கெரடினோசைட்ஸ் மற்றும் என்டோதீலியல் செல்களை மற்ற திசுக்களில் இருந்து புண் ஆறாமல் இருக்கும் இடத்திற்கு இடம் பெயரச்செய்து புண் சீக்கிரமாக ஆறுவதற்கு உதவி புரிகிறது
கேள்வி: எனக்கு 18 வருடமாக சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு மூட்டு வலி இருப்பதால் வாக்கிங் போக முடியவில்லை. எனவே சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வேறு வழி ஏதும் இருக்கிறதா? (கிருஷ்ணசாமி, மேநல்லூர், திருவண்ணாமலை)
பதில்: உங்களுக்கு மூட்டு வலியால் வாக்கிங் போக முடியாததால் ஆல்டர்நேட்டிவ் எக்ஸர்சைஸ் (மாற்று உடற்பயிற்சி) செய்யலாம். நீங்கள் ஆர்ம் ஸ்விங்க் எக்ஸர்சைஸ் (கைகளை வீசி செய்யும் உடற்பயிற்சி), உடம்பின் மேல் பகுதி உடற்பயிற்சி (அப்பர் பாடி எக்ஸர்சைஸ்), யோகா அல்லது தியானம் செய்யலாம்.
நீங்கள் வாக்கிங் போயிருந்தால் எரிந்திருக்ககூடிய கலோரிகளை ஈடு செய்ய, குறைந்த கலோரி உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத்த சராசரியின் அளவை (எச்.பி.ஏ1சி) அதிகமாக்காமல் தடுக்கலாம்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகவும், புரதச்சத்து உணவுகள், காய்கறிகள், குறைந்த கிளைசீமிக் இண்டக்ஸ் உள்ள பழங்கள், கீரைகள, முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு இறைச்சி (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி) போன்றவற்றையும், எண்ணெயில் பொறித்த அல்லது வறுத்த உணவுகள், துரித உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கலாம்.
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார்.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
- செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை டாக்டரான மாணிக்க வாசகம் கூறியதாவது:-
பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களான அம்மை, சூட்டு கொப்பளம், கண் எரிச்சல், தலை சுற்றுதல், சிறுநீரக கல் உள்ள பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.
* வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
* நமது பாரம்பரிய பானங்களான நீர்மோர், பதநீர், நுங்கு, இளநீர், கூழ் வகைகள் எடுத்து கொள்ளலாம். இவற்றில் உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைப்பதுடன், வெயிலால் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளும் கிடைக்கிறது.
* இயற்கையாக கிடைக்கும் கரும்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, இளநீர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதுடன், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
* சித்த மருத்துவ மூலிகையான நன்னாரி வேரினை கொண்டு தயாரிக்கப்படும் மணப்பாகுவை தண்ணீரில் கலந்து குடித்தால் கண் எரிச்சலில் இருந்து பாதுகாக்கலாம். நமது தாகமும் தணியும்.
* வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் அம்மை, சிறுநீரக கல் போன்றவை வராமல்பார்த்து கொள்ளலாம்.
* இரவில் தூங்கும் போது கால் பாதத்தில் நெய் தேய்த்து கொண்டு தூங்கினால், கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.
* குறிப்பாக நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலைங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
* வெள்ளரிக்காய் சாப்பிடுவதுடன், உடலில் அதனை பூசிக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் தோல் அலர்ஜியில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
* எல்லாவற்றுக்கும் மேலாக குளிர்பானங்கள், குளிர்சாதன பெட்டிகளில் வைத்த குளிர்ந்த தண்ணீர், செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இட்லியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது.
- இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் நிறைந்துள்ளது.
தென் இந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில் செரிமானம் ஆவதோடு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருப்பதால் தென்னிந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இட்லி பிரபலமாகிவிட்டது. உலக இட்லி தினம் கொண்டாடும் அளவுக்கு அதன் புகழ் உயர்ந்துவிட்டது. சமீபத்தில் உலக இட்லி தினம் (மார்ச் 30) கொண்டாடப்பட்ட நிலையில், இட்லி பற்றிய இனிமையாக தகவல்கள் பற்றி பார்ப்போம்.
உடல் எடையை குறைக்கும்: இட்லியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. எனவே இது எடை இழப்புக்கு வித்திடும். மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். அதனால் பசி உணர்வு கட்டுக்குள் இருக்கும்.
செரிமானத்தை எளிதாக்கும்: இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் நிறைந்துள்ளது. உளுந்தம் பருப்பு உடலுக்கு தேவையான இரும்பு சத்தை தக்க வைக்க உதவும். இவை செரிமானத்தை எளிதாக்கவும் வழிவகை செய்யும்.
புரதச்சத்து கிடைக்கும்: இரண்டு வகையான புரதங்கள் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. முதல் வகை புரதம் விலங்கு இறைச்சிகளில் இருந்து கிடைக்கின்றன. அவை உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன. இரண்டாம் வகை புரதம் காய்கறிகள், பழங்கள் போன்ற தாவர வகைகளில் இருந்து பெறப்படுகின்றன. அவற்றுள் சில அமினோ அமிலங்கள் இல்லாதிருக்கும். தானியங்கள் மற்றும் பருப்புகளில் சில அமினோ அமிலங்கள் இல்லாததால் அவை இரண்டாம் வகை புரதமாக கருதப்படுகின்றன. ஆனால் இட்லியில் இந்த இரு கலவைகளும் சேர்க்கப்படும்போது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் கிடைக்கும்.
குடல் ஆரோக்கியத்தை காக்கும்: இட்லி மாவு புளிக்கவைக்கப்படும்போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகின்றன. இவை குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. செரிமானத்தை மேம்படுத்துவது முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.
இட்லியை வண்ணமயமான உணவாகவும், நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு நிறைய காய்கறிகளுடன் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம். சட்னிக்கு பதிலாக காய்கறிகள் அதிகம் கலந்த சாம்பார் தயாரித்து சாப்பிடுவது சிறப்பானது.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
- வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.
கிர்ணி பழத்தின் (Rock Meelon) ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதி ஊட்டச்சத்து நிறைந்தது. கிர்ணி பழங்களில், உயிர்ச் சத்து ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
சாறு நிறைந்த கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதை உட்கொள்வதால் அழகான சருமம் கிடைப்பதுடன் பார்வைத்திறனும் மேம்படும். வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.
அமெரிக்காவின் கான்சஸ் மாநில பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை 2003-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, உயிர்ச்சத்து 'ஏ' மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக, கிர்ணி பழத்தின் மூலம் இத்தகைய பாதிப்புகள் கட்டுப் படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டன.
கிர்ணி பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித் திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்.
மிக மிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்புடைய, நன்கு பலனளிக்கக்கூடிய பழமாக கிர்ணி பழம் விளங்குகிறது.
சாறு நிறைந்த இதன் சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக்கொள்வதால், வயிற்றுக் கோளாறுகளைக் குறைக்க முடியும்.
கவனம் தேவை
வெட்டிய உடனே கிர்ணி பழத்தைச் சாப்பிட்டுவிட வேண்டும். கிர்ணி பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால், பழம் சீக்கிரம் கெட்டுவிடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்.
வெவ்வேறு பழங்கள்
கிர்ணி பழத்தில் பலவிதமான வகைகள் இருக்கின்றன. மஸ்க் மிலான் மற்றும் ராக் மிலான்... இவை இரண்டுமே கிர்ணி பழங் களாகவே அறியப்படுகின்றன. சுவையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் உருவமும், நிறமும் மட்டுமே இவை இரண்டுக்கும் இடையில் சில வேறுபாடுகளை உண்டாக்குகின்றன.
ராக் மிலான், அளவில் சிறியதாக இருக்கும். அதேபோல வெளிப்புற தோல் பகுதி பச்சை நிறம் கலந்திருக்கும். ஆனால் மஸ்க் மிலான், அளவில் பூசணி போல பெரியதாக இருக்கும். அதன் தோல் பகுதியானது, ஆரஞ்சு கலந்த பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வயதுக்கு ஏற்ப தூங்கும் கால அளவு இருக்கும்.
- சராசரியாக 8 மணி நேர தூக்க அவசியம்.
கோவை அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரும், மனநல டாக்டருமான ஜெ.ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:-
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாளில் 3-ல் ஒரு பங்கு காலம் தூக்கத்தில் கழிகிறது. எனவே தூக்கம் என்பது இன்றிய மையாதது. அது சோம்பேறித்தனம் அல்ல. தூக்கம் என்பது விழிப்புடன் வேலை செய்ய ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது.
வயதுக்கு ஏற்ப தூங்கும் கால அளவு இருக்கும். சராசரியாக 8 மணி நேர தூக்க அவசியம். ஒவ்வொருவர் பார்க்கும் வேலையை பொறுத்து அதில் சற்று மாறுபாடு இருக்கலாம். இடையூறு இல்லாமல் தூங்கி அதிகாலையில் புத்துணர்வாக எழுவதே தரமான தூக்கம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை விட தரமான தூக்கமே முக்கியம். எனவே தூக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு படுக்கையை வேறு வேலை குறித்து திட்டமிடும் இடமாக மாற்ற கூடாது. அப்படி செய்தால் மூளை விழித்துக் கொள்ளும். தூக்கம் பாதிக்கும். தூங்கும் போது தான் உடல்உறுப்புகள், மூளை போன்றவை ஓய்வு கொள்ளும்.
தூங்கும் நேரத்தை வரையறுத்துக் கொண்டு திட்டமிட்டபடி தூங்குவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். வயிறுமுட்ட சாப்பிட்ட உடனே தூங்க செல்வது, நிறைய தண்ணீர் குடித்து விட்டு தூங்க செல்லும் போது தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.
மது குடித்தால் தான் தூக்கம் வரும் என்று கூறுவது உண்மை அல்ல. அப்படி ஒருவர் கூறினால் அவர் அந்த நோய்க்கு ஆளாகிறார் என்று அர்த்தம். நன்றாக தூங்குவதற்கு தூங்கும் அறையின் சூழலும் முக்கியம். பயமுறுத்தும் வகையில் இருளாகவோ, வெளிச்சமாகவோ இருக்க கூடாது. மங்கிய வெளிச்சத்தில் காற்றோட்டத்துடன் படுக்கை அறை இருக்க வேண்டும். பகல் நேரத்தில் நிறைய நேரம் தூங்குவது இரவு தூக்கத்தை பாதிக்கும். உடல் பயிற்சி மற்றும் உடல்உழைப்பு இருக்கிற போது தூக்கம் நன்றாக இருக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டால் இருதய கோளாறுகள், சர்க்கரை நோய், உடல் பருமன், மனச்சோர்வு மற்றும் செயல்திறன் குறைபாடு வரலாம்.
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை சம்மந்தப்பட்ட வியாதிகள் 40 சதவீதம் அதிகமாக உள்ளது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், மாதவிடாய் நிறுத்தம் போன்றவை பெண்களின் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம்.
இரவில் செல்போன் போன்ற டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால் தூக்கம் பாதிக்கிறது. இது பெரும் பிரச்சினையாக இளைஞர்கள் மத்தியில் உருவெடுத்து வருகிறது. தூங்க செல்வதற்கு முன்னதாக காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கனவுகள் ஆரோக்கியமான தூக்கத்தின் ஒரு பகுதியாகம். கெட்ட கனவுகள் அடிக்கடி வருவது, அதனால் தூக்கம் கெடுவது, இரவில் கெட்ட கனவுகளை நினைத்து பயப்படுவது போன்றவை இருப்பின் டாக்டர்களை அணுக வேண்டும்.
மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் விஷயங்கள் அப்போது கனவுக ளாக வெளிப்படும். அதில் பெரும்பாலானவை மறந்து போகும். இரவில் தூக்கத்தில் எழுவது, நடப்பது போன்ற குறை பாடுகள் சிறு வயதில் வரும். நாளடைவில் தானாவே சரியாகி வில்லை. இல்லை என்றால் டாக்டரை அணுக வேண்டும். தூங்கும் போது குறட்டை வருவதும், அதனிடையே மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூக்கம் கலைவதும் இருப்பின் கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆண்மைக்குறைபாடு மற்ற நோய் ஏற்பட்டிருப்பதற்கான வெளிப்பாடாகும்.
- உச்சக்கட்டத்திற்கு ஆரோக்கியமான நரம்பு மண்டலமும், ஆண்மை ஏழுச்சியும் அவசியம்.
உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு உருவமைப்பு, உருசிதைவு, டி.என்.ஏ சிதைவு, உயிரோட்டம் அனைத்தும் ஆண்கள் குழந்தையின்மையை அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்துப்பையில் கொழுப்பு அதிகமாகி அதனால் உஷ்ணநிலை அதிகரித்து விந்தணு உற்பத்தி திறன், உயிரோட்டம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. மேலும் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதனாலும் விந்தணு உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது.
ஆண்மைதான் மிடுக்கானத்தோற்றத்தையும், ஆளுமையையும் ஏற்படுத்துகிறது. ஒருவர் ஆண்மையுடன் இருக்கிறார் என்றாலே அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கூறலாம். ஆண்மைக்குறைபாடு மற்ற நோய் ஏற்பட்டிருப்பதற்கான வெளிப்பாடாகும். தினமும் முத்தமிட்டால் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று ரத்த ஓட்டம் அதிகரித்து ஆயுட்காலம் நீட்டிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உச்சக்கட்டம் என்னும் சிகரத்தை எட்டிய தம்பதியர்களின் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டதே இல்லை. உச்சக்கட்டத்திற்கு ஆரோக்கியமான நரம்பு மண்டலமும், ஆண்மை ஏழுச்சியும் அவசியம்.
ஆண்மைக்குறைபாடு ஏற்பட்டுவிட்டால் தம்பதியர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இதை தவிர்க்க தம்பதியர் அறிவியல் சார்ந்த சிறந்த பாலியல் மருத்துவ சிகிச்சை நிபுணரை அணுகி ஆண்மை குறை என்னும் குறைபாட்டை எளிதில் நீக்கிடலாம்.
உலகத்திலேயே முதன்முதலாக ஆண்களின் நல்வாழ்வுக்கென்றே தொடங்கப்பட்டது வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை. இங்கு
* ஆண்மைக்குறைவு
* வளைந்த ஆணுறுப்பை சரி செய்தல்
* செக்சில் ஆர்வமின்மை
* விந்து முந்துதலை தடுத்தல்
* விந்தணுக்கள் குறைவு
* சிறிய ஆணுறுப்பை பெரிதாக்குதல்
* புரோஸ்டேட் வீக்கம்
* புரோஸ்டேட் புற்றுநோய்
* நீரிழிவு
* திருமணத்திற்கு முன் பரிசோதனை
* தம்பதியருக்கான செக்ஸ் ஆலோசனை
ஆகிய வை உள்பட ஆண்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மையத்தின் கீழ் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் இயக்குனர் பேராசிரியர் டி.காமராஜ் இந்தியாவிலேயே பாலியல் மருத்துவ படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். ஆண்மை குறைவை நீக்கிட அதிநவீன சிகிச்சை முறைகளை காமராஜ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி உலக அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார்.
- ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.
- நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும்.
சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பின் அறிகுறிகள். இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.
பரம்பரை காரணம், அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலை, உயரமான இடங்களுக்குச் செல்வது, அதிகமாக உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.
புகைப்பவர்கள், மதுகுடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.
நிமோனியா எனும் நுரையீரல் அழற்சி, நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி, கடுமையான காச நோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும்.
நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். நீண்டகாலமாக படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள் ஆகியோருக்கும் ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். குடல் புண் நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.
- வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது.
- பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. வாழைப்பழம், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை தீர்மானிப்பது அதன் பழுத்த நிலை மற்றும் நாம் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை ஆகும். பொதுவாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளது. பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள் பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு சற்று அதிகம். வாழைப்பழத்தில் அதிகமான அளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், பச்சை வாழை போன்ற வாழை வகைகளை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு சிறிய வாழைப்பழம் சாப்பிடலாம். பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழ வகைகளை தவிர்ப்பது நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த கொதிப்பை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
- சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது.
சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் அவர்களும் இரத்த தானம் செய்ய விரும்புவார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா? இந்த கேள்வி பலரிடமும் இருப்பதால் இதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் போன்ற தன்னலமற்ற செயலை தாராளமாக செய்யலாம். கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது. அவை:
1) ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்,
2) சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்,
3) இன்சுலின் ஊசி் செலுத்தி கொள்பவர்கள்,
4) உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள்,
5) வயது 18-க்கும் குறைவானவர்கள்,
6) ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள்,
7) ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள்,
8) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,
9) காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்,
10) கடந்த 3 மாதங்களுக்குள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,
11) ஹெபடைட்டிஸ் பி அல்லது சி, மற்றும் எச்.ஐ.வி நோய் தொற்றுள்ளவர்கள்.
நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் 56 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானமும், 7 நாட்களுக்கு ஒரு முறையும் பிளேட்ளட் தானமும் செய்யலாம். அதேபோல் இதய நோய் அல்லது பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்த பிறகு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
- தாகத்தை தணிப்பதற்கு சிறந்த பானமாகவும் கரும்பு சாறு விளங்குகிறது.
- கரும்பு சாற்றை ஏன் பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாகத்தை தணிப்பதற்கு சிறந்த பானமாகவும் கரும்பு சாறு விளங்குகிறது. கரும்பு சாற்றை ஏன் பருக வேண்டும் என்பதற்கான பிற காரணங்கள் குறித்து பார்ப்போம்.
மஞ்சள் காமாலைக்கு தீர்வளிக்கும்:
ஆயுர்வேதத்தின் படி, கரும்பு இயற்கையான குளிர்ச்சித்தன்மை கொண்ட பொருளாகும். இது கல்லீரலை வலுப்படுத்தக்கூடியது. மஞ்சள் காமாலை நோய் நெருக்கவிடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் குணமாகுவதற்கும் துணைபுரியக்கூடியது. எந்தவகை நோய்பாதிப்பின்போதும் இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்வதற்கு கரும்பு சாறு உதவக்கூடியது.
நோய்த்தொற்றுகளை தடுக்கும்:
கரும்பு சாறு டையூரிடிக் பண்புகளை கொண்டது என்பதால் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது. தொடர்ந்து கரும்பு சாறு பருகுவதன் மூலம் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வையும் கரும்புச்சாறு போக்கும். கரும்பு சாறில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. சோடியமும் குறைவாகவே இருக்கிறது. சிறுநீரகங்களை பாதுகாப்பதில் கரும்பு சாறுக்கு முக்கிய பங்கு உண்டு.
செரிமானத்தை மேம்படுத்தும்:
செரிமான மண்டலம் சீராக இயங்கவும், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும் கரும்பு சாறு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வளிக்கும்.
எலும்புகளை வலுவாக்கும்:
கரும்புச் சாற்றில் உள்ளடங்கி இருக்கும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் முடியும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கி, எலும்புகளை வலுவாக வைத்திருக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வரலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:
கரும்பு சாற்றை தவறாமல் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக கோடை கால மாதங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும். அதனை சரிபடுத்த தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் பருகுவது நல்லது. மேலும் கரும்பு சாறில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் செரிமான கோளாறுகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.
- இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை தூங்குவது சிறந்த பழக்கமாக கூறப்படுகிறது.
- குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே...
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே...
தூக்கமில்லை மகளே...
என்ற பாடல் சித்தி என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி இடம் பெற்றது.
அதில் பெண்களுக்கு தூங்ககூட நேரம் இல்லாத அளவிற்கு எப்போதும் வேலை இருக்கும். எனவே இப்போதே தூங்கிக் கொள் என்று பிறந்த மகளுக்காக தாய் பாடுவது போன்று பாடல் இடம் பெற்று இருக்கும். தூக்கத்தை இழக்கிற போது துக்கத்தை தேடிக் கொள்கிறோம் என்று தான் கூற வேண்டும்.
நவீன தொழில்நுட்ப சாதனங்கள்
எனவே இந்த ஆண்டுக்காக உலக தூக்க தினமான மார்ச் 17-ந் தேதியை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற கருப்பொருளில் கடைபிடிக்கிறார்கள். தூக்கம் கெட்டுப்போனால் ஆரோக்கியம் கெட்டுப்போய் விடும் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. முந்தைய காலங்களில் மனிதர்களிடம் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் இரவில் படுத்ததும் தூங்கி விடுவார் கள். ஆனால் தற்ேபாது உடல் உழைப்பு குறைந்து விட்டது. மேலும் டி.வி., செல்போன், சினிமா, இணையதளம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.
அதில் குறிப்பாக செல்போன்களில் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பல்வேறு விதமான செயலிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் உலகிலேயே இந்தியர்கள் தான் மிக குறைந்த நேரம் தூங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தூக்கம் அவசியம்
இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை அதாவது 8 மணி நேரம் தூங்குவது சிறந்த பழக்கமாக கூறப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். மேலும் இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை உடல் (கிடைமட்டமாக) படுக்கை நிலையில் இருக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.
ஆனால் ஒவ்வொருவருடைய பணி, குடும்ப சூழலை பொறுத்து தூங்கும் நேரம் மாறுபடுவது இயல்பாக இருக்கிறது. ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் தான் காலையில் புத்துணர் வுடன் செயல்பட முடியும். தூக்கம் என்பது மூளை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ஒரு இயற்கையான வழி ஆகும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. போலீஸ், தீயணைப்பு, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், டாக்டர் உள் ளிட்ட மருத்துவ பணியாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், காவலாளிகள், டிரைவர்கள், போன்றோருக்கு இரவுப்பணி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
அதற்கு ஏற்ப அவர்கள் தங்களின் தூக்கம் மற்றும் உணவு சாப்பி டும் நேரத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதன் காரணமாக அவர் களுக்கு உடல் மற்றும் மனஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இரவுப் பணி செய்யாதவர்கள் கூட மிகமிக தாமதமாகவே படுக்கைக்கு செல்கின்றனர். தூங்கும் நேரத்தில் விழித்து இருப்பதால் ஹார்மோன்கள் வழக்கம் போல் செயல்படுவது பாதிக்கப்படும். ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால் தூக்கம் இழந்து தவிப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும்.
200 கோடி பேருக்கு பாதிப்பு
அது போன்ற நிலை தொடர்வதால் தான் தூக்கமின்மை என்ப தும் தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் தூக்கமின் மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 200 கோடி பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எவ்வித தடங்கலும் இன்றி தினமும் வழக்கமான நேரத்தில் தூங்குவதால் நாள்பட்ட நோய்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் குறையும் என்று 'வோர்ல்ட் ஸ்லீப் டே' நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
போதுமான அளவு தூங்கவில்லை என்றால் கவனக்குறைவு, உணர்ச்சிவசப்படுதல், எரிச்சல், மன அழுத்தம், கோபம், சோகம் மற்றும் மனச் சோர்வு போன்றவை ஏற்படலாம். அது ஹார்மோன்களின் உற்பத்தியை சீர்குலைக்கிறது. அதோடு இரவில் நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து இருப்பதால் உடல் பருமன், சர்க்கரை வியாதி, இதய நோய், ரத்த கொதிப்பு, போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மூளையை தூண்டி தூங்குவதற்கான சிக்னலை கொடுக்க புரோலாக்டின், காபா, அடினோசின் போன்ற ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்க வேண்டும். ஆனால் இரவில் காபி, டீ குடித்தால் அதில் இருக்கும் ரசாயனம், அடினோசின் உற்பத்தியை குறைத்து விடும்.
ஆரோக்கியத்திற்கு துணை புரியும்
எனவே முடிந்தவரை தூங்க தயாராவதற்கு 2 அல்லது 1 மணி நேரத்துக்கு முன்பாகவே தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். தூங்கும் போது கைக்கு எட்டும் தூரத்தில் செல்போனை வைக்க கூடாது. இரவு தூக்கத்தை கெடுக்கும் வகையில் பகல் நேரத்தில் தூங்க கூடாது. வாழ்க்கையில் வெற்றி பெற உழைப்பு அவசியம். அதற்கு பொழுதை வீணடிக்காமல் விழிப்புடன் இருந்து பாடுபட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உழைக்க தேவையான ஆற்றலையும், புத்துணர்வையும் தர கூடியதாக தூக்கம் உள்ளது. எனவே இரவு இருளாக இருக்கும் வகையில் நன்றாக கண்மூடி தூங்குவதே ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ துணைபுரியும் என்பதில் சந்தேகம் இல்லை.
- வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
- பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம்.
செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும்.
சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.






