என் மலர்
குழந்தை பராமரிப்பு
- குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.
- குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும்.
குழந்தை வளர்ப்பு Ht125 பத்துமாதம் சுமந்து பெறுவது கூட பெண்களுக்குப் பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்குக் போராட்டம்தான். குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும். குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது.
எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் எனச் சொல்ல முடியாது. மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம். பசி மற்றும் படுக்கையை நனைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலும் அடிக்கடி எழுந்திருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களில்தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். தூக்கம் என்பது இரவு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும்.
குழந்தை விழித்துக் கொண்டிருக்கும் பகல் வேளைகளில் நிறைய வேடிக்கைகள் காட்டவும் இரவில் அதைத் தவிர்க்கவும் உங்களுக்கு வசதியான நேரத்ததில் குழந்தையைத் தூங்க வைத்துப் பழகுங்கள்.
சாப்பாடு ஊட்டியபிறகு சிறிது நேரம் குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள். பிறகு பவுடர் போட்டு தளர்வான ஆடைகளை மாற்றிவிடவும். இது தூங்குவதற்கான இரவு நேரம் என்ற எண்ணத்தை குழந்தையின் மனத்தில் ஏற்படுத்தும்.
குழந்தையை அணைத்தபடியோ தொட்டிலில் விட்டபடியோ தாலாட்டு பாடிக்கொண்டு அல்லது இதமான இசையை ஒலிக்க விட்டுத் தூங்கச் செய்யவும். குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.
சில குழந்தைகள் சாப்பாட்டு நேரத்தில் தூங்கிவிடும். பாதி தூக்கத்தில் எழுப்ப மனமின்றி தாய்மார்களும் அப்படியே விட்டு விடுவதுண்டு, பிறகு பசியெடுத்து விழித்துக் கொள்ளும். குழந்தைக்கு உணவூட்டி, உடனடியாக மறுபடியும் தூங்க வைத்து விடவும். பாதி தூக்கத்தில் எழுந்திருக்கும்போது விளையாட்டு காட்ட வேண்டாம்.
தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் பார்க்கவும். தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலோ, அசைந்தாலோ ஓடிப் போய்த் தூக்க வேண்டாம். சில நிமிடங்களில் அது தானாகவே தூங்கிவிடும். அப்படித் தூங்காவிட்டால் அதனருகில் உட்கார்ந்து மென்மையாகத் தடவிக் கொடுத்து, நெற்றி கழுத்துப் பகுதியில் வருடினால் தூங்கிவிடும்.
குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலிருந்தே அதன் தூக்கப் பழக்கத்தை முறைப்படுத்தலாம். தினம் ஒரே நேரம் தூங்கும் பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தவும். எப்படியோ தூங்கினால் போதுமென ஒவ்வொரு நேரம் தூங்க வைக்க வேண்டாம்.
குழந்தை தானாகத் தூங்கட்டும் என்று விட வேண்டாம். சாப்பாடு கொடுத்த சில நிமிடங்களில் தூங்க வைப்பதே சிறந்தது. தூங்குமிடம் காற்றோட்டமாக, அமைதியானதாக இருக்க வேண்டும். பாதித் தூக்கத்தில் குழந்தையை அணைக்க வேண்டாம். குழந்தையின் தூக்கம் கெடும்.
- வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது.
- வெளிநாட்டுக்கு செல்லும் முன் மாணவர்கள் சில விஷயங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்க செல்லும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பை தொடர்வதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடிவு செய்துவிட்டால் முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயம் விசாவுக்கு விண்ணப்பிப்பதுதான். அங்கு எத்தனை ஆண்டு கல்வி கற்க போகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். அதை விட முக்கியமான விஷயம் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் தகவலை பல்கலைக்கழகத்துக்கு தெரியப்படுத்துவதுதான்.
ஏற்கனவே விசா பெற்றிருந்தாலோ, காலதாமதமாக விசா கிடைக்கும் என்றாலோ அது பற்றியும் பல்கலைக்கழகத்துக்கு உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்துவிட்டால் உடனே கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு தேவையான பணத்தை முன்கூட்டியே தயார் செய்துவிட வேண்டும். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களுடனும், அவர்கள் பின்பற்றும் கலாசாரங்களுடன் இணைந்து வாழவும் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அங்கு செல்வதற்கு முன்பே அங்குள்ள கலாசாரங்களை தெரிந்து கொள்வது சிறப்பானது. இணைய தளங்களும், யூடியூப் வீடியோக்களும் அதற்கு உதவும்.
வெளிநாடுகளில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், அங்கு சேருவதற்கு முன்பு போட வேண்டிய தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும்.
அதில் தட்டம்மை, ரூபெல்லா, ஹெபடைடிஸ் பி, கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர்கள் ஆகியவை அடங்கும். சர்வதேச பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற தடுப்பூசிகளில் எவையெல்லாம் அவசியம் போட வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான டிக்கெட் புக்கிங் செய்வதற்கு காலம் தாழ்த்தக்கூடாது. அங்கு சென்று படிப்பது உறுதியாகிவிட்ட உடனேயே விமான டிக்கெட் புக்கிங் செய்துவிடுவதுதான் நல்லது. கடைசி நேரத்தில் புக்கிங் செய்வது தேவையற்ற பதற்றத்தை வரவழைக்கும். டிக்கெட்டின் விலையும் அதிகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே டிக்கெட் முன் பதிவு செய்யும்போது சவுகரியமான பயணத்திற்கு திட்டமிட்டு விடலாம். பயண சலுகைகளையும் பெறலாம்.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பண விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். கூடுமானவரை டிஜிட்டல் பணமாக வைத்திருப்பதுதான் சிறந்தது. அங்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் சர்வதேச வங்கிகளின் ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.
அத்தகைய கார்டுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. வெளிநாட்டில் வங்கிக்கணக்கைத் திறக்கும் வரை ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு அவற்றை பயன்படுத்தலாம்.
வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமானது. அவசிய தேவை இருப்பின் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளின் சீட்டுகளை உடன் எடுத்துச் செல்லலாம்.
இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லலாம். அந்த பொருட்களை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமானது.
விமான வழிகாட்டு நெறிமுறைகளை படித்து பார்த்துவிட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டதாக இருக்கலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
- குழந்தைகளை உணர்ச்சி வசப்படாமல் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும்.
டீன் ஏஜ் பருவத்தை துவங்கும் முன்பு உங்கள் குழந்தைகள் சில நேரங்களில் பெரிய தலைவலிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. உங்களுடைய செல்லமான, இனிமையான, பாசமான குழந்தைகள் திடீரென்று பிடிவாதம் பிடிக்கும், மரியாதை இல்லாமல், அடிக்கடி முரட்டுத்தனமான கோபத்துடன் நடந்து கொள்ள தொடங்குவதைப் பார்க்கும் எல்லா பெற்றோருக்கும் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும்.
உங்களுடைய முயற்சிகளும், சமாதான பேச்சுகளும் திட்டுகளும் ஒன்றுமே பலனளிக்காமல் போகிறது என்பதை அறிந்து கொள்ளும்போது இன்னும் கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகள் டீன் ஏஜுக்கு வரும்போதுதான் இப்படி சிடுசிடுவென மாறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆனால், அது முழு உண்மை அல்ல, குழந்தைகளுக்கு, முரட்டுத்தனமும் எதிர்த்து பேசும் குணமும் கொஞ்சம் முன்னதாகவே தொடங்கி விடுகிறது என்பதுதான் நிதர்சனம். திடீரென்று தொடங்கும் மோசமான நடத்தை தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கையாளலாம், இதோ உங்களுக்கான சில உத்திகள்.
ஒரு கெட்ட நடத்தையைக் கையாளும்போது, அதனால் உங்களுக்கு மிகவும் அதிகபட்ச கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும் அந்தக் கோபத்தை குழந்தைகள் மேல் காட்டினால், அது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடும், இன்னும் கூடுதல் கோபத்திற்கும் வெறுப்புக்கும் காரணமாகி விடும். அதற்கு பதிலாக, இதை உணர்ச்சி வசப்படாமல் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
முதலில், இது வளர்தலில் மிகவும் முக்கியமான ஒரு கட்டம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உங்கள் குழந்தை இனிமேல் குழந்தையாக இருக்கப் போவதில்லை. இந்த நேரத்தில், உங்கள் குழந்தை உடல் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்குவார்கள். கூடவே பள்ளியில் தரப்படும் அழுத்தங்களும்; சக தோழர்களுடன் நட்பைத் தொடர்வதில் ஏற்படும் சிரமங்களும் சேர்ந்து கொள்ளும். உங்கள் குழந்தை உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவருக்கும் சமாளிக்க ஏராளமான பிரச்சனைகள் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்; நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம்.
சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தை தன்னை சீரியஸாக மற்றவர்கள் கருத வேண்டும், பெரியவர்களைப் போல நடத்த வேண்டும் என்பதற்காகவே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறா(ன்)ள் என்பதை மறக்காதீர்கள்.
- குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமானது.
- முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது.
குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.
- குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் சொல்லித்தர வேண்டும்.
- சாப்பிட்டதும் குழந்தைகளை வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.
மழலைகளின் புன்னகை.... அனைவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவை. குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களை பராமரிக்கத் தேவையான ஆலோசனைகளை பார்க்கலாம்...
* பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பால் பற்கள் முளைத்திராத குழந்தைகள் பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.
* குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட்(பற்பசை) கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும். பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.
* பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் அனைவருமே இனிப்பு சார்ந்த எந்த பொருட்களை சாப்பிட்ட பின்னரும் தண்ணீரால் வாயை கொப்பளித்து மற்றும் தண்ணீர் குடிப்பதன் மூலம் இனிப்பானது ஓராளவாவது பற்களில் தங்குவதை தவிர்க்க முடியும்.
* பால் பல் பிரச்சனை தானே; நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்களும் போதிய கவனமின்மை மற்றும் விழிப்புணர்வின்மையுடன் இருப்பார்கள். பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், பால் பல் பிரச்சனை நிரந்தர பற்களும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளின் 7-12 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின், கட்டாயமாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.
* வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், விரல்களில் வேப்பம் எண்ணெய்யை(Neem Oil) தடவி விடலாம். பல குழந்தைகள் விரலில் தடவிய எண்ணெய்யை துடைத்துவிட்டு, மீண்டும் விரல் சூப்புவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை செய்யலாம்.
* குழந்தைகளின் தாடை அமைப்பு, பல் வரிசை ஆகியவை சரியாக இருக்கின்றதா என அவ்வபோது கவனிக்க வேண்டும். பல் வரிசை சீரற்ற தன்மையில் இருந்தால் எந்த வயதில் க்ளிப் அணிய வேண்டும், எந்த வகையான க்ளிப் அணிய வேண்டும் என்பது போன்ற விபரங்களை பல் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.
* குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் என சொன்னால், நீ இரண்டு வேளைகளிலும் பல் துலக்குகிறாயா? என நம்மையே எதிர்கேள்வி கேட்பார்கள். ஆக பெற்றோர்களாகிய நாமும் தினமும் இருவேளைகளிலும் பல் துலக்குவதை கட்டாயமாக செய்தால்தான், நாம் சொல்வதை குழந்தைகளும் கேட்பார்கள்.
* சிறு வயதிலேயே ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டால் பல் பிரச்சனைகள் வரும் என பல பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுண்டு. சிறு வயதில் இதுபோன்ற உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்காமல், கட்டுப்பாடுடன் சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், சாப்பிட்டதும் அவர்களாகவே வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.
* சிறு வயதிலேயே பல் சொத்தை, இடைவிடாத பல் கூச்சமும், பல் வலியும், சீரற்ற பல்வரிசை என எத்தகைய பல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அருகிலுள்ள மெடிக்கல், பல் சாராத மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்து கொள்வது சிறந்தது.
- பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
- டெங்கு காய்ச்சல் அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.
குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டை யைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
ஏடீஸ் (Aedis) கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக்கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக் சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக்குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த் தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட்டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
டெங்கு காய்ச்சல் பாதிக் கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.
மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு காய்ச்சல் அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.
குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவனந்தபுரம் சாலை, பாளை யங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783.
- ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும்.
- பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை உள்ளூர நன்கு பாதிக்கும்.
குழந்தையின் ஊட்டச்சத்து உணவும், அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள், தூக்கத்தில் சிறுநீர்கழித்தல், ஓடி விளையாடாமல் இருப்பது, தூங்காத குழந்தை, குழந்தைகளின் அதிக டிஜிட்டல் பாவனை போன்ற குழந்தையின் வளர்ச்சியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படும்.
இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இல்லையென்றால் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் என்று மிரட்டி வதைக்கிறார்கள்.
அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு (Raising a child) என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும். குழந்தை ஏதாவது தவறு செய்தால், உங்கள் குரலை உயர்த்தாமல், அதே சமயம் உறுதியுடன் அந்த தவறை குழந்தைக்கு புரியும் விதத்தில் சுட்டிக் காட்ட வேண்டும். இதனால் இன்னொருமுறை அந்த தவறை குழந்தை செய்யாமல் கற்றுக் கொள்ளும்.
குழந்தையை அடிப்பதலோ அல்லது குரலை உயர்த்திக் கத்துவதாலோ குழந்தை தன் தவறை புரிந்து கொள்ளபோவதில்லை. இந்த இரண்டுமே குழந்தையை சரியான பாதைக்கு கொண்டு செல்லாது.
தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம் என்பது வயதானவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, எந்த வயதினரையும் தாக்கலாம். சில பள்ளிக் குழந்தைகளும் அவ்வாறு இரவில் தூங்காமல் பிரச்சனை கொடுப்பதுண்டு.
நிம்மதியான நல்ல தூக்கம் குழந்தையை மட்டுமின்றி உங்களையும் அரவணைக்கும்.
உங்கள் குழந்தை குறுநடை போடுகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறீர்களா? விழுந்துவிடுவானா எதையாவது போட்டு உடைப்பானா எனப் பெற்றோர்கள் திகிலில் இருக்கும் காலமும் அதுதான்.
குறுநடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடுகிறார்கள்.
இக்காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சியோடு அறிவாற்றல், உணர்ச்சிகளின் வெளிப்பாடு,சமூக உறவுகளின் விரிவு ஆகியன வளர்வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும்.
இக்காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலையும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
இக்காலத்தில் ஏற்படும்வாசிப்பு பழக்கமானது அவர்களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்குவிப்பதாக அமையும்.
குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில் குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள்.
உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள்.
பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை உள்ளூர நன்கு பாதிக்கும் என்பதை எப்போதும் பெற்றோர் கருத்தில் வைத்திருக்க வேண்டும்.
அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.ஆசிரியர்களின், குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது,பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனர் என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெறுப்பூட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.
- குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
- குழந்தைகளை அதிக நேரம் விளையாட்டில் ஈடுபடுத்துங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இருக்கும் சவால்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவர் சுகன்யாவிடம் கேட்டோம். ''கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது குழந்தை வளர்ப்பு கடினமானதாகவும், மன அழுத்தம் தரக்கூடியதாகவும் மாறியுள்ளது.
பெரியவர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய குழந்தை வளர்ப்பின் நுணுக்கங்கள், தனிக் குடும்ப அமைப்பு முறையால் இந்த தலைமுறையினருக்கு கிடைப்பது இல்லை. டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே உரையாடல் வெகுவாக குறைந்துள்ளது. குழந்தைகள் அளவுக்கு அதிகமாக டிஜிட்டல் கேட்ஜெட்களை பயன்படுத்தினால் அவர்களின் படைப்பாற்றல் திறன் குறையத் தொடங்கும்.
பொருளாதாரச் சூழல் காரணமாக, ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதாலும் மற்றும் வீட்டிற்கு வந்தும் வேலை செய்யும் நிலை இருப்பதாலும், குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவழிப்பதில்லை. இது குழந்தைகள் மனதில் பலவீனத்தை உண்டாக்கும். சிறு பிரச்சினையைக்கூட எதிர்கொள்ள பயப்படுவார்கள். பள்ளி மாணவர்கள், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் வேதனையான நிகழ்வுகளுக்கு இவையும் காரணமாகும்.
பெற்றோர் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும்? குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை, பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அளவுக்கு அதிகமாக கண்டிப்பதும், செல்லம் கொடுப்பதும் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலவிடுவது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சொத்து, செல்வத்தை தருவதை விட, அவர்களை தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் உள்ளவர்களாக வளர்ப்பதே சிறப்பு வாய்ந்தது.
உலகமயமாக்கல் காரணமாக, தற்போதைய உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளை, அவர்களே செய்யும் வகையில் ஊக்குவிக்க வேண்டும். படிப்பு விசயத்தில் அதிக அழுத்தம் தரக்கூடாது. தங்களுக்கு பிடித்தத்தைச் செய்ய அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். நற்பண்புகள் குழந்தைகளை சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களாக உருவாக்கும்.
உடல் அளவிலும், மனதளவிலும் வளர்ச்சி பெற செய்வதற்கு, குழந்தைகளை அதிக நேரம் விளையாட்டில் ஈடுபடுத்துங்கள். உணவு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோர்கள் அவர்களின் சொந்த அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கான அணுகுமுறையை அவர்களின் பெற்றோர்களே முடிவு செய்ய முடியும். குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் யோசனைகளை மதிக்க வேண்டும்'' என்கிறார் மருத்துவர் சுகன்யா.
- சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தைக் காண முடியும்.
- குழந்தைகள் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலம்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் பெரிய மாற்றத்தை குழந்தைகளிடம் நாம் காண முடியும். எதையும், என்றும் குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் சொல்லிக்கொடுத்துக் கற்றுக்கொள்வதைவிட, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலம்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், உங்கள் குழந்தைகள் என்னென்ன நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை நீங்கள் முதலில் பின்பற்ற வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் குழந்தை நேராகப் பல் துலக்கச் செல்ல வேண்டும் என்றால், பெற்றோர்களும் அதைச் செய்ய வேண்டும். ஆம்... உங்கள் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் நீங்கள் முதலில் இருக்க வேண்டும் அல்லது மாற வேண்டும்.
`இப்ப இருக்குற குழந்தைங்க எல்லாம் பெரியவங்களை மதிக்கிறதே இல்லங்க' என்று பலரும் புலம்புவதைக் கேட்கிறோம். இது எங்கிருந்து தொடங்குகிறது? குழந்தைகளிடம் பெற்றோர் பேசுவதை மட்டுமே அவர்கள் கவனிப்பதில்லை, பெற்றோர் யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கோபமாகப் பேசுவது, துணையிடம் அலட்சியமாகப் பேசுவது, துணையின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசுவது, போனில் கத்திப் பேசுவது, வேலையாட்களிடம் அதிகாரமாகப் பேசுவது... இப்படி அனைத்தையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். உங்கள் வார்த்தைகளைத்தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். எனவே, எப்போதும் நாகரிகமான, பண்பான வார்த்தைகளையே பேசுங்கள்.
முன்பு கூட்டுக் குடும்பங்கள் இருந்தபோது, பலதரப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்த குழந்தைகள், ஒவ்வொருவரிடமும் பல வாழ்க்கை பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள். தாத்தா, பாட்டியின் நீதிக்கதைகள் அவர்களை நல்வழிப்படுத்தின. பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியது அவர்களுக்கு `சோஷியல் கெட்டுகெதர்'ரை இயல்பாகக் கற்றுக்கொடுத்தது. காலையில் சண்டையிட்டுக்கொள்ளும் மாமாவும் அத்தையும் மாலையில் சமாதானமாகும்போது, கோபமும் ஈகோவும் ஈசல்போல குறை ஆயுள்கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.
ஏன் நாம் அந்த வாழ்க்கைமுறையை விட்டு வெளியே வந்து, நியூக்ளியர் குடும்பங்களாக மாறினோம்? ``எங்களுக்கு ப்ரைவஸி வேண்டும். நன்றாகச் சம்பாதித்து எங்கள் குடும்பத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும்" என்பார்கள் பலர். ஆனால், குழந்தையின் எதிர்காலத்தைக் காரணம் காட்டி தனிக்குடித்தனம் வந்த எத்தனை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்காக, குழந்தையுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்?
பணத்தை செலவு செய்து கிண்டர் கார்டனில் சேர்த்துவிட்டால், குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும் என்று நினைப்பது தவறு. முன்பு, கூட்டுக்குடும்பத்தில் இருந்த 10 பேர் கற்றுக்கொடுத்த அனுபவக்கல்வியை, இப்போது வழங்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் இருவரிடம் மட்டுமே சேர்கிறது. அதற்கு, அவர்கள் குழந்தையுடன் தங்கள் நேரத்தை செலவு செய்துதானே ஆக வேண்டும்? எனவே, குழந்தைகள் சமர்த்தாக வளர அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு, அம்மா, அப்பா இருவரும் சமம்தான். அம்மா சொன்னால் அப்பா கேட்பார் என்றும், அப்பா சொன்னால் அம்மா கேட்பார் என்றும் பழக்கப்படுத்துவது அவசியம். அம்மா நோ சொன்னால் உடனே அப்பாவை தாஜா செய்து வேண்டியதை சாதித்துக்கொள்வது, அப்பா மறுத்தால் அம்மாவிடம் அனுமதி வாங்குவது என்று அவர்களை பழக்கினால், அது காலம் முழுவதும் தொடரும் பிரச்னையாக மாறிவிடும்.
பெற்றோர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் அதைக் குழந்தை முன் காட்டிக்கொள்ளக் கூடாது. அப்பா திட்டினால், உடனே அம்மா, அப்பாவைத் திட்டிவிட்டு குழந்தையை சமாதானப்படுத்துவது கூடாது. `அப்பாக்கு கோபம் வர்ற மாதிரி நீ ஏன் நடதுக்கிற, அதனாலதான் அப்பா திட்டினாங்க, இனிமே பண்ணாத' என்று குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டிருக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், சின்ன சின்ன தவறுகளைத் தவிர்த்தாலே போதும்... குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தைக் காண முடியும். குழந்தைகளிடம் என்றுமே கட்டாயப்படுத்தி ஒரு விஷயத்தை திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும்படி உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.
- வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பெரியவர்கள் குழந்தைகளோடு விளையாட வேண்டும்
- குழந்தைகள் எப்போதுமே மனரீதியாக உற்சாகமாக இருக்க வேண்டியவர்கள்.
குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமான மனநிலையும், சிறந்த செயல்பாடுகளையும் உடையவர்கள். ஆனால் அந்த உணர்வுகள் அடிக்கடி தடுத்தலுக்கும், கட்டுப்படுத்துத லுக்கும் உட்படுகிறது. இதனை தாண்டித் தான் குழந்தைகள் இயல்பை தொலைக்காமல் தங்களை காத்து கொள்ள வேண்டி இருக்கிறது.
எது சரி, எது தவறு என்ற வரையறைகளை மிகச் சரியாக கடைபிடிப்பதுபோல் பெரியவர்கள் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அது பல நேரங்களில் குழந்தைகளிடம் எதிர்விளைவை ஏற்படுத்தி விடக்கூடும். யாருமற்ற இடத்தில் குழந்தைகள் தனியாகவே விளையாடுவார்கள். அப்போது தானாகவே விதிகளை உருவாக்கி கொண்டு தனியாக பேசிக் கொண்டு உற்சாகமாக விளையாடும். அந்த விளையாட்டில் ஒரு அதீத தன்மை இருக்கும். அதுவே குழந்தைகள் தன்னை மறந்த உயர்நிலை செயல்பாடாக இருக்கும். அதில் குழந்தைகளின் ஆற்றல், திறன், கற்பனை, மனநிலை ஆகியவற்றை காணமுடியும்.
இது மட்டுமின்றி குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடும்போதும் தங்களின் உண்மையான இயல்புகளை, ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள். அதை கண்டு கொள்ள பெற்றோர்கள் நேரம் ஒதுக்கவேண்டும். அந்த திறமைகளை வளர்த்தெடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தனித்திறமைகள் தான் ஒருவனை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அதை மழுங்கடிக்கும் வேலைகள் குழந்தைகளிடம் நடந்து விடக்கூடாது.
படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று அவர்களின் திறன்களை முடக்கியோ, ஊனப்படுத்தியோ விடக் கூடாது. மேலும் அவர்களுக்கு இயல்பாக வழங்கும் சலுகைகளை கூட தடுத்து விடக்கூடாது.
குழந்தைகள் எப்போதுமே மனரீதியாக உற்சாகமாக இருக்க வேண்டியவர்கள். சுமையோ, பாரமோ, மனஉளைச்சலோ அவர்களின் இயல்பை பாதிக்கச் செய்துவிடும். புதிய எண்ணங்களையோ, செயல்களையோ குழந்தைகள் வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கும். அதை ஊக்குவிக்கவும், பொருள் பொதிந்த தன்மைகளையும் எடுத்துக் கூற வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பெரியவர்கள் குழந்தைகளோடு விளையாட வேண்டும், தோற்றுப்போக வேண்டும். குழந்தைகளை வெற்றி பெறச்செய்ய வேண்டும். பரிசு கொடுக்க வேண்டும். தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களை மதிக்கவும், சிறியவர்களோடு இணங்கியும் செயல்பட வேண்டியதன் நட்பை சொல்லி கொடுக்கவேண்டும்.
நண்பர்களை தேர்வு செய்வதில் குழந்தைகளின் மனநிலை சுவாரசியமானது. அதில் தடையோ, மறுப்போ தெரிவிக்க கூடாது. பேதமற்ற மனநிலை இயல்பில் வளர்க்கப்படாமல் வேறு வகையில் சாத்தியமில்லை. எனவே எல்லா நிலைகளிலும் குழந்தைள் தங்களின் இயல்பான எண்ணத்தோடு சுதந்திரமாக சிந்தித்து செயல்பட விடவேண்டும். அவர்களுக்கு காவல் இருப்பது என்பது எப்போதும் பலன் தராது. அதே நேரத்தில் உரிய வழிகாட்டுதல்களையும், கண்காணிப்பையும் எந்த காலத்திலும் விட்டு விடக்கூடாது. அந்த உரிமை என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஒத்த திசையில் பயணிப்பதாக இருக்க வேண்டும். எதிர்மறையாக இருந்துவிடக்கூடாது என்பது முக்கியம்.
நெருக்கடியை, சவால்களை தனியாக எதிர்கொள்ள விடுங்கள். தோற்றாலும் மீண்டு வர நேரம் கொடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தைரியம் கொடுங்கள், தன்னம்பிக்கையோடு இருக்க பயிற்சி அளியுங்கள். தோல்வி என்பதை வெற்றியாக மாற்ற சில அடி தூரம் தான் பயணிக்க வேண்டும். அதற்கான உறுதியை மட்டும் விட்டு விடக்கூடாது. குழந்தைகள் எதிலும் வெற்றி வாகை சூட தகுதி வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
- பிள்ளைகளை ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அணுக வேண்டும்.
- பெற்றோர் உறுதுணையாக இருப்போம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.
கொடுமை தாங்காத நிலை ஏற்பட்டு குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. அல்லது கண்டல்கள் காயங்கள் என நிலமை மோசமாகும் வரை பொறுத்திருக்கக் கூடாது.
அக்கறையுள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களே உஷார்படுத்திவிடும். பிள்ளை பதற்றமாக இருக்கக் கூடும்,
வழக்கம் போல் உணவு உண்ணாதிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபம் அடையலாம், தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் அவதானிக்க வேண்டும்.
வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே திட்டவோ, அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம்.
எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தாங்கள் இவ்விஷயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.
'பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல' என தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்விஷயத்தில் 'கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்' என நம்பிக்கை அளியுங்கள். பாடசாலை ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விஷயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள்.
சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ஆயினும் நீங்கள் தனியாகச் செய்வதை விட பாடசாலை சார்ந்தவர்களின் உதவியோடு அணுகுவது நல்ல பலன் தரலாம்.
இவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பிரச்சனையை உங்களிடம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள். தட்டிக் கழிக்கமாட்டீர்கள். அனுதாபத்துடன் அணுகுவீர்கள். ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிகையை உங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்துங்கள்.
- கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.
- கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
அச்சுறுதல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும் போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது.
விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள்.
ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும் போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.
கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.
அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
அடித்தல், இழுத்தல், பட்டப் பெயர் வைத்து அழைப்பது, அச்சுறுதல், மிரட்டிப் பணம் கறத்தல் அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.
குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.
இன்றைய காலத்தில் குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.
'பள்ளிப் பிள்ளைகள் தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள் தானே' என அலட்சியப்படுத்தக் கூடாது.
ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






