என் மலர்
குழந்தை பராமரிப்பு
தற்போதைய சூழலில் குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்னைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது.
இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.
சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.
இதற்கு எல்லாம் காரணம் தன்னைச் சுற்றி உள்ளவர்களை நம்பிக்கை இல்லாதவர்களாக மாற்றி வருவதே. யாரையும் நம்பாதே, எதன் மீதும் பற்றுக் கொள்ளாதே, உதவப் போனால் உபத்திரம் ஏற்படும், ஒருவரிடம் உதவி கேட்டு நிற்கும் நிலையில் இருக்காதே இப்படி பெற்றோர்கள் கண்டிப்பு என்கிற பெயரில் தவறான போதனைகள் கொடுத்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகளே. இதை தங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கும் பொழுது, அவர்கள் முன் கூட்டியே அந்த பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் நினைக்கின்றன.
இதனால் குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்னைகளின் வசம் சிக்குகின்றனர்.

இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,
* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.
* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.
* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.
* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.
* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.
* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.
* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.
* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.
* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.
* கணவன், மனைவி இடையே பிரச்னையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.
* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.
* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.
* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் சத்தான உணவை தேவையான அளவு உண்டால்தான் உடல் வளர்ச்சியடையும். ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கல்வியிலும் அவர்கள் கவனம் செலுத்தமுடியும்.
பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் சிறுமி அவள். வீட்டில் இருந்து அவளை கவனித்துக்கொள்ளும் பாட்டிக்கு அறுபது வயது. சிறுமியின் பெற்றோர் முப்பது வயதை கடந்து கொண்டிருக்கிறவர்கள். இருவரும் வேலைக்கு சென்றுகொண்டிருப்பவர்கள். 60, 30, 5 என்ற வயதுகளை கொண்ட மூன்று தலைமுறை அந்த வீட்டில் வசிக்கிறது.
தினமும் காலையில் அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கும்போது, உணவு சம்பந்தமான கூச்சல் அங்கு எதிரொலிக்கும். உணவு தயாரிக்கும் பாட்டி, அவருக்கு பிடித்த, அவர் சத்து நிறைந்தது என்று நம்புகிற உணவை தினமும் தயார் செய்து, சிறுமியின் டிபன் பாக்சை நிரப்புவார். அவளோ அந்த உணவு தனக்கு பிடிக்காது, அதனால் எடுத்துச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிப்பாள். தினமும் காலையில் அங்கு அதட்டல், மிரட்டல், அழுகை எல்லாம் நடக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று இது ஒரு எடுத்துக்காட்டு. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைக்கொண்ட பல வீடுகளில், இந்த காலைநேர கலாட்டா நடந்துகொண்டிருக்கிறது.
இந்த கலாட்டா தவிர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். ஏன்என்றால் குழந்தைகளுக்கு காலை உணவு எவ்வளவு முக்கியமோ அதுபோல் மதிய உணவும் முக்கியம். சத்தான உணவை தேவையான அளவு அவர்கள் மதியமும் உண்டால்தான் உடல் வளர்ச்சியடையும். ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கல்வியிலும் அவர்கள் கவனம் செலுத்தமுடியும்.
பள்ளி செல்லும் பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்களை கவனித்துப்பார்த்தால் அவர்கள் காலையில் கொடுக்கும் உணவை பிடிக்காவிட்டாலும் ஓரளவு சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பள்ளிக்கு கொண்டு செல்லும் மதிய உணவு குறித்துதான் அடம்பிடிக்கிறார்கள். இதற்கான மனோவியல் சார்ந்த காரணத்தை மிக எளிதாக புரிந்துகொள்ளலாம்.
ஒரு சிறுமிக்கு தனது வகுப்பில் பத்து தோழிகள் இருந்தால், மதிய உணவு நேரத்தில் அந்த பத்து பேரின் டிபன் பாக்சை நோக்கி அவள் கவனம் செல்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான உணவுகளை எடுத்து வந்திருப்பதை அவள் கவனிக்கிறாள். அவர்கள் அதை சுவையாக ருசிப்பதையும், சுவாரஸ்யமாக அதை பற்றி பேசுவதையும் கேட்கிறாள். அப்போது, தனது டிபன் பாக்ஸ் மட்டும் தினமும் ஒரே மாதிரியான உணவோடு வருவது அவளுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. எல்லா சிறுவர், சிறுமியர்களும் தங்கள் டிபன்பாக்ஸ் உணவுகளும் காலத்துக்கு ஏற்றபடி மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களை புரிந்துகொண்டு, அத்தகைய உணவு மாற்றங்களை தனது தாயாரோ, பாட்டியோ ஏற்படுத்தாதபோது கோபம் கொள்கிறார்கள்.

பள்ளிக்குழந்தைகளின் மனநிலையில் இருந்து இதை அணுகி செயல்பட்டால் இந்த பிரச்சினை எளிதாக தீர்ந்துவிடும். தினமும் ஒரே மாதிரியான மதிய உணவை குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பி, அதைதான் சாப்பிட்டாகவேண்டும் என்ற சூழ்நிலையை தாய்மார்கள் உருவாக்கக்கூடாது. டிபன் பாக்ஸ் உணவுகளில் புதுமையை உருவாக்கவேண்டும். தினமும் ஒன்று என்ற ரீதியில் வித்தியாசத்தை ஏற்படுத்தவேண்டும். அது கட்டாயம் சமச்சீரான சத்துணவாக இருக்கவேண்டும்.
பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் 100 கிராம் காய்கறியும், 10 கிராம் கீரையும், போதுமான அளவில் புரோட்டீன் உணவும் இடம்பெறவேண்டும். மீன், மாமிசம், முட்டை வெள்ளைக்கரு, பருப்பு- பயறு வகைகளில் புரோட்டீன் இருக்கிறது.
காய்கறி என்றால் அதை பயன்படுத்தி கூட்டு, பொரியல், சாம்பார் போன்றவை களைதான் தயார்செய்யவேண்டும் என்பதில்லை. காய்கறிகளை பயன்படுத்தி கட்லெட் தயார் செய்யலாம். பலவண்ண காய்கறிகளை நறுக்கி சாலட் உருவாக்கலாம். காய்கறிகளை வேகவைத்து அதை பன் உள்ளே வைத்து பர்கர் தயாரிக்கலாம். வேர்கடலையோடு துருவிய காய்கறிகளை சேர்த்து வேகவைத்து வழங்கலாம்.
பிங்கர் சிப்ஸ் விரும்பி சாப்பிடும் குழந்தைகள் என்றால் கேரட், பீட்ரூட் போன்றவைகளை அழகாக நறுக்கி வேகவைத்து உப்பு, மிளகு தூள் கலந்துகொடுக்கலாம். அவ்வளவு ஏன் தோசை, இட்லி தயார் செய்யும்போது அதில் பலவண்ண காய்கறிகளை நறுக்கிப்போட்டால் அது கலர் இட்லியாகவும், கலர் தோசையாகவும் மாறி குழந்தைகளை கவர்ந்துவிடும். அதை சாப்பிடும்போது தேவையான அளவு காய்கறிகள் அவர்கள் உடலில் சேர்ந்துவிடவும் செய்யும்.
இந்த கோணத்தில் தாய்மார்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்றால் அவர் களுக்கு உணவுப்பொருட்களை பற்றி அடிப்படையான அறிவு தேவை. எந்த உணவில் என்ன மாதிரியான சத்துக்கள் இருக்கின்றன என்பதும், எந்த உணவுகள் குழந்தைகளின் உடல் நலனுக்கும், மூளை வளர்ச்சிக்கும் அவசியம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இதற்கு தனிப்பட்ட படிப்பு அவசியம் இல்லை. வாசிக்கும் பழக்கம் இருந்தாலே போதும். உணவு பற்றிய ஏராளமான உபயோகத் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

சிறுவர், சிறுமியர்களிடம் உணவின் உண்மைகளை உணர்த்துவது மிக அவசியம். அதற்கு வசதியாக தாய் ஷாப்பிங் செல்லும்போது சூப்பர் மார்க்கெட்களுக்கும், கடைகளுக்கும் குழந்தைகளையும் அழைத்துச்செல்லவேண்டும். அங்கு சுவீட்கார்ன், குடைமிளகாய் போன்றவைகளை வாங்குங்கள். சுவீட் கார்னை வேகவைத்து அதில் மிளகுதூள், வெண்ணெய் கலந்து வழங்குங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.
அதில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. காய்கறி சேர்த்த பிரைடு ரைஸ் தயார் செய்யுங்கள். குடை மிளகாயை வேகவைத்து, அதன் உள்ளே அதனைவைத்து சேர்த்து சாப்பிடச் சொல்லுங்கள். முட்டை- ரொட்டித் தூள் கலவையில் கோழி இறைச்சியை முக்கி, சிறிதளவு எண்ணெய்யில் பொரித்துகொடுங்கள். இப்படி வித்தியாசமான உணவுகளை தயார் செய்யும்போது தங்கள் வீட்டு சிறுவர், சிறுமியர்களையும் தாய்மார்கள் சமையல் பணிகளில் இணைக்கவேண்டும். அதன் மூலம் சமையல் பற்றியும் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்.
தாய்மார் சமைத்துக்கொடுக்கும் புதுமையான உணவுகளை சாப்பிடும் குழந்தைகள், அவைகளில் எதை பள்ளிக்கான மதிய உணவாக கேட்கிறார்களோ அதை தயாரித்து வழங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உணவின் அருமை தெரியவேண்டும் என்றால் அவர்களை சாப்பிடுபவர்களாக மட்டும் வைத்திருக்காதீர்கள். உணவு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குபவர் களாகவும் உருவாக்குங்கள்.
அப்போது அந்த உணவுப் பொருள் விவசாயியால் எப்படி விளைவிக்கப்பட்டது, எப்படி பராமரித்து, அந்த கடையை வந்தடைந்திருக்கிறது என்பதை எல்லாம் குழந்தைகள் உணரும். அதுபோல் சமையலிலும் இடம்பெறவைத்தால்தான் உணவின் அருமை புரியும். வீணாக்காமல் அதை சாப்பிடுவார்கள். உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர்களுக்கு உணர்த்தி உணவூட்டுங்கள்.
தங்கள் குழந்தைகள் பழவகைகள் சாப்பிடுவதில்லை என்று பெரும்பாலான தாய்மார்கள் சொல்கிறார்கள். நேரடியாக அவைகளை சாப்பிட ஆர்வம் காட்டாத குழந்தைகளை, சின்ன மாற்றங்கள் மூலம் ஆர்வப்படுத்தி விடலாம். பழங்களை நறுக்கி தேன், பாலில் கலந்துகொடுக்கலாம். புளிக்காத தயிரில் கலந்தோ, கஸ்டட்டில் நறுக்கி குளிரவைத்தோ வழங்கினால் ருசித்து சாப்பிடுவார்கள்.
கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ் ரெட்டி, சென்னை.

வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகளை டே கேர்- ல் விடும் போது பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உறவினர்கள் இல்லாத நிலையில் குழந்தைகளை டே கேர்- ல் விட்டுச்செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமிருக்கின்றன. பிள்ளைகள் Day Care ல் பத்திரமாக இருக்க பெற்றோர்கள் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
1. உங்கள் பிள்ளையை டே கேரில் சேர்க்கும்போது, குழந்தை அதிகம் விரும்பும் மற்றும் பிடிக்காத விஷயங்களை, அங்கிருக்கும் காப்பாளரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. இதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாத உணவு வகைகள் மற்றும் இதர விஷயங்களை வற்புறுத்திக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், டே கேர் குழந்தையை பயமுறுத்தாமல் பாதுகாப்புக்கான இடம் என்கிற எண்ணமும் அந்தக் குழந்தைக்கு வருவதற்கு இது உதவும்.
2. எந்த நேரத்தில் குழந்தையை டே கேரில் விடமுடியும், எந்த நேரத்தில் அழைத்து வர முடியும் என்பதை சரியாக முடிவெடுத்தப் பின்னர், அதற்கு ஏற்ற டே கேரில் சேர்ப்பது நல்லது. இதன் மூலம் குழந்தையை காக்க வைக்காமல் அழைத்துச் செல்லவும், இதர பிரச்னைகளில் இருந்தும் தவிர்க்கலாம்.
3. பிள்ளைகளுக்கு, பொதுவாக வீட்டில் கொடுக்கப்படும் உணவு வகைகளையே டே கேருக்கு கொடுத்தனுப்புங்கள். குழந்தை பழகட்டும் என்பதற்காக புதிய வகை உணவுகளைக் கொடுத்து, அதனால் குழந்தைக்கு அலர்ஜி போன்ற ஏதேனும் உபாதைகள் வந்தால் அதற்கு டே கேர் காரணமா, கொடுத்தனுப்பிய உணவா என்று கலங்கி, குழப்பமடைவதைத் தவிர்க்கலாம்.
4. டே கேரில் விடும்போது, அன்றைய தினத்தில் உங்கள் வேலையின் நேரம் முன், பின் ஆகும் என்றால் அதை, காப்பாளரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது சரியானது.

5. டே கேரில் குழந்தையைச் சேர்க்க செல்லும்போதே, மாதக் கட்டணமா அல்லது வருடக் கட்டணமா என்பதையும் நன்கு விசாரித்துவிட்டுச் சேர்ப்பது நல்லது. உங்களுடைய நண்பர்கள் மற்றும் ஏற்கெனவே டே கேரில் குழந்தையை சேர்த்தப் பெற்றோர்கள் போன்றவர்களை விசாரிப்பது நல்லது.
6. டே கேரில் சேர்க்கும் முன்னர் குழந்தை உறங்கும் ரூம் முதல் கழிவறை வரை அனைத்து இடங்களின் சுகாதராம் குறித்து கேட்டறிந்தும், நேரில் ஆய்வு செய்தும் தெரிந்துகொள்வது, உங்கள் குழந்தையின் உடல் நலத்தைக் காக்க உதவும். மேலும், உடல் நலக் கோளாறுகளில் இருந்தும் தவிர்க்க முடியும்.
7. டே கேரில் குழந்தைகளை விடும்போது அவர்கள் தூங்குவதற்கான பெட்ஷீட் முதல் பால் பாட்டில் வரை நீங்களே கொடுத்து தினமும் வாங்கி துவைத்து, கழுவி கொடுத்து அனுப்புவது நல்லது.
8. குழந்தைகளை அழைத்து வருபவர் மற்றும் விசிட்டரின் பெயரை, காப்பக பதிவில் பதிவிட வைப்பது அவசியம் இது குழந்தையின் பாதுகாப்புக்குப் பெரிதும் உதவும்'.

பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.
குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை. பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.
மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை
இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான். இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும்.
விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும். இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து, காற்றடித்த வண்ண பொம்மைகள்.
ஓராண்டு வரை
இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும். மேலும் இப் பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான்.

இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்து விட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான். அவர்களை கவரக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்…
சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக் கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.
ஒன்று முதல் இரண்டு வயது வரை
இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக், பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி. யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும்.
இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதே வேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது.

குழந்தைகளிடம் வெளிப்படும் பழக்கவழக்கங்களை உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் மன நலனை ஓரளவு யூகித்துவிடலாம்.
குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு பெற்றோர் காண்பிக்கும் அக்கறை அவர்களின் உடல்நலன் சார்ந்ததாக மட்டும் இருக்கக்கூடாது. குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் உடல்நலனில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை யூகித்துவிட முடியும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் முடியும். ஆனால் குழந்தைகளின் மனநலனில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை வெளிப்படையாக தெரியாது. அதனை உடனுக்குடன் அறிந்து கொள்வதும் கடினமான விஷயம். ஆதலால் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தின் மீதும் கவனம் பதிக்க வேண்டும்.
குழந்தைகளிடம் வெளிப்படும் பழக்கவழக்கங்களை உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் மன நலனை ஓரளவு யூகித்துவிடலாம். குழந்தைகள் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அவர்களின் பழக்கவழக்கங்களில் அவை பிரதிபலிக்கும். நன்மை, தீமைகளை அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்படும். குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென்று வலம் வருவதற்கு சிந்தனையும், செயலும் போட்டிப்போட்டுக்கொண்டு செயல்படுவதே காரணம்.
தாங்கள் பார்க்கும் விஷயங்களை மனதில் உள்வாங்கிக்கொண்டு அப் படியே திரும்ப செய்து பார்க்கும் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாக வெளிப்படும். அதிலும் பெற்றோர் எதை சொன்னாலும், செய்தாலும் அதன்படியே செயல்படும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ப பெற்றோர் குழந்தைகள் மனதில் நல்ல விஷயங்களை புகுத்த வேண்டும். நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். அவைகள் குழந்தைகளின் மன நலனை மேம்படுத்துமாறு அமையவேண்டும். அதற்கேற்ப குழந்தைகள் மனதை கவரு கின்ற நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். நல்லவைகளை குழந்தைகள் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒருபோதும் அவர்களின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. குழந்தைகளால் செய்ய முடியாத விஷயமாகவே இருந்தாலும், வழிமுறைகளை கற்றுக்கொடுத்து அதனை செய்து பார்க்க தூண்ட வேண்டும். பலமுறை முயன்றும் தோல்வியையே தழுவும் பட்சத்தில் தன்னுடைய வரம்பை தானே புரிந்து கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.
அதன்பின்பு ஒரு விஷயத்தை செய்து பார்க்க தொடங்கும் முன்பே தன்னால் அதனை செய்து முடிக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தாமாகவே உணர்ந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். தனக்கு சாத்தியமாகும் காரியங்களை தேர்வு செய்யும் பக்குவம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடும். அதன் மூலம் தங்களுடைய திறமைகளை தாங்களே மதிப்பீடு செய்யும் மனோபாவம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
தன்னால் ஒரு காரியத்தை செய்து முடிக்க முடியாது என்பதை ஆரம்பத்திலேயே உணரும்போது, அதனை செய்து முடிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சிப்பார்கள். அதன் பிறகு சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு அக்காரியத்தை செய்து முடிப்பதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். தொடர்ந்து முயற்சித்தால் எதுவும் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் தோன்றும். சுயமாகவே சிந்தித்து செயல்படுபவர்களாகவும் தங்களை வளர்த்து கொள்வார்கள்.

குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்? எந்த மாதிரியான பால் நல்லது என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தாய்ப்பாலைவிட குழந்தைகள் அதிகம் பருகுவது பசும்பால்தான். குழந்தைக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம், விட்டமின் பி12 என ஏராளமான சத்துக்கள் பாலில் கிடைப்பதால், குழந்தையின் முதல் ஆறு மாதங்கள் பால் மட்டுமே முழு உணவுத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வோர் உணவாகக் குழந்தை உண்ணத் துவங்குகிறது. மற்ற உணவுகளோடு பாலும் அதிகளவில் வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்? எந்த மாதிரியான பால் நல்லது என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
‘பாலில் கால்சியம் உட்பட ஏராளமான சத்துகள் இருக்கிறது. மற்ற உணவுகளைவிட பாலைக் குடிக்கும்போது கால்சியம் சத்துகள் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட பால் நல்லது. தற்போது சின்தடிக் பால் என விற்பனைக்கு வருகிறது. ஐந்து அல்லது ஆறு நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்கிறார்கள். சின்தடிக் பால் வகைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.
பதப்படுத்தப்பட்ட ஆவின் பால் நல்லது. சிறிய குழந்தைகள் சாதம் போன்ற உணவுகளைச் சாப்பிடத் துவங்குவதற்கு முன்னர், அழும்போது தேவைக்கேற்ப பால் வழங்கலாம். எந்த வயதுடைய குழந்தையாக இருந்தாலும், பாட்டிலில் பால் கொடுக்கக் கூடாது. பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுப்பதால், இன்பெக்க்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், ஸ்பூனில் கொடுக்க வேண்டும். கொஞ்சம் பெரியவர்களானதும் டம்ளரில் குடிக்கப் பழக்க வேண்டும்.

வளரிளம் பருவக் குழந்தைகளுக்குப் பால் மிகவும் அத்தியாவசியமான, அவசியமான உணவு. குழந்தைகள் உணவு உண்ணத் துவங்கிய பின்னர் காலையில் ஒரு டம்ளர், மாலையில் ஒரு டம்ளர் என 500 மி.லி அளவில் பால் வழங்கினால் போதும். பாலில் சுண்ணாம்புச் சத்து, கால்சியம் அதிகளவில் உள்ளது. பற்களின் ஆரோக்கியத்துக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பால் அவசியமான ஒன்று.
எப்போதெல்லாம் எந்த அளவில் பாலைக் கொடுக்க வேண்டும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். சில பெற்றோர்கள், மற்ற உணவுகளை ஊட்டுவதற்குச் சோம்பல் பட்டு வளர்ந்த குழந்தைகளுக்குக்கூட பாலை ஊற்றிக் கொடுப்பதை பார்க்க முடிகிறது. அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவு தூக்கத்தில் குழந்தைகள் அழுதால்கூட, பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுத்துவிடுவார்கள்.
காலையில் எழுந்ததும் பல் முளைத்த குழந்தைகள் பல் துலக்கிய பின்னரும், பல் முளைக்காத குழந்தைகளாக இருந்தால் வாய் கொப்பளித்த பின்னரும் ஒரு டம்ளர் பால் குடிப்பது சரியான வழிமுறை. பின்னர், பெரியவர்கள் போல அவர்களும் காலை உணவாக இட்லி, தோசை உட்கொள்ள வேண்டும். பல பெற்றோர்கள் இட்லி, தோசைக்கும் குழந்தைகளுக்கு பால் ஊற்றி, சர்க்கரை போட்டு சாப்பிட வைக்கின்றனர்.
ஒரு வயது முடியும்போதே சட்னி அல்லது சாம்பாரை தொட்டு சாப்பிடப் பழக்க வேண்டும். மாலை நேரத்தில் ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம். இரவு பருப்பு சாதம் அல்லது பால் சாதம் அல்லது இட்லி என திட உணவாகக் கொடுத்தாலே போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் தூக்கத்தில் பால் கொடுப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்று கவலைப்படும் பெற்றோர்கள் அவர்களுக்கு சிறு சிறு பயிற்சிகள் அளித்து கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும்.
உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும்.
குழந்தையின் எழுத்து நன்றாக இல்லை என இரட்டைக் கோடு, நான்கு கோடு நோட்டுகளை வாங்கித் தந்து, பக்கம் பக்கமாக அவர்களை எழுதச் சொல்லி வற்புறுத்தினால், அவர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். குழந்தையின் கையெழுத்தை அழகாக்க, முதற்கட்டமாக ஃபைன் மோட்டார் ஸ்கில் (Fine Motor Skill) எனப்படும், அவர்கள் கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்க்க வேண்டும். கை விரல்களுக்கு அடிக்கடி வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதியடைந்து, எழுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அது தொடர்பான பயிற்சிகளைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை குழந்தைகளுக்கு வாங்கித் தந்து, பிசைந்து விளையாட, சின்னச் சின்ன உருவங்கள் செய்யப் பழக்கப்படுத்துங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
மைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு என ஏதேனும் ஒரு மாவினைப் பிசைந்து, பெரிய, அகலமான தட்டில் வைத்து, குழந்தையை அதில் ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
சில்லறைக் காசுகளை எண்ணி, அவற்றை சிறு துளையுள்ள உண்டியலில் குழந்தைகளைப் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும்; பென்சிலை வழுக்காமல் பிடித்து எழுத அவர்களின் விரல்கள் பழக்கப்படும்.
குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிமானத்தன்மை அதிகரிக்கும்.

குழந்தைகள் பேப்பர்களைக் கிழித்து பந்துபோல உருட்டி விளையாடினால், தடை போடாமல் அதை அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். அல்லது, அக்குபஞ்சர் பந்துகளை வாங்கித் தந்தும் விளையாடச் சொல்லலாம்.
குழந்தைகளிடம் உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள், பாசிகள் போன்றவற்றை கோக்கச் சொல்லலாம். அதேபோல தடிமனான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் அவர்களை நூலை கோக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.
உங்கள் குழந்தைக்குப் பிடித்த நிறத்தில் க்ரயான்ஸ் அல்லது கலர் பென்சிலை அவர்களிடம் கொடுத்து, முட்டைக் கூடு, காகிதக் கோப்பை போன்றவற்றில் அவர்களைப் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.
சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மட்டும் சரிவர எழுத வராமல் இருக்கலாம். அதனால் அவர்களின் மொத்தக் கையெழுத்தும் பார்க்க சரியில்லாதது போன்று தோன்றும். எனவே, சார்ட் அல்லது கார்ட்போர்டு அட்டைகளில் அந்த எழுத்துக்களை மட்டும் பெரிதாக எழுதி, அதன்மீது க்ளேவை வைத்து அந்த எழுத்து போன்றே வடிவமைக்கச் சொல்லலாம்.
குழந்தைகளின் நரம்புகள் மெலிதாக இருக்கும் என்பதால் அவர்கள் எழுதப் பழகும்போது பிடிமானத்துக்குக் கடினமாக இருக்கும் பேனா அல்லது பென்சிலை வாங்கிக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்கள் கை சிரமத்துக்கு உள்ளாகும்.
குழந்தைகளை அவர்கள் கைகளை இறுக்கமாக மூடி மெதுவாகத் திறக்க சொல்லலாம். இப்படி நாள் ஒன்றுக்கு 10 முறையாவது செய்து பழக வையுங்கள்.
இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வைத்தால், உங்கள் குழந்தையின் கையெழுத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும்.
இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்த மாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.
உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது.
மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.
தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் வளரும்.
ஒற்றைக் குழந்தைகள் மட்டுமே உள்ள நியூக்ளியர் குடும்பங்களில், குடும்பத்தின் மொத்த கவனமும் குழந்தை மீதே குவிகிறது. அவர்கள் பசியை உணரும் முன்பே உணவூட்டப்படுகிறது. விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் குவிக்கப்படுகிறது. குழந்தை தனக்கு எது தேவை என்று யோசிப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. பெற்றோரின் அதீத கவனிப்பு, அவர்களின் வாழ்விலிருந்து அனுபவம் வழியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது.
நாம் எதிர்பார்க்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. சிலவற்றுக்குக் காத்திருக்க வேண்டும். தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதைக் குழந்தைகள் உணராமல் வளர்க்கப்படுகின்றனர். சிறு வயதில்தான் நினைத்தது கிடைக்காவிட்டால், அந்தக் குழந்தை அழுகையாகவும் அடம்பிடித்தலாகவும் வெளிப்படுத்தும். அதன் அழுகையை நிறுத்துவதற்காகவும் மனம் வருந்தக்கூடாது என்ற நோக்கத்திலும் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர்.

இது தவறான நடைமுறை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தை நல்ல விஷயங்களைச் செய்யும்போது, பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே குழந்தை தவறு செய்யும்போது தண்டிப்பதால், குழந்தை கோபம்கொள்கிறது. இங்கே தண்டிப்பதற்குப் பதிலாக, 'நீ செய்தது தவறு' எனப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.
குழந்தைகளின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் தோல்வியில் முடியும்போது, சமாதானப்படுத்துவது தவறு. மாறாக, 'நடந்தது நடந்துவிட்டது அடுத்து என்ன செய்யலாம்?' என்று உங்கள் குழந்தையிடமே கேளுங்கள். தோல்விக்கான காரணங்களை குழந்தைகளிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடுங்கள். எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று ஆலோசித்து தன்னை மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்பை குழந்தைக்குக் கொடுங்கள்.
தன்னிடம் மாற்ற வேண்டிய குறைகள் இவைதான் என்று குழந்தைகள் மனம் பட்டியலிட்டுக்கொள்ளும். அவற்றை மாற்றவும் முயற்சி செய்யும். இதுபோன்ற விஷயங்கள் குழந்தைக்குள் தானாகவே நடக்கும். தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் வளரும்.

மாறாக பெற்றோர் தங்கள் சுமைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. எதையும் திணிக்காமல் குழந்தைகள் இனிப்பாக வளர உதவுங்கள்.
குழந்தைகளின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவைகளை தனிமனிதர்களாக பாவிக்கும் சில பெற்றோர்களுக்கு மத்தியில், பல பெற்றோர்கள் ஏதோ தாங்கள் உருவாக்கிய பொம்மைகள்போல் நினைத்து குழந்தைகளை அடிமைப்படுத்தவே செய்கிறார்கள். அவர்கள் அளவுக்கு மீறி அன்பும் செலுத்துகிறார்கள். எல்லைகடந்து அடக்குமுறையையும் கையாளுகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார்கள்.
தற்போது வீட்டிற்கு ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தோல்விகளை தாங்கிக்கொள்ளும் பக்குவத்திலோ, சூடான வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ளும் மனநிலையிலோ இல்லை. பெற்றோரின் வார்த்தைகளால் எளிதாக காயமடைந்துவிடும் குழந்தைகள், ரொம்பவும் கவலையடைகிறார்கள். கவலை அதிகமாகும்போது, பெற்றோரிடம் இருந்து விலகி காணாமலும் போய்விடுகிறார்கள். அது பெற்றோருக்கு தீராத மனக்கவலையை உருவாக்கிவிடுகிறது.
பள்ளிக்கு செல்லும் இரண்டு சிறுவர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள். யாரோ பணத்திற்காக அவர்களை கடத்திச் சென்றுவிட்டார்கள் என்ற பயத்தில் பெற்றோர் போலீசில் புகார் செய்தார்கள்.
போலீஸ் பல வழிகளில் தேடுதல் வேட்டை நடத்தியும், சிறுவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் நிம்மதியைத் தொலைத்த பெற்றோர் தங்கள் குழந்தைகள் இறந்துவிட்டார்களோ என்று அஞ்சினார்கள்.
இரண்டு வாரத்திற்கு பிறகு பக்கத்து மாநிலத்தில் அந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் ‘ஏன் வீட்டைவிட்டு வெளியேறினீர்கள்?’ என்று காரணம் கேட்டபோது, ‘பெற்றோர்கள் தங்களை திட்டியதாகவும், அவர்களை பழிவாங்குவதற்காக வீட்டைவிட்டு ஓடியதாகவும்’ சொன்னார்கள்.
வீட்டை விட்டு ஓடுவதற்கு முன்னால் இருவரும் பக்கத்தில் உள்ள மைதானத்திற்கு சென்று, தங்களுக்கு பெற்றோர் மீதிருக்கும் கோபத்தை பற்றி வெளிப்படையாக விவாதித்திருக்கிறார்கள். தங்களை காயப்படுத்தியதால் அவர்களை கவலைப்படவைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, அந்த காணாமல் போகும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் நினைத்துப்பார்க்கவே இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்றபோது அவர்கள் சமூக விரோதிகளின் கண்களில்பட்டிருந்தால் அவர்கள் நிலை என்னவாகியிருக்கும்?

கொல்கத்தாவில் சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒன்றாக சில பள்ளிச்சிறுமிகள் காணாமல் போனார்கள். பதறிப்போன பெற்றோர் காவல் துறையின் உதவியை நாட, அவர்கள் அதிவேகமாக நகரெங்கும் தேடி, அந்த சிறுமிகளை கண்டுபிடித்து வீடு கொண்டுபோய் சேர்த்தனர்.
‘பெற்றோர் எப்போதும் எங்களை படி படி என்று மிரட்டுகிறார்கள். விளையாடச் செல்லும் நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால் எங்களால் தோழிகளுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை. நாங்கள் ஏதாவது தப்பு செய்தால் கடுமையாக திட்டி அடிக்கிறார்கள். எங்கள் உணர்வுகளை காயப்படுத்தும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கத்தான் எல்லோருமாய் சேர்ந்து வீட்டைவிட்டு ஓடினோம்..’ என்று காரணங்களை அடுக்கினார்கள்.
‘சரி.. இப்போது அவரவர் பெற்றோரோடு வீட்டிற்கு செல்லுங்கள்’ என்று சொன்னபோது, ‘எங்கள் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே வீட்டிற்கு செல்வோம். இல்லாவிட்டால் எங்களை அவரவர் பாட்டி வீடுகளுக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றார்கள்.
அவர்கள் விதித்த நிபந்தனைகள், ‘இனி அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது. வீட்டுவேலைகளை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது’ என்பவை. பெற்றோர் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சிறுமிகளை அவரவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்கள்.
சிறுவர்- சிறுமிகள் மனதளவில் தளர்ந்து, வீட்டை விட்டு வெளியேற, அவர்களது பெற்றோர்களுக்குள் அடிக்கடி நடக்கும் சண்டையும் ஒரு காரணம். வீட்டில் அமைதி இல்லாமல் போவதும், குடும்பப் பிரச்சினைகளும் குழந்தைகளின் மனநிலையை கெடுக்கின்றன.
பெற்றோர்களுக்கு தங்கள் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை நிறைய இருக்கும். அதே சிந்தனையை குழந்தையிடமும் எதிர்பார்க்கக்கூடாது. சாதிக்கவேண்டும் என்ற வெறியும் பெரியவர்களைப்போல் சிறுவர்களிடம் இருக்காது. அவர்களது விருப்பம் எல்லாம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில்தான் இருக்கும்.
அதற்கான சூழலை பெற்றோர் அமைத்துதரவேண்டும். மாறாக பெற்றோர் தங்கள் சுமைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. திணிப்புதான் பிரச்சினையின் தொடக்கமாக இருக்கும். எதையும் திணிக்காமல் குழந்தைகள் இனிப்பாக வளர உதவுங்கள்.

ஆபாச அலைக்குள் அவர்கள் சிக்காமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
செல்போனை பலரும் பலவிதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சிலர் எந்நேரமும் அதில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பலர், எப்போதும் அதில் எதையாவது பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
நவீன தகவல்தொடர்பின் உச்சம், செல்போன்கள். நினைத்த நேரத்தில் நினைத்தவருடன் பேச இந்த கையடக்க உபகரணம் காரணமாக இருக்கிறது. ஆனால் பலர் நினைத்த நேரத்தில் இதில் பல விஷமங்களை செய்து எதிர் விளைவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போது நாம் பேசுவது ஆபாச படங்களை பற்றி! முன்பெல்லாம் அந்த வகை படங்களைப் பார்க்க ஆசைப்படும் இளசுகள், பெரிசுகள், ஊருக்கு வெளியே ஒதுங்கிக் கிடக்கும் ஓய்ந்துபோன திரையரங்குக்கு பயந்து பதுங்கிப் போவார்கள். இன்றோ ஆபாசப் படங்கள் செல்போன் வாயிலாக உள்ளங்கைக்கு வந்துவிட்டன. விரும்பினால் இணையதளம் மூலம் செல்போனில் ஆபாச படங்களை அள்ளி எடுத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போதெல்லாம் தனிமையில் இருந்தும் அவைகளை கண்டுங்களிக்கலாம்.
இப்போது பெரும்பாலானவர்கள் கைகளில் நவீன செல்போன் தவழ்கிறது. இதுதான் ஆபாச அலை உருவாக அடிப்படை காரணம். ஆபாசக் காட்சிகளுக்கு டி.வி.யோ, லேப்டாப்போ தேவையில்லை. யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமில்லை. கிடைத்த நேரத்தில் சில நொடிகளில் சாதாரணமாய் செல்போன் நம்பர் தேடுவதைப் போலவே பார்த்துவிட முடியும் நிலை உருவாகியிருக்கிறது.
மக்களின் இத்தகைய ஆசைகளை புரிந்துகொண்டு அனேக ‘சப்ளையர்களும்’ உருவாகிவிட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையறிந்து அவர்கள் ‘டேஸ்ட்’டுக்கு ஏற்ப ‘சேவை’ செய்கிறார்கள்.
செல்போன் சர்வீஸ் செய்யும் ஒருவர் சொல்கிறார்:
“மக்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பு பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஆபாசப் படங்களை விரும்பினார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அதில் இடம்பெறுகிறவர்கள் இயந்திரதனமாய் இயங்குவதாகவும், பார்த்து ரசிக்க அதில் கவர்ச்சி எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள். மாறாக, ‘மார்பிங்’ செய்யப்பட்ட பிர பலங்களின் செக்ஸ் படங்கள், தென்னிந்தியப் படங்களை விரும்பிப்பார்க்கிறார்கள்” என்கிறார்.
திருவனந்தபுரம், பெங்களூரு பகுதிகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அதிர வைக்கிறது. செல்போன் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் 32 சதவீதம் பேர் தினமும் ஆபாச படம் பார்க் கிறார்களாம். அதற்காக அவர் கள் புத்தகங்களைவிட செல்போனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். இந்த நிலை நீடிப்பதால் இவர்களைவைத்து பணம் சம்பாதிப்போர் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்துகொண்டிருக்கிறது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கூறுகிறார், “எங்கள் தேவைகளை ஈடுசெய்ய சில கடைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் 50 ரூபாய் கொடுத்தால் ஆபாசப் படம் ஏற்றிய மெமரி கார்டை கொடுப்பார்கள். அதை பார்த்து முடித்ததும், அதை கொடுத்துவிட்டு மீண்டும் ஐம்பது ரூபாய் கொடுத்து இன்னொன்றை பெற்றுக்கொள்ளலாம். இது சங்கிலித்தொடர் நிகழ்வு” என்று தயக்கமின்றி சொல்கிறார்.
படிக்கிற வயதில் மாணவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கவனம் சிதைந்து போகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைக்கும் ‘பாக்கெட் மணி’யும் இப்படிக் கரைந்து போகிறது. இதற்கு அடிமையானவர்கள், அடுத்து வீட்டிலேயே பணத்தை எடுக்கிறார்கள்.

இந்த ஆபாச மார்க்கெட்டை தக்கவைப்பதற்காகவே அவ்வப்போது சில சூடான காட்சிகளை சிலர் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சட்டசபையிலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததற்காக கர்நாடக மாநிலத்தில் மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்தார்கள். அவர்கள் பார்த்தது, அப்போது ‘ஹிட்’டாக இருந்த ‘பசிலா’ என்ற ஆபாசப் படத்தை. பொதுவாக, இயல்பாக படமாக்கப்படும் உள்ளூர் சரக்குக்கு அதிக மதிப்பிருக்கிறது.
மக்கள் நெருக்கம் நிறைந்த மும்பை போன்ற பெருநகரங்களில் மூலைக்கு மூலை ஆபாசப் படம் வழங்கும் ‘சேவை’ நடக்கிறது. அந்த மாதிரியான நபர்களில் ஒருவர், 4 ஜி.பி. மெமரி கார்டுக்கு 150 ரூபாய் கேட்கிறார். இது வழக்கமான படம் அல்ல. வித்தியாசமானது என்று விளக்கமும் அளிக் கிறார். 16 ஜி.பி. என்றால் 300 ரூபாய். இவருக்கு சில பெண் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.
செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ‘டாப் அப்’ கடைகள் பலவும் கறுப்பான மறுபக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாரும் இந்தக் கடைகளுக்கு நேரே சென்று, கிளுகிளு காட்சிகள் கிடைக்குமா என்று கேட்டுவிட முடியாது. உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள் அல்லது தாங்கள் அப்படிப்பட்ட காட்சிகளை அளிப்பதில்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்துவிடுவார்கள். அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது நடக்கும் போலீஸ் ரெய்டுதான் காரணம்.
வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அல்லது அவர்களுடன் செல்பவர்களுக்குத்தான் இது எளிதாக கிடைக்கும். கேட்கக் கூச்சப்படும் புதியவர்கள் என்றால், அவர்களின் உடல்மொழியிலேயே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு தக்கபடி விலை பேசுகிறார்கள். அல்லது ‘அந்த மாதிரி வியாபாரம் எதுவும் தங்களுக்கு கிடையாது’ என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
ஆபாசப் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை எடுத்து வாடிக்கையாளரின் தேவையறிந்துகொடுக்கிறார்கள். அதனால் வாடிக்கையாளரின் தோற்றத்தைப் பார்த்து விலையை நிர்ணயிக்கிறார்கள். கிடைக்கும் தொகை ஏறக்குறைய முழுக்க முழுக்க லாபம்தான்.
வட இந்தியாவில் மக்கள் நெருக்கடி நிறைந்த சில பகுதிகளில் உள்ள கடைகளில், இங்கு ‘டவுன்லோடு செய்து தரப்படும்’ என்ற போர்டுகள் தொங்குகின்றன. இங்கு வசதியான வீட்டுப் பையன்கள் தங்களின் பெரிய திரை கொண்ட 4 ஜி செல்போனுடன் படையெடுக்கிறார்கள். இவர்களின் நிபந்தனையெல்லாம், படம் தெளிவாக இருக்க வேண்டும், வைரஸ் அபாயம் இருக்கக் கூடாது என்பதுதான்.
இந்த ஆபாச அலையால் சமூகத்தில் மோசமான பின்விளைவுகள் உருவாகின்றன. ஒருவகையில் பாலியல் வன்முறைகள் அதிகரிக்க இந்த காட்சிகளே காரணமாக இருக்கின்றன. ‘ஆளை விழுங்கும் இந்த ஆபாச அலைக்குள் பிள்ளைகள் சிக்காமல் இருக்க பெற்றோர் அதிக அக்கறை காட்டவேண்டும். ஆபாச அலைக்குள் அவர்கள் சிக்காமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பார்த்த, தெரிந்த விஷயங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து சிந்திக்க தூண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஓவியக் கலையை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு எதையும் தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் அதைப் பற்றிய கேள்விகள் எழும். சிந்தனை திறனும் மேம்படும். கேள்வி கேட்கும் சுபாவம்தான் சிந்தனைகளின் பிறப்பிடம். ஆதலால் குழந்தைகளை கேள்வி கேட்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவர்களுக்கு விடுகதைகள் சொல்லிக்கொடுக்கலாம். அவைகள் கேள்விகளுக்கான விடைகளை தேடி கண்டுபிடிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும். தெரிந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்த்து சிந்திக்கும் ஆர்வத்தையும் தூண்டும்.
அதுபோல் குழந்தைகளிடம் ஓவியம் தீட்டும் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். தெரிந்த விஷயங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து சிந்திப்பதற்கு ஓவிய கலை கைகொடுக்கும். அவர்கள் பார்த்த விஷயங்களை கற்பனையாக மனதுக்குள் பதிவு செய்து ஓவியமாக தீட்டுவார்கள். ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஓவியம் வரையும் விதம் மாறுபடும்.

ஒருசில குழந்தைகள் கோடுகளாக கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் வண்ணங்களை தீட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் மனதுக்குள் உள்வாங்கிய காட்சிகளை சித்திரமாக வெளிப்படுத்துவதில் மாறுபட்ட கற்பனைகள் வெளிப்படும். மனதுக்குள் பதிந்த கற்பனையை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் விதத்தில் மாறுபாடு தோன்றலாம்.
ஆனாலும் பார்த்த காட்சிகளை ஒரே சாயலில் ஓவியமாக கொண்டு வருவதற்கு மெனக்கெட்டிருப்பார்கள். அவர்கள் ஓவியங்களை தீட்டும் விதத்தை கூர்ந்து கவனித்தாலே அவர்கள் மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்களை ஓரளவு யூகித்து விடலாம். பார்த்த, தெரிந்த விஷயங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து சிந்திக்க தூண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஓவியக் கலையை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்.