என் மலர்
குழந்தை பராமரிப்பு
பெற்றோர்கள் சுயகட்டுபாட்டுடன் இருந்து, குழந்தைகள் கண் எதிரில் புத்தகம் படித்தால்தான் அவர்களும் புத்தகத்தின் பக்கம் திரும்புவார்கள்.
படிப்பதையே சிரமமாக நினைக்கும் குழந்தைகளுக்கு, மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது சவாலான விஷயம்தான். ஆனால், பெற்றோர் கொஞ்சம் மனதுவைத்தால், அந்த ஆர்வத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்.
* சிறு வயது முதலே குழந்தைகளுக்குப் பிடித்த விலங்குகள், பழங்கள், பொதுஅறிவு தகவல்கள் உள்ளிட்டவற்றை எளிமையான படக்கதைகளாக சொல்லிக்கொடுப்பது, அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். ஆரம்பக் கட்டத்திலேயே கருத்துள்ள விஷயங்களைப் படிக்கச் சொன்னால், குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால், அவர்களுக்குப் பிடித்தமான ஸ்பைடர்மேன், கார்ட்டூன் படங்கள், பிக்சர் கார்டுகள் வாயிலாக வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பியுங்கள். பின்னர், அவர்களாகவே ஆர்வமுடன் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
* நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து பிடித்த விஷயங்களைப் படித்து, படித்ததை மற்றவர்கள் முன்னிலையில் ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால், ஆர்வமாகப் படிப்பார்கள். இதனால், ஒருவர் கற்றுக்கொண்ட விஷயம், எளிதாக மற்றவர்களுக்கும் தெரியவரும்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டு, அறிவியல், பொதுஅறிவு, சுற்றுலா என ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அத்தகைய துறை சார்ந்த, அத்துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் பற்றிய புத்தகங்கள், அவர்களின் வரலாறு சொல்லும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

* அழகாகக் காட்சிப்படுத்துவதும், அலங்கரிப்பதும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். வீட்டிலேயே அழகான வடிவில் ஒரு ரேக் அமைத்து அதில் குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களைக் காட்சிப்படுத்தினால், புத்தகம் படிக்கும் பழக்கம் இயல்பாகவே வரும். மேலும், குழந்தைகள் ஒரு புத்தகத்தைப் படித்த பின்னர், அவர்கள் படித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும்போது உற்சாகமாவார்கள்.
* தினமும் வாசிப்பு நேரம் எனக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து, மற்றவர்களிடம் பகிரலாம். குழந்தைகள் படித்ததில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அப்படிச் செய்யும்போது அப்பா, அம்மாவே படிக்கிறார்கள். நம்முடன் சந்தோஷமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என ஆர்வமுடன் குழந்தைகளும் படிப்பார்கள்.
* தினமும் காலை நேரங்களில் செய்தித்தாளை படித்து முடித்ததும், முக்கியமான செய்திகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். பல விஷயங்களையும் அவர்களிடம் விவாதிக்கலாம். தொடர்ந்து குழந்தைகளை செய்தித்தாளைப் படித்து தங்களிடம் விவாதிக்குமாறு சொல்லலாம்.
* செய்தித்தாள்களில் பார்த்த, பயனுள்ள, பிடித்த படங்களுடன் கூடிய விஷயங்களைக் கத்தரித்து, தனி நோட்டில் ஒட்டிவைத்து, அவ்வப்போது பார்க்கச் சொன்னால், குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். அப்படியே நல்ல விஷயங்களைப் படிக்க ஆரம்பிப்பார்கள்.
* ஓய்வு நேரங்களில் அல்லது மாதம் ஒருமுறையாவது நூலகம் அழைத்துச்சென்று பெற்றோரும் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். குழந்தைகளையும் நூலக உறுப்பினராக்கி, அவர்களுக்குப் பிடித்த நூல்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கப் பழக்கப்படுத்தலாம்.

குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, சுத்தமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுபோன்ற பிரச்னைகளால் குடற்புழுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.
குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆரோக்கியக் கேடுகளில் முக்கியமானது குடற்புழுப் பிரச்னை. குழந்தைக்குப் பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும்போது குடற்புழுப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை அம்மாவின் கண்காணிப்பில் உணவு ஊட்டப்படும்போதும் குடற்புழுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. ஒரு வயதுக்குமேல் குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, கைகளை அசுத்தமான இடங்களில் வைத்துவிட்டு அதே கைகளை வாயில் வைப்பது, சுத்தமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுபோன்ற சுகாதார மின்மைப் பிரச்னைகளால் குழந்தைகள் குடற்புழுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.
குழந்தைகள், வளர்ந்தவர்களின் குடலில் நாடாப்புழு (Tape Worm), நூல் புழு (Thread Worm), கொக்கிப்புழு (Hook Worm), சாட்டைப்புழு (Whip worm), தட்டைப்புழு (Round Worm) எனப் பலவகையான புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவை பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும். அளவிலும் வடிவத்திலும் வேறுபடும் இந்தப் புழுக்கள், பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.
வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காற்று பிரியாமல் இருப்பது, உணவில் நாட்டமின்மை, எடைக்குறைவு, சத்துக்குறைவு, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகளை நாடாப்புழு ஏற்படுத்தும். உறக்கமின்மை, சிறுநீர்க் கழிக்கும்போது வலி போன்ற பிரச்னைகளை நூல்புழு ஏற்படுத்தும். கொக்கிப்புழு பாதிப்பு தீவிரமாகும்போது இருமல், மூச்சிரைப்பு, ரத்தச்சோகை, சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கொக்கிப் புழுக்கள் ஆசனவாயைச் சுற்றி முட்டையிடும்.
அதனால் அங்கு குழந்தைகள் விரல்களால் சொறியும்போது, அந்த முட்டைகள் விரல் இடுக்குகள், விரல்களில் சேர்ந்துகொள்ளும். அந்த விரல்களால் புத்தகம், ரிமோட், தட்டு என்று எந்தெந்தப் பொருள்களை எல்லாம் தொடுகிறார்களோ, அங்கெல்லாம் இந்த முட்டைகள் பரவும். அந்தப் பொருள்களைத் தொடுபவர்களையும் தொற்றிக்கொள்ளும். குழந்தைகள் அந்த விரலை வாயில் வைக்க நேர்ந்தால், மிகவும் கெடுதல்களை விளைவிக்கும்.
குடலில் ஒட்டுண்ணியாக வளரும் புழுக்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவின் சத்துகளை உறிஞ்சிக்கொள்ள, அவர்கள் நோய்க்கு ஆளாவார்கள். ஒரு கொக்கிப்புழுவானது நாளொன்றுக்கு 0.2 மில்லி ரத்தத்தை உறிஞ்சக் கூடும். நாடாப்புழு 0-1 மில்லி ரத்தத்தை உறிஞ்சக் கூடும். கொக்கிப்புழுவுக்குப் பற்கள் உண்டு; அவை குடலைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சக் கூடியவை.
ஒருவரின் குடலில் ஒரே நேரத்தில் முட்டையிட்டுப் பெருகி ஆயிரம் புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு என்றால், இதன் விபரீதத்தை உணர்ந்துகொள்ளலாம். இதனால் ரத்தச்சோகைக்கு ஆளாகும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி, நினைவாற்றல், கல்வித் திறன், சிந்தனைத் திறன் என ஒட்டுமொத்த செயல்திறன்களும் பாதிக்கப்படும்.

வெளிறிய கண்களுடன் காணப்படும் இவர்களின் வயிற்றை எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட்டுகள் எடுக்கும்போது, பல்கிப் பெருகியிருக்கும் அந்தப் புழுக்கள் ஓர் உருண்டையாக வயிற்றின் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். உணவில் நாட்டமின்மை தொடங்கி வாந்தி வரை குழந்தைகள் பல பாதிப்புகளை எதிர்கொள்வது இதனால்தான்.
குழந்தைகளுக்கு ஒரு வருடத்துக்கு ஒருமுறை எனச் சீரான இடைவேளையில் இந்தப் புழுக்களை அழிப்பதற்கான பூச்சிமருந்து அரசு சார்பாகக் கொடுக்கப்பட வேண்டும். தமிழக அரசு ஆரம்பச் சுகாதார மையங்களிலும் பள்ளிகளிலும் வீடு தேடி வந்தும் குழந்தைகளுக்கு `ஆல்பெண்டசோல்’ (Albendazole) மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லிகிராம் அளவும், அதாவது அரை மாத்திரையும், இரண்டு வயதிலிருந்து 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லிகிராம் அதாவது ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது.
சிலர் ஆல்பெண்டசோல் மாத்திரையுடன் மற்றொரு காம்பினேஷனும் சேர்த்து இரண்டு மருந்துகளாகத் தருவார்கள். இது பக்கவிளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆல்பெண்டசோல் மாத்திரை மட்டும் கொடுக்கும்போதும் சில குழந்தைகள் வாந்தி எடுக்க நேரிடலாம். அதற்கு அதன் சுவையும் காரணமாக இருக்கலாம் என்பதால், பயப்படத் தேவையில்லை.
குடற்புழுப் பாதிப்பைத் தவிர்க்க முடியுமா?
எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் தவிர்க்கலாம். அவை...
* கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடு வதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.
* ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.
* குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.
* பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.
* வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும்.
* மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.
* விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்.

அப்பா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வார்கள் என்று நினைத்து பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை நெகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.
மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. பேனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய். ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார் அதை அணை. பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்ன சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்து கொண்டிருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது.
வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும் என்று எண்ணிக்கொண்டான் மகன். வேலைக்கான நேர்காணலுக்கு கிளம்பினான். கேட்கிற கேள்விக்கு தயங்காமல் பதில் சொல். தெரியவில்லை என்றாலும் தைரியமாக பதிலை எதிர்கொள் என்றும் பஸ் செலவுக்கு பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் காவலாளி யாரும் இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்து விடுவது போல் இருந்தது. அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான். நடைபாதையின் இருபுறமும் அழகு மரச்செடிகள் வரவேற்றன.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டு போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்கு பாயாமல் நடைபாதையை நனைத்து கொண்டிருந்தது. குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது. விளக்கை அணைக்காமல் செல்கிறாயே என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பது போல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில் ஏராளமானோர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. நமக்கு இங்கு வேலை கிடைக்குமா? என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன். மிதியடியில் வெல்கம் என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

யாருமே இல்லாமல் ஏன் அறையில் மின்விசிறி ஓடுகிறது என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு மற்ற இளைஞர்கள்களுடன் சென்று அமர்ந்தான். இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது அவனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சான்றிதழ்களை வாங்கி பார்த்த அதிகாரி அதை பிரித்து பார்க்காமல் நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள் என்று கேட்டார். இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா என்று தெரியாமல் குழம்பி நின்றான் மகன். என்ன யோசிக்கிறாய் என்று கேட்டார் அந்த அதிகாரி.
நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி, பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்துவிட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய மின்விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.
அப்பாவின் கண்டிப்புகள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்குமுறையே இன்று வேலை வாங்கி தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது மகன் நெகிழ்ச்சி அடைந்தார். அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது. வேலை கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்.
அப்பாவின் கண்டிப்புகளால் பிள்ளைகள் எரிச்சல் படக்கூடாது. அவர்கள் எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வார்கள் என்று நினைத்து பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை நெகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு வழங்கும் தடுப்பு மருந்துகளை ஒரே ஊசியில் படிப்படியாக வழங்கும் தொழில் நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஒரே ஊசியில் வழங்கக்கூடிய இந்த தடுப்பு மருந்து நுண்ணிய உறைகளில் சேமிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவுடன் தொடக்க மருந்து அளவை அது வெளியிடும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதே நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் மருந்துகளை படிப்படியாக வெளியிடும் வகையில் இந்த நுட்பம் அமைந்திருக்கிறது.
சோதனை எலிகளில் நடத்தப்பட்ட இதற்கான தொடக்க ஆய்வுகளில் இந்தத் தொழில்நுட்பம் நன்கு செயல்பட்டுள்ளதாக ‘சயின்ஸ்’ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
குழந்தைப் பருவத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகள் ஒருவிதத்தில் குழந்தைகளை அவதிப்படுத்துவதாக அமைகின்றன. அந்தப் பருவத்தில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இந்நிலையில், எல்லா தடுப்பு மருந்துகளையும் ஒரே தடுப்பூசியில் சேர்த்து வழங்கும் வகையில், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் குழுவினர் புதிய வகையான நுண்ணிய அணுக்கூறு ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இந்த அணுக்கூறு, நோய் தடுப்பு மருந்துகளால் நிரப்பப்பட்டு, மூடியால் இறுக்கமாக மூடப்பட்ட காபி கோப்பைகளின் சிறிய மாதிரியைப் போலத் தோன்றுகிறது.

இந்தச்சிறிய கோப்பைகளை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம், சரியான நேரத்தில் அந்தச் சிறு கோப்பையில் உள்ள மருந்தை வெளியிடும் வகையில் நாம் அமைத்துக் கொள்ள முடியும்.
சோதனை எலிகளில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட பிறகு, தடுப்பூசியாக செலுத்தப்பட்ட அணுக்கூறிலுள்ள சிறிய காபி கோப்பைகளின் மாதிரிகளில் இருந்து மருந்துகள் சரியாக 9, 20 மற்றும் 41 நாட்களில் வெளியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நூறு நாட்களுக்குப் பிறகு மருந்துகளை வெளியிடும் அணுக்கூறுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தடுப்பூசி வழங்கும் முறை இன்னும் மனிதர்களிடம் சோதிக்கப்படவில்லை.
“இந்தக் கண்டுபிடிப்பில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். முதல்முறையாக, தடுப்பு மருந்துகள் தனித்தனி அணுக்கூறுகளில் நிரப்பப்பட்டு வைத்திருக்கும் ஒரு மருந்து நிலையத்தையே நம்மால் உருவாக்க முடிந்துள்ளது. இந்த அணுக்கூறுகள் ஒவ்வொன்றும் துல்லியமாக, கணிக்கக்கூடிய நேரத்தில் மருந்துகளை வெளியிடும் வகையில் நம்மால் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
இதனால், தடுப்பு மருந்துகள் பல ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும் நுண்ணிய அணுக்கூறை ஒரே ஊசியில் உடலுக்குள் செலுத்தி பல்வேறு தடுப்பு மருந்துகளின் நோய் தடுப்புத் திறனை குறிப்பிட்ட இடைவெளிகளில் பெற்றுக்கொள்ளலாம்” என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பேராசிரியர் ராபர்ட் லாங்கர் தெரிவித்திருக்கிறார்.

மிதமானது, நடுத்தரமானது, கடுமையானது என மனச்சோர்வு மூன்று வகைப்படும். டீன் ஏஜ் பருவத்தினர் மனச்சோர்வு பாதிப்புக்கு அதிகம் ஆளாவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனச்சோர்வு மனநலனை பாதிக்கும். எப்போதும் எரிச்சலான மனநிலையில் இருப்பவர்கள் எளிதில் மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவது அல்லது அதிக நேரம் தூங்குவது, அதிகமாக பசி எடுப்பது அல்லது பசியின்மை, எடை கூடுவது அல்லது எடை குறைவது போன்ற எதிர்மறையான விஷயங்கள் மனச்சோர்வின் அறிகுறிகளாகும்.
கவனச்சிதறல், ஞாபக மறதி, குற்ற உணர்வுடன் இருப்பது, எந்த விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது, நெருங்கிய நண்பர்களிடம் கூட பேசுவதை தவிர்ப்பது போன்றவைகளும் மனச்சோர்வின் அறிகுறிகள்தான்.
மிதமானது, நடுத்தரமானது, கடுமையானது என மனச்சோர்வு மூன்று வகைப்படும். டீன் ஏஜ் பருவத்தினர் மனச்சோர்வு பாதிப்புக்கு அதிகம் ஆளாவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகிறவர்களிடம் தற்கொலை எண்ணம் தலைதூக்கும். போதை மருந்து, மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து விலகத் தொடங்கிவிடுவார்கள்.
குழந்தைகளும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். பெற்றோரின் அரவணைப்பின்றி வளரும் குழந்தைகள், பெற்றோரை இழந்து வாடுபவர்கள், வீட்டில் சண்டை சச்சரவுகளுக்கு இடையே வளரும் குழந்தைகள் மனச்சோர்வு பாதிப்புக்கு ஆளாகிவிடுகிறார்கள். அதற்கு காரணம், தங்களின் மன உணர்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். அந்த குறைபாட்டை களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களிடையே தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். அவர்கள் மனம் விட்டு பேச தொடங்கி விட்டாலே மனச்சோர்வை போக்கிவிடலாம். அத்துடன் மனநல ஆலோசனைகள் இயல்பு நிலைக்கு கொண்டு வர கைகொடுக்கும்.

நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏன் வருகிறது, இந்த பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு இருக்கும் தீய பழக்கங்களில் ஒன்று தான் இந்த நகம் கடிக்கும் பழக்கம். எத்தனை தடவை தான் சொன்னாலும், குழந்தைகள் இந்த நகம் கடிக்கும் பழக்கத்தை விடமாட்டார்கள். நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏன் வருகிறது, இந்த பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
நகம் கடிக்கும் பழக்கத்தை மாற்ற நவீன மருத்துவத்தில் கூட தீர்வு இல்லாமல் போய்விட்டது. இந்த நகம் கடிக்கும் பழக்கமானது பல காரணங்களால் குழந்தைக்கு வருகிறது.
கை சூப்புதல், வெட்கம் கொள்ளும் தன்மை, மன சோர்வு, கவலை, வேலை இல்லாமல் சும்மா இருப்பது, தனிமையில் இருப்பது, வீட்டில் உள்ள நபர்கள் அல்லது பள்ளியில் சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது, நகத்தை பெற்றோர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெட்டிவிடாமல் இருப்பது போன்றவைகளும் குழந்தைகள் நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்க காரணமாக உள்ளது.

நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதற்காக உங்களது குழந்தைகளை நீங்கள் திட்டவோ அடிக்கவோ வேண்டாம். அவர்களிடம் அன்பாக, ஏன் இவ்வாறு செய்கிறாய்.. எதனால் இப்படி செய்கிறாய் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மிரட்டுவதால் இது அதிமாக தான் செய்யும்.
நகம் கடிக்கும் பழக்கத்தினால் உண்டாகும் தீமைகளை பற்றி உங்களது குழந்தைகளிடம் விளக்கி கூறுங்கள். சமூகத்தில் உள்ள பிறர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கூறுங்கள்.
பள்ளியில் பாடம் கடினமாக இருந்தால் இந்த பழக்கம் உண்டாகும். பிற குழந்தைகளை பார்த்தும் உங்களது குழந்தை இதனை கற்றுக்கொள்ளலாம். பசியாக இருக்கும் போது, தனிமையில் இருக்கும் போதும் கூட இது போன்ற பழக்கங்கள் ஏற்படலாம். இதனை ஆசிரியர் அல்லது குழந்தையின் மீது அக்கறை உள்ள ஏதேனும் ஒரு நபரின் வாயிலாக கண்டறிந்து தீர்வு காணுங்கள்.
பாவைக்காய் ஜீஸ் மற்றும் வேப்ப எண்ணெய் பழங்காலமாக இந்த பழக்கத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை தூங்கும் போது கையில் இதில் ஏதாவது ஒன்றை தடவிவிடுங்கள். இவ்வாறு செய்வதால் கசப்பு தன்மை காரணமாக குழந்தை நகத்தை வாயில் வைக்காது. நாளடைவில் இந்த பழக்கமும் மறைந்துவிடும்.

குழந்தைகள் மூளை அழற்சி நோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்நோய் எதனால் ஏற்படுகின்றது... நோயிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மூளையில் ஏற்படும் வீக்கம் அல்லது ரத்த நாளங்களில் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கம் போன்ற காரணங்களால் மூளை அழற்சி (Brain inflammation) ஏற்படுகிறது.
போலியோ வைரஸால், மூளை அழற்சி பாதிப்பு ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே போலியோ தடுப்பூசி போடப்படுகின்றன. இதனால், தமிழ்நாட்டில் இந்த நோய்த்தொற்று பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுவதில்லை. எனவே, போலியோ சொட்டு மருந்தைச் சரியான காலத்தில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
ஜப்பானிய மூளை அழற்சி (Japanese encephalitis) வைரஸ் கொசுக்களினால் ஏற்படும் வைரஸ். அதிலும், பன்றிகளைக் கடித்துவிட்டு நம்மைக் கடிக்கும் கொசுவினால் இந்த நோய்த்தொற்று உருவாகிறது. சுகாதார சீர்கேடு அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகம் இருக்கும். 'கியூலெக்ஸ்' என்கிற கொசு கடிப்பதினாலேயே இவ்வித தொற்று உருவாகிறது. இதற்கு உடனடி சிகிச்சை அவசியம். பெரும்பாலும் 15 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது. தற்போது, இந்த நோய் அதிகமாகப் பரவிவருகிறது. தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சலும், உடல் சோர்வும் இருந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே நோயினை கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம்.
ஜிகா வைரஸ் (zika) பெரும்பாலும் தம்பதிகளுக்கு ஏற்படுகின்றது. இதனால், பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கும். உடல் உறுப்புகள் நலமாக இருந்தாலும், மூளை வளர்ச்சி இருக்காது. அப்படிப்பட்ட குழந்தைகள் 'ஜிகா வைரஸினால்' பாதிக்கப்பட்டவர்களே. டெங்கு காய்ச்சலுக்கு ஏற்படும் அறிகுறிகள் இதற்கும் பொருந்தும். காய்ச்சல், தோல் அழற்சி, மூட்டுவலி, தலைவலி போன்றவை 2 முதல் 7 நாள்கள் தொடர்ந்து இருக்கும்.

மூளைக் காய்ச்சல்/மூளை அழற்சி ஏற்படாமல் தடுக்கும் முறைகள் :
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொசுக்கள் கடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.
வீட்டின் அருகே பன்றிகள் சுற்றித் திரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
முறையாகத் தடுப்பூசி போட வேண்டும்.
தொடர் காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.
சுத்தமான குடிநீரைப் பயன்படுத்தினால், இது போன்ற வைரஸ் கிருமிகளில் இருந்து தப்பிக்கலாம்.
சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பிறந்த குழந்தைகளை தூங்க வைக்க சில வழிமுறைகள் உள்ளன. அந்த முறைகளை பின்பற்றினால் குழந்தைகளுக்கு நன்றாக தூங்கும்.
குழந்தைகளை நல்ல மனநிலையோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்கவேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச்சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள்.
குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொடுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம். தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தாயின் அரவணைப்பு தொடர்ந்து இருப்பதுபோல் அது உணரும். வெயில் காலத்தில் கட்டிலில் படுக்க வைப்பதைவிட, குழந்தைகளைத் தரையில் ஒரு பாயை விரித்து, அதில் பருத்திப் புடவையை மெத்தைபோல் நன்றாக மடித்துப் படுக்கவையுங்கள்.
உஷ்ணம் குழந்தையைத் தாக்காமல் குளிர்ச்சியாக உணரும். குழந்தையின் அருகில் கனமான பொருட்கள் எதையும் வைக்காதீர்கள். காற்றாடிக்கு நேராகப்படுக்க வைக்காதீர்கள். இதனால் குழந்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக நேரிடும். காற்றாடியின் வேகத்தைக் குறைத்து, ஓரமான இடமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒரே இடத்தில் படுக்கவைத்தாலும், உடலில் சீக்கிரமே உஷ்ணம் ஏறிவிடும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, குழந்தையை இடம் மாற்றிப் படுக்கவைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடம், உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜைதான்.
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடம், உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜைதான். இதனை சரியான முறையில் நீங்கள் தொடங்கவேண்டுமானால், முதலில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பழக்கம் உருவான பின்பு குழந்தைகளுக்கு எப்படி சரியாக சாப்பிடுவது என்பதை கற்றுக்கொடுக்கவேண்டும். அதன் மூலம் அவர்கள் சிறந்த வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்வார்கள்.
உணவை கீழே சிந்தாமல் சாப்பிடுவதும் குழந்தைகளுக்கு தரவேண்டிய சிறந்த பயிற்சி. தேவையான அளவுக்கு மட்டும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து எடுத்து வைத்துக்கொண்டு வீணாக்காமல் சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தவேண்டும். இது தேவை, பகிர்வு, கவனம் சிதறாத செயல் போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுத்தரும்.
குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து தனது பெற்றோர் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டே வளரும். அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்களோ அதே முறையில்தான் குழந்தையும் சாப்பிடத்தொடங்கும். அதனால் குழந்தைகள் பிறந்த பின்பு, முதலில் பெற்றோர் சரியாக சாப்பிடக் கற்றுக்கொள்ளவேண்டும். சாப்பாட்டு மேஜை நாகரிகத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதை பார்த்து குழந்தைகள் பழகவேண்டும்.
குழந்தைகளின் செயல்திறனை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், அந்த குழந்தைகளை சாப்பாட்டு மேஜையில் அவர் களது இஷ்டத்திற்கு சாப்பிட அனுமதித்தார்கள். அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தேர்ந்தெடுத்தார்கள். அதை எப்படி தங்கள் சாப்பாட்டுத்தட்டில் எடுத்துவைத்தார்கள். எப்படி சாப்பிட்டார்கள். அப்போது அருகில் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் எப்படி அணுகினார்கள் என்பதை எல்லாம் கண்காணித்தார்கள்.
அதன் மூலம் அவர்களது செயல்திறனை அளவிட்டார்கள். அவர் களது இயல்பு என்ன? அவர்களிடம் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் தேவைப்படும் என்பதை எல்லாம் கணித்தார்கள். அந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதையும் அவர்களது சாப்பாட்டு முறை மூலம் கண்டறிந்துவிட்டார்கள்.

அதே நேரத்தில் அந்த குழந்தைகளின் வீட்டுச்சூழல் எப்படி இருக்கிறது என்பதையும் அவர்களது உணவுப் பழக்கம் மூலம் தெரிந்துகொண்டார்கள். பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் சாப்பிடும் முறை மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.
அந்த ஆராய்ச்சியாளர்கள், “உங்கள் குழந்தைகளுக்கு சிறு பருவத்தில் இருந்தே சாப்பாட்டு மேஜை நாகரிகத்தை கற்றுக்கொடுங்கள். அது அவர்களை சிறந்த பண்புள்ளவர்களாகவும், சமயோசித திறன் கொண்டவர்களாகவும் உருவாக்கும்” என்று பரிந்துரைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு எந்த உணவை முதலில் சாப்பிட வேண்டும், எதை கடைசியாக சாப்பிட வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதே போல் குழந்தைகளை எல்லாவித உணவுகளையும் சாப்பிட பழக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதால் அவசர அவசரமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். உணவை நன்றாக மென்று சாப்பிடவும், தேவையான இடைவெளி விட்டு சாப்பிடவும் கற்றுக்கொண்டால் உணவு எளிதில் செரிமானமாகும். குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அதன் மூலம் நெருக்கமான உறவு பேணப் படும்.
சாப்பிடும்போது நல்ல விஷயங்களை பேச வேண்டும். திகிலான விஷயங்களையும், பிரச்சினைக்குரிய விஷயங்களையும் பற்றி பேசக்கூடாது. பயந்த சுபாவத்துடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது. தொலைக்காட்சியில் சண்டை, சச்சரவுக்குரிய காட்சிகளை பார்த்தபடி சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. அது நல்ல பழக்கமல்ல. தொலைக்காட்சி மீதே முழு கவனத்தையும் பதிக்கும்போது, சாப்பிடும் உணவின் ருசி கூட தெரியாமல், இவ்வளவு நேரம் என்ன சாப்பிட்டோம் என்பது கூட புரியாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
சாப்பிடும் உணவுப் பொருட் களின் தன்மையை உணர்ந்து சாப்பிட வேண்டும். ‘இது நம் உடலுக்கு குளிர்ச்சி தரும், இது புரத சத்து நிறைந்தது’ என்பதை உணர்ந்து சாப்பிடும்போது அந்த விஷயம் நம் புற மனதில் பதிவாகி பின் ஆழ் மனதில் பதிவாகி, தனக்கு எது தேவை? எது தேவையில்லை என்ற தெளிவை உருவாக்கி விடும். இதன் மூலம் தனது உடலுக்கு பொருந்தக்கூடிய உணவை தேர்ந்தெடுக்க குழந்தைகள் பக்குவப்பட்டுவிடுவார்கள்.
எல்லா உணவுகளிலும் பல்வேறுவிதமான சத்துக்கள் இருக்கின்றன. அதை குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் சொல்ல வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் சத்துக்களை உணர்ந்து, ஆரோக்கியமிக்கவர்களாக மாறுவார்கள்.

பகிர்ந்து உண்ணும் பழக்கம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போதுதான் உருவாகும். ‘டேபிள் மேனர்ஸ்’ என்பதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போதுதான் பழக்கத்திற்கு வரும்.
எந்த ஒரு நல்ல பழக்கமும் தானாக வந்து விடாது. எல்லாமுமே வழக்கத்தில் வருவதுதான். திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எல்லாம் இப்படி ஒற்றுமையாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. நாளடைவில் அந்த வழக்கம் சுருங்கி போய்விட்டது. அதிலும் நகர வாழ்க்கையில் அதற்கெல்லாம் நேரமில்லாமல் போய்விட்டது.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது நம் நாட்டு வழக்கம் மட்டுமல்ல. மேலை நாடுகளிலும் இதுபோன்ற வழக்கம் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களது அன்பை பகிர்ந்து கொள்ள இது சிறந்த வழி.
ஆப்பிரிக்க நாடுகளில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சாப்பிடுவதற்கென்றே அடிக்கடி சமூக நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஊர் மக்கள் ஒன்று கூடி மொத்தமாக சமைத்து எல்லோரும் பகிர்ந்து உண்பார்கள். அப்போது மேள தாளத்துடன் பாரம்பரிய நடனங்களும் நடக்கும். உணவுடன் சேர்ந்து மகிழ்ச்சியும் பரிமாறப்படும். ஆதிவாசிகள் இன்றும் இந்த வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி பல உண்மைகளை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி உணவை எளிதாக செரிக்கச் செய்கிறது. உடல் அந்த உணவை விரைவாக ஏற்றுக்கொள் கிறது.
இந்த ஆய்வு இரண்டு பூனைகளிடம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு பூனையை கூட்டத்தோடு சேர்த்து உணவெடுத்துக்கொள்ளச்செய்தார்கள். இன்னொன்றை தனிமைப்படுத்தி உணவு வழங்கினார்கள். தனியாக சாப்பிட்ட பூனையிடம் பயமும், தயக்கமும், மிரட்சியும் காணப்பட்டது. அது உட்கொண்ட உணவு சரியாக செரிமானமாகவில்லை. ஆனால் கூட்டத்தோடு சாப்பிட்ட பூனையிடம் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்திருந்தது. அது எந்த தயக்கமுமின்றி இயல்பாக எல்லோரிடமும் பழகியது. இந்த ஆய்வு கூட்டத்தோடு சேர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன் பற்றி வெளிஉலகுக்கு தெரியப் படுத்தியது.

நாம் சாப்பிடும் உணவு அத்தனையும் உடனடி சக்தியாக மாறி உடலுக்கு கிடைத்துவிடுவதில்லை. அதனால் சாப்பிட்டதும் நம் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக்கூடாது. சாப்பிட்ட உணவு சக்தியாக மாறவேண்டும் என்றால், அதை எப்படி, யாருடன் சேர்ந்து சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதனால்தான் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் கூட உணவை தன் இனத்துடன் பகிர்ந்து உண்ணவே விரும்புகிறது.
நம் முன்னோர்களும் விழாக்கள், விசேஷங்கள் வழியாக தங்கள் வாழ்வியலில் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை பலவழிகளில் பின்பற்றி வந்தார்கள். அதனை பின்பற்ற பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் நேரம் அதற்கு இடம் தருவதில்லை. வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இருந்தபோதிலும் வாரத்தின் விடுமுறை நாட்களில் மட்டுமாவது இந்த பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து தானும் அதுபோல் சாப்பிட விரும்புவார்கள். பள்ளியில் அன்றைய தினம் சந்தித்த தன் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு பிடித்த உணவு எது என்பதை கண்டறியவும் வசதியாக இருக்கும்.
அவர்களுக்கு ஏதேனும் ஒரு உணவு பிடிக்காமல் போனால் அதில் உள்ள சத்துக்களை விளக்கி சொல்லுங்கள். அப்படியும் அதனை அவர்கள் விரும்பாவிட்டால், ஓட்டல்களுக்கு செல்லும்போது அந்த உணவு வகையை சாப்பிட சொல்லுங்கள். ஏனெனில் ஒரே உணவை அங்கு வேறு மாதிரி சமைத்திருப்பார்கள். அங்குள்ள பக்குவத்தின்படி வீட்டில் சமைத்து கொடுத்தால் பின்னர் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.
உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜை உங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தரும் இடம். அதனால் அந்த வகுப் பறையில் பாடம் நடத்தும் நல்ல ஆசிரியராக பெற்றோர்கள் இருக்கவேண்டியது அவசியம்!

இரண்டாவது குழந்தையின் வரவால், பெற்ற தாய்கூட முதல் குழந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது இரண்டாவது குழந்தையை பாதிப்பதற்கு முன்பு பெற்றோர் சுதாரித்துக்கொள்ளவேண்டும்.
தாய் இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பது, அந்த குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் அவர்களது எதிர்பார்ப்பைப் போல முதல் குழந்தைக்கு மாற்றாக ஆண்வாரிசுக்கு துணையாக பெண் குழந்தையோ, பெண் குழந்தைக்கு துணையாக ஆண் குழந்தையோ பிறந்தால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
குடும்பம் முழுமை பெற்றதாக மனதுக்குள் மத்தாப்பு பூக்கும். ஆனால் இரண்டாவது குழந்தையின் வரவு, முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. குடும்பத்திற்கு முதல் வாரிசாக வந்து, அனைவரின் அன்பிலும் நனைந்தவர்கள், இரண்டாவது குழந்தையின் வரவால், புறக்கணிக்கப்பட்டால் நிச்சயம் ஏங்கிப்போவார்கள். அவர்களின் நடவடிக்கையில் மாற்றத்தை காண நேர்ந்தால் பெற்றோர் கவனமாக செயல்பட வேண்டும்.
இரண்டாவது குழந்தையின் வரவால், பெற்ற தாய்கூட முதல் குழந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது இரண்டாவது குழந்தையை பாதிப்பதற்கு முன்பு பெற்றோர் சுதாரித்துக்கொள்ளவேண்டும்.
அதுவரை எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, அன்பு மழையில் நனைந்தது முதல் குழந்தையே. திடீரென்று அந்த கவனிப்புகள் எல்லாம் அப்படியே குறைந்து, இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் ரொம்பவே பாதிக்கப்படும். மன அழுத்தத்திற்கு உள்ளாகும். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோப முகமாகவும் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது. கத்துவது, அழுவது, சேட்டை செய்வது என அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் திடீரென்று அப்படி மாறிப்போவதற்கு காரணம், மற்றவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியே.
மேலும் சில குழந்தைகள் வளர்ச்சியில் பின்தங்கிப்போகும் வாய்ப்பு உண்டு. டம்ளரில் பால் குடித்துப் பழகிய அவர்கள், சிறு குழந்தையாக இருந்தால்தான் கவனிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்திற்கு மாறுவார்கள். இதுபோல பேச்சிலும், நடவடிக்கையிலும் சில பின்ன டைவுகளை காணலாம்.
வேண்டுமென்றே அந்தக் குழந்தைகள் செய்யும் இதுபோன்ற சேட்டைகள் பெற்றோரையும், சுற்றி இருப்பவர்களையும் கோபம் கொள்ளச் செய்யலாம். ஆனால் ‘அது திமிர் குணம்’ என்று அவர்களை கண்டித்துக் கொண்டிருந்தால் தவறு உங்கள் பக்கம்தான். பெற்றோரை தன்பால் ஈர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை பெற்றோர் உணர்ந்து தங்கள் கோபத்தைக் குறைத்து, முதல் குழந்தை மீது வழக்கம்போல் அன்பு செலுத்த முன்வரவேண்டும்.

‘பெற்றோரை பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முதல் குழந்தை பக்குவமானவர்களாக ஆகிவிட்டார்கள். எதையும் புரிந்து கொள்வார்கள் என்று தவறாக கணித்துவிடுகிறார்கள். இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில்வைத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
குழந்தைகள் உலகத்தைப் பொறுத்தவரையில் இந்த திடீர்மாற்றங்கள் பெரிய தடுமாற்றத்தை உருவாக்கும். சவாலான இந்த சூழலை சமாளிக்கத் தெரியாமல் முதல் குழந்தைகள் கவலைகளுடன் சவலைகளாக மாறிப்போகலாம். இதுபோன்ற மாற்றங்களை அறிந்தால் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?...
“உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அதற்கு இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும். கர்ப் பிணியான தாயின் வயிறு பெரிதாகிக்கொண்டே வருவதுகூட முதல் குழந்தைக்கு வித்தியாசமாகத் தெரியும்.
தாயின் மேடான வயிற்றைத் தொட்டுப் பார்க்கவும், வயிற்றில் தட்டவும் அதற்குத் தோன்றலாம். அல்லது பயத்தையும் உருவாக்கலாம். அப்போதே முதல் குழந்தைக்கு உண்மையை புரியவைத்து, பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்துவதுடன், தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும்” என்கிறார்கள் மகப்பேறு மற்றும் உளவியல் நிபுணர்கள். ‘அதற்கு சரியான தருணம் தாய் கர்ப்பமாக இருக்கும் 4-வது மாதம்’ என்கிறார்கள்.
“நான்காவது மாதத்தில் தாய்க்கு வயிறு பெரிதாகத் தொடங்கும். அப்போதே முதல் குழந்தையிடம், உன்னுடன் விளையாட ஒரு தம்பி (அல்லது தங்கை) தயாராகி வருகிறது என்று சொல்லவேண்டும். அப்போதிருந்தே அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அவைகள் இயல்பாகிவிடும்.

பிறக்கப் போகும் தம்பி - பாப்பா உன்னுடன் விளையாட ஓடி வரும். நீ சொன்னதையெல்லாம் கேட்கும், நீதான் அவனை-அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும், என்றெல்லாம் கூறி முதல் குழந்தையிடம் ஆவலைத்தூண்ட வேண்டும்” என்று விளக்கம் தருகிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே முதல் குழந்தையிடம் முன்புபோல் அக்கறை காட்ட முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதால் தாயின் கர்ப்பகாலகட்டமே முதல் குழந்தைக்கு புரியவைக்க சரியான தருணம். அப்போதே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கலாம். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம். புதுவரவை மகிழ்வுடன் ஏற்கும் மனப்பக்குவத்துக்கு அவர்களும் தயாரானால்தான், தனிமை உணர்வில் தள்ளப்படமாட்டார்கள்.
இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்பது பற்றி மூத்த குழந்தையிடமும் ஆலோசனை கேளுங்கள். பாப்பாவுக்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறும் கருத்துகளுக்கு முன்னுரிமை தாருங்கள். அவர்கள் எடுத்துக் கொடுக்கும் பொம்மைகளிலும் சிலவற்றை தேர்வுசெய்து இரண்டாவது குழந்தைக்கு விளையாடக் கொடுங்கள். அது இரு குழந்தைகளையுமே மகிழ்ச்சிப்படுத்தும்.
‘பாப்பாவை நானும் தூக்கிவைத்துக்கொள்கிறேன்’ என்று மூத்த குழந்தை கேட்டால், அவர்களின் மடியில் பாதுகாப்பாக உட்காரவைக்க அனுமதியுங்கள். ‘உன்னால் வைத்துக்கொள்ள முடியாது. உன்னிடம் தரமாட்டேன்’ என்றெல்லாம் கூறி, புறக்கணித்துவிடாதீர்கள். மாறாக ‘தம்பி பாப்பாவுடன் விளையாடவும், கவனமாகப் பார்த்துக்கொள்ளவும் உரிமை உள்ளவன் நீதான். நீ சமர்த்தாக நடந்து கொண்டு பாப்பாவை அழாமல் பார்த்துக் கொண்டால்தான் அவளும் உன்னைப்போல் சமர்த்தாக வளர்வாள்” என்று ஊக்கம் கொடுங்கள்.
அதுமட்டுமல்லாமல் அந்த சூழலை சமாளிக்க கணவரையும் தாய்மார்கள் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பிறக்க இருக்கும் 2 மாதங்களுக்கு முன்பே முதல் குழந்தையை குளிப்பாட்டவும், உணவு ஊட்டவும், தூங்க வைக்கவும் கணவரை பழக்கப்படுத்தச் சொல்லலாம். அப்படி தந்தை தன்னுடன் நேரத்தை செலவிட்டால், முதல் குழந்தைக்கு தனக்கும் போதிய முக்கியத்துவம் கிடைக்கிறது என்ற எண்ணம் உருவாகும்.

பிறந்த குழந்தையை தவறாக குளிப்பாட்டினால் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
* குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோதான் பால் புகட்ட வேண்டும்.
* பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.
* குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.
* குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.

* தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.
* வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்
படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
* தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
* குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.
* குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.
* குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோரை விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பெற்றோர்-பிள்ளைகளுக்கான இடைவெளியே முக்கிய காரணம்.
குழந்தை பருவத்துக்கும், இளமை பருவத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலகட்டம், ‘டீன் ஏஜ்’ பருவம். இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம்தான் உறவு பந்தத்தை வலுப்படுத்தும். பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகும் பெற்றோருடன் இடைவெளியின்றி வாழ்க்கை பயணத்தை தொடர இந்த பந்தம் வழிவகுக்கும்.
பெரும்பாலான பெற்றோர் மழலை பருவத்தில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தை அவர்கள் வளர்ந்து ஆளாகும் சமயங்களில் காட்டுவதில்லை. அதிலும் டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளிடம் அதிகம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அமைத்து கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகள் பேசுவதை காதுகொடுத்து கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் போய்விடுகிறார்கள். அதுவே இருவருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.
பிள்ளைகள் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகளை பெற்றோர் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை உடன் சேர்ந்து விளையாடுங்கள். அது அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். பெற்றோருடன் சேர்ந்து பொழுதை கழித்த மனநிறைவையும் கொடுக்கும். அதுபோல் விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோரை விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பெற்றோர்-பிள்ளைகளுக்கான இடைவெளியே முக்கிய காரணம். அதனை பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகவும் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதேவேளையில் அவர்களை கண்காணிக் கவும் வேண்டும்.
பிள்ளைகள் கோபத்துடன் நடந்து கொள்ளும் சமயங்களில் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும். அவர்களிடத்தில் போதுமான மனப்பக்குவமோ, அனுபவ அறிவோ, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் சுபாவமோ இருக்காது. சில சமயங்களில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சம்பந்தமே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். திடீரென்று சோர்வான மனநிலையில் காணப்படுவார்கள். அந்த சமயங்களில் பெற்றோர், நெருங்கிய நண்பர்களை போல் பழகவேண்டும்.

அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். பெற்றோர் பெருமைப்படும் அளவுக்கு பிள்ளையிடம் நிச்சயமாக சில நல்ல விஷயங்கள் இருக்கும். அவைகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போதும் பிள்ளைகளிடம் வெளிப்படும் நல்ல விஷயங்களை சுட்டிக்காட்டி பேச வேண்டும். ஒருபோதும் பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ கூடாது. டீன் ஏஜ் வயதில் சமூக தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள்.
அதனால் சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில் பின்விளைவுகளை எடுத்துக்கூறி அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். அவற்றில் இருந்து அறவே ஒதுங்கி இருக்குமாறு கடுமை காட்டக்கூடாது. அதிலிருக்கும் நல்ல விஷயங்களை பயன்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த பருவத்திற்கே உரித்தான இனக்கவர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
பாலியல் சார்ந்த தவறான செய்திகளை நண்பர்களிடம் இருந்தோ, சமூக தொடர்பு சாதனங்கள் மூலமோ தெரிந்து கொள்வதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அதனால் அவர்கள் கேட்காமலேயே, பாலியல் பற்றிய தெளிவான புரிதலை பெற்றோர் விளக்கி கூற வேண்டும். அதில் ஏற்படும் சந்தேகங்களை தயக்கமின்றி கேட்குமாறு கூறுவதோடு அவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை சொல்ல வேண்டும்.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதற்கான அங்கீகாரம் கிடைக்காத சூழலில் வளருபவர்கள் விரக்தியின் விளிம்பில் இருப்பார்கள். அவர்களை சாதுரியமாக கையாண்டு அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெற்றோர் தங்கள் நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அதன்மூலம் அவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள இயலும்.