என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உடன் பிறப்புகளுள் பகைமை வளர முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர் தான்.
    திருமணமாகி, 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினமும் "தகுடுதத்தோம்" கதி தான். அந்த அளவு வீட்டில் தினம் தினம் ஓர் உலகப் போர் மூண்டுவிடும். தெருவே அதிரும் அளவு சண்டையிடும் இவர்கள் கூறும் அதற்கான காரணம் எப்போதுமே மிகவும் சில்லியாக தான் இருக்கும்.

    குழந்தைகளாக இருந்த போது நாமும் இதையே தான் செய்தோம் என்பதை மறந்துவிட முடியாது. உடன்பிறந்த இவர்களுக்குள் இப்படி சண்டை மற்றும் பகைமை வளர்வதற்கு ஒருசில வகைகளில் பெரியவர்கள் தான் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்....

    அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உடன் பிறப்புகளுள் பகைமை வளர முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர் தான். இருவரை மனதினுள் சமமாக காதலித்தாலும், வெளியில் சுட்டியாக இருப்பவர் அல்லது படிப்பில் கெட்டிக்காரராக திகழும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கி சமநிலை இன்றி நடந்துக் கொள்வதை தவிர்த்தாலே இந்த பகைமை குறைந்துவிடும்.



    குற்றம் கூறுவது, இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் அனைவரும், அனைத்திலும் சிறந்து விளங்க மாட்டார்கள். எனவே, யாராவது எதையாவது சரியாக செய்யாவிட்டால், மற்ற குழந்தைகள் முன்பு நிறுத்தி குற்றம் கூற வேண்டாம்.

    பெரும்பாலும் உடன்பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் பகைமை வளர காரணமே ஒருவரை, மற்றொருவரோடு ஒப்பிட்டு பேசுவதனால் தான். எனவே, எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

    உறவினர்கள்.., பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எந்த பாகுபாடு இன்றி வளர்த்தாலும், இந்த உறவினர்கள் சும்மா இருக்காமல், அவன் நல்ல சுட்டியா இருக்கான், சுறுசுறுப்பா இருக்கான், இதோ இவன் தான் மந்தமா இருக்கான் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், இது அந்த பிஞ்சி மனதில் பகைமை எனும் நஞ்சை வளர்ப்பதற்கு சமம். இவ்வாறு செய்யா வேண்டாம்.

    பெரியவர்களோடு ஒப்பிடுவது, நீதான் தாத்தா மாதிரி இருக்க, நீதான் அப்பா மாதிரி இருக்க.. என்று ஒருவரை பெரியவர்களோடு ஒப்பிடுதல். பொதுவாக குழந்தைகள் பெரியவர்களை போல இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதில், ஒருவர் அப்படி இருக்கிறார், தான் அப்படி இல்லையா என்பது அவர்கள் மீது பகைமையை வளர்க்க காரணமாகிவிடும்.

    அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது என்பது மிகவும் சவாலன ஒரு விஷயம். அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    குழந்தை எதையாவது கேட்டு அடம்பிடித்தால், குழந்தையிடம் விவாதிக்காதீர்கள். தவறான விஷயம் அல்லது நடக்காத ஓர் விஷயம், ஆபத்தான ஒரு விஷயத்திற்கு அழுது அடம்பிடித்தாலும் நீ சொல்வது தவறு, நடக்காது என்று சொல்லி உங்களின் கருத்தை நிறுவ முயற்சிக்காதீர்கள்.

    பேசுவது என்பது நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது அல்ல. வீணாக அடம்பிடிக்காதே என்று அறிவுரை வழங்குவது அல்ல. அவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும்.அப்போதைக்கு அவர்களை சமாதனப்படுத்தும் விதமாக பேச வேண்டும். நீங்கள் சொல்கிற பதில் அப்போதைக்கு அவர்கள் நம்புவதற்கு போதுமானதாக இருந்தாலே போதும்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது பெற்றோர்கள் தான் முதல் ரோல்மாடலாக இருப்பார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்கள் குழந்தை கவனித்துக் கொண்டேயிருக்கும். அதனால் பெற்றோர் கவனமாக இருப்பது மிகவும் அவசியமானது.

    குழந்தைகளுக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கிடுங்கள். அவர்களிடம் மனம் விட்டு பேசுபவராக எப்போதும் சப்போர்ட்டிங் செய்திடும் பெற்றோர்களாக இருங்கள். தேவையில்லாமல் அவர்களை கண்காணிப்பவர்களாக விமர்சிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டாம்.



    எப்போதும் வீட்டுக்குள்ளே குழந்தைகளை அடைத்து வைக்காமல், மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதியுங்கள். வெற்றி தோல்விகளையும், பகிர்தலையும் குழந்தைக்கு ஊக்கப்படுத்துங்கள். பிறர் வைத்திருப்பது எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிப்பதை தவிர்க்க பகிர்தல் என்பது மிகவும் தேவையானதாக இருக்கும்.

    உங்கள் குழந்தையின் செயல்களை பிறரிடம் சொல்லி பெருமைப்படுவதை விட அந்தக் குழந்தையிடமே நேரடியாக பாராட்டுங்கள். சின்ன சின்ன பரிசுகள் கூட கொடுக்கலாம். அடம்பிடித்து அழுவது தவறு என்பதை நாசூக்காக உணர்த்துங்கள்.

    அடம்பிடித்தாலே குழந்தை தவறான விஷயத்திற்கு தான் அடம்பிடிக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தையின் விருப்பத்திற்கு மரியாதை கொடுங்கள்.

    அடம்பிடித்து அழும் குழந்தையை அப்டித்தான் எல்லாத்துக்கும் அடம்பிடிச்சு அழுவா என்று கண்டுகொள்ளாமல் விடுவதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இது குழந்தையின் மனநிலையையே பாதித்துவிடும். உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை முற்றிலுமாக குழைத்துவிடும்.
    குழந்தைகள் அதிகமாக அடம் பிடித்தால் அதற்கு பணிந்துவிடக்கூடாது. அவசியமான தேவையாக இருந்தால் மட்டுமே நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்.
    தனியாக ஒற்றைக் குழந்தையாய் வளருபவர்கள் தேவையில்லாத பொருட்களாகவே இருந்தாலும் அது தனக்கு பிடித்தமானதாக இருந்தால் வாங்கித்தந்தே ஆக வேண்டும் என்று கூறி, உருண்டு புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

    இரண்டு குழந்தைகளை கொண்ட வீடு என்றால், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஓயாது சண்டையிடுகிறார்கள். இப்படி அடம்பிடித்து கலாட்டா செய்யும் குழந்தைகளால் அவர்களது பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக தாய்மார்கள் அத்தகைய மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ‘அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது?’ என்று ஆலோசனை கேட்கிறார்கள்.

    மற்றவர்களின் கவனத்தை வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி திருப்புவதற்காகத்தான் குழந்தைகள் இப்படி அடம் பிடிக்கிறார்கள். கைக்குழந்தையாக இருக்கும்போதே இந்த சுபாவம் அவைகளிடம் உருவாகிவிடுகிறது. தாய் தன்னை கவனிக்கிறாரா அல்லது அலட்சியம் செய்கிறாரா என்பதை உணரும் ஆற்றல் பிறந்த சில வாரங்களிலே குழந்தைகளிடம் ஏற்பட்டு விடுகிறது.

    தாயின் கவனிப்பு திருப்தி தந்தால் குழந்தை அமைதியாக இருக்கும். தாய் தன்னை அலட்சியம் செய்கிறார் என்று கருதினால் நிறுத்தாமல் அழும். அப்போது அதன் கண்களை நோக்கினாலோ, ஏதாவது பேசினாலோ, கை-கால்களை வருடினாலோ, தழுவினாலோ அது தன்னை சரியான முறையில் கவனிப்பதாக கருதி அழுகையை நிறுத்திவிடும்.

    பிறந்த சில வாரங்களிலே உருவாகிவிடும் இந்த சுபாவம், அந்த குழந்தை வளரும்போது கூடவே வளருகிறது. பெற்றோர் அதை புரிந்துகொண்டு குழந்தைகளுக்கு தேவையான அன்பையும், கவனிப்பையும், பாதுகாப்பு உணர்வையும் வழங்கவேண்டும். இல்லாவிட்டால் தன்மீது பெற்றோர் கவனம் செலுத்தவில்லை என்று நினைத்து, பிரச்சினைக்குரிய செயல்களை செய்யத் தொடங்கிவிடும்.



    அடம்பிடிக்கும் குழந்தைகளால் அதிக அவஸ்தைப்படும் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள், தாங்களும் குழந்தையிடம் தேவையான அளவு அன்பு செலுத்துவதாகத்தான் சொல்கிறார்கள். அவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பதைவிட, அதை குழந்தைகளை அனுபவிக்கச் செய்வதே முக்கியம்.

    அன்பு செலுத்துவது என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை தரும். ஆனால் அதை அனுபவித்தால் மட்டுமே குழந்தைக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் சமைப்பது என்பது அன்பு செலுத்துவது போன்றது. அதை குழந்தைக்கு ஊட்டி உண்ணச்செய்வதே குழந்தையை மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்வது போன்றது. வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் இருவரையும் பெற்றோர் முதலில் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.

    இரண்டு குழந்தைகளும் உடன்பிறந்தவர்களாகவே இருந்தாலும், இரண்டும் உணர்வுரீதியாக ஒன்றுபோல் இருக்காது. ஒரு குழந்தைக்கு தாயின் பாசமான ஒரு பார்வையும், அன்பான ஒரு வருடலும் போதுமானதாக இருக்கும். இன்னொரு குழந்தையை அவ்வப்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, பாசத்தோடு நான்கு வார்த்தைகள் பேசவேண்டியதிருக்கும். முத்தத்தால் திருப்தியடையும் குழந்தை யிடம் பாசப்பார்வையை மட்டும் செலுத்திவிட்டு தாயார் வேலைக்கு கிளம்பிவிட்டால் அந்த குழந்தை, தாய்க்கு தன் மீது கவனம் இல்லை என்று கருதி கவனத்தை ஈர்க்க அடம்பிடிக்கத் தொடங்கும்.

    அடுத்தவர்களை எரிச்சலடையவைத்து வலுக்கட்டாயமாக கவனத்தை ஈர்க்கும் இந்த சுபாவத்திற்கு ‘அட்டன்ஷன் சீக்கிங் பிஹேவியர்’ என்று பெயர். மற்றவர்களை தன்னை நோக்கி ஈர்க்க குழந்தைகள் வழக்கமாக செய்யக்கூடிய சில யுக்திகளை ஏற்றுக்கொள்ளலாம்தான். ஆனால் அதில் கோபம், ஆவேசம், வன்முறைக்குணம், பொருள் இழப்பு, ஏமாற்றுதல் போன்றவை ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    உதாரணத்திற்கு சிறுவன் ஒருவன் தனக்கு தேவையான ஒரு பொருளுக்காக அழுதால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அந்த பொருள் இருக்கும் கடையின் முன்னால் அழுது புரண்டாலோ, அதை வாங்கித்தரும்படி வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தாலோ, அதற்காக யாரையாவது அடித்தாலோ அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக அதை ஏற்றுக்கொண்டால் அந்த குழந்தை பெரியவனாகும்போது அது அவனது உடல் வளர்ச்சியையும், மனோவளர்ச்சியையும் பாதிக்கும். குழந்தை பருவத்திலே இந்த சுபாவத்திற்கு தீர்வு தேடாவிட்டால் பிற்காலத்தில் படிக்கும் கல்லூரியிலும், வேலைபார்க்கும் அலுவலகத்திலும் அந்த மோசமான சுபாவம் வெளிப்பட்டு அவனது எதிர்காலத்தை சிதைத்துவிடும்.



    தேவையே இல்லாமல் சத்தமாக பேசுவது, வயதுக்கு மீறி வார்த்தைகளை பயன்படுத்துவது, முரட்டுத்தனமாக அடம்பிடிப்பது, உடலில் இல்லாத வலிகள் இருப்பதாக பொய் சொல்வது, விரல் சப்புவது, தன்னை யாரோ கடத்த முயற்சித்ததாக கதை புனைவது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது, அடுத்தவர்களை அடித்தல்-கடித்தல், பள்ளி செல்வதற்கு ஆர்வம் இல்லாமை, சக நண்பர்களிடம் வன்முறை பிரயோகம் செய்வது போன்ற பிரச்சினைக்குரிய பழக்க வழக்கங்கள் குழந்தைகளிடம் இருந்தால், அவர்கள் ‘அட்டன்ஷன் சீக்கிங் பிஹேவியர்’ உடையவர்களாக இருப்பதாக கருதலாம்.

    இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால், ‘வலுக்கட்டாயமாக கவனத்தை ஈர்க்கும் சுபாவம்’ சிறுவர்களிடம் மட்டுமல்ல, டீன்ஏஜ் பருவத்தினரிடமும் உண்டு. பெண் என்றால் உடல் பாகங்கள் தெரிய உடை அணிந்து அடுத்தவர்கள் கவனத்தை ஈர்த்தல்-தேவையில்லாமல் கூச்சல்போட்டு அடுத்தவர்கள் கவனத்தை கவர்தல், சத்தமாக பேசியோ, சிரித்தோ தான் இருப்பதை மற்றவர்களிடம் உணர்த்திக்கொண்டே இருத்தல், மற்றவர் களுக்கு தொந்தரவு கொடுத்து பொது இடத்தில் கவனத்தை ஈர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

    அடம்பிடித்து வலுக்கட்டாயமாக கவனத்தை ஈர்க்கும் குழந்தைகளை திருத்தி இயல்புக்கு கொண்டுவருவது எளிது. பெற்றோர் அவைகளுடன் போதுமான நேரத்தை செலவிட்டு தங்கள் அன்பையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர் வெளியூரில் இருந்தாலும், நாள்தவறாமல் வீட்டில் இருக்கும் குழந்தையோடு போனில் பேசி, தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும்.

    தாய் இரண்டாவது கர்ப்பமான சில மாதங்களில் இருந்து முதல் குழந்தையிடம், பிறக்கப்போகும் குழந்தையை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இரண்டாவது குழந்தை பிறந்த பின்பும் முதல் குழந்தைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுத்து, குறை தோன்றாத அளவுக்கு அன்பு செலுத்தவேண்டும். குழந்தைகள் அதிகமாக அடம் பிடித்தால் அதற்கு பணிந்துவிடக்கூடாது. அவசியமான தேவையாக இருந்தால் மட்டுமே நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் நல்ல குணங்களை வெளிப்படுத்தும்போது குழந்தையை பாராட்டவும் வேண்டும்.
    குழந்தைக்கு எப்படி பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதே ஒரு கலைதான். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை பிறந்தவுடன் எல்லா வீடுகளிலும் குதூகலமும் பிறந்துவிடும். அவரவர் குழந்தைகளுக்கு தேவைப்படும் என்று பல பொருட்களை வாங்கி விடுவர். இதில் பல பொருட்கள் குழந்தைக்கு பொருத்தமற்றதாக வீணாகி விடுவதும் உண்டு. குழந்தைக்கு எப்படி பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதே ஒரு கலைதான்.

    குழந்தை துணிகள் :

    * குழந்தைக்கு வாங்கும் துணிகள் அணிவிக்க சுலபமாகவும், துவைக்க சுலபமாகவும், மென்மையாகவும், சமத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

    * நீண்டு கொடுக்கும் தன்மையோடும், பட்டன், லேஸ் முதலியவை இல்லாமலும், இயற்கை இழைகள் (காட்டன், லினன்) கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

    * கை இல்லாததாகவும், வட்டமான அகலக் கழுத்து கொண்டதாகவும், இறுக்கம் இல்லாததாகவும் குழந்தையின் ஆடைகள் இருக்க வேண்டும்.

    கேரியர்கள் குழந்தையை தூக்கிச்செல்ல :

    இளம் குழந்தையை கடைகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ, கோவிலுக்கோ, மருத்துவ பரிசோதனைக்கோ எடுத்துச் செல்லும்போது கைகளில் தூக்கிச் செல்வது கடினமாக இருக்கும். இதற்கென பிரத்யேகமாக சில பொருட்கள் கிடைக்கின்றன.

    உடலை சுற்றி போட்டுக்கொள்ளும் தூளி :

    இது நீண்ட அகலமான துணி போல் இருக்கும். இதன் முனைகளில் பக்கிள் இருக்கும். ஒரு புறம் தோள்பட்டையில் இருந்து உடலின் குறுக்கே துணியை போட்ட இடுப்பில் பக்கிளை மாட்டி விட வேண்டும். குழந்தை தூளியில் படுத்திருப்பது போல் நம் உடலோடு படுத்திருக்கும். இதை குழந்தையை இடுப்பில் தூக்கிச் செல்வது போலவும் மாற்றிக் கொள்ளலாம்.



    பேபி காரியர் :

    இது ஒரு சிறு பை போல் இருக்கும். கைகளையும், கால்களையும் வெளியே நீட்டுவதற்கான சிறு ஓட்டைகளும் இருக்கும். குழந்தையை இதில் உட்கார வைத்து உடலின் முன்புறமோ அல்லது பின்புறமோ மாட்டிக் கொள்ள வேண்டும். நான்கு மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு இது வசதியாக இருக்கும். குழந்தை இதில் உட்கார்ந்தபடி சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்து வரலாம். இந்த பையில் சிறிய குழந்தைகளை நம்மை பார்த்தும் சற்றே பெரிய குழந்தையை வெளியே பார்க்கும்படியும் உட்கார வைத்து அழைத்துச் செல்லலாம். இந்த காரியர்களில் சிலவற்றில் ட்ராலி போல் அடியில் சக்கரங்களும் இழுத்துச் செல்ல பிடியும் இருக்கும். இதில் குழந்தையை உட்கார வைத்து இழுத்தச் செல்லலாம்.

    குழந்தையை குளிப்பாட்ட :

    குழந்தையை குளிப்பாட்டுவது மிகவும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய ஒரு வேலை. சிறு குழந்தைகளுக்கு அழகான பாத்டப்கள் கிடைக்கின்றன. இந்த டப்கள் வசதியாகவும், தூக்கிச் செல்லக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

    குழந்தையை குளிப்பாட்டிய பின் காட்டன் துணியால் ஆன மெல்லிய மென்மையான ஆடையை குழந்தையை சுற்றி வைக்கும்போது ஈரம் எல்லாம் உறியப்பட்டு விடும். இந்த ‘பாத் ரோப்கள்’ அழகிய வண்ணங்களில் கடைகளில் கிடைக்கின்றன.

    பாத் டப்பில் குழந்தை குளிக்கும்போது சில குழந்தைகள் அழும். அனால் குளிக்கும் அனுபவத்தை குழந்தை விரும்பச் செய்வது அவசியம். எனவே, குளிக்கும் நேரத்தில் பாத் டப்பில் போட்டு வைக்க பிரத்யேகமான, அழகான வாட்டர் ப்ரூஃப் பொம்மைகள் கிடைக்கின்றன. இந்த பாத் டப்களும் காற்றடித்த உபயோகித்துக் கொள்ளக்கூடியதாக கிடைக்கின்றன. குழந்தையின் அளவிற்கு ஏற்ப இதன் அளவை நாம் கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.

    பாட்டில் வார்மர் :

    குழந்தைகளுக்கு லேசான இளம் சூட்டில்தான் தண்ணீர், பால், கஞ்சி போன்றவற்றை கொடுக்க வேண்டும். அவ்வப்போது பாலை சூடு செய்வதோ, இரவில் எழுந்து சென்று அடுப்பை பற்ற வைத்து பாலை சூடு செய்வதோ கடினமாக இருக்கலாம். இதற்கு இந்த பாட்டில் வார்மர் உபயோகமாக இருக்கும். இது ஒரு பவுச் அல்லது நீளமான பை போல் இருக்கும். பால் பாட்டில் அல்லது பாலின் அளவிற்கு தண்ணீரை ஊற்றி சுவிட்சை ஆன் செய்ய வேண்டும்.

    இளம் சூடான அளவில் பால் இருக்கத் தேவையான அளவில் தண்ணீரை சூடு செய்து, சூடு குறையும் போதெல்லாம் தானாகவே ஆன் ஆகி செயல்படும் இந்த வார்மர். இதிலேயே இரண்டு அடுக்குகள் கொண்டதாகவும் கிடைக்கும். ஒன்று சூடாக வைத்திருக்கவும், மற்றொன்று குளிர்ச்சியாக வைக்கவும் இருக்கும். சூடாக உள்ளதை கொடுத்த பின்பு குளிர்ச்சியான பாலை இதற்கு மாற்றிக் கொள்ளலாம். இரவு நேரங்களுக்கும், பிரயாணங்களுக்கும் இது உபயோகமாக இருக்கும்.
    பெண் குழந்தைகள் குட்டி தேவதைபோல் தெரிகின்ற வாறு இடுப்பிற்கு மேல் இருக்கமாகவும், இடுப்பில் இருந்து கால் பகுதி வரை அதிக மடிப்புகள் கொண்ட குடை மாதிரி உப்பலாக தெரியும் வாறு உருவாக்கப்பட்டதே டூடூ ஆடை.
    பெண் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அணிவிக்கப்படும் ஓர் ஆடை வகைதான் டூடூ. முதல் பிறந்த நாள் போது பெண் குழந்தைகள் குட்டி தேவதைபோல் தெரிகின்ற வாறு இடுப்பிற்கு மேல் இருக்கமாகவும், இடுப்பில் இருந்து கால் பகுதி வரை அதிக மடிப்புகள் கொண்ட குடை மாதிரி உப்பலாக தெரியும் வாறு உருவாக்கப்பட்டதே டூடூ ஆடை.

    நவீன காலத்தில் மேல் ஆடையுடன் இணைந்த பாலே நடன ஆடைதான் டூடூ. இது இரு வகையாக அழைக்கப்படுகிறது. ரொமான்டிக் டூடூ என்பது மென்மையான மணி போன்ற அமைப்பிலானது. கீழ் கணுக்கால் வரை நீண்டு இருக்கும். பழங்கால டூடூ என்பது குட்டையான, இறுக பிடித்துள்ள ஆடை. டூடூ என்ற பெயர் வந்த காரணம் பலரும் அறியாதது. 1881-க்கு பிறகு தான் இந்த ஆடை பரவ ஆரம்பித்தது. இந்த ஆடை உருவாக்கம் செய்யப்பட்ட டூனி என்ற துணி வகை பெயரால் டூடூ என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இடுப்பு பகுதியில் அதிக மடிப்புகள் கொண்டவாறு பல அடுக்குகள் கொண்ட குடை மற்றும் மணி அமைப்பில் உருவாக்கப்படும் ரொமாண்டிக் டூடூ 1832-க்கு பிறகே உருவாக்கம் பெற்றது. டூடூ ஆடைகள் டார்லடான், பட்டு, மஸ்லின், டூனி மற்றும் நைலான் துணிகளில் உருவாக்கப்படுகிறது. ரொமாண்டிக் டூடூ ஆடைகள் தற்போது புதிதாக பிறந்த நாள் கொண்டாடும் குட்டி தேவதைகளின் தனிசிறப்பு மற்றும் முதல் தர ஆடையாக அறியப்படுகிறது.

    விரிந்த குடையாய் அழகிய டூடூ ஆடைகள் :

    டூடூ ஆடைகள் என்பதில் வானவில் பூக்கள், சிண்ட்ரெல்லா, வெண்மேகம் என்றவாறு பல டிசைன் மற்றும் வண்ண பிரிவுகளின் அடிப்படையில் பெயர் இடப்படுகின்றன. கண்ணை வர்ணம் மட்டுமல்ல மெல்லிய நெட் துணிகள் அடுக்கடுக்காய் பரந்து விரிந்தவாறு சில மாடல்களில் பெரிய பூக்கள் பதித்தும், இறுக்கமான மேல் சட்டை அமைப்பும் அந்த ஆடையின் கவுரவத்தை உயர்த்துகின்றன.



    பெரிய பூக்கள் வடிவமைப்பு செய்யப்பட்ட டூடூ ஆடைகள் :

    பெண் குழந்தைகளின் மேல் சட்டை அமைப்பு என்பது பெரிய ஒற்றை பூ (அ) இரு வண்ண மலர் கொத்துகள் கொண்ட அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. சில டூடூ ஆடைகளின் மேற்புற பூங்கொத்துகளின் அதே பூக்கள் வலை போன்ற விரிந்த பாவாடை அமைப்பிலும் படர விடப்பட்டுள்ளன. அதிகபட்சம் டூடூ ஆடைகளின் இடுப்பு பகுதிகள் பெரிய ஒற்றை பூவுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    வடிவங்களில் வேறுபட்ட டூடூ ஆடைகள் :

    கணுக்கால் வரை நீண்ட டூடூ ஆடைகள் மட்டுமல்லாது முட்டி பகுதி வரை நீண்ட நடுத்தர குட்டை மற்றும் குட்டை பாவாடை அமைப்பு கொண்ட டூடூ ஆடைகள் வருகின்றன. டூடூ ஆடைகளின் நிறம் பெரும்பாலும் இங்கிலீஷ் கலர்களிலேயே உள்ளன. ஆங்கிலேய பாணி ஆடை அமைப்பு என்பதுடன், அதே நிற கலாசாரத்துடன் வருகிறது. அதாவது வெளிர் நீலம், வெளிர் பச்சை, வெளிர் சிவப்பு, வெள்ளை போன்றவை டூடூ ஆடைகளின் நிற வரிசையாக உள்ளது.

    தேவதை என திகழும் பெண் குழந்தைகள் :

    நமது பாரம்பரிய குட்டி இளவரசிகளின் ஆடை வேறு. ஆனால் மேற்கத்திய கலாசார குட்டி இளவரசிகளின் ஆடை டூடூ. இந்த டூடூ ஆடை அணிந்து வரும் குழந்தைகள் இளந்தேவதைகள் போலும், இளவரசிகள் போலும் தோற்றமளிக்கின்றனர். அதற்கேற்ற அந்த நெட் துணிகளின் விரிந்த அமைப்பும், ஒரு பக்க மற்றும் இரு பக்க கை அலங்கரிப்பு என டூடூ ஆடைகள் அதிக அலங்கரிப்புடன் திகழ்கின்றன. அதனால்தான் பிறந்த நாள் மற்றும் விழாக்களின்போது அழகிய டூடூ ஆடைகள் பெண் குழந்தைகளை அலங்கரிக்கின்றன.
    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது வைத்துள்ள அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். ஆனால் அந்த அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. உங்கள் பாசமே குழந்தை உங்களை வெறுக்க காரணமாகிறது. குழந்தைகள் உங்களை ஏன் வெறுக்கிறார்கள் என்பதை பற்றி காண்போம்.

    குழந்தைகளை ஒரளவு கண்டிப்பது சரி. எங்கே குழந்தை தவறான வழியில் சென்றுவிடுமோ என்று நினைத்து அதிகமாக கண்டித்து வைப்பது குழந்தைகள் மனதை புண்படுத்தும்.

    வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர், தங்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை. வீட்டில் இருக்கும் போது கூட வேலை வேலை என வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவதால், குழந்தைகள் பெற்றோர்களின் பாசத்திற்காக ஏங்கி போய்விடுகின்றனர்.

    மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே தேவைகள் இருக்கும். குழந்தைகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பெற்றோர்களையே நாடுகின்றனர். பெற்றோர்கள் அவர்களது தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.



    பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு சண்டை போடாமல் அமைதியாக இருக்க சொல்லி தர வேண்டும். ஆனால் பெற்றோர்களுக்குள் உண்டாகும் சண்டைகள் மற்றும் பிறருடன் பெற்றோர்கள் போடும் சண்டைகள் குழந்தைகளை வெறுப்படைய செய்கிறது.

    குழந்தைகள் மீது பொதுவாக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் மிக அதிகமான பாசம் மற்றும் அக்கறை ஆகியவற்றை குழந்தைகள் விரும்புவதில்லையாம். அதிக அக்கறையும் பாசமும் குழந்தைகள் தங்களது வழியில் செல்ல தடையாக இருக்கிறதாம்.

    இரண்டு குழந்தைகள் இருந்தாலும், ஒரு குழந்தையை செல்லப்பிள்ளையாக நினைத்து வளர்ப்பது, அதிக அக்கறை காட்டுவது, அந்த குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி தருவது போன்றவை மற்றொரு குழந்தையை வருத்தப்பட வைக்கும். எனவே இரண்டு குழந்தைகளையும் சமமாக கவனித்துக்கொள்வது அவசியம்.
    குழந்தைகளுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் மிகவும் குறைவே. எனவே அவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள், மாத்திரைகள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் மிகவும் குறைவே. இதனால் அவர்களை எளிதில் நோய் தொற்றுகள் தாக்கி விடும். அவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள், மாத்திரைகள் அனைத்திலும் கவனம் கொண்டு கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்ற குறைகளுக்கு கொடுக்கப்படும் டானிக் மருந்துகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    சிறுவர்களுக்கு ஏற்படும் இருமலுக்கு கொடுக்கும் கொடைன் என்ற நிறமி இருக்கும் மருந்துகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் பெற்றோருக்கு இருக்க வேண்டிய கவனம்!

    குழந்தைகளுக்கு வாங்கும் மருந்துகளில் கொடைன் (Codeine), டிரமடால் (Tramadol) போன்ற குறிப்புகள் இருக்கிறதா என்று கவனித்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அதனை கொடுக்க கூடாது.



    உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள் :

    குழந்தைகளின் உடலில் இருக்கும் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால் மூச்சு திணறும். இது உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    எப்.டி.எ அறிக்கையில் இதனை 12 வயதிற்கு உட்பட்டவர்கள் கண்டிப்பாக எடுத்து கொள்ள கூடாது என்பதே.

    உடலில் இருக்கும் வலிகளை போக்கும் வலி நிவாரணியாக பயன்படுவது போலவே அதனால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    நுரையீரலில் கோளாறுகள் உண்டாகும், சுவாச உறுப்புகளை பாதித்து இறப்பை ஏற்படுத்தும்.

    சிலரிடம் அல்ட்ரா ரேபிட் மெட்டபாலிசம் காண பட்டால், அவர்கள் இந்த மருந்துகளை உட்கொண்டால் விரைவில் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரை பறிக்கும் ஆபத்தை கொண்டது. பிரசவத்திற்கு பிறகு பெண்கள் இந்த மருந்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

    மருத்துவரின் ஆலோசனை இன்றி இந்த மருந்துகளை எடுத்து கொண்டதால் இழப்பு சதவிகிதம் உயருகிறது.
    குழந்தைகள் பொற் சொல்வது பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
    அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.

    குழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.

    பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.

    குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

    குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.



    குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.

    குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.

    குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.

    குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.

    உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.
    குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் சில தவறுகளை செய்கின்றார்கள். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள்

    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். அதற்காக மாலை நேர ஸ்நேக்ஸ் வேண்டாம் என்பதில்லை... உணவுகளுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.

    பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு மட்டும் போதுமானது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனை உண்டாகிறது.



    குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நேக்ஸ் தருவதே சிறந்ததாகும்.

    வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிமாக சர்க்கரை இருக்கும் எனவே கவனம் தேவை.

    நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.
    குழந்தைகளை தினமும் கைகளை இறுக்கமாக மூடி மெதுவாகத் திறக்க பழக வையுங்கள். இதுபோன்ற சிறு சிறு பயிற்சிகள் குழந்தைகளின் விரல்களுக்கு நல்ல வலுவைத்தரும்.
    இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் மொபைலை வைத்துத்தான் கேம் விளையாடுகின்றன. இப்படி தொடர்ந்து மொபைலில் விளையாடும் குழந்தைகளுக்கு விரல்கள் பாதிப்படைகின்றன என்று மருத்துவ உலகம் சொல்கிறது. இதை சரி செய்வதற்கு எளிய பயிற்சிகள் செய்தால் விரல்கள் நன்றாக இயங்கும். இதன் மூலம் கையெழுத்தும் அழகாகும்.

    குழந்தைகளுக்கு முதற்கட்டமாக பைன் மோட்டார் ஸ்கில் எனப்படும், அவர்கள் கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்க்க வேண்டும். கை விரல்களுக்கு அடிக்கடி வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதியடைந்து, கையெழுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். பல வண்ணங்களில் கிடைக்கும் களிமண்ணை குழந்தைகளுக்கு வாங்கித் தந்து, பிசைந்து விளையாட, சின்னச் சின்ன உருவங்கள் செய்யப் பழக்கப்படுத்துங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

    மைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு என ஏதேனும் ஒரு மாவினைப் பிசைந்து, பெரிய, அகலமான தட்டில் வைத்து, குழந்தையை அதில் ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.



    சில்லரைக் காசுகளை எண்ணி, அவற்றை சிறு துளையுள்ள உண்டியலில் குழந்தைகளைப் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும், பென்சிலை வழுக்காமல் பிடித்து எழுத அவர்களின் விரல்கள் பழக்கப்படும். குழந்தைகளிடம் உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள், பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். அதேபோல தடிமனான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் அவர் களை நூலை கோர்க்கச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.

    உங்கள் குழந்தைக்குப் பிடித்த நிறத்தில் கலர் பென்சிலை கொடுத்து, முட்டைக் கூடு, காகிதக் கோப்பை போன்றவற்றில் அவர்களைப் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும். சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மட்டும் சரிவர எழுத வராமல் இருக்கலாம். அதனால் அவர்களின் மொத்தக் கையெழுத்தும் பார்க்க சரியில்லாதது போன்று தோன்றும். எனவே, சார்ட் அல்லது கார்ட்போர்டு அட்டைகளில் அந்த எழுத்துக்களை மட்டும் பெரிதாக எழுதி, அதன்மீது புள்ளிகள் வைத்து அந்த எழுத்து போன்றே வடிவமைக்கச் சொல்லலாம்.

    குழந்தைகளின் நரம்புகள் மெலிதாக இருக்கும் என்பதால் அவர்கள் எழுதப் பழகும்போது பிடிமானத்துக்குக் கடினமாக இருக்கும் பேனா அல்லது பென்சிலை வாங்கிக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்கள் கை சிரமத்துக்கு உள்ளாகும். குழந்தைகளை அவர்கள் கைகளை இறுக்கமாக மூடி மெதுவாகத் திறக்க சொல்லலாம். இப்படி நாள் ஒன்றுக்கு 10 முறையாவது செய்து பழக வையுங்கள். இதுபோன்ற சிறு சிறு பயிற்சிகள் குழந்தைகளின் விரல்களுக்கு நல்ல வலுவைத்தரும்.
    குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பாடுவது, பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை நட்பை வளர்க்கும் கலையை போதிப்பதுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.
    விஜயதசமி ஒவ்வொரு வருடம் வரும்போதும் ஏதேனும் ஒரு விஷயத்தை அல்லது கலையை குழந்தைகளுக்கு தொடங்க விரும்புவர் பெற்றோர். அந்த பட்டியலில் பாட்டுக்கு எப்போதுமே முதல் இடம் உண்டு நம் கலாசாரத்தில். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எல்லாம் பாட்டு நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவே உள்ளது. பாட்டு கற்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

    பாட்டும், கணிதமும் இணைந்தவை எனலாம். பாட்டில் உள்ள தாளம், ராகம், ஜதி போன்றவைகளை குழந்தைகள் கற்பதின் மூலம் வகுத்தல், கூட்டல் போன்றவைகளில் கவனம் ஏற்படுவதுடன் சில வடிவங்களையும் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். சவுத் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் பாட்டு கற்றுக் கொள்வதை குழந்தைகளின் மூளையில் உள்ள மொழி, கற்றல், எண்ணறிவு போன்ற பகுதிகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாக கூறுகிறது.

    படிப்பு மட்டுமின்றி குழந்தைகளின் நுண்ணறிவு, சமூக மற்றும் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டு அறிவு, வியக்கத்திறன் உடலும், மனமும் இணைந்து செயல்படும் திறன், வார்த்தைகளின் ஒலியை தெரிந்து கொள்ளும் அறிவு போன்றவைகள் மேம்படுகின்றன.



    குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பாடுவது, பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை நட்பை வளர்க்கும் கலையை போதிப்பதுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

    இசைக்கருவிகளை இசைக்கும்போது குழந்தைகளின் மனஅழுத்தம் குறைகிறது. மனச்சோர்வு நீங்குகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை தினசரி இசைக்கருவிகளை இயக்கும்போது பெருமளவில் குறைவதாக கூறப்படுகிறது. மேலும் இசைக்கருவியை இசைப்பவர்கள் ஐக்யூ அளவு 7 புள்ளிகள் வரையில் சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் கூடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    பாட்டு கற்கும்போது குழந்தைகளுக்கு சில ஒழுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எப்படி உட்கார்வது, கையை எப்படி அசைப்பது, இசை கருவி என்றால் அதை எப்படி பிடிப்பது, கால்களை கைகளை எப்படி வைத்துக் கொள்வது போன்றவைகள். அதேபோல் குருபக்தி, பொறுமை, நேர மேலாண்மை, இலக்குகளை அடைவது, அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் ஊக்கம் போன்றவைகள் இயல்பாக குழந்தைகள் கற்றுக் கொள்ள உதவுகிறது.

    குழந்தைகள் பாடுவதையோ, இசைப்பதையோ கேட்பவர்கள் அவர்களை பாராட்டுவதால் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை உயர்கிறது.
    பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று.
    குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை வீண் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். விளையாட்டு ஒரு மகிழ்வான விஷயம் என்பதோடு ஈடுபாட்டையும் ஊக்குவிக்கக் கூடியது. பலன்களை அடைவதில் சிந்தித்தலை விட செயல்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று.

    விளையாட்டு, குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவோர் அதன் மூலம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிறைய ஏற்படுவதாக நம்புகின்றனர். இது உங்களை இளைப்பாறச் செய்யும், ஊக்கம் கொள்ளச் செய்யும். குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியைத் தருவதால் மனம் புத்துணர்ச்சி பெற்று சோர்விலிருந்து விடுபடுவோம்.

    இந்த விளையாட்டுகள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் திறனையும், அறிவு மற்றும் உணர்வு திறனையும் மேம்படுத்துகின்றன. குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது, அவர்களுடைய மகிழ்ச்சியான பொழுதுகளில், அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவற்றை திணிக்க முயலாதீர்கள். குழந்தைகளின் செய்கைகளை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும், முடிவெடுக்கவும், அனுமதியுங்கள்.



    குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும், புரிதலையும், கற்றுக்கொள்வதற்கு இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகளுடன் விளையாடும்போது ஏற்படும் பந்தம் நெடுநாள் வரை நீடித்திருக்கும். இது தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். கடும் மன நெருக்கடியில் உள்ள பெரியவர்களுக்கு, குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் போது மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

    குழந்தைகள்-பெரியவர்கள் இடையே காணப்படும் சமூக, உணர்வு சார்ந்த நடத்தைகள், அவர்களிடையே காணப்படும் பந்தம் ஆகியவற்றில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது, அது மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் தருவதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுடனான விளையாட்டு மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

    ஒரே இடத்தில் அசையாமல் இருந்து கொண்டோ அல்லது டி.வி.யை பார்த்துக் கொண்டோ இருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் இது உதவுகிறது. உங்கள் கற்பனைத் திறனை தூண்டி புதிய சிந்தனைகளை வாழ்வில் புகுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்பட வைக்கிறது. நாம் வளர வளர மெல்ல விளையாடுவதைக் குறைத்து விடுவோம் எனினும் விளையாட்டு உங்களை இளமையாகவும் மூளையை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.
    ×