என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அத்தகைய விக்கலை நிறுத்தும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
பிறந்த குழந்தையை சரியாக கவனிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டு, விரைவில் அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
அதைவிட்டு அது தானாக போய்விடும் என்று காத்துக் கொண்டிருந்தால், பின் குழந்தை அழத் தொடங்கி, அதன் அழுகையே நிறுத்துவது பெரும் அவஸ்தையாகிவிடும். ஆகவே அத்தகைய விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம். சரி, இப்போது அந்த விக்கலை எப்படியெல்லாம் செய்தால் நிறுத்திவிடலாம் என்று பார்ப்போம்.
தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குகிறது. இதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு, பால் கொடுக்கும் நேரத்தில் அவ்வப்போது ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும் விக்கலும் ஏறப்டாமல் இருக்கும்.

தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பத்தை விட வேண்டும். அவ்வாறு ஏப்பம் வந்தால், தாய்ப்பாலின் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். மேலும் சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
குழந்தைகள் விக்கல் எடுக்கும் போது அவர்களது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால், அவை விக்கலை நிறுத்திவிடும். குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் வாயுத் தொல்லை என்றும் சொல்லலாம்,.
எனவே குழந்தைகள் வாயுத் தொல்லையினால் தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அதைவிட்டு, தொடர்ந்து கொடுத்தால், பின் குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடும்.

குழந்தைகள் இரவில் நிம்மதியாக தூங்கவில்லை என்றால் பெற்றோர் தவித்துவிடுவார்கள். இரவில் தூங்க மறுக்கும் குழந்தைகளை, எளிதில் தூங்க வைக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
பச்சிளங் குழந்தைகள் விளையாடும்போதும், சிரிக்கும் போதும் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அவை இரவில் நிம்மதியாக தூங்கவில்லை என்றால் அவ்வளவுதான் குழந்தையின் பெற்றோர் தூக்கமின்றி தவித்துவிடுவார்கள்.
நாள் முழுவதும் வேலை செய்த களைப்போடு இரவில் தூங்கச்செல்லும் அவர்கள், குழந்தைகள் தூங்காமல் சதா அழுதுகொண்டேயிருந்தால் கோபமடையவும் செய்வார்கள். அதற்காக குழந்தையை அடித்தோ மிரட்டியோ தூங்கவைக்க முற்படக்கூடாது. தூக்கமின்மை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கும் விஷயம்.
நமக்கு இருக்கும் வேலைகளின் அவசரத்தில் தூங்கு, தூங்கு என அதட்டியோ, வேகவேகமாக தொட்டிலை ஆட்டியோ தூங்க வைத்தால் குழந்தைகள் தூங்காது. அதட்டல் பயத்திலேயே தூக்கத்தை மறந்து அழ ஆரம்பித்துவிடும். அப்படி இரவில் தூங்க மறுக்கும் குழந்தைகளை, எளிதில் தூங்க வைக்கும் டிப்ஸ் இதோ...!
* குழந்தைகளை பகல்வேளையில் விளையாட வைத்துவிட்டு, மாலையில் அவர்களை தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.

* தினமும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை பின்பற்றினால், குழந்தைகள் அதற்கேற்றாற்போல் தங்களை விரைவில் மாற்றிக் கொள்வார்கள்.
* இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி விட்டால், அவர்களுக்கு தானாகவே தூக்கம் வந்து விடும்.
* தனிமை பயமின்றி தாயின் அரவணைப்பு கிடைத்தால் எப்பேற்பட்ட குழந்தையும் விரைவில் தூங்கிவிடும்.
* கதைகள் கேட்கும்போது குழந்தைகளின் கவனம் ஒரே இடத்தில் குவிந்து மனநிலை அமைதியாகும். அப்போது சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். பெற்றோருடனும் குழந்தைக்கு இருக்கும் உறவும் இதன் மூலம் சிறப்படையும். குழந்தைக்கு மனோவளர்ச்சியும் ஏற்படும்.
* மென்மையாக தாலாட்டுப் பாடினால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவார்கள்.
* குழந்தைகளை தினமும் ஒரே இடத்தில் தூங்க வைப்பது நல்லது. தலையை மென்மையாக கோதிவிடுவது, தட்டிக் கொடுப்பது போன்ற செயல்களால் அம்மாவின் அரவணப்பை உணர்ந்து குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அதே சமயம் எல்லா சூழ்நிலையிலும் குழந்தையை தூங்கவும் பழக்கவேண்டும். அதாவது தொட்டில், மெத்தை, தரை விரிப்பு, மடி என்று எல்லா இடத்திலும் குழந்தையை தூங்கச்செய்யவேண்டும். குழந்தை அதற்கு பழகிக்கொண்டால் மட்டுமே அதனை எல்லா இடத்திற்கும் எடுத்துச்செல்ல முடியும்.

குழந்தைகளோடு சேர்த்து, பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி.
இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது. குழந்தைகளோடு சேர்த்து, பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி. குழந்தைகளின் இதயத்தைத் தாக்கும் இந்த நோய்க்கு அடிப்படை பல்மோனரி ஸ்டினோசிஸ் (Pulmonary Stenosis) என்கிற நிலை.
பல்மோனரி ஸ்டீனோசிஸ் என்பது நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு. இந்த அடைப்பு, பத்து சதவிகிதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த அடைப்பு பெரிதாக இருக்காது; மெல்லிய அளவிலேயே இருக்கும். இந்த அடைப்பின் அளவைப் பொறுத்துதான் இதயத்தில் பாதிப்பின் தீவிரம் இருக்கும்.
அறிகுறிகள்...
சீரற்ற இதயத் துடிப்பு
சீரற்ற ரத்த ஓட்டம்
மூச்சுத்திணறல்
பாதம், முகம், கண் இரப்பைகள், வயிறு போன்ற பகுதிகளில் வீக்கம்.

சிகிச்சைகள்!
* இதயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை, அளவைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். இதயத்துக்குச் செல்லும் வழியிலுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்ய ஸ்டென்ட் (Stent) சிகிச்சை முறை பின்பற்றப்படும்.
* வால்வுகளில் அடைப்பு, ரத்தக் குழாயில் அடைப்பின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இதய அறுவைசிகிச்சை (Open Heart Surgery) மேற்கொள்ளப்படும்.
* ரத்தக்குழாய் அடைப்பின் பாதிப்பைப் பொறுத்து சிகிச்சைக்கான நேரமும், செலவுத் தொகையும் மாறுபடும்.
பல்மோனரி ஸ்டினோசிஸ் ஏற்படுவதற்குக் காரணங்கள்...
பல்மோனரி ஸ்டினோசிஸ் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுவதற்குக் காரணம், பெற்றோர்களின் வாழ்வியல் முறையே.
* பெற்றோர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், வாழ்வியல் மாற்றம் போன்றவையே பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
* சில சமயங்களில் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதால் பெற்றோர்களிடமிருந்து குழந்தைக்கு ஏற்படும் ஜீன் மாற்றம் காரணமாக இருக்கலாம்.
* கருவில் குழந்தைக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாடு.
போன்ற பல்வேறு காரணங்களால் இந்த இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

பெற்றோருக்கும் தனிமை என்று ஒன்று உள்ளது என்பதை குழந்தைகளுக்குப் புரியும்படி வளர்ப்பது இருவருக்கிடையே சங்கடங்கள் ஏற்படுவதை குறைக்கும்.
குட்டிக் குட்டி வீடுகள் பெட்டி பெட்டியான அறைகள்... இது தான் இந்தியா எங்கும் இருக்கும் பல குடும்பங்களின் நிலை. திருமணமான புதிதில் புதிய வீடு
மற்றும் தனிக் குடித்தனம் மூலம் ஆண் பெண் தாம்பத்தியத்துக்கான தனிமை கிடைத்து விடுகிறது.
அந்த அன்பின் சாட்சியாக குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் குழந்தைகள் வளர வளரத் தம்பதிகளுக்கு தாம்பத்தியத்துக்கான முக்கியத்துவம் தேய்ந்து காணாமல் போகிறது.
தங்கள் அன்பின் அரவணைப்பில் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தையைப் பெற்றோர் தங்களுடனே தூங்கப் பழக்குகிறார்கள். குழந்தை விவரம் அறிவதற்கு முன்பு அதே படுக்கையிலேயே தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பின்னும் பல வீடுகளிலும் இதுவே தொடர்கிறது.
குழந்தைகள் தூங்கி விட்டார்கள் இருட்டில் என்ன தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் இது போல நடந்து கொள்வது குழந்தைகளிடம் மிகப்பெரிய மனபாதிப்பை ஏற்படுத்துவது குறித்த புரிதல் பெரும்பாலான தம்பதிகளிடம் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
பொருளாதார காரணத்தால் ஏற்படும் இடப்பற்றாக்குறை மற்றும் குழந்தை வளர்ப்பு முறையில் இருக்கும் அறியாமையே இதற்குக் காரணமாக இருக்கிறது.

குழந்தைகளுக்காக என்று தங்களது தனிமை தாம்பத்தியம் உள்ளிட்ட பல விஷயங்களையும் தம்பதிகள் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் தூங்கிய பின்பு அதே அறையிலேயே பல தம்பதிகள். செக்ஸ் வைத்துக் கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இது குறித்து குழந்தைகள் உளவியல் நிபுணர் கூறுகையில் ‘‘குழந்தைகள் எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். எக்ஸ்பிசனிசம் என்று ஒன்று இருக்கிறது.
தன் உடலை மற்றவர்களுக்குக் காட்டுவது மற்றும் மற்றவர்கள் உடலை எட்டிப் பார்த்து தெரிந்து கொள்வது என்று இரண்டு விஷயங்கள் குழந்தைகளிடம் இருக்கும். அப்பா அம்மாவுக்கிடையே இருக்கும் செக்ஸ் பற்றி ஒரு குழந்தை தெரிந்து கொள்ளும் போது தனிமை மற்றும் பயத்தை உணருகிறது.
அப்பாவும் அம்மாவும் தன்னை டாமினேட் செய்வதாக நினைத்து குழந்தைகள் அவர்களை வெறுக்கத் தொடங்குவார்கள். நம்மைத் தாண்டி அம்மா அப்பாவுக்குள் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்ற எண்ணம் அது குறித்து தேடித் தெரிந்து கொள்ள குழந்தையைத் தூண்டுகிறது.
இதனால் அந்தக் குழந்தைகள் வெளியிடங்களில் மிஸ் பிகேவ் செய்யும் வாய்ப்பும் உள்ளது. ஆண் குழந்தையாக இருந்தால் பெண்கள் பற்றிய தவறான கண்ணோட்டம் ஏற்படலாம். பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இது போன்ற விஷயங்களைச் சிறு வயதில் நேரில் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.

வளர்ந்த ஆண் பெண் இருவருமே குழந்தைகள் முன்பு ஆடை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். செக்ஸ் என்ற விஷயம் சிறு வயதில் நெகட்டிவாக பதிந்து விட்டால் அதை மாற்ற முடியாது. பெற்றோர் செக்ஸ் வைத்துக் கொள்வதைக் கண் விழித்துப் பார்க்கும் குழந்தை அம்மாவை அப்பா கொல்லுவதாகவோ கொடுமைப்படுத்துவதாகவோ புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.
இது போக தாங்க முடியாத மன அழுத்தத்தை குழந்தைகள் அனுபவிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது போலாகி விடும். குழந்தைகள் வளர்ந்து வயசாகும் வரை அவர்கள் மனதில் இது அறு வெறுப்பு அச்சம் பயத்தை உண்டாக்கி... அப்பாவின் மீதான வெறுப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் எந்த வயதில் இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனரோ அதற்கேற்ப பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த விஷயத்தை அவர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவதும் இல்லை. எனவே குழந்தைகள் இருக்கும் அறையில் செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பெற்றோர் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் ஆழ்ந்து தூங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்தியப் பிறகு வேறு அறைக்கு சென்று விடலாம். குழந்தைகள் இல்லாத நேரத்தை தாம்பத்தியத்துக்குப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயதாகும் போது தனியாக படுக்க வைத்து பழக்குங்கள்.
குழந்தைகள் தூங்கியதும் வேறு அறையில் தாம்பத்தியம் வைப்பதாக இருந்தாலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் தவறுகளை பார்க்கலாம்.
குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. எந்த உணவை, எந்த அளவில் கொடுக்கவேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரியவில்லை. குழந்தைகள் நிறைய சாப்பிட வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் ஆர்வமாக இருக்கிறது. குழந்தைகள் போதும்.. போதும் என்று கூறினாலும் விடாமல் அதிகப்படியான உணவினை பெற்றோர்கள் திணிக்கிறார்கள். இதனால் குழந்தைகள் குண்டாகிவிடுவார்கள். அவர்கள் செயல்திறன் பிற்காலத்தில் பாதிக்குமாம்.
குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் சின்னச்சின்ன தவறுகள்:
1. நொறுக்குத்தீனி..!
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்கிரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களது இரவு உணவுத்தேவையை குறைத்துவிடும். அதற்காக மாலை நேர நொறுக்குத்தீனி வேண்டாம் என்பதில்லை. உணவுகளுக்கு இடையில் போதிய உணவு இடைவெளி வேண்டும். நொறுக்குத்தீனி உணவுகளை குறைந்த அளவே வழங்கவேண்டும். அதில் வறுத்தது பொரித்ததை தவிர்க்கவேண்டும்.

10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கலோரிகளே போதுமானது. அதனால் உணவையும், நொறுக்குத்தீனியையும் அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவின் அளவு அதிகரித்துவிட்டால், மெட்டபாலிசம் குறைந்து செரிமானப்பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகள் குண்டாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
2. அளவின் அவசியம்
பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒரு வேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு உணவு தேவை என்பது தெரிவதில்லை. நன்றாக சாப்பிடவேண்டும் என்ற நினைப்பில் உணவைத் திணிக்கிறார்கள். அவர்களுக்கு தேவைக்கு அதிகமான உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பதுடன், ஆரோக்கிய பிரச்சினைகளும் தலைதூக்கும். அதிகமாக உணவு உண்ணும் குழந்தைகள் செயல்திறன் குறைந்தவர்களாகிவிடுவார்கள். வயதுக்கு தக்கபடி குழந்தைக்கு எவ்வளவு உணவு கொடுக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொடுங்கள். குழந்தைகளை மைதான விளையாட்டுகளை விளையாடவும் அனுமதியுங்கள்.
3. உணவு நேர இடைவெளி
குழந்தைகளுக்கான உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நாக்ஸ் தருவதே சிறந்ததாகும். சரியான இடைவெளிவிட்டு உணவு வழங்கினால்தான் நன்றாக ஜீரணமாகும். நன்றாக ஜீரணமாகுவதுதான் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.

4. ஆரோக்கிய உணவுகள்
வீட்டில் சமைக்கப்படாத எந்த உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவு களில் அதிகமாக சர்க்கரை இருக்கும். எனவே கவனம் தேவை. இல்லையேல் சிறுவயதிலேயே பல உடல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
5. நேரத்திற்கு உணவு
நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அதேசமயம் உணவு நேரத்திற்கு இடையில் சிற்றுண்டி கொடுக்க நேரிட்டால் அது விரைவில் செரிமானமாகக்கூடியதாக இருக்கவேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கவேண்டும். கண்ட நேரத்தில் எல்லாம் உணவு கொடுப்பது அவர் களது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

நாம் இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக் கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
இக்காலத்துப்பிள்ளைகள் பெரியோர் சொன்னபடி கேட்பதில்லை. இஷ்டப்படி நடக்கிறார்கள். சிறுவயதில் நாம் இப்படியா இருந்தோம். ஒவ்வொரு காலத்திலும் பெரியவர்களின் புலம்பல். இதுதான் தலைமுறை இடைவெளி என்பது.
ஒவ்வொரு தலைமுறைக்குமே பொருந்தும். ஏனெனில் நாம் இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக் கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம். இப்போது குழந்தைகள் (அது ஆணோ, பெண்ணோ) குழந்தைக்கு 4 வயதாகும் போது ‘ஆ! என் அப்பா மாதிரி ஒருவர் உண்டா? எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது. அதே குழந்தை. 6 வயதில்: “அடடா, என் அப்பாவிற்குத் தெரியாத விஷயமே கிடையாது.
10 வயதில்: ‘அப்பா நல்லவர்தான்! ஆனால் முன்கோபக்காரர். எனது நண்பனின் அப்பாவிற்குத் தெரிந்தது கூட இவருக்குத்தெரியவில்லையே.
12 வயதில்: “நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம் நல்லபடிதான் நடந்து வந்தார்.... ஆனால் இப்போது.....!
16 வயதில்:‘சே! அப்பா சுத்த கர்நாடகப் பேர்வழி. காலத்துக்குத்தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே!
18 வயதில்: “இதென்ன வர வர இந்த அப்பா கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். விவரமே தெரியாதவர்.

20 வயதில்: “அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் பொறுக்க முடியவில்லை. அம்மா இவருடன் எப்படித்தான் இத்தனை காலம் வாழ்ந்தாளோ?”
25 வயதில்: “எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தான்! எப்போதுதான் அப்பா உலகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறாரோ. கடவுளே!
30 வயதில்: (ஒரு குழந்தை பிறந்ததும்) ஓ! வரவர என் பையனைச் சமாளிக்கவே முடியவில்லையே!
நாங்களெல்லாம் சிறு வயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்!
40 வயதில்: ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களைக் கற்பித்தார் என் அப்பா? இப்போது நினைத்துப் பார்த்தாலும் அப்பா குழந்தைகளை எப்படிக் கண்டிப்பு கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் என்பது அதிசயமாகவே உள்ளது.
45 வயதில்: என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர், அப்பா எப்படித்தான் எங்களை வளர்த்து ஆளாக்கி, முன்னுக்குப் கொண்டு வந்தாரோ என வியப்பாக உள்ளது.

50 வயதில்: இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கோ மிகவும் போராட வேண்டிருக்கிறதே. அப்பா எங்களை (4 குழந்தைகளை) வளர்க்க நிச்சயமாகப் படாதபாடு பட்டிருப்பார்.
55 வயதில்: அப்பாவிற்குத்தான் எவ்வளவு முன்யோசனை. எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் திறமையாகத் தன் காரியங்களைச் செய்து வருகிறார். அவர் ஒரு தன்னிகரற்றவர் என்பதில் சந்தேகமில்லை.
60 வயதில்: (கண்ணீருடன்) என் அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர் தான்.
இளைஞர்களே, யுவதிகளே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற அவ்வையின் வாக்கை நினைவில் கொண்டு தந்தை தாயிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீங்களும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ ஆவீர்கள் அல்லவா?
தயாரித்தவர் :
நா.பிரசன்னம்,
திருச்சி-620 001. செல்: 94880 19015.

குட்டீஸ், நீங்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலிகள் தானே!. பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கே அறிவோம்...
குட்டீஸ், நீங்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலிகள் தானே!. உங்களுக்கு எந்த நேரத்தில் எப்படி பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் சொல்படி கேட்டு நீங்களும் சமர்த்தாக நடப்பீர்கள் அப்படித்தானே. ஆனால் ஆபத்துகள் திடீரென நம்மை ஆட்கொள்பவை.
சுற்றி இருப்பவர்களாலும், கவனக்குறைவாலும் ஆபத்து வரலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவை மோசமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். நீங்கள், கவனமாக, காயமின்றி பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடி இருப்பீர்கள், அதுபோலவே பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கே அறிவோம்...
* உங்களுக்கு சாக்லெட்டும், பொம்மைகளும் ரொம்ப பிடிக்கும்தானே. ஆனால் பெற்றோர் வாங்கித் தரும்போது மட்டும் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். சாக்லெட்டை ருசித்து, பொம்மைகளுடன் விளையாட ஆனந்தப்பட வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் யாரும் சாக்லெட் உள்ளிட்ட தின்பண்டங்கள் கொடுத்தாலோ, பொம்மைகள் போன்ற பரிசுகள் தந்தாலோ வாங்கக் கூடாது. ‘அம்மா எனக்கு தினமும் சாக்லெட் தருவார், எங்கள் வீட்டில் நிறைய பொம்மை இருக்கிறது’ என்று மறுத்துவிடுங்கள்.
தெரிந்தவர்கள் என்றாலும் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிறந்த நாள் விழா, மற்றும் உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது மற்றவர்கள் தரும் பரிசுகளை பெற்றோர் அனுமதியுடன் வாங்கிக் கொள்வதில் தவறில்லை. அதுவே உங்களுக்குப் பாதுகாப்பானது. ஏனெனில், உலகில் காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 80 சதவீதம் பேர், ஆசை காட்டி ஏமாற்றப்பட்டே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பாதுகாப்பாக செயல்படுவது புத்திசாலித்தனம். இனி யாரும் எதையாவது கொடுத்தால் வாங்கமாட்டீர்கள்தானே?
* பள்ளி நேரத்தில் பாதுகாப்பாக வகுப்பறையில் இருக்க வேண்டும். அவசியமின்றி வகுப்பறை மற்றும் பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களுடன் செல்வது, வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியில் சுற்றுவது போன்றவை ஆபத்தானவை.
* விளையாடும்போதும் அதிக கவனம் தேவை. ஒவ்வொரு விளையாட்டுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி விழிப்புடன் விளையாட வேண்டும். உதாரணமாக கிரிக்கெட் விளையாடினால் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும், கால்பந்து ஆடும்போது நல்ல காலணி அவசியம். முகம், தலை, அந்தரங்க பகுதிகளில் பந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓடி விளையாடுவது, மரம் ஏறி விளையாடுவது போன்ற சமயங்களில் காயம் ஏற்படாத வகையில் எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.
* கருவிகளை உபயோகிக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிளேடு, கத்தி, கத்தரிக்கோல், சுத்தியல் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும். கவனமின்றி செயல்பட்டால் கைகளை பதம் பார்த்துவிடும். கருவிகளை பயன்படுத்தும்போது அவசியமான முதலுதவி பொருட்கள் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
* சாப்பிடக்கூடாத பொருட்களை வாயில் வைத்து கடிக்கக்கூடாது. உதாரணமாக ஷாம்பு, சோப்பு, கொசுமருந்து, வீட்டை சுத்தப்படுத்தும் ரசாயனப் பொருட்கள் போன்றவற்றை அவசியமின்றி கையில் வைத்து விளையாடவோ, வாயில் வைத்து கடிக்கவோ கூடாது. ஏனெனில் இதுபோன்ற பொருட்களில் உடலுக்கு தீங்கான ரசாயனப் பொருட்கள் இருக்கும். சிலவற்றில் ஆபத்தான விஷப் பொருட்களும் இருக்கிறது. எனவே இவற்றை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.

* உயரத்தில் இருக்கும் பொருட்களை எடுப்பது, உலோகச் சாமான்களை கையாளுவது போன்ற சமயங்களிலும் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை.
* தண்ணீரில் விளையாடுவது ஜாலியாக இருக்கலாம். ஆனால் முன்பின் பழக்கமில்லாத நீர் நிலைகளில் விளையாடச் செல்லக்கூடாது. ஆழமான பகுதிக்கும் செல்லக்கூடாது.
* கருவிகளை கையாளும் விதம் பற்றியும், முதல் உதவி முறைகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது பாதுகாப்பை பலப்படுத்தும். அவசர உதவி எண்களையும் தெரிந்து வைத்திருப்பது புத்திசாலித்தனம்.
* அன்றாட நிகழ்வுகளில் எச்சரிக்கையாக இருப்பதுபோல, அந்தரங்க விஷயங்கள் மற்றும் பாலியல் பற்றி விழிப்புணர்வு பெற்றிருப்பது பாதுகாப்புக்கு கைகொடுக்கும். உங்கள் உடல், உங்களுக்கான முழு உரிமை கொண்டது. அதை உங்கள் அனுமதியின்றி யாரும் தொட்டுப்பார்க்கவோ, காயப்படுத்தவோ உரிமையில்லை. அந்தரங்க உறுப்பை தொட்டுப் பார்ப்பது, உற்றுப் பார்ப்பது, கட்டிப் பிடிப்பது போன்றவையும் தவறானது. “நான் சொல்லும் விஷயத்தை அம்மாவிடம் சொல்லக்கூடாது, நாம் செய்வதை வீட்டில் சொல்லாதே” என்று ரகசியம் காக்கச் சொல்லியும், மிரட்டி பணிய வைத்தும் சிலர் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தகாத செயல்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி யாராவது தவறாக நடந்து கொண்டால் தைரியமாக சத்தமிட்டு மற்றவர்களின் உதவியை பெறலாம். பெற்றோரிடம் கூறி பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.
* மின் சுவிட்ச் போர்டுகள், வயர்களிலும் விளையாடக்கூடாது. அயர்ன்பாக்ஸ், ஹீட்டர் உள்ளிட்ட எலக்ட்ரிக் கருவிகளை கையால் தொட்டுப் பார்க்கக்கூடாது. மின்சாதனங்கள் அதிக ஆபத்தானவை.
* சைக்கிள் மற்றும் வாகனங்களில் விளையாடும்போது அதிக வேகம் கூடாது. வேறு வாகனங்கள் குறுக்கே வருகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். சாலையில் செல்லும்போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.
* நீங்கள் சுதந்திரமானவர். பலமானவர். புத்திசாலி. உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. யாரிடமும் ஏமாற மாட்டீர்கள். எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். மனதில் தைரியம் வளர்த்து, எந்த சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலை பெருக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் விழிப்புடன் இருங்கள்... எல்லாவற்றையும் வென்று காட்டுங்கள்!
குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க சரியான உணவுகள் அவசியம். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை அத்தியாவசியமாகிறது.
குழந்தைகள் பிறந்த சமயம் உள்ள உயரம் முழுவதும் ஜீன் என்ற மரபு கடத்துப்பொருள் மூலமாக பெற்றதே! பிறந்தபின் முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மூலம் உடலுக்குத் தேவையான எடை, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை சத்துக்களை பெறுகின்றனர்; ஓரளவு உயரத்தையும் பெறுவர். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை அத்தியாவசியமாகிறது. அந்த 5 உணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்.
1. பால் என்றாலே நமக்கு கால்சியத்தின் நினைவு தான் வரும். பாலில் உள்ள கால்சியம் எலும்பை பலப்படுத்துவதோடு குழந்தைகளின் உயரத்தையும் அதிகரிக்க உதவுகிறது. பால் பிடிக்காத குழந்தைகளுக்கு, பாலுடன் பழங்களை கலந்து தர விரும்பி பருகுவர். பாலில் வைட்டமின் எ மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளன.
2. உலர் திராட்சை மற்றும் பருப்புகள் அமினோ அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளன; இவை உடல் திசுக்களை புதுப்பிக்க உதவுகின்றன. மேலும் உலர் திராட்சைகள் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோனை தூண்டுவதாக விளங்குகின்றன.
3. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் எலும்பு திசுக்களை வளரச் செய்து, உடல் வளர்ச்சியை அதிகரிக்கின்றன; மேலும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.
4. சோயா பீன்கள் அதிகப்படியான புரதச் சத்து கொண்டவை. சோயா பால் குழந்தைகளுக்கு ஏற்றது. இது எலும்பு மற்றும் திசுக்களின் பலத்தை அதிகரிக்க உதவுகின்றது. இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், வைட்டமின் எ மற்றும் டி, கால்சியம் சத்துக்களும் உள்ளன.
5. முட்டைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை. இதில் வைட்டமின் டி, கால்சியம், வைட்டமின் பி2/ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை குழந்தைகளுக்கு பலம் அளித்து, உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.
குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க சரியான உணவுகள் அவசியம். ‘ஒரே நாளில் ஒபாமா ஆக முடியாது என்பது’ எவ்வளவு உண்மையோ அதே போல், ‘ஒரு நாள் இரவில் குழந்தையின் உயரம் அதிகரிக்காது’. உயரத்தை அதிகரிக்கும் உணவுகளையும், நீச்சல், டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை தினசரி விளையாடி, உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், குழந்தையின் உயரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம்..!

இந்த ஆண்டு குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் வகையில் 10-க்கும் மேற்பட்ட புதிய ரக ஆபத்தில்லாத பட்டாசுகளை தயாரித்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
வழக்கமாக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த காலங்களில் இளைஞர்களை குறி வைத்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக சத்தம் தரக்கூடிய பட்டாசுகள் தயாரித்து சந்தைக்கு அனுப்பி வந்தன.
இதற்கிடையில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒலிக்கு மேல் பட்டாசு சத்தம் இருக்கக் கூடாது என்று புதிய விதிகள் அரசால் வரையறுக்கப்பட்டன. அதன் பின்னர் பட்டாசு சத்தம் வெகுவாக குறைக்கப்பட்டது. சத்தம் குறைக்கப்பட்ட உடன் பட்டாசு தயாரிப்பு அடுத்த கட்டத்துக்கு சென்றது.
தரையில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளுக்கு பதிலாக வானத்தில் வெடித்துச் சிதறும் பேன்சிரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த 5 வருடங்களாக இளைஞர்களை மட்டும் குறி வைத்து தயாரிக்கப்பட்டு வரும் பட்டாசுகளில் இருந்து ஒரு சிறிய மாறுதலுக்காக சிவகாசியில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் இந்த ஆண்டு குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் வகையில் 10-க்கும் மேற்பட்ட புதிய ரக ஆபத்தில்லாத பட்டாசுகளை தயாரித்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சசி கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சிறுவர்களின் ரசனை வேறு. தற்போது உள்ள சிறுவர்களின் ரசனை வேறு. கடந்த காலங்களில் தரைச்சக்கரம், கம்பி மத்தாப்பூ, பூஞ்சட்டி, சாட்டை, என்ற அளவில் தான் எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆனால் தற்போது குழந்தைகள் இன்னும் அதிக அளவில் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் நிறுவனம் சார்பில் புதிய வகை பட்டாசுகளை உற்பத்தி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு புதிய வடிவிலான பட்டாசுகளை தயாரிக்க முடிவு செய்தோம். இதற்காக அதிக அக்கறை எடுத்துக்கொண்டோம்.

ஒவ்வொரு புதிய தயாரிப்பும் பொதுமக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய வகை வேடிக்கை வெடிகளை தயாரித்தோம். குறிப்பாக நாங்கள் தயாரித்து தற்போது சந்தைக்கு அனுப்பி உள்ள டிட்டூ, டைன்டாஸ், ஆகி என்ற ரக வேடிக்கை வெடிகள் பூந்தொட்டிகள் போல் வெள்ளி நிறத்திலும், பல வண்ணத்திலும் பூ மழையாக சிதறும்.
அதே போல் பாப்பர், ரூட்டோ, சூப்பர்ஸ்டிக் என்ற பென்சில் வகை வேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் இருந்து வெளியேறும் சிதறல்கள் குழந்தைகள் மேல் விழுந்தாலும் எந்த காயமும் ஏற்படாது. இதே போல் கலர் பிளாஸ் என்ற வெடி போட்டோ பிளாஷ் போல் ஒளியை ஏற்படுத்தி குழந்தைகளை குஷிப்படுத்தும். ஐ-ஸ்பன் பம்பரம் போல் சத்தமிட்டபடி சுற்றும். கலர்ஸ் பின்னர், காம்போ, பூம் ஆகியவை சக்கரம் போல் தரையில் சுற்றும்.
பிளைமிசின் கீழே இருந்து மேலே சென்று வானத்தில் சக்கரம் போல் சுற்றும். இதே போல் தரையில் சுற்றக்கூடிய ஹாட்வீல் என்ற வேடிக்கை வெடி வலது புறம் சில நொடிகளும், அடுத்து இடது புறமாக சில நொடிகளும் சுற்றி குழந்தைகளை பரவசப்படுத்தும். இவை எல்லாவற்றையும் விட யோகோ என்ற வேடிக்கை வெடி மத்தாப்பூ போல் 5 அடி உயரத்துக்கு எழுந்து பூ மழைகளை பொழியும். இந்த பூ மழையை குழந்தைகள் கைகளால் தொட்டு விளையாடலாம். இதனால் உடலில் காயம் ஏற்படாது. அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதே போல் குழந்தைகள் எளிதில் பிடித்துக் கொளுத்தும் வகையில் 50 சென்டிமீட்டர் நீளத்தில் கம்பி மத்தாப்பூ தயாரிக்கப்பட்டு உள்ளது. லாக்ஆன், அப்லோடு போன்ற வெடிகளை வெடிக்கும் போது ஒரு முறை பற்ற வைத்தால் அது 5 வெடிகளை வெடிக்கச் செய்யும். இந்த வெடிகள் வானத்தில் 5 வண்ணத்தில் பூ மழையை தூவும். அதேபோல் ஆசிட்ரீம் என்ற வெடி சத்தம் போட்டுக்கொண்டே தரைச்சக்கரம் போல் சுற்றும். இப்படி குழந்தைகளை மகிழ்விக்க நாங்கள் பெரும் முயற்சி செய்து புதிய ரக வேடிக்கை வெடிகளை சந்தைப்படுத்தி உள்ளோம்.
இளைஞர்களை குஷிப்படுத்தும் வகையில் 500, 1000 ‘ஷாட்’ வெடிகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி உள்ளோம். இந்த புதுரக வெடிகள் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமலும், அச்சம் இல்லாமலும் குழந்தைகள் கொண்டாட வேண்டும் என்பதால் தான் குழந்தைகளுக்காக எங்கள் தயாரிப்பில் பல புதுமைகளை புகுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் மற்றொரு நிறுவனம் பவர் ரேஞ்சர் என்ற புதிய வகை துப்பாக்கியை தயாரித்துள்ளது. இந்த துப்பாக்கியின் தலைப்பகுதியில் நெருப்பு வைத்தால் ஏகே.47 துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெளியேறுவது போல் அடுத்தடுத்து சத்தத்துடன் தீப்பிழம்புகள் வெளியேறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த துப்பாக்கியை குழந்தைகள் அதிக அளவில் வாங்கிச் செல்கிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.
* பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.
* எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது.
* உங்கள் குழந்தைகளை குறைந்தது 8 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வைக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு மாவுச்சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிமானமாகும் உணவை கொடுப்பது நல்லது. ஏனெனில் மாவுச்சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.
ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.

சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.
குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.
18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத்துவங்குவது பொருத்தமானதாகும். குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம். இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.
பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.
குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.
குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.
கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர். பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நட்ந்து கொள்வர். மிதமிஞ்சிய கண்டிப்பு சிறந்த ஆளுமையை உருவாக்காது. குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.
விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.

குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால், மனநிலை மாற்றம் ஏற்பட்டு, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, அதை பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகின்றனர். இரண்டரை வயது குழந்தைக்கு கூட பல்லாயிரக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் சில பெற்றோர்கள் எதற்கும் அசருவது இல்லை. கடனை வாங்கியாவது பள்ளிக்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.
பல பள்ளிகள் இரண்டரை வயதுக்கு குறைவான குழந்தைகளை கூட சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் இந்த வயது உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லத் தயாராகிவிட்டது என்பதற்கான அர்த்தம் அல்ல.
நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடனே பள்ளியில் சேர்த்துவிட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் ஆய்வாளர்கள் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தவறு என கூறுகின்றனர்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சரியான வயது 6 என்றும், ஏழு வயதில் தான் குழந்தைகள் எதையும் புரிந்து கொண்டு செயல்படும் திறனை பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
உளவியல் மருத்துவர்கள், “சுயக்கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று. இது குழந்தைகளுக்கு ஏழு வயதில் தான் வரும். மேலும் இந்த வயதில் தான் குழந்தைகளுக்கு கவனம் மற்றும் சிறந்த செயல்பாடுகள் உண்டாகும்” என்று கூறுகின்றனர். குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால், மனநிலை மாற்றம் ஏற்பட்டு, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.