என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.

11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்களை பார்க்கலாம்.
நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...
* வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.
* 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
* நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

* உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.
* இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
* இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
* 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

* 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
* குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.
* நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

மழைக்காலத்தில் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கீழ்க்காணும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தொடர் மழை இல்லாவிட்டாலும் அவ்வப்போது மழை பெய்யும் காலம் இது. பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கீழ்க்காணும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1. பிள்ளைகளுக்கு வழக்கமாகக் கொடுத்தனுப்பும் பாட்டிலில், நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி, இளஞ்சூட்டுக்கு வந்ததும் அதை ஊற்றிக் கொடுக்கவும். ஏனெனில் சளி பிடித்துகொள்வது தொடங்கிக் காய்ச்சல் வரை பிள்ளைகளைப் பாதிப்படைவதிலிருந்து காத்துக்கொள்ள இது அவசியம். குளிர்ந்த நீரைக் குடித்தே பழக்கப்பட்டிருந்தாலும் மழைக்காலம் முடியும் வரை வெந்நீர் குடிக்கப் பழக்குங்கள்.
2. மழைக்காலத்தில் சளி பிடித்திருக்கலாம். அதனால், அடிக்கடி தும்மல் வரக்கூடும் அல்லது மூக்கிலிருந்து சளி வரக்கூடும். அந்த நேரங்களில் பயன்படுத்திக்கொள்ள கர்சீஃப் மிக அவசியம். மற்ற குழந்தைகள் தும்மும்போது காற்றில் கிருமிகள் பரவக்கூடும். அந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகள் கர்சீஃப் பயன்படுத்தவும் அறிவுறுத்துங்கள்.

3. மழையில் நனைவது குழந்தைகளின் உடல்நிலையைப் பாதிக்கும் என்பதால், மறக்காமல் குடை அல்லது ரெயின் கோட் கொடுத்து அனுப்புங்கள். காலையில் புறப்படும்போது நன்றாக வெயில் அடிக்கலாம். ஆனால், மதியத்துக்கு மேல் மழை வரக்கூடும் அதனால் எதற்கும் இருக்கட்டும் என, குடை அல்லது ரெயின் கோட்டைக் கொடுத்துவிடுங்கள்.
4. குழந்தைகள் மழைக்காலத்தில் பள்ளிக்கு சூ அணிந்துசெல்லும்போது தேங்கியிருக்கும் மழைநீரில் காலை நனைத்துவிட்டால் அதனுள் நீர் தங்கிவிடும். மேலும் சாக்ஸின் ஈரத்தால் நாள் முழுவதும் ஈரத்தில் நிற்பது போன்ற நிலை உருவாகும். அதனால், பள்ளி நிர்வாகத்திடம் பேசி சில நாள்களுக்கு மட்டும் செறுப்பு அணிந்து வர அனுமதி கேளுங்கள்.
5 மழைக்காலத்தில் குழந்தைகள், பள்ளிக்கு வேன் அல்லது ஆட்டோவில் செல்லும்போது அணிந்துகொள்ள ஸ்வெட்டர் இருப்பின் மறக்காமல் கொடுத்து அனுப்பவும்.

நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம்.
அந்த காலங்களில் பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கையாகவே சொல்லிதரப்பட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லை. நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். பொதுவாக, பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப்பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
குழந்தைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இதனால், சில தாய்மார்கள் இரவிலும் குழந்தையை எழுப்பி பால் புகட்டுவார்கள். இது தேவையில்லை. பொதுவாக ஆறு வாரத்திலேயே குழந்தைக்கு, பால் அருந்தும் நேரம், தூங்கும் நேரம் என 'ரிதம் செட்’ ஆகிவிடும். எனவே இரவில் பசிக்கு அழுதால் மட்டும் பால் புகட்டினால் போதும்.
குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதும். தனியாக தண்ணீர் தர வேண்டியது இல்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு பால் அருந்தியதும் சிறிது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்கச் செய்யலாம். அவ்வப்போது, குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு அந்தந்த மாதத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். வளர்ச்சி குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது நல்லது.

பச்சிளம் குழந்தைதானே என்று பெற்றோர்கள் குழந்தையின் வாய் பராமரிப்பைப் புறக்கணிக்கிறார்கள். பல் முளைக்காதபோதும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தைக்குப் பால் புகட்டியதும் மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து குழந்தையின் ஈறுகளையும், வாயையும் துடைக்க வேண்டும்.
இரவில் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகக் குழந்தையின் தூக்கப் பழக்கத்தை மாற்றுகிறேன் என்று சில தாய்மார்கள், பகலில் நீண்ட நேரம் குழந்தையை விழித்திருக்க முயற்சிப்பார்கள். குறைந்தது, ஓராண்டு வரையில் இந்தப் பழக்கத்தை முயற்சிக்காதீர்கள். அதிகச் சோர்வும்கூட, குழந்தையின் தூக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். குழந்தை எப்போதெல்லாம் தூங்க விரும்புகிறதோ அப்போது அதைத் தூங்க வைத்துவிடுங்கள்.

குழந்தைகள் பழவகைகளை சாப்பிடுவது அவர்களின் உடல் நலனுக்கு உகந்தது. ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக் கூடாது.
குழந்தைகள் பழவகைகளை சாப்பிடுவது அவர்களின் உடல் நலனுக்கு உகந்தது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பழத்துண்டுகளை நறுக்கிக் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பழங்களில் உள்ள சத்துக்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாய்மார்கள், பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து வழங்குகிறார்கள்.
ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக் கூடாது. காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுக்கக்கூடாது. காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுக்கலாம். குறிப்பாக காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி அளவில் ஜூஸ் பருக வைக்கலாம். ஒரே மாதிரியான பழ ஜூஸை தினமும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சிலவகை பழங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி அருந்தவைக்கக்கூடாது. அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் அவர்களுக்கு பிடிக்காத பழங்களையும் சேர்த்து ஜூஸாக தயாரித்துக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் ஜூஸ் கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு பழ ஜூஸ்களை இரவு நேரங்களில் தவிர்த்திட வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது.
குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே பழச்சாறு கொடுக்க தொடங்கலாம். நாளடைவில் ஜூஸ் கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.

பிறந்த குழந்தைகள் இயற்கை உபாதையான சிறுநீர் கழிப்பதற்கு முன் அழுவது இயல்பான செயல். அதனால், பெற்றோர் குழந்தையின் சிறுநீர் பிரச்சனையில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், வீட்டில் பாட்டி, தாத்தா போன்ற அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாத நிலையில் குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க இளம் தாய்மார்கள் படுகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல.
அதுவும், அடிக்கடி உடுத்தி இருக்கிற ஆடையை அசிங்கப்படுத்தி, படுக்கையை ஈரமாக்கும் குழந்தை என்றால், சொல்லவே தேவையில்லை. உடை மாற்றுதல், படுக்கையை சுத்தம் செய்தல், குழந்தை அசிங்கப்படுத்திய துணிகளை துவைத்தல் என வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்... இவற்றோடு, ‘யூரினரி இன்ஃபெக்ஷன்’ எனும் சிறுநீரகத் தொற்று, சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் சேர்ந்து கொள்ளும்.
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். அதனால், பெற்றோர் குழந்தையின் சிறுநீர் பிரச்சனையில் கவனமாக இருக்க வேண்டும்.
பிறந்த குழந்தைகள் இயற்கை உபாதையான சிறுநீர் கழிப்பதற்கு முன் அழுவது இயல்பான செயல். அதில் ஒன்றும் தவறில்லை. உண்மையில், பிறந்த குழந்தை ஆண், பெண் என எந்தப் பாலினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழிப்பதுதான் முக்கிய பிரச்சனை.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து 6 மாதம் வரை சிறுநீர்பை, சிறுநீர் வெளியேறும் துளை இரண்டும் ஒன்றாக வேலை செய்யாது. இது குழந்தையின் ஒன்றரை வயது வரை நீடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருக்கும். இதன் காரணமாக, சிறுநீர் கழிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். 1 வயது வரை சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருப்பது இயல்பானது. அதனால், குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அதற்குப்பிறகும், சிறுநீர் வெளியேறும் இடம் ‘டைட்’ ஆக இருந்தால்தான் பிரச்சனை.

இதனால் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சிறுநீர் உடலிருந்து சீராக வெளியேற முடியாத காரணத்தால், பிளாடருக்குள் போய் மீண்டும் கிட்னியை அடையும். இதனால் குழந்தைப் பருவத்திலேயே கிட்னி ஃபெயிலியர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிறந்த குழந்தைகள் 6 மாதம் வரை ஒரு நாளில்8 முதல் 10 முறை சிறுநீர் போகும். அதன் பிறகு, 5 அல்லது 6 முறை சிறுநீரை வெளியேற்றும். 1 வயது கடந்த குழந்தைகள் ஒரு நாளில் மூன்றிலிருந்து 5 தடவை சிறுநீர் போகும்.
3 மணி நேரத்துக்கு ஒரு தடவை யூரினை வெளியேற்றிவிட்டு, சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பழக்கம் வருவதற்கு 2 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் வெறுமனே ‘பாத்ரூம் போய்ட்டு வா’ என்றால் போகாது. பெற்றோரும் குழந்தையுடன் சேர்ந்து பாத்ரூம் சென்று வரவேண்டும்.
அம்மா, அப்பா அறையிலோ, பாத்ரூமுக்கு வெளியிலோ நின்று கொண்டு, ‘யூரின் பாஸ் பண்ணிவிட்டு வா’ என்றால் குழந்தைகள் போகாது. தன்னை அதட்டுவதாகத்தான் குழந்தைகள் புரிந்து கொள்ளும். குழந்தைகளுக்கு உணவு உண்ணும் பழக்கம் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம் அல்லவா? அதைப்போன்றுதான், குழந்தைகளுக்குத் தனியாக சிறுநீர் கழிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோரில் எவரேனும் ஒருவர் குழந்தையுடன் பாத்ரூம் சென்றுவருவது நல்லது.
குழந்தைகள் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும். சிறுநீர் கழிக்கும் நேரங்களில் குழந்தைகளை ‘சீக்கிரம் சீக்கிரம்’ என அவசரப்படுத்தக் கூடாது. போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். இப்படி குழந்தைகள் தானாகவே சிறுநீர் கழிக்கிற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்றவை இல்லாமல் காய்ச்சல் மட்டும் இருந்தால், யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கலாம். வீட்டில் ஒரு குழந்தைக்கு கிட்னி பிராப்ளம் இருந்தால் மற்றொரு குழந்தையையும்பரிசோதனை செய்வது நல்லது.

1 வயது வரை குழந்தைகளுக்கு படுக்கையில் சிறுநீர் கழிப்பது தெரியாது. ஒரு வயதைக் கடந்த பிறகு குழந்தைகளுக்கு படுக்கையை ஈரமாக்குவது தெரியும். 2 வயதுக்கு மேலே, குழந்தைகளால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியும். வாரத்தில் 2 தடவையாவது குழந்தைகள் படுக்கை மற்றும் போர்வைகளை ஈரப்படுத்தும். இப்பழக்கம் 5 வயது வரை நீடிக்கும். சில குடும்பங்களில், 10 வயது வரை கூட படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கும் பரம்பரைத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.
குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, சிறுநீர்பை அளவில் சிறியதாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள். இப்பழக்கத்தைத் தடுப்பது மிகவும் எளிதான செயல். மாலை 6 மணிக்குமேல், குழந்தைகள் கேட்டால்தான் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இரவில் குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். படுக்கை அறையில் ஏ.சி. அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். மாலை வேளையில் கண்டிப்பாக டாய்லெட் போக வைக்க வேண்டும். தூங்கச் செல்லும் 1 மணி நேரத்துக்கு முன்பும் படுக்கச் செல்லும் வேளையிலும் மறக்காமல் சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், குழந்தைகளிடம் உள்ள தேவையில்லாத எந்தப் பழக்கத்தையும் எளிதாக மாற்றலாம்...’’
‘‘3 மணி நேரத்துக்கு ஒரு தடவை யூரினை வெளியேற்றிவிட்டு, சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பழக்கம் வருவதற்கு 2 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும்.’’
‘‘குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கு ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, சிறுநீர்பை அளவில் சிறியதாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள். பரம்பரைத் தன்மையும் காரணமாகலாம்.’’

நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.
ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.

மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.
தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.
குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே, அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத் தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.
மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.
தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.

குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தாய்மார்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல்பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி. இத்தகைய தொப்புள் கொடியானது குழந்தை பிறந்த பின்னர் வெட்டப்படும். அப்படி வெட்டிய பின்னர் பலருக்கு குழந்தையை குளிப்பாட்டலாமா என்ற சந்தேகம் எழும். பொதுவாக குழந்தை பிறந்து குளிப்பாட்டிய பின்னரே தாயிடம் கொடுப்பார்கள். எனவே குளிப்பாட்ட பயப்பட வேண்டாம்.
மேலும் குழந்தையின் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக, அது உதிரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 10-15 நாட்களுக்குள் தொப்புள் கொடியானது உலர்ந்து உதிர்ந்துவிடும். இல்லாவிட்டால், குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். ஆகவே குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இங்கு குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தாய்மார்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தொப்புள் கொடியானது காலநிலை மாற்றங்களைப் பொறுத்து அது உலர்ந்து உதிர்வது உள்ளது. அதிலும் குளிர் அல்லது மழைக்காலத்தில் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவ்விடத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்ந்து, குழந்தைக்கு கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.

தாய்மார்கள் குழந்தைகளின் தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் முன்னர், தங்களை கைகள் நன்கு சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். இது தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் போது மட்டுமின்றி, குழந்தையை தூக்கும் போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு டயப்பர் போடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் டயப்பரை போடும் போது, தொப்புள் கொடியை மறைக்கும் வண்ணம் டயப்பரை அணிவிக்க வேண்டாம்.
குழந்தைக்கு பயன்படுத்தும் துணி காட்டனாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் காட்டன் துணி கொண்டு குழந்தையின் தொப்புள் கொடியை மறைத்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். இதனால் காற்றின் மூலம் நோய்த்தொற்றுகள் தாக்குவதைத் தடுக்கலாம். மேலும் அவ்விடத்தில் ஈரப்பசை இருந்தால், அதனை காட்டன் துணிகள் உறிஞ்சிவிடும்.
குழந்தைகள் டயப்பரில் சிறுநீர் கழித்தாலோ அல்லது மலம் கழித்தாலோ, உடனே அதனை மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால், அதன்மூலம் குழந்தைகளுக்கு அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
குழந்தைக்கு குளிப்பாட்டும் போது, தொப்புள் கொடியில் சிறிது தேங்காய் எண்ணெய் வைத்துக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். இதனால் குழந்தையின் தொப்புள் கொடியில் ஈரப்பசையினால் சீழ் கட்டுவதைத் தடுக்கலாம்.

மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்.
* மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.

* குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.
* அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துவலி ஏற்படும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி ஏற்படவும் வழிவகுத்துவிடும்.
ஸ்மார்ட்போன்கள் இப்போது குழந்தைகளின் கைகளில் சர்வ சாதாரணமாக தவழ தொடங்கி விட்டன. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்துவதற்காக பெற்றோரே கையில் போனை கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளை போனிலேயே மூழ்க வைப்பது மன நலத்திற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் நீண்ட நேரம் வீடியோ பார்த்தாலோ அல்லது விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் அதிகமாகி வலி ஏற்படும்.
குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துவலி ஏற்படும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி ஏற்படவும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் உபயோகிப்பதற்கு தடைபோட வேண்டும்.

அவர்கள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இப்போது குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.
அது மூளைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தி எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும். பெற்றோர் தங்கள் கைகளில் போனை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தமான தகவல்களை சொல்லி கொடுக்கலாம். அப்போதும் செய்முறை மூலமே பாடங்களை பயிற்றுவிப்பது நல்லது. போன் மோகத்தில் இருந்து விடுவிக்க, வெளி விளையாட்டுகள் மீது அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட வேண்டும்.

ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் இணை உணவுகள் எனப்படும். இந்த இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.
ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் இணை உணவுகள் எனப்படும். இவைகள் வீட்டிலே தயார் செய்யப்பட்டதாக இருக்கும் போது குழந்தை எளிதில் பழகிவிடும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவும் பின் தாய்ப்பால் மூலமாக நேரடியாகவும், வீட்டு உணவின் ருசி மூளையில் பதிவாகி இருப்பதால் இது சுலபமாகும்.
குழந்தையின் குடல், உணவின் செரிமானத்திற்கு 6 மாதத்தில் தயாராக உள்ளது. 6 மாதம் முன் இணை உணவு தரும் போது, தாய்ப்பால் குடிக்கும் நேரம் மற்றும் தடவைகள் குறைந்து சுரப்பும் குறைந்து விடும். ஊட்டச்சத்து குறைவு ஏற்படலாம். அதே போல் இணை உணவு ஆரம்பிப்பதை 6 மாதத்திற்குப்பின் தள்ளிப்போடவும் கூடாது. அறிவில் சிறந்த நம் பண்டைய சமுதாயம் நம் பாரம்பரிய முறையான அன்னம் ஊட்டுதலை 6 வது மாதத்தில் கடைப்பிடித்தது.

பூப்போன்ற வளரும் குழந்தைகளுக்கு, அன்றன்றைக்கு வீட்டுப் பக்குவத்தில் தயாரான சுத்தமான, ரசாயன பொருள் சேராத சாதா உணவானது, தாயின் அன்பு, பாசத்துடன் சேர்ந்து, மிகச்சிறந்த உணவாக மாறும். குழந்தையும் விரும்பி உண்ணும்.
அடைத்து விற்கப்படும் உணவுகளில் ருசிக்காகவும், வாசத்திற்காகவும், இனிப்பும், வேதிப்பொருட்களும், மணமும் கலந்து இருக்கும். உணவு பழகும் பருவமான 6 மாதத்திலிருந்து 10 மாதம் வரை எந்த உணவினை தருகிறோமோ அதன் ருசிக்கு குழந்தை பழகிவிடும். டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உடனடி உணவுகளை மட்டும் தந்து பழக்கிவிட்டால் சத்துள்ள கீரை, பருப்பு மற்றும் பயிறு வகைகளை கண்ணெடுத்தும் பாராது. சாப்பிடவும் சாப்பிடாது.

குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை நாம் அறிந்திருக்க மாட்டோம். இங்கு குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகள் இரவில் விழித்திருப்பார்கள். குழந்தைகளை தூங்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கும். தூங்கி கொண்டிருக்கும் குழந்தை, நீங்கள் வேலைகளை முடித்து ஓய்வெடுக்கலாம் எனும் போதும் அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை நாம் அறிந்திருக்க மாட்டோம். இங்கு குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
1. குழந்தையை படுக்க வைக்க பயன்படுத்தப்படும் துணி, தொட்டில் அதிலிருக்கும் பொருட்களை என அனைத்தும் தூய்மையானதாக இருக்க வேண்டும். தினமும் அவற்றை துவைத்து சுத்தமாக வைக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், குழந்தைகளுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும்.
2. குழந்தைகளுக்கு தொட்டில் கட்டும் போது, கொக்கிகளை உபயோகிப்பது சிறந்தது. கொக்கிகளுக்கு பதிலாக தற்போது கடைகளில் கிடைக்கும் ஸ்ப்ரிங்களை பயன்படுத்த கூடாது. ஸ்பிரிங் பயன்படுத்தும் போது, அது குதிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதால் குழந்தைகள் உறங்கலாம். ஆனால், அது அவர்களின் இதயத்தை பாதிக்க கூடியது. மருத்துவர்களும் ஸ்பிரிங்களை தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள்.

3. குழந்தைகளை படுக்க வைக்கும் தொட்டிலில் பொம்மைகளை காட்டி விடுவது பெரும்பாலானோர் செய்யும் ஒன்று. ஆனால், அதை குழந்தைக்கு மிக அருகில் காட்டினால், இரண்டு கண் விழிகளும் ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்கும். இது குழந்தைகளுக்கு ஓரக்கண் பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்தது குழந்தைகளுக்கும், பொம்மைக்கும் 2 அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் தூங்கும் அறை அதிக வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் உறங்கும் போது, நாம் பெரும்பாலும் நீல வண்ண விளக்கையே பயன்படுத்துவோம். ஆனால், குழந்தைகள் தூங்கும் அறையில் சிவப்பு வண்ண விளக்கை பயன்படுத்தினால் கருவறை போன்று உணர்வதுடன், நன்கு உறங்குவார்கள்.
5. குழந்தைகள் தூங்கும் போது அல்லது விழித்திருக்கும் போதோ அவர்கள் அருகில் போர்வை, துணி அல்லது துண்டு போன்றவற்றை வைக்க கூடாது. அவர்கள் அவற்றை தெரியாமல் முகத்தின் மீது போட்டு கொண்டால், மூச்சு திணறல் ஏற்படும். குழந்தைகளுக்கு போர்வை போர்த்தி விட்டாலும் இடுப்பு வரை மட்டும் இருப்பது சிறந்தது.

6. கொசுக்களை விரட்ட என நாம் பலவற்றை கடைகளில் வாங்கி உபயோகிறோம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவை ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக தீர்த்து வீசி எரிய போகும் கொசு விரட்டி டப்பாக்களில் வேப்ப எண்ணெய் மற்றும் கற்பூரத்தை கலந்து பயன்படுத்தலாம். மேலும், குழந்தைகளுக்கான கொசு வலைகளையும் பயன்படுத்தலாம்.
7. இரவு நேரத்தில் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது சிறந்தது. குழந்தைகளின் இடத்தை மாற்றாமல் ஒரே இடத்தில தூங்க செய்தால், அவர்கள் தூங்க வேண்டிய இடத்தை மனத்தில் கொள்வார்கள். குழந்தைகளை தொட்டிலில் மட்டும் அல்லாமல் மடியிலும், தோலிலும் மற்றும் தட்டி கொடுத்தல் போன்றவற்றை செய்தும் தூங்க வைத்து பழக்க வேண்டும். நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சிரமம் ஏற்படாமல் இது தவிர்க்கும்.