என் மலர்
குழந்தை பராமரிப்பு
பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள்.
குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது உங்களது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது.
1. குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். அதற்காக மாலை நேர ஸ்நேக்ஸ் வேண்டாம் என்பதில்லை… உணவுகளுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.
2. பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு மட்டும் போதுமானது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனை உண்டாகிறது.

3. குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நேக்ஸ் தருவதே சிறந்ததாகும்.
4. வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிமாக சர்க்கரை இருக்கும் எனவே கவனம் தேவை.
5. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழ்ந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.

பெற்றோர் குழந்தைகள் நகம் கடிப்பதனால் ஏற்படும் தீமைகளை பற்றி அவர்களுக்கு பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
சிறுவர், சிறுமியர்கள் சிலர் நகம் கடிப்பார்கள். நகத்தை கடிக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் கடுமை காட்டக் கூடாது. ‘ஏன் எப்போதும் நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று மிரட்டினால் அந்த பழக்கம் அதிகரிக்கத்தான் செய்யும்.
பொதுவாக பதற்றமான மனநிலையில், கவலையில் இருக்கும் குழந்தைகள் நகம் கடித்துக்கொண்டிருப்பார்கள். சிலர் பள்ளியில் பாடம் கடினமாக இருந்தாலோ, சக மாணவர்களை பார்த்தோ நகம் கடிக்கும் பழக்கத்தை கற்றிருக்கக்கூடும். நகம் கடிப்பதனால் ஏற்படும் தீமைகளை பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
அவ்வப்போது பெற்றோர் நகங்களை வெட்டி விட வேண்டும். பெற்றோர், பிள்ளைகள் முன்பாக நகத்தைக் கடித்து துப்பும் பழக்கத்தையும் கைவிட வேண்டும். நக இடுக்குகளில் அழுக்கு சேர்வதால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கி கூற வேண்டும். அவர் களாகவே நகங்களை வெட்டுவதற்குரிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிறுவயதில் கை சப்பும் குழந்தைகள் நாளடைவில் நகம் கடிக்கும் பழக்கத்தில் ஈடுபடுவார்கள். சுத்தமான வேப்ப எண்ணெய் இதற்கு தீர்வாக அமைந்திருக்கிறது. குழந்தை தூங்கும்போது சப்பும் விரலில் சிறிதளவு வேப்ப எண்ணெய்யை தடவி வரலாம். ஒருசில தடவை அவ்வாறு செய்து வந்தால் கசப்புத் தன்மை காரணமாக குழந்தைகள் விரலை வாயில் வைக்காது. நாளடைவில் இந்த பழக்கம் மறைந்து போய்விடும்.

பசிக்கு குழந்தை அழும் என்று தாய் நினைப்பதுண்டு. ஆனால் ஒருசில வேளையில் வேறு பல காரணங்களுக்காகவும் குழந்தை அழுவது உண்டு.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அடிக்கடி அழும்போது, சரிசெய்வது என்பது கடினமான செயலாகும்.அது எதற்காக அழுகிறது என்று காரணம் கண்டறிவது என்பது ஒவ்வொரு தாயிக்கும் கடினமான ஒன்று.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை முதலில் நாம் உறுதி செய்ய வேண்டும். முதலில் குழந்தையின் அம்மா தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்தியபின், குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பினால் அது பசிக்கு அழுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
பால்குடித்த பின் பொதுவாக, குழந்தை 2 மணி நேரத்துக்குள் அழுதால், அது உறுதியாக பசிக்காக இல்லை. வேறு காரணமாக இருக்கலாம்.
பசியில்லை என்றால் அடுத்து, தாகம் எடுத்தாலும் குழந்தை அழுத்தொடங்கும். குறிப்பாக திட உணவு சாப்பிடும் குழந்தைக்கு ஒரு சில அம்மாக்கள் சாப்பாட்டை கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவதால் உணவு விக்கிக் கொண்டுவிடும்.

இதன் காரணமாக சாப்பிட்ட பிறகு குழந்தை அழ ஆரம்பிக்கும். அந்த நேரம் கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தை அழுகையை நிறுத்தும்.
பால் குடித்த பின் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற காரணங்களாலும், உள்ளாடை, படுக்கை விரிப்புகள் ஈரமாகி விட்டாலும். அதை நாம் அறிந்து கொள்ளவும், குழந்தை அழும். ஈரமான துணியை அகற்றிவிட்டால் அழுகையை நிறுத்திக் கொள்ளும்.
தனது உடலில் ஏதோ ஊர்வது போல் உணர்ந்தாலும் அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலும், தோலில் அரித்தாலோ குழந்தை அழும்.
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சாதாரணமானது. குழந்தை அழும்போது தனது தொடைப்பகுதியை வயிற்றில் அழுத்தி வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி என்று நாம் தெரிந்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமான பால், அல்லது உணவைக் கொடுக்கும் போது, வயிறு உப்பி அழ தொடங்கும்.
சளி, மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழுவதுண்டு.

இன்றைய காலத்தில் நம் பண்பாட்டுக்கே உரித்தான மரியாதையை பிள்ளைகளுக்கு சொல்லித்தருவது எப்படி என்று பார்க்கலாம்.
நம் பண்பாட்டுக்கே உரித்தான மரியாதையைச் சொல்லித்தருகிறோமா? இந்த மரியாதைப் பண்பை பிள்ளைகளிடம் எப்படி வளர்ப்பது என்று பார்க்கலாம்.
1. உங்கள் பிம்பங்கள்தானே உங்கள் பிள்ளைகள். அதனால், நீங்கள் பெரியவர்களைப் பார்க்கும்போது, நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணக்கம் சொல்லுங்கள். உங்களைப் பார்த்துப் பிள்ளைகளும் பழகுவார்கள்.
2. பேருந்தில் செல்லும்போது வயதானவர்களோ, மாற்றுத்திறனாளிகளோ நின்றுகொண்டிருந்தால், பிள்ளையை உங்கள் மடியில் உட்காரவைத்து, அவர்களுக்கு இடம் கொடுங்கள். அதைப் பார்த்து அவர்களுக்கும் உதவும் குணம் உண்டாகும்.
3. வீட்டில் பிள்ளைகள் நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு முன்பு ‘தாத்தா முறுக்கு சாப்பிடுங்க, பாட்டி பிஸ்கட் தரட்டுமா’ என்று கேட்டுவிட்டு சாப்பிடச் சொல்லுங்கள்.

4. வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வரும்போது, ‘அத்தை வாங்க, மாமா வாங்க’ என்று வரவேற்கப் பழக்குங்கள். வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களுக்கு எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் சொல்ல கற்றுக்கொடுங்கள்.
5. உறவுகளின் திருமணங்களுக்கு முடிந்தவரை பிள்ளைகளையும் அழைத்துச் செல்லுங்கள். அங்கே வரும் சொந்தங்களின் உயர்ந்த விஷயங்கள், பணிகள் பற்றி எடுத்துச் சொல்லி அறிமுகம் செய்யுங்கள். அவர்களிடம் இருக்கும் குறைகளைச் சொல்லாதீர்கள். இது, பிள்ளைகளுக்கு மரியாதைப் பண்பை கற்றுத்தருவதோடு, உறவுகளும் பேணப்படும்.
6. வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுப் பேசுவதில் கவனம் செலுத்துங்கள். அதைப் பார்த்து பிள்ளைகளும் பின்பற்றுவார்கள். தங்கள் செல்போன் விளையாட்டையும் கட் செய்வார்கள்.
7. ரொம்ப முக்கியமான விஷயம் இது. இன்றைக்கும் கிராமப்புறங்களில், ‘பாப்பா வாங்க’, ‘தம்பி, சொன்ன பேச்சைக் கேளுங்க’ என்று மரியாதையுடனே நடத்துவார்கள். இதுபோன்ற மரியாதையைப் பெற்ற பிள்ளைகள், மற்றவர்களுக்கும் திருப்பித்தரும். எனவே, நீங்கள் எப்போதும் பிள்ளைகளை மரியாதையுடனே அழையுங்கள். உங்கள் குழந்தையும் உயர்ந்த பண்புடன் இருப்பது 100 சதவீதம் உறுதி.

உங்கள் குழந்தைகள் அடம் பிடிக்காமல் வீட்டுப்பாடம் செய்ய என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கும் ஆர்வமும் துணிச்சலும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஹோம்வொர்க் செய்வதென்றால் மட்டும் அவ்வளவு தான் வீடே இரண்டாகிவிடும்.
பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும் தான் ஹோம்வொர்க் செய்கிறார்கள். ஆனால் இனிமேல் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் அடம் பிடிக்காமல் ஹோம்வொர்க் செய்ய வேண்டுமென்றால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க...
குழந்தைளுக்குக் கொடுக்கப்படும் வீட்டுப்பாடத்தை பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் ஒரு அட்டவணைப்படுத்துங்கள்
குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களை ஒவ்வொரு பாடத்துக்கும் பெயராக வைத்து, டோரா பாடம் முடிந்ததா? சோட்டா பீம் எங்கே? என்று அவர்களிடம் கேட்கலாம். அது குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
இதுபோன்ற விஷயங்களைப் பள்ளிக்குப் போய் உடன் பயிலும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். மற்ற குழந்தைகளும் ஆர்வத்துடன் அதைச் செய்வார்கள்.

சில வீட்டில் குழந்தைகளை டியூசன் அனுப்புவார்கள். அங்கேயே குழந்தைகள் வீட்டுப்பாடத்தை முடித்து விடுவார்கள். அந்த தவறை மட்டும் இனிமேல் செய்யாதீர்கள். டியூசனில் வீட்டுப்பாடம் செய்யும்போது ஏதேனும் புரியாமல் இருந்தால் நண்பர்களிடம் பார்த்து அப்படியே காப்பி அடித்துவிடுவார்கள். அதற்கடுத்து சுயமாக பாடம் எழுதுவதில் ஆர்வமில்லாமல் போய்விடும்.
என்ன வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது என்பதை டைரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளாமல், அவர்களிடமே நேரடியாகக் கேட்டு அவர்களின் வாயால் சொல்லச் சொல்ல கேளுங்கள். அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இண்டர்நெட்டில் தேடி, அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகள் ஆர்வமாக ஹோம்வொர்க் செய்ய நீங்களும் கொஞ்சம் ஹோம்வொர்க் செய்வது ஒன்றும் தவறல்ல.
ஹோம்வொர்க் செய்யும்போது ஒரு பாடத்தை இவ்வளவு நேரத்துக்குள் முடிக்கச் சொல்லி அலாரம் வையுங்கள். அலாரம் அடிப்பதற்குள் முடித்துவிட்டால் ஏதேனும் பரிசு கொடுங்கள். வாரம் முழுவதும் அதேபோன்று வேகமாக செய்து முடித்தால், அவர்கள் விரும்பும் முக்கியமான ஏதேனுமொன்றை பரிசாகக் கொடுங்கள். அந்த ஆர்வத்திலேயே தினமும் வேகமாக வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
அதோடு அவர்களுடைய திறனை அங்கீகரித்து, திடீரென எங்காவது பிக்னிக் கூட்டிப் போகலாம்.
குழந்தைகளின் மூளை தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை தான் கவனச்சிதறலின்றி இருக்கும். அதனால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிதாக ஓய்வு கொடுங்கள். ஆனால் அந்த நேரத்தில் டிவி பார்க்கவோ விடியோ கேம் விளையாடவோ அனுமதிக்கக் கூடாது.

பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.
குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.
5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.
பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.

சின்னஞ்சிறு வயதில் நல்ல உணவுப் பழக்கங்களை பழக்கவும். 1 முதல் 3 வயதே, வளரும் குழந்தைக்கு நல்ல உணவுப்பழக்கங்களை பழக்க சரியான நேரம்.
பிறந்தவுடன் ஆரம்பித்த வேக உடல் வளர்ச்சியின் முதல் கட்டம் 1.5 வயது முதல் 2 வயதில் நிறைகிறது. எனவே முதலில் இருந்த பசி குறைந்து எல்லாம் சாப்பிடும் நிலை உருவாகிறது.
சின்னஞ்சிறு வயதில் நல்ல உணவுப் பழக்கங்களை பழக்கவும். இளமையில் நல்ல உணவுப் பழக்கங்களை கடைபிடிக்காவிட்டால், வளர்கின்ற வயதில் பெருந்தீனி, உடனடி திண்பண்டம் டின் உணவு, மென்பானங்கள் சாப்பிட்டு பழகி அதிக பருமன், சர்க்கரை நோய் முதலியவை வரக் கூடும்.
எனவே 1 முதல் 3 வயதே, வளரும் குழந்தைக்கு நல்ல உணவுப்பழக்கங்களை பழக்க சரியான நேரம். சாதாரணமாக 1 வயது குழந்தை தரையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து உண்ண இயலும்.
கை கால் கழுவி, உணவு உட்கொள்வது, சுத்தமும், சுகாதாரமும், தகுந்த தட்டினைப் பயன்படுத்தவும், உண்ண தேவையான நேரம் அளிக்கவும்.
உணவினை தொட்டுப்பார்த்து அதன் நிறம், மணம், அளவு, வடிவம் பற்றி உணரச் செய்யவும். முகர்தல் மற்றும் சுவைத்தலில் உணவினை அறிதல் அபிவிருத்தி அடைகிறது. எனவே புதுப்புது உணவுகளை சுவைக்க குழந்தை விருப்பப்படும்.

காரம் குறைந்த, மிதமான சூடுள்ள உணவுகளையே விரும்பும். அதிக காரம், மசாலா கொதிக்கும் சூடு குழந்தைக்கு பிடிக்காது. மழலைகள், சிறார்கள் வண்ண நிறங்களுடைய காரட், கீரைகளை விரும்பும். சத்துடனும், நேசத்துடனும் ஊட்டவும். ஒவ்வொரு முறையும் புது உணவாக தர ஆரம்பிக்கலாம்.
குழந்தை உண்ணும் அளவு மட்டும் (உதாரணம் 1 கப்) தரவும். மீதமாகும் உணவு தர வேண்டாம். உணவு துகள்கள் மூச்சு குழாய்களை அடைக்காவண்ணம் தரவும். வீட்டில் தயாரிக்கும் சக்தி நிறைந்த தானிய, பருப்பு மற்றும் கீரை சேர்ந்த உணவுகள் கலோரிச்சத்து பற்றாக்குறையினை போக்கும், உணவு இடைவேளையின் போது அவைகளை தரவும்.
குழந்தையின் குறிப்பிட்ட உணவினை உண்ண (உதாரணம்- முட்டை) தொந்தரவு செய்ய வேண்டாம். தற்போது மறுத்தால் பின்னர் வேறு ஒரு சமயத்தில் பொறுத்து தரவும். உணவினை திணிப்பது வெறுப்பினை உண்டாக்கும். மிரட்டி, அதட்டி தர வேண்டாம்.
கலர் கலரான குளிர்பானங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட வாசனை பானங்கள் தருவது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்தலாம். அதிலுள்ள சத்தில்லாத இனிப்பு, நிறத்தினை அளிக்கும் இரசாயனப் பொருட்கள், பொங்கி வரும் நுரையின் வேதிப்பின்னனணி ஒவ்வாமையினை உண்டு பண்ணலாம். அதனை விட வீட்டில் தயாரிக்கும் பழரசம் நல்லது.

குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதேசமயம் அவர்களின் உடலில் சுய நோய்எதிர்ப்புத் திறனும் குறையக்கூடாது.
குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதேசமயம் அவர்களின் உடலில் சுய நோய்எதிர்ப்புத் திறனும் குறையக்கூடாது. இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவுவது, இருவேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது, வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாள்களாவது தலைக்குக் குளிக்க வைப்பது, வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படைச் சுகாதாரப் பழக்கங்களைக் (Basic Hygiene) குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
தவிர, தரையில் விழுந்த பொருள்களை வாயில் வைப்பது, குப்பைகளில் கைவைப்பது, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களை வாயில் வைத்துக் கடிப்பது, அடிக்கடி தலையைச் சொறிந்துகொண்டே இருப்பது, விளையாட்டுப் பொருள்களைக் குப்பை இருக்கும் இடத்தில் போட்டு எடுத்து விளையாடுவது போன்ற, ஏற்றுக்கொள்ளக்கூடாத சுகாதாரமற்ற செயல்களைக் (Not acceptable hygiene) குழந்தைகள் செய்யாதிருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதிக வெயில் உடல் மீது படும்படியும், அடிக்கடி மண்ணில் கை வைத்தவாறு புழுதியில் விளையாடுவதையும் தவிர்க்கச் சொல்லிக் கொடுக்கலாம். மேலும், விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே எந்தப் பொருளையும் எந்த நபரையும் தொடாமல் குளிக்கச் செல்லக் கண்டிப்போடு பழக்கப்படுத்தலாம்.
இதேபோல அடிக்கடி தும்மல், அலெர்ஜி பாதிப்பு இருக்கும் குழந்தைகள் புழுதியில் விளையாடுவதை, கைவைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அலெர்ஜியால் உண்டாகும் ஆஸ்துமாவால் இன்று பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்; அது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்தப் பாதிப்புள்ள குழந்தைகள் விளையாடச் செல்லும்போது கையுறை, மாஸ்க் அணிந்துகொள்வதைக் கட்டாயப்படுத்தலாம்.

மொபைல் விளையாட்டில் குழந்தைகளின் வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்.
பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.
அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.
‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.

‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.
உங்கள் குழந்தைகள் தினமும் 1 - 2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.
உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.
உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக தினமும் மாதுளையை கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
அதில் தினமும் குழந்தைகள் சாப்பிட ஏற்ற ஒரு பழம் மாதுளை. இப்பழத்தை சாப்பிடுவதால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு மாதுளையை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
மாதுளை செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை இருப்பின், இப்பழத்தை கொடுங்கள் விரைவில் குணமாகும்.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.
மாதுளை ஜூஸ் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவதைத் தடுக்கும்.
மாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்.
மாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.

ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்கள் தான் குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்கள் தான் குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன. இன்றைய குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்பி குடிக்கின்றனர். இப்படி குளிர்பானங்களை அதிகம் குடித்தால், அதில் உள்ள சர்க்கரை குழந்தையின் பற்களைப் பாதிப்பதோடு, அவர்களின் உடல் எடையை அதிகரித்துவிடும்.
இந்நிலை நீடித்தால், சிறுவயதிலேயே குழந்தைக்கு நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, எந்த ஒரு உணவை உட்கொண்ட பின்னரும் நீரால் வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இங்கு குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை ஏற்படும் உணவுகள் மற்றும் பானங்களை பார்க்கலாம்.
உங்கள் குழந்தைக்கு ஜூஸ் செய்து கொடுக்கும் போது, அதில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்து, தேன் சேர்த்து கொடுங்கள். ஏனெனில் சர்க்கரை பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். முக்கியமாக பற்களைத் தாக்கி சொத்தையாக்கி, ஈறுகளையும் சேர்த்து பாதித்து, ஈறு நோய்களை உண்டாக்கிவிடும்.

சாதம், வெள்ளை பிரட், பாஸ்தா போன்றவை ஈறு நோய்களையும், சொத்தைப் பற்களையும் ஏற்படுத்தும். எப்படியெனில் இவற்றை உட்கொள்ளும் போது, அவை எளிதில் வெளிவராதவாறு பற்களில் சிக்கிக் கொண்டு, பல் சொத்தை மற்றும் ஈறு நோய்கள் ஏற்படுத்தும். எனவே எப்போதும் குழந்தைகளுக்கு வெள்ளை நிற உணவுப் பொருட்களை அதிகம் கொடுத்து பழக்காதீர்கள்.
சோடா பானங்களில் உள்ள அமிலம், குழந்தைகளின் பற்களைப் பாதித்து, பற்களின் எனாமலை அரித்து, சொத்தைப் பற்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் சோடா பானங்கள் உடல் பருமனை ஏற்படுத்தும். எனவே முடிந்த வரையில் குழந்தைகளுக்கு இந்த பானங்கள் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
சாக்லேட்டுகள் முழுமையாக சர்க்கரையைக் கொண்டவை. இவ்வளவு சர்க்கரை நிறைந்த சாக்லேட்டுக்களை குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிடக் கொடுத்தால், வாயில் உள்ள பாக்டீரியா அந்த சர்க்கரையை உட்கொண்டு, பற்களை அரிக்க ஆரம்பித்து, சொத்தைப் பற்களை வேகமாக உண்டாக்கும்.

குழந்தைகளை சாப்பிட வைக்க பல எளிய வழிகள் உள்ளது. தாய்மார்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால்போதும், குழந்தைகளை சாப்பிடவைத்துவிடலாம்.
குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரிய கலை. அந்த கலை பெரும்பாலானவர்களுக்கு தெரியாததால், குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்று மணிக்கணக்கில் அவர்கள் பின்னால் சுற்றுகிறார்கள். அப்படி சுற்றுகின்ற தாய்மார்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால்போதும், குழந்தைகளை சாப்பிடவைத்துவிடலாம்.
குழந்தைகளை கூடுமானவரை சுயமாக எடுத்து சாப்பிட பழக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். குழந்தைகள், பெரியவர்களை பார்த்துக்கொண்டே இருக்கும். அவர்கள் செய்வது போன்ற அனைத்து செயல்களையும் தானும் செய்யவேண்டும் என்று முயற்சிக்கும். அவர்கள் சுயமாக சாப்பிடுவதை பார்த்துவிட்டு, தானும் அதுபோல் சாப்பிடவே விரும்பும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் அதை அனுமதிப்பதில்லை. காரணம் குழந்தைகள் உணவை சுற்றிலும் இறைத்து விரயமாக்கும் என்பதுதான்.
எல்லா முதல் முயற்சிகளிலும், எல்லோருக்கும் சிறிதளவில் ஏதாவது விரயம் ஏற்படத்தான் செய்யும். குழந்தைகளின் சாப்பாட்டு பயிற்சியில் ஓரளவு விரயத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முதன் முதலில் தனியே சாப்பிட முயற்சிக்கும்போது குழந்தைகளால் சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். சாப்பாட்டிலும், தட்டிலும் கவனத்தை செலுத்தமுடியாது.
குழந்தை ஓரளவு சுயமாக சாப்பிட கற்றுக்கொண்ட பின்பு, ‘கீழே சிதறாமல் நான் சாப்பிடுவதுபோல் நீயும் சாப்பிடவேண்டும்’ என்று கூறி, விரயம் ஏற்படுவதை தவிர்க்க முன்வரவேண்டும். கீழே சிந்தாமல் குழந்தையை சாப்பிடத் தூண்டுவதும், கீழே சிந்திவிட்டால் குற்றம்சாட்டுவதும் கூடாது. ஏன்என்றால் உணவு கீழே சிந்தும்போதுதான், சிந்தாமல் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படும். குழந்தை உணவை கீழே சிந்திக்கொண்டு, அதை பார்த்தபடி சாப்பிடுவது அதன் மனோவளர்ச்சியை பலப்படுத்தும் விஷயம்.

குழந்தை நல மருத்துவர்கள், ‘குழந்தைகளை தானாகவே எடுத்து சாப்பிட பழக்கவேண்டும். அது அவர்கள் விருப்பத்தை தூண்டி அறிவை வளர்க்கும். தன்னுடைய தேவை எது என்பதை பற்றி அவர்களை யோசிக்க வைக்கும். ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியை சோதிக்க அதனை சாப்பிடவைத்து பார்ப்பது ஒருவித வழிமுறையாகும். தானே எடுத்து சாப்பிடும் குழந்தைகளின் மனோவளர்ச்சி சீராக இருப்பதாக அர்த்தம்’ என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் வளர்ச்சி அவர்கள் பிறந்த நாளில் இருந்து மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. உட்காருவது, தவழ்வது, நடப்பது போல், குறிப்பிட்ட மாதங்களுக்குள் குழந்தைகள் சுயமாக சாப்பிடவும் ஆரம்பித்துவிடவேண்டும். இது அவர்களது வளர்ச்சியோடு இணைந்த விஷயம். சுயமாக சாப்பிடத் தொடங்கிவிட்டால் மூளையின் இயக்கம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தைகளை சாப்பிட வைக்க பல எளிய வழிகள் உள்ளது. குழந்தையோடு நாமும் அமர்ந்து சாப்பிட வேண்டும். வித்தியாசமான உணவு வகைகளை அவர்கள் எதிரில்வைத்து சாப்பிடும்போது தானும் அப்படி சாப்பிட வேண்டும் என்று குழந்தைகள் விரும்பும். அப்போது தயங்காமல் அவர்களை நமக்கு இணையாக உட்காரவைத்து தட்டில் பரிமாறும்போது அவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த கவுரவத்தை ஏற்றுக்கொண்டு நம்மைப் போலவே சாப்பிட முயற்சி செய்வார்கள். சில தவறுகள் நடந்தாலும் நாளடைவில் தானே சாப்பிட பழகிக் கொள்வார்கள்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் கொஞ்சம் இனிப்பு கலந்திருக்க வேண்டும். சாப்பிட மென்மையாக இருக்கவேண்டும். பல வண்ணங்களில் இருக்கவேண்டும். எடுத்து சாப்பிட வசதியாக சிறிதாகவும் இருக்கவேண்டும். குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை சாப்பிடவைப்பது பெரும்பாடுதான். அவைகள் எவ்வளவு நேரமானாலும் சாப்பிடாமல் விளையாடிக்கொண்டிருக்கும். உடல் சோர்ந்துபோவதுகூட தெரியாது.

சுயமாக சாப்பிட விரும்பாத குழந்தைகளை எப்படி சாப்பிடவைப்பது என்று சிந்தியுங்கள். பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்று மற்ற குழந்தைகளுடன் நன்றாக விளையாட விடுங்கள். போகும்போது கையில் ஏதாவது சாப்பிட தயாரித்து எடுத்துச் செல்லுங்கள். மற்ற குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிட குழந்தைகள் விரும்புவார்கள். அப்போது அவர்களை சாப்பிடச் செய்யுங்கள்.
தானே எடுத்து சாப்பிட பழக்கினால் பள்ளிக்குப் போகும் போதும் அந்த பழக்கம் கைகொடுக்கும். விளையாட்டோடு விளையாட்டாக அவர்களை சாப்பிட வைக்கமுயற்சிக்க வேண்டும். உணவகங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அங்கு அனைவரும் உட்கார்ந்து விதவிதமாக சாப்பிடுவதை பார்க்கும்போது குழந்தைகளுக்கும் சாப்பாட்டு ஆர்வம் அதிகரிக்கும்.
சாப்பிடுவதை அவர்கள் சந்தோஷமாக செய்யவேண்டும். அடித்து மிரட்டி சாப்பிட வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சாப்பாட்டின் மீதே அவர் களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும். அந்த வெறுப்பு அவர்களை சாப்பாட்டை விட்டு வெகு தூரம் துரத்தி விடும். தொடர்ந்து குழந்தை சாப்பிட அடம்பிடித்தால், அதை அப்படியே விட்டுவிடக்கூடாது. ஒருவேளை வயிற்றில் ஏதாவது உபாதை இருக்கலாம். ஏதேனும் பயம் இருக்கலாம்.
உணவு வகை பிடிக்காமல் இருக்கலாம். என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். காரணத்தை தெரிந்துகொள்ளாமல் அவர்களை வற்புறுத்தக்கூடாது. தங்களுக்குப் பிடித்த சுவையை குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது. ஒவ்வொரு பொருளாக கொடுத்து நாம்தான் அவைகளின் சுவையின் விருப்பத்தை அறிய வேண்டும். இது பெரிய சவால்தான். ஆனால் வெளி மைதான விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் சாப்பாட்டிலும் ஆர்வமாகவே இருக்கும். ஆகவே குழந்தைகளை விளையாடத்தூண்டுங்கள்.